15 ஜூன், 2011

பெண்கள் மீதான வன்முறைகள்

சில அதிர்ச்சித் தரவுகள்
- நிஷா

பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.

அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம், 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர்.

10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப் பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.

பெண்களும் சனத்தொகையும்

உலகின் சனத்தொகையில் 49.7 சத வீதமானவர்கள் பெண்கள். சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றது. அது மாத்திரமின்றி, பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக் கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தேர்வினாலும் உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.

குடும்பத்தில் வன்முறை

குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்தலும், தொடர்ச்சியான உடல் உள வன்முறைகளாகக் காணப்படுகின்றன.

உலகம் பூராகவும் நிலவும் நிலை

* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள்.

* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.

* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.

* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.

* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப் படுகின்றது.

* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.

* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.

* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.

* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.

பாலியல் வன்முறைகள்

* ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச். ஐ. வி/ எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தாலேயே, தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.

* தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக் கொள்ளவும், மேலும் குற்றம் செய்யும் தூண்டுகின்றது.

உலகில்...

* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.

* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றாள்.

* பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றார்கள்.

யுத்தமும் பெண்களும்

யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகின்றார்கள்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர் களிலும் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.

* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.

* இவ்வுலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.

* கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

* உகண்டாவில் 1994 இல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சத வீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

* ஈராக்கில் 2003 இல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.

* கமரூஜ் ஆடசிக் காலத்தில் கம்போடியாவில் 250,000 கம்போடிய பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

* பொஸ்னியாவிலும் ஹெஸ்ஸகோவின்னாவிலும், 1992 இல் 5 மாதங்களே நீடித்த யுத்தத்தில் 20,00மும் 50,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

* கொசோவோவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள், சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்டடனர்.

தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள்

உலகில் உள்ள எல்லாக் கலாசாரங்களும் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை வழக்குகளை கொண்டிருக்கின்றன. ‘கலாசார நடைமுறைகளாக’ அவை பார்க்கப்படுவதால், பலருக்கும் தவறெனத் தெரியவில்லை.

உலகம் முழுவதிலும்

* உலகம் முழுவதிலும் 135 மில்லியன் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 2 மில்லியன் பெண்கள் அவ்வாறான நடைமுறைகளைப் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.

* தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 82 மில்லியன் சிறுமிகள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

* ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள 28 நாடுகளில் விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாய வழக்குகள் நடைமுறையில் உள்ளன.

* நைகரில் 76 சதவீதமான வறிய பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்கின்றனர.

* எகிப்தில் திருமணம் முடித்த 15 வயது முதல் 49 வயதான பெண்களில் 97 சத வீதத்தினருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது.

* ஈரானில் 2003 ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களில் மாத்திரம், 45 பெண்கள் தங்கள் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்டனர்.

* விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாயபூர்வ வழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மலேஷிய, இலங்கை போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.

* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.

* பெரும்பாலும் அவ்வாறான மரணங்கள் சமையல் எரிவாயு வெடித்ததால் ஏற்படுபவையாக சித்தரிக்கப்படுவதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர்.

குற்றமிழைப்போருக்குத் தண்டனை இல்லை

பெண்களுக்கெதிரான வன்முறைகள் பதிவு செய்யப் படுவதில்லை. அதனால் குற்றமிழைப்வோர் தண்டனை எதுவுமின்றி இலகுவில் தப்பித்துக் கொள்ள முடிகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படாமைக்குப் பல காரணங்கள். பழிவாங்கப்படலாமென்ற அச்சம், போதிய பொருளாதார வசதிகளின்மை, பிறரில் தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல் என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

உலகில்...

* சிலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 3சத வீதமானோர் மாத்திரமே, அதுபற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.

* அமெரிக்காவில் இது 16 சதவீதமாக இருந்தது. ஆனால், தம்மைப் பற்றிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமிடத்து, தம்மீதான வன்முறைகளுக்கு எதிராக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவீதமானவர்கள் தயாராக உள்ளனர்.

* அவுஸ்திரேலியாவில் 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் எவரும் அதனை வெளியே சொல்லவில்லை.

* பங்களாதேஷில் 68 சதவீதமான பெண்கள் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப் படுவதை எவருக்கும் சொல்வதில்லை.

