27 ஆகஸ்ட், 2011

பிராங்கென்ஸ்டைன் (புதினம்)

பிராங்கென்ஸ்டைன் அல்லது நவீன பிரமீதியஸ் (Frankenstein; or, The Modern Prometheus), அல்லது பொதுவாக பிராங்கென்ஸ்டைன் என்று அறியப்படுவது மேரி ஷெல்லி எழுதிய புதினம் (நாவல்) ஆகும். ஷெல்லி, தனது 18 ஆவது வயதில் இந்த நாவலை எழுதத் தொடங்கினார். அதனை எழுதி முடிக்கும்போது அவருக்கு வயது 20. முதல் பதிப்பு பெயர் குறிப்பிடாமல் 1818 இல் லண்டனில் பதிப்பிக்கப்பட்டது. ஷெல்லியின் பெயர் பிரான்ஸில் பதிப்பிக்கப்பட்ட இரண்டாவது பதிப்பில் காணப்படுகிறது. நாம் ஆராய்ந்து பார்த்தால், இந்த நாவலை எழுதிபோது அவருக்கு பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டதாக ஒரு முடிவுக்கு நாம் வர முடியும். நாவலின் கதை தொடங்கும் பகுதிக்கு ஷெல்லி பயணம் செய்திருக்கிறார்.
இந்த நாவலின் தலைப்பு விக்டர் ஃபிராங்கண்ஸ்டைன் என்ற அறிவியலாளரைக் குறிப்பிடுகிறது. சராசரியைக் காட்டிலும் ஆற்றல் மிக்க ஒரு மனித வாழ்வை உருவாக்குவது எப்படி என்று கற்றுக்கொள்கிறார் அவர். நடைமுறையில் மக்கள் அசுரன் என்பதையே "ஃபிராங்கண்ஸ்டைன்" என்று குறிப்பிடுகிறார்கள். கோதிக் நாவல் மற்றும் ரொமாண்டிக் இயக்கத்தின் தாக்கங்களை நாம் ஃபிராங்கண்ஸ்டைன் நாவலில் நாம் பார்க்க முடியும். தொடக்க காலதில் வெளி வந்த அறிவியல் புனை கதிகளில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது. இது தொழில் புரட்சியில் நவீன மனிதனின் விரிவாக்கத்திற்கு எதிரான ஓர் எச்சரிக்கையாக இருந்தது. மேலும் இது நவீன பிரமீதியஸ் என்று நாவலில் மறைகுறிப்பாக இருக்கிறது. இந்தக நாவல், இலக்கிய உலகிலும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், பல திகில் கதைகள் மற்றும் திரைப்படங்கள் வெளி வருவதற்கும் வித்தாக அமைந்தது.

கதைக்கரு

வால்டனின் அறிமுகச் சித்தரிப்பு

ஃபிராங்கண்ஸ்டைன் கேப்டன் ராபர்ட் வால்டன் மற்றும் அவருடைய சகோதரி மார்கரெட் வால்டன் சேவில் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்களின் வடிவில் தொடங்குகிறது. வால்டன் வட துருவத்தை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் இருக்கிறார். புகழையும், புதிய நண்பர்களையும் சம்பாதிப்பது அதற்கு அடிப்படை. அதற்காக தன்னுடைய அறிவியல் அறிவை விரிவாக்கிக்கொள்கிறார். கப்பல் பனிக்கட்டியில் மாட்டிக்கொள்கிறது.அப்போது ஒருநாள் அந்தக் குழுவினர் தொலைவில் ஒரு சறுக்குவண்டி இருப்பதைக் காண்கின்றனர், அதில் ஒரு அசுர மனிதனின் உருவம் தெரிகிறது. பலமணிநேரங்களுக்குப் பின்னர் பலவீனமான, வாழ்வாதாரத்திற்காகப் போராடும் நிலையில் தவித்துக்கொண்டிருந்த ஃபிராங்கண்ஸ்டைனை அக் குழுவினர் கண்டுபிடிக்கின்றனர். ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய நாய்களுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் இறந்துவிட்ட நிலையில் அசுரனைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய சறுக்குவண்டியை உடைத்து துடுப்புகளாச் செய்து இந்த கப்பலை நோக்கி வருவதற்கு பனிக்கட்டி வண்டியாகப் பயன்படுத்துகிறார். ஃபிராங்கண்ஸ்டைன், தன் கதையை வால்டனிடம் விவரிக்கிறார். அவருடைய கதையைத் தொடங்குவதற்கு முன்னர், தன்னுடைய திறனுக்கு சற்றும் தொடர்பு இல்லாத லட்சியத்தை நோக்கி ஒருவர் செல்ல முயலும்போது சந்திக்க நேர்கின்ற வேண்டாத விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார்.