* ஒஸ்ரியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 20 சதவீதமான பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

சட்ட நிவாரணங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றார்கள். இவ்வன்முறைக்கு எதிரான சட்டங்கள் எவையும் சில நாடுகளில் இல்லை. சில நாடுகளில் சில வன்முறைகளுக்கு எதிராக மட்டுமே சட்டங்கள் அமுலில் உள்ளன. பெண்கள் மீதான எல்லாவிதமான வன்முறைகளை எதிர்த்தும் சட்டங்கள் இருந்தாலும் பல நாடுகளில் இவை ஒழுங்காக அமுல்படுத்தப் படுவதில்லை.

* 2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.

* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.

* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.

எச். ஐ. வி. / எயிட்ஸ்

பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பது, பாரிய சுகாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. வன்முறைகள் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தைப் பாதித்திப்பதோடு, உடல், உள நலனோம்புகையையும் பாதிக்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகளால் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகமானதாக இருக்கின்றது.

உலகில்

* உலகில் எச். ஐ. வி/ எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோரில் 51 சத வீதமானவர்கள் பெண்கள்.

* புதிய எச். ஐ. வி. தொற்றுக்கள், 15 முதல் 24 வயது வரையானோருக்கே ஏற்படுகின்றன. அவ்வயதுப் பருவத்தில் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானோரில் 60 சத வீதமானவர்கள் பெண்கள்.

* தினமும் தொற்றுக்குள்ளாகும் 16,000 பேரில் 55 சத வீதமானவர்கள் பெண்கள்.

* ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடையே ஏற்படும் மரணத்துக்கு எச். ஐ. வி/ எயிட்ஸே காரணமாகின்றது.

- நிஷா

ஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான் -அம்பேத்கர்-




இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது.



சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை.



இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.



எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.



மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார்.



அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும்.



இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும்.



(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94)----------------------------------------------------

பெண்களை அடிமைகளாக்க..


பெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள் பெரியார்- மனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம். ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். ஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, வில்லை வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம். பொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும். கல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக உரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர். நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன். அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், “சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் “திருக்குறளிலிருந்து “பிறன் இல்விழையாமை” என்ற அதிகாரத்தைக் காட்டி, “வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்” என்று சொன்னார். நான் உடனே, “பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே” என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. 18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை





இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?



தம்பியின் முகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ள எமது பாட்டி தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி விழிகளைக் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்று முறை க.பொ.உயர்தரப் பரீட்சையெழுதி மூன்றாம் முறை ஒரு வழியாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் அளவுக்கு தம்பி சித்தியடைந்தது சில நாட்களுக்கு முன்புதான். இப்பொழுது தம்பி ஒரு இராணுவ முகாமில் இருக்கிறான். அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க அன்பாகக் கற்றுத் தரும் இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளவே அவன் சென்றிருக்கிறான். இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச் சென்றிருக்கும் பையனின் முகத்தைச் சற்று தொலைக்காட்சியில் பார்த்திடவே பாட்டி காத்திருக்கிறார்.




‘பாட்டி, இப்பவே பார்த்துக்குங்க..நல்லாப் பார்த்துக்குங்க..ஏன்னா திரும்பி வரும்போது வரப் போறது அவனில்ல.’


பாட்டியைச் சற்றுக் கோபமடையச் செய்து பார்க்கவே நான் அப்படிச் சொன்னேன்.

‘உனக்கு பொறாமை. நீ கெம்பஸ் போன காலத்துல இதெல்லாம் இல்லல்ல. பார்த்துட்டிரு மகன். தம்பி டை, கோட் உடுத்துத்தான் வீட்டுக்கு வருவான். அவன் வீட்டுக்கு வந்தப்புறம் சாப்பிடப் போறது கரண்டியாலையும், முள்கரண்டியாலையும்தான். இங்கிலிஸ்லதான் கதைப்பான்.’

பாட்டி, இராணுவ முகாம் பயிற்சியின் பின்னர் வீடு திரும்பப் போகும் தம்பி பற்றி இன்னும் பல விடயங்களைச் சொல்லத் தொடங்கினார். பாட்டியுடன் சேர்ந்து தாத்தாவும் மேலும் பல சிறப்புக்களைக் கூறத் தொடங்கினார்.

இம் மூத்தவர்களின் கதைகளைக் கேட்டு அலுத்துப் போன காரணத்தினால் நான் தம்பி குறித்தும், தம்பிகளுக்கு இராணுவ முகாமில்  கொடுக்கப்படும் பயிற்சி குறித்தும் ஆராயத் தீர்மானித்தேன். அவ்வாறு ஆராய்ந்து பார்க்கையில் எனது பாட்டி குறித்து எனக்குப் பாவமாகத் தோன்றியது. பாட்டி குறித்து பரிதாப எண்ணம் எழுகையில், எனக்கு இன்னும் பலரது தாய்மார்கள் நினைவில் தோன்றினர். தம்பி மீது பல எதிர்பார்ப்புக்கள் வைத்து இராணுவ முகாமுக்கு அனுப்பிய எனது தாய், முகாம்களில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் தம்பிகள், தங்கைகளின் தாய்மார்கள் மற்றும் அமைச்சர்களின் தாய்மார்கள் அவர்களிலிருந்தனர். பாட்டி வயதானவர். பலவீனமானவர். குழியிலொரு பாதம், கரையில் சில விரல்களென இருப்பவர். அதனால் இராணுவ முகாம் பயிற்சியின் உண்மை நிலவரங்களை அவரிடம் சொல்ல மனம் இடம்கொடுக்கவில்லை. எனினும் அவற்றை மூடிமறைக்கவும் முடியாது.


அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க உயர்கல்விப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பிற்பாடுதான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாமில் பயிற்சி கொடுப்பது பற்றி முதலில் பேச்சு அடிபடத் தொடங்கியது. பல்கலைக்கழக மாணவர்களது ஒழுங்கு நடவடிக்கைகள்  தொடர்ந்தும் பலவீனமாகப் போய்க் கொண்டிருப்பதாக திடீரெனக் கண்ட அமைச்சர் மாணவ, மாணவிகளது ஒழுக்கத்தை எண்ணி இந் நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் பிரகாரம், 2011.05.12 எனத் திகதியிட்டு எழுதப்பட்ட கடிதமொன்று உயர் கல்வி அமைச்சினால் எனது தம்பி உட்பட இம் முறை உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்கக் கூடுமென எண்ணியிருக்கும் மாணவர்கள் 10000 பேருக்கு அனுப்பப்பட்டன.

அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க பல்கலைக்கழக மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானித்ததன் நிலைப்பாடானது இக் கடிதத்திலேயே முழுமையாகத் தெளிவாகிறது. கொழும்பு நகரில் வசிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் முகாமாக பூஸா முகாம் அறிவிக்கப்பட்டிருந்தது. இரத்தினபுரியில் வசிக்கும் சில மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் முகாமாக திருகோணமலை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சிலருக்கு இன்னும் சில முகாம்கள்.

இராணுவ முகாம் பயிற்சி குறித்து இன்னும் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அக் கடிதத்தின் ஒரு பக்கத்தில் பயிற்சிக்காக கட்டாயம் எடுத்துவர வேண்டிய பொருட்களின் பட்டியல் தரப்பட்டிருந்தது.  தேசிய அடையாள அட்டையில் ஆரம்பித்து காபன் பேனைகளிரண்டில் முடிவுற்ற அப் பட்டியலில் கேன்வஸ் சப்பாத்துக்கள், வெள்ளைக் காலுறைகள், அரைக் கை டீ ஷேர்ட், முழுக் கை ஷேர்ட், நீல நிற குறுங் காற்சட்டை, கறுப்பு நிற நீண்ட காற்சட்டை, சேலை, ட்ரக் பொட்டம், கறுப்பு நிறச் சப்பாத்துக்கள், புடவைத் தொப்பி, வெள்ளை நிற படுக்கை விரிப்பு, வெள்ளை நிற தலையணை உறைகள், பூட்டு போடக் கூடிய சூட்கேஸொன்று என இன்னும் பல பொருட்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனது அம்மா, செய்ய வேறு வழியற்று ஐயாயிரம் ரூபாயளவில் செலவளித்து இப் பட்டியலிலிருந்த பொருட்களைத் தம்பிக்கு வாங்கிக் கொடுத்தார். பாட்டியெனில் ‘பையன் நாளை டை, கோட் உடுத்து வரவிருப்பதனால் இன்று செலவளித்ததற்குப் பரவாயில்லை‘ எனச் சொன்னார்.

இவ்வாறு எனது தம்பியை உள்ளடக்கிய 10000 மாணவர்கள், ஆளுக்கு ஐயாயிரம் ரூபாயளவில் செலவளித்து வாங்கிய பொருட்களையும் சுமந்துகொண்டு நாடு முழுவதிலுமிருந்த 28 இராணுவ முகாம்களுக்கு பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.