ஃபிராங்கண்ஸ்டைன் விவரிப்பு

விக்டர் ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய குழந்தைப்பருவத்திலிருந்து வால்டனுக்கு சொல்லத் தொடங்குகிறார். ஒரு செல்வந்த குடும்பத்தால் வளர்க்கப்பட்ட ஃபிராங்கண்ஸ்டைனுக்கு தன்னைச் சுற்றியிருக்கும் அறிவியல் உலகத்தைப் புரிந்துகொள்ளும்பொருட்டு பயணிக்க ஊக்கம் கிடைக்கிறது. அவர் பாசமிக்க குடும்பம் மற்றும் நண்பர்கள் சூழ பாதுகாப்பாக வளர்கிறார்.
ஃபிராங்கண்ஸ்டைன் ஆதரவற்ற தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி எலிசபெத் லாவென்சா உடன் நெருக்கமான உறவைப் பேணுகிறார். எலிசபெத்தின் தாயார் இறந்தபின்னர் அவர் ஃபிராங்கண்ஸ்டைன் குடும்பத்தினரிடம் இருக்க அனுப்பப்படுகிறார். இயற்கையின் அதிசயங்களை அடைவதில் கவனம் செலுத்தும் அரதப் பழசான அறிவியல் கோட்பாடுகளின் மீது பற்று கொண்ட ஒரு இளைஞனாக அவர் உருவாகிறார். ஜெர்மனி இங்கோஸ்டாட் பல்கலைக்கழகத்தில் சேர்வது அவரது திட்டம். ஆனால் அவர் பயணத்திற்கு திட்டமிட்ட நாளுக்கு ஒரு வாரம் முன்பாக ஃபிராங்கண்ஸ்டைனின் தாயாரும் சகோதரி எலிசபெத்தும் நச்சுக் காய்ச்சலால் உடல்நலம் குன்றிவிடுகின்றனர். எலிசபெத் மீண்டுவிடுகிறார், ஆனால் ஃபிராங்கண்டைனின் தாயார் இந்த நோயினால் மாண்டு விடுகிறார். மொத்த குடும்பமும் துயரத்திற்கு ஆளாகிறது, ஃபிராங்கண்ஸ்டைன் அந்த மரணத்தை தன் வாழ்வின் முதல் துரதிஷ்டமாகப் பார்க்கிறார். பல்கலைக்கழகத்தில், அவர் வேதியியல் மற்றும் பிற அறிவியல் திரைகளில் நிபுணத்துவம் பெறுகிறார் -அதன் ஒரு பகுதியாக வாழ்வு எவ்வாறு அழிவுறுகிறது என்பதையும் ஆய்வு செய்கிறார் - அத்துடன் உயிரற்ற வாழ்க்கையில் தாக்கமேற்படுத்த ரகசியத்தையும் கண்டுபிடிக்கிறார். அவர் 1790களில் கண்டுபிடிக்கப்பட்ட கால்வினஸம் என்ற உத்தியிலும் ஆர்வம் காட்டுகிறார்.
அசுரனின் உருவாக்கம் குறித்த துல்லியமான விவரங்கள் குழப்பமானதாகவே இருக்கும் நிலையில், தான் மரண வீடுகளிலிருந்து எலும்புகளை சேகரித்துள்ளதாகவும், "மனித சட்டகத்தின் பயங்கரமான ரகசியங்களாக இருக்கும் அருவருப்பான விரல்களால் தொந்தரவிற்கு ஆளாகியிருப்பதாகவும்" விளக்குகிறார். உறுப்புகள் ஆய்வறையும் கசாப்பு மையங்களும் தனக்குத் தேவையான பொருட்களை வைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்த அசுரனை ஒரு சாதாரண மனிதனைக் காட்டிலும் மிகவும் பெரியதாக உருவாக்கும்படி தான் கட்டாயப்படுத்தப்பட்டாத ஃபிராங்கண்ஸ்டைன் கூறுகிறார்--அவர் அதை ஏறத்தாழ எட்டு அடி உயரம் இருக்கும்படி கணக்கிடுகிறார்--இதன் பகுதியளவு காரணம் மனித உடலின் நுண்ணிய பாகங்களை படியெடுப்பதில் உள்ள பிரச்சினையே. அசுரனுக்கு உயிரளித்த பின்னர், ஃபிராங்கண்ஸ்டைன் அந்த அச்சுமூட்டக்கூடிய அசுரனின் தோற்றத்தைக் கண்டு அருவருப்படைகிறார். ஃபிராங்கண்ஸ்டைன் தப்பிச்செல்கிறார்.