மே மாதம் 22ம் திகதி காலை 10.30க்கு முன்பு அந்தந்த முகாம் பொறுப்பதிகாரிகளின் முன்னிலையில் வந்து நின்ற மாணவர்களுக்கு அப்பொழுதிலிருந்து அசௌகரியமான விடயங்களையே அனுபவிக்க நேர்ந்தது. இக் கட்டுரையை எழுதும் இக் கணத்தில் இராணுவப் பயிற்சி ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. இம் மூன்று தினங்களில் மட்டும் இராணுவ முகாம்கள் சிலவற்றில் நடந்திருக்கும் சம்பவங்கள் சிலவற்றை உங்கள் முன்வைக்கிறேன். மற்றவற்றின் தரங்களை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

காலி, பூஸா இராணுவ முகாமுக்குச் சென்ற மாணவர்களுக்கு புதுமையானதொரு அனுபவம் கிடைத்தது. முகாமினுள் நுழைந்த பிற்பாடு சிறைக் கைதிகளைப் போல கையில் தட்டுடனும், கோப்பையுடனும் அவர்கள் பகலுணவுக்காக வரிசையில் அழைத்துச் செல்லப்பட்டனர். பெற்றோர்கள் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாணவ மாணவிகள் சிறைக்கைதிகளைப் போல பகலுணவைச் சாப்பிடத் தயாராகினர். அன்றிரவு பத்து மணியாகியும் கூட மாணவ மாணவிகளுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப் பட்டிருக்கவில்லை. எனவே வெள்ளைப் படுக்கை விரிப்புக்களையும், வெள்ளைத் தலையணை உறைகளையும் எடுத்துச் சென்றிருந்த மாணவர்களுக்கு நள்ளிரவுக்குப் பிற்பாடுதான் அவற்றை விரித்துப் படுக்கக் கிடைத்தது.


22ம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு உறங்கச் சென்ற மாணவர்களுக்கு அதற்கு ஒரு மணித்தியாலத்தின் பின்னர் எழும்பும்படி கட்டளையிடப்பட்டது. அத்தோடு விழித்தெழுந்த மாணவர்கள் அவசர அவசரமாகத் தயாராகி, அலரி மாளிகைக்குச் செல்வதற்காகக் காத்திருந்த பேரூந்தில் ஏறுவதற்கு முண்டியடித்தனர். விடிகாலை 4 மணிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்ட பேரூந்து பூஸாவிலிருந்து வெளிக் கிளம்பியது. விடிகாலையில் பயணத்தை ஆரம்பித்த நேரம் தொடக்கம் அலரி மாளிகையைச் சென்றடையும்வரை மாணவர்களுக்கு தண்ணீர்ச் சொட்டொன்று கூடக் கொடுக்கப்படவில்லை. அலரி மாளிகையில் பகலுணவுக்காக ஒரு சோற்றுப் பார்சல் கிடைத்த போதிலும் அதை உடனே சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. அலரி மாளிகையில் ஜனாதிபதியும் உயர் கல்வி அமைச்சரும்  கலந்துகொண்ட நிகழ்ச்சி நிறைவுற்று மாணவர்கள் மீண்டும் பூஸா நோக்கிப் பயணிக்க ஆரம்பித்ததோடு,  களுத்துறையில் வைத்துத்தான் அவர்களுக்கு பகலுணவைச் சாப்பிட அனுமதி கிடைத்தது. காலையிலிருந்து பசியிலிருந்த அவர்கள் அலரி மாளிகையில் கிடைத்த சோற்றுப் பார்சல்களைத் திறந்து பார்க்கையில் அவை மிகவும் கெட்டுப் போயிருந்தன.

தாங்க முடியாப் பசி காரணமாக சில மாணவர்கள் அக் கெட்டுப் போன சோற்றைச் சாப்பிட்டனர். இன்னும் சிலர் பசியிலேயே இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் இரவு பத்து மணிக்குப் பிறகே அடுத்த வேளை உணவு கிடைத்தது.

‘நாங்கள் பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கு கரண்டியாலும், முட்கரண்டியாலும் சாப்பிடக் கற்றுக் கொடுப்போம்‘ என பெருமைக் கதைகள் பேசிய அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க பூஸா மாணவர்களுக்கு கெட்டுப் போன உணவை உண்ணக் கொடுத்து அந் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தது அவ்வாறுதான்.