மனித வாழ்க்கையை உருவாக்குவதில் தன்னுடைய சோர்வுறச்செய்யும் ரகசிய முயற்சிகள் காரணமாக ஃபிராங்கன்ஸ்டைனுக்கு உடல்நலம் குன்றுகிறது. அவர் தன்னுடைய இளம்வயது நண்பரான ஹென்றி கிளர்வெலால் பராமரிக்கப்பட்டு பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்புகிறார். தன்னுடைய உடல்நலக்குறைபாட்டிலிருந்து மீள ஃபிராங்கன்ஸ்டைனுக்கு நான்கு மாதங்கள் ஆகின்றன. தன்னுடைய ஐந்து வயது சகோதரனான வில்லியம் கொலைசெய்யப்பட்டதாக அறிந்தவுடன் தான் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர் தீர்மானிக்கிறார். வில்லியமின் மரணத்திற்காக எலிசபெத் தன்னையே குற்றம்சாட்டிக்கொள்கிறாள், ஏனென்றால் அவள்தான் தன் தாயாரின் பேழைக்குள் செல்ல அவனை அனுமதித்திருக்கிறாள். வில்லியமின் செவிலித்தாயான ஜஸ்டின், ஃபிராங்கண்ஸ்டைனின் தாயாருடைய பேழை ஜஸ்டினின் பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்படுகிறார். அந்த உருவாக்கப்பட்ட உயிர் வில்லியமைக் கொன்று பேழையை ஜஸ்டினின் கோட்டுப் பையில் வைத்துவிட்டது வெளிப்படுகிறது, வில்லியமின் கொலைக்கான பின்னணிக் கதை சொல்லப்படுகிறது.
மனிதர்களுடனான சில மோசமான அனுபவங்களுக்குப் பின்னர், ஃபிராங்கண்ஸ்டைன் அசுரன் அவர்களைக் கண்டு அச்சம்கொள்கிறான் என்பதோடு ஒரு குடிசைக்கு அருகாமையில் அங்கே ஒரு குடும்பத்தினர் வாழ்வதைக் கண்டபடி ஒரு வருடத்தை செலவிடுகிறான். அந்தக் குடும்பம் செல்வச் செழிப்போடு இருந்தது, ஆனால் அவர்கள் துருக்கிய வியாபாரியை மீட்ட ஃபெலிக்ஸ் டி லாஸே குற்றம்சாட்டி மரண தன்டனை விதித்தபோது அவர்கள் வெளியேற வேண்டியிருந்தது. ஃபெலிக்ஸால் காப்பாற்றப்பட்டவன் அவனுக்கு விருப்பமான சஃபி என்ற பெண்ணின் தகப்பன். காப்பாற்றப்பட்டவுடன் தந்தையானவர் ஃபெலிக்ஸை சஃபிக்கு திருமணம் செய்துவைக்க உடன்படுகிறார். இருப்பினும், முடிவில் அவரால் தன்னுடைய மகளை ஒரு கிறிஸ்துவன் திருமணம் செய்துகொண்டு அவளைக் கூட்டிச்சென்றுவிடுவான் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐரோப்பிய பெண்களின் சுதந்திரம் குறித்த ஆவலுடன் சஃபி திரும்பி வருகிறாள்.
டி லாஷே குடும்பத்தின் வழியாக தெரிந்துகொண்டதன் மூலம் அந்த அசுரன் கல்வி கற்று சுய விழிப்படைகிறான், தான் பார்க்கும் மனிதர்களிடமிருந்து உடல் தோற்றத்தில் தான் மிகவும் வேறுபட்டவன் என்பதையும் தெரிந்துகொள்கிறான். தனிமையில் இருக்கும் அந்த அசுரன் டி லாஷேஸ் குடும்பத்தினரின் நட்பை நாடுகிறான். அசுரன் அந்த குடும்பத்தினருடன் நட்பாக இருக்க முயற்சிக்கையில் அவன் அவர்களுடைய பயத்தினால் தடுக்கப்பட்டுவிடுகிறான். இந்த மறுப்பு தன்னை உருவாக்கிவருக்கு எதிராக பழிவாங்கும்படி அசுரனைத் தூண்டுகிறது.