பூஸா இராணுவ முகாம் மாணவர்கள் அவ்வாறு ‘ஒழுங்கு’படுத்தப்படுகையில் திருகோணமலை க்ளீஃபன்பர்க் இராணுவ முகாமுக்குச் சென்ற மாணவர்களுக்கு அதற்குச் சற்றும் குறைவில்லாத அனுபவமொன்று கிடைத்தது. இம் முகாமில் இராணுவப் பயிற்சி பெற அழைக்கப்பட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை 1200க்கும் அதிகமாக இருந்தது. அவ்வளவு பேரும் பாவிப்பதற்காக முகாம் எல்லையில்  இருந்த கழிப்பறைகளின் எண்ணிக்கை நான்கு மட்டுமே. மாணவர்களின் எண்ணிக்கையை கழிப்பறைகளின் எண்ணிக்கையால் பிரித்துப் பார்த்தால் வியப்பைத் தரும் ஒரு விடை கிடைக்கிறது. அதாவது முந்நூறு மாணவர்கள் ஒரு கழிப்பறையைப் பாவிக்க வேண்டும். ஒரு மாணவர் 5 நிமிடங்கள் ஒரு கழிப்பறையைப் பாவிப்பாரானால் கூட முந்நூறு பேருக்கும் அச் செயலைச் செய்ய 1500 நிமிடங்கள் எடுக்கும். 1500 நிமிடங்கள் எனப்படுவது 25 மணித்தியாலங்கள். அதாவது ஒரு நாளும் இன்னுமொரு மணித்தியாலமும்.

25 மணித்தியாலங்கள் வரிசையிலிருந்து கழிப்பறை செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கும் எவருக்கும் இரவு நேரங்களில் கழிப்பறை செல்ல முடியாது. ஏனெனில் இக் கழிப்பறைகள் நான்கும் அவர்கள் தங்குமிடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. அதன் பிரகாரம் திருகோணமலை இராணுவ முகாமுக்கு பயிற்சிக்காகச் சென்ற மாணவர்களுக்கு இப் பயிற்சிக் காலத்தில் கழிப்பறை செல்வதைத் தவிர வேறெதுவும் செய்ய நேரம் மிச்சமிருக்காது. 25 மணித்தியாலங்கள் வரிசையிலிருந்து கழிப்பறை செல்லும் மாணவர்களுக்கு முகம், கை,கால் கழுவவென 3 தண்ணீர்த் தாங்கிகள் மாத்திரமே இருக்கின்றன. அதன்படி ஒரு தண்ணீர்த் தாங்கியிலிருந்து 400 மாணவர்கள் முகம், கை,கால் கழுவிக் கொள்ளவேண்டும்.

அமைச்சர் கூறிய படி மாணவர்களுக்கு கழிப்பறை செல்லும் ஒழுங்கைக் கற்றுக் கொடுப்பது இவ்வாறுதான். இராணுவ முகாம் பயிற்சியைப் பெறப் போயிருக்கும் எனது தம்பி ‘வெளிக்குச் செல்ல’ இவ்வளவு துயருருவதை எனது பாட்டி அறிவாரானால் அவர் அக்கணமே நெஞ்சடைத்து மரணித்துப் போகக் கூடும். எனவே இவ் விடயங்களை அவர் அறியாமலே இருக்கட்டும்.

திருகோணமலை மாணவர்களுக்கு கழிப்பறை செல்லும் ஒழுங்கை அவ்வாறு கற்றுக் கொடுக்கையில், அம்பாறை இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியெடுக்கும் மாணவர்கள் வேறொரு விதத்தில் ‘ஒழுங்கி’னைக் கற்றுக் கொண்டனர். 24ம் திகதி இராணுவப் பயிற்சியின் போது அவ்விடத்துக்கு காட்டு யானைகள் வரத் தொடங்கின. யானைகள் வருவதைக் கண்டு மாணவர்கள் அஞ்சினர். அப்பொழுது பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரி உடனே கட்டளையிட்டார்.

‘ஓடுங்கள்‘

இராணுவ அதிகாரியின் கட்டளையின் பின்னர் மாணவர்கள் யானைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக அங்குமிங்கும் ஓடினர். வேலிகளிலிருந்த முட்கம்பிகளும் குத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடம் தேடி மரண பயத்தோடு ஓடினர். அதன் இறுதிப் பெறுபேறானது இருபதுக்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தவர்களாக மாறியமையே.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சியின் மூன்றாம் நாள் முடிவில் இன்னும் மாணவ மாணவிகள் அனேகர் நோயாளிகளாக மாறியிருக்கின்றனர். உடற்பயிற்சியின் போது மயக்கமுற்று வீழ்ந்த மாணவிகளின் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. மின்னேரியா இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர் ஒருவரைப் பாம்பு தீண்டியதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ முகாம்கள் இரண்டு, மூன்றுக்குள் 3 நாட்களுக்குள் நடைபெற்ற, நானறிந்த சம்பவங்கள் சிலவற்றையே நான் இங்கு எழுதியிருக்கிறேன். 28 முகாம்களுக்குள் நடைபெற்றுள்ள சம்பவங்கள் பல இன்னும் இருக்கின்றன. 3 வாரங்கள் முடிவுறுகையில் இன்னும் என்னென்னவெல்லாம் நடந்திருக்கும்? டை, கோட் உடுத்து, முட்கரண்டியால் சாப்பிட்டு, ஆங்கிலத்தில் கதைக்கும் தம்பியைக் காணக் காத்திருக்கும் பாட்டியிடம் நான் இதையெல்லாம் எப்படிச் சொல்வது?

இராணுவ முகாமுக்குள் என்னென்ன நடைபெற்றாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு ஊருக்கு வரும் தம்பிக்கு நாளை பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்குமா என்பதுவும் கேள்விக்குறியே. பாட்டியென்றால், தம்பி இராணுவப் பயிற்சிக்குப் பிற்பாடு பட்டமொன்றோடுதான் வீட்டுக்கு வருவார் என எண்ணியிருக்கிறார். எனினும் இப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்திருப்பது பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை அல்லாமல், உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லத் தகுதியானவர்கள் எனக் கருதப்படக் கூடிய மாணவர்கள் மட்டுமே. நாளைய தினம் Z வெட்டுப் புள்ளி கிடைத்த பிற்பாடு, இவ்வாறு இராணுவப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட அனேக மாணவர்களுக்கு நிச்சயமாக பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காமலிருக்கும். எனது தம்பியும் கூட அக் கூட்டத்தில் இருக்கக் கூடும். அவ்வாறெனில் பாட்டியின் நிலை என்னவாகும்?

இவையெல்லாவற்றையும் சிந்தித்தபடி நான் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். நான் வீட்டுக்கு வருகையில் பாட்டி மிகப் பாடுபட்டு வெள்ளைக் கேன்வஸ் சப்பாத்துக்களிரண்டைக் கழுவிக் காய வைத்தபடியிருந்தார்.

‘ யாருக்கு இந்தச் சப்பாத்து பாட்டி?’

‘உன்னோட தாத்தாவுக்குத்தான்.’

‘ஏன் தாத்தாவும் இராணுவப் பயிற்சிக்குப் போகப் போறாரோ?’

அப்பொழுது தாத்தா முற்றத்துக்கு வந்தார்.

‘ஆமாம் மகனே. இப்ப தம்பிகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்த பிறகு அதிபர்களுக்கு இராணுவப்பயிற்சி கொடுக்கப் போறாங்களாம். அதுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கு.. அதுக்குப் பிறகு பள்ளிப் பிள்ளைகளுக்கு.. அதுக்குப் பிறகு பெற்றோருக்கு..அதுக்குப் பிறகு எங்களுக்குத்தானே.. இப்பவே தேவைப்படுறதையெல்லாம் ஒழுங்குபடுத்திக் கொண்டா பிறகு தொந்தரவில்லைதானே?’

 
நன்றி

05 ஜூன், 2011

பெரும் இன அழிப்பு

பெரும் இன அழிப்பு என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள் என்போரும் அடங்குவர். பல அறிஞர்கள் பெரும் இன அழிப்பு என்னும் போது மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக் கொள்ளாமல் யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர். ஜேர்மன் அரசு இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜேர்மனியின் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.
மே/ஜூன் 1944 இல் ஆஸ்ச்விட்ஸ் வதைமுகாமில் "தேர்வு" நடைபெறுகிறது. வலப்பக்கம் உள்ளவர்கள் அடிமை வேலைக்கும், இடப்பக்கத்தில் உள்ளவர்கள் வாயு அறைக்கும் அனுப்பப்படவுள்ளனர். இப்படம் ஹங்கேரியிலிருந்து யூதர்கள் கொண்டுவரப்படுவதைக் காட்டுகிறது. ஏர்ன்ஸ்ட் ஹாப்மன் அல்லது பேர்னாட் வால்ட்டர் பிடித்த படம்.[1]


ருவாண்டா இனப்படுகொலை

ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். இதன் போது சில மாதக் காலப் பகுதியில் 500 000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டோர். பெரும் உடைமை அழிவும் நிகழ்ந்தது.
பெரும்பான்மையினரான ஊட்டு இன அரசின் இனவாதக் கொள்கைகள் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தன.
உருவாண்டா இனப்படுகொலை
Bodies of Rwandan refugees DF-ST-02-03035.jpg
இடம் ருவாண்டா
காலம் 1994
இனக்குழுக்கள் பெரும்பான்மையாக கொல்லப்பட்டோர் துட்சி இனக்குழு, கொன்றவர்கள் உகூட்டு இனக்குழு,
காரணங்கள்
காரணம்1 உகூட்டு இனவாதக் கொள்கை
காரணம்3 காலனித்துவக் காலத்தில் துட்சி இனத்தவர்கள் பெல்ஜித்தினால் சலுகை வழங்கப்பட்டமை.
மனித இழப்புகள்
கொல்லப்பட்டோர் 800 000 மேல் [1]
பாலிய வன்முறை 200 000 - 500 000 பெண்கள் கற்பழிப்பு [2]
ஊனமாக்கப்பட்டோர் 60 000 படு மோசமான நிலை [3]
அனாதையானோர் 75 000 [4]
அகதியானோர் {{{அகதியானோர்}}}
சட்ட நடவடிக்கைகள்
அனைத்துலக சட்ட நடவடிக்கைகள் International Criminal Tribunal for Rwanda, Gacaca court
தண்டிக்கப்பட்டோர் 20 தண்டனை வழங்கப்பட்டது, பல்லாயிரக்கணக்காணோர் சிறையில்

கோலதமோர்&தார்ஃபூர் இனப்படுகொலை

கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்: Голодомор) அல்லது பட்டினியால் படுகொலை என்பது 1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படுகொலை ஆகும். இந்த நிகழ்வு உக்ரேனிய பட்டினி இனப்படுகொலை, தீவிரவாத உக்ரேனிய இனப்படுகொலை என்றும் அறியப்படுகிறது. இந்த நிகழ்வில் 1.5 இலிருந்து 12 மில்லியன் உக்ரேனிய மக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோலதமோர் நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் அக் கால சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ராலினின் கொள்கை ஆகும். உக்ரேனினில் நிகழ்ந்த உக்ரேனிய தேசியவாதத்தை தகர்க்க உக்ரேனிலில் இருந்து எல்லா உணவு மூலங்களும் வெளியேற்றப்பட்டன. உக்ரேனில் இருந்து எவரும் வெளியேறத் தடைசெய்யப்பட்டது. ஸ்ராலினின் கட்டளையில் நடந்த இந்த செயற்பாடுகள் பட்டினி படுகொலைக்கு மூல காரணம் ஆகும்.

தார்ஃபூர் இனப்படுகொலை

சூடானின், தார்ஃபூர் நிலப்பரப்பில் இரண்டு பிரிவுகள் வசிக்கின்றன. ஒரு பகுதி பெரும்பான்மை உழவர்களைக் கொண்ட ஆபிரிக்கர்கள். இரண்டாவது பிரிவு நாடோடி இடையர்களைக் கொண்ட அரேபியர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர். இருபிரிவுகளின் பெரும்பான்மையினரும் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள்.
ஆபிரிக்க உழவர்கள் திட்டமிட்ட முறையில் அரச ஆதரவு பெற்ற அரபு கூலிப்படையான Janjaweed கொல்லப்படுகிறார்கள். இதுவரை 400 000 மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 2.5 மில்லியம் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். [1]

இனப்படுகொலை

இனக்ப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.
இது குறித்து 1948 ல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 ன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்..[1].
இக்கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 ல் கொண்டுவரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண்டணை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட நீதிமன்ற ஆணையத்தால் சர்வதேச உறுப்பினர்களை அழைத்தும் இன்னும் ஒருவரும் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை

இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) என்பது இனப்படுகொலையை வரையறை செய்து, தடை செய்யும் உடன்படிக்கை ஆகும். இப்போது 137 நாடுகளில இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் பங்கு பற்றும் சகல நாடுகளும் இன ஒழிப்பை தவிர்க்கவும், யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் இவற்றை தண்டிக்க வேண்டுமென இந்த ஒப்பந்தம 1951 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஆர்மீனிய இனப்படுகொலை

ஆர்மீனிய இனப்படுகொலை (Armenian Genocide) அல்லது ஆர்மேனிய பெரும் இனவழிப்பு என்பது ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்கள் வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தது[1]. பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்[2].
இவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர்[3]. அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.
ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது[4]. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன[5].

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை

 

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.[1] மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.[2] கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவேயாம்.

பின்புலம்

1948 ஆம் ஆண்டில் இலங்
கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரித்தானியா அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது. அந்த நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை மீறி திட்டமிட்ட இனவழிப்பை நடத்திவருகிறது. சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்கு சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்று முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கைச் பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாக தமிழர்கள் தொகை தொகையாக கொல்லப்பட்டனர்.

படுகொலைகள்

1958, 1977, 1983 இனக்கலவரங்கள் இவற்றில் சிறப்பாக குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளில் இருந்தும் கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், எறிகணை வீச்சு, நேரடித் தாக்குதல் மூலம் இதுவரை 100 000 கொல்லப்பட்டுள்ளார்கள்.[தொகு] தமிழரை வெளியேற்றல்
இலங்கை சிங்களவர்களுக்கு உரியது, ஆகவே தமிழர் வெளியேற வேண்டும் என்பது ஒரு நெடுங்கால திட்டமாக சிங்கள தீவரவாத செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையானோர் 1950 களில் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். இலங்கைத் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடே எனவே அங்கு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இலங்கை அரசு மேற்கொண்ட போர் உட்பட பல நடவிடிக்கைகள் 1.3 மில்லியன் தமிழர்களை வெளியேற்றி விட்டது. தமிழ் முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் இடையேயும், கிழக்கிலங்கைத் தமிழர் வடக்கிலங்கைத் தமிழருக்கு இடையேயும் விரிசல்களை ஏற்படுத்தி விட்டுள்ளது. [3]

அடிமையாக்குதல்

எதிர்ப்புப் போராட்டங்கள்

தமிழர் படுகொலைகளை நியாப்படுத்தல்

குறிப்பிட்ட தமிழர்களின் புலிகளுக்கான ஆதரவு பயங்கரவாதத்தை விளைவிக்கின்றது என்றும், போரில் புலிகளை அழிக்கையில் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்றும் இலங்கை அரசத் தரப்பால் கூறப்படுகிறது. மேலும், புலிகள் பொது மக்களை கட்டாயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும், அதனாலேயே பெருமளவு மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அரசை விட விடுதலைப் புலிகள் பெரும் தொகையான தமிழர்களையும் சிங்களவர்களையும் கொன்று குவித்துள்ளார்கள் அதனால் அவர்களை எந்த முறையினாலும் அழிப்பது தவிர்க்கமுடியாது எனப்படுகிறது.

தந்திரோபாய வழிகளின் தமிழினவழிப்புச் செய்தல்

போர் நடைப்பெற்று வரும் வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப் பட்டுள்ளது. [4] [5] போரினால் அவலப்பட்டு வவுனியா வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், சிங்களம் மொழி தெரியாதத் தமிழர்களிடம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்புக்கு செய்யப்படுகின்றது.

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலகம் எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனத்துவேசம்
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
உலகளாவிய எதிர்ப்புப் போராட்டங்கள்
ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்

பா • உ • தொ
[மறை]
மனித உரிமை
























நாசிசம்

நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை(Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை(propaganda) செய்தது.
அடொல்ப் ஹிட்லர் தனது சிறைவாசத்தின் போது எழுதிய மெயின் கேம்ப் (Mein Kampf-எனது தவிப்பு என மொழியாக்கம் செய்யப்படும்.) எனும் நூலில் நாசிசக் கொள்கைகள் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 (World War II, அல்லது Second World War) 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படித்திய போராகும்.
செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாக பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939-41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது.
டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்கு தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்கு சாதகாமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாக தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றி சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாக சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கு இடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காக செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போர்
Alliances during the Second World War
இரண்டாம் உலகப் போரின் கூட்டணிகள். அடர் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு முன்னரான நேச நாடுகள்; இளம் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்குப் பின் நேசநாடுகளாக இணைந்தவை; செம்மஞ்சல்: அச்சு அணி; சாம்பல் நடுநிலை நாடுகள்.
நாள் செப்டம்பர் 1, 1939 – செப்டம்பர் 2, 1945
இடம் ஐரோப்பா, பசிபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆப்பிரிக்கா
முடிவு நேச நாடுகள் வெற்றி. ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம். ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் உலக வல்லரசுகளாக வளர்ச்சி.ஐரோப்பாவின் பனிப் போருக்கான ஏதுநிலைகள் உருவாயின.
பிரிவினர்
நேச நாடுகள் அச்சு நாடுகள்
தளபதிகள்
நேச நாட்டுத் தலைவர்கள் அச்சு நாட்டுத் தலைவர்கள்


இழப்புகள்
படைத்துறைச் சாவு:
14,000,000க்கும் மேல்
பொதுமக்கள் சாவு:
36,000,000க்கும் மேல்
மொத்தச் சாவு:
50,000,000க்கும் மேல்
...மேலதிக தகவல்கள்.
படைத்துறைச் சாவு:
8,000,000க்கும் மேல்
பொதுமக்கள் சாவு:
4,000,000க்கும் மேல்
மொத்தச் சாவு:
12,000,000க்கும் மேல்