ஃபிராங்கண்ஸ்டைன் அசுரன் ஜெனீவாவிற்கு பயணித்து காட்டில் ஒரு சிறுவனைச் சந்திக்கிறான். இந்தச் சிறுவன் இன்னும் இளைமையாகவும் தன்னுடைய பயங்கரம் குறித்த வயதான மனிதர்களின் உணர்தல்களால் பாதிக்கப்படாமலும் இருக்கிறான் என்று நம்பிய அசுரனோடு அந்தச் சிறுவன் நண்பனாகிறான், ஃபிராங்கண்ஸ்டைன் அசுரன் அந்தச் சிறுவனை கடத்திச்செல்ல திட்டமிடுகிறான். ஆனால் அந்தச் சிறுவன் தன்னை ஃபிராங்கண்ஸ்டைனின் உறவினன் என்று தெரிவிக்கிறான். அசுரனைப் பார்த்து அவன் கத்தி அவமானப்படுத்துவது அசுரனை கோபம்கொள்ளச் செய்கிறது. அந்தச் சிறுவனை அமைதிப்படுத்தும் முயற்சியாக அசுரன் அவனுடைய வாயைப் பொத்துகிறான். முடிவில் அசுரன் அந்தச் சிறுவனை மூச்சடைக்கச் செய்து கொன்றுவிடுகிறான். இது அவனுடைய உண்மையான நோக்கம் இல்லையென்றபோதிலும், அசுரன் தன்னை உருவாக்கியவனுக்கு எதிரான முதல் பழிவாங்கலாக இதை எடுத்துக்கொள்கிறான். இறந்த சிறுவனின் உடலிலிருந்து கழுத்தணியை எடுத்துக்கொண்ட அசுரன் ஜஸ்டின் என்ற தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் மேல் வைத்துவிடுகிறான். ஜஸ்டினோடு கண்டுபிடிக்கப்படும் இந்த கழுத்தணி அவளை குற்றவாளியாக்கிவிடுகிறது. விசாரணை செய்யும் நீதிபதிகள் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க விரும்புவதில்லை; ஆனால், தேவாலயத்தின் அச்சுறுத்தலால் ஜஸ்டினுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
தன்னுடைய சகோதரனின் மரணத்தைத் தெரிந்துகொள்ளும் ஃபிராங்கண்ஸ்டைன் தன் குடும்பத்தினருடன் இருப்பதற்காக ஜெனிவாவிற்கு திரும்புகிறார். தன்னுடைய இளைய சகோதரன் கொலைசெய்யப்பட்ட இடத்தில் ஃபிராங்கண்ஸ்டைன் அந்த அசுரனைப் பார்க்கிறார், இந்த அசுரன்தான் வில்லியத்தை கொலைசெய்வதன் என்று அவர் நிச்சயப்படுத்திக்கொள்கிறார். அதிகப்படியாக அழித்து பழிவாங்கத்துடிக்கும் இந்த அசுரனை உருவாக்கியதன் துயரத்தாலும் குற்ற உணர்வாலும் பீடிக்கப்படும் ஃபிராங்கண்ஸ்டைன் அமைதியைத் தேடி மலைகளில் தஞ்சமடைகிறார். சற்று தனிமையில் இருந்த பின்னர் அசுரன் ஃபிராங்கண்ஸ்டைனை நெருங்குகிறான். தொடக்கத்தில் கோபம் கொண்டு அசுரனைக் கொல்லும்விதமாக ஃபிராங்கண்ஸ்டைன் அவனைக் கொலைசெய்ய முயற்சி்க்கிறார். தன்னைப் படைத்தவனைவிட பெரியதாகவும் பலசாலியாகவும் இருக்கும் அசுரன் ஃபிராங்கண்ஸ்டைனை ஏமாற்றி அவரை அமைதியடையும்படி விடுகிறான். தன்னுடைய உருவாக்கத்திலிருந்து தொடங்கி, ஆரம்பத்தில் தான் ஒரு அப்பாவியாக இருந்து மனிதர்களால் துன்புறுத்தப்பட்ட தன்னுடைய சுருக்கமான வாழ்க்கையை அசுரன் விவரிக்கிறான். தான் தனிமை வசப்பட்டிருப்பது மற்றும் மனிதர்கள் தன்னுடைய இருப்பையும் குணவியல்பையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது என்ற அடிப்படையில் தனக்கு ஒரு பெண் துணையை உருவாக்க வேண்டும் என்று ஃபிராங்கண்ஸ்டைனிடம் வேண்டுகோள் விடுத்து தன்னுடைய கதையை முடித்துக்கொள்கிறான். ஒரு உயிருள்ள மனிதனாக தான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு தனக்கு உரிமையுண்டு என்றும், தன்னைப் படைத்தவனாக ஃபிராங்கண்ஸ்டைனுக்கு இந்தக் கடமை இருக்கிறது என்று அசுரன் வாதிடுகிறான். தனக்கு ஒரு துணையை உருவாக்கித் தந்தால் தான் மீண்டும் வரப்போவதில்லை என்று அவன் உறுதியளிக்கிறான்.
தன்னுடைய குடும்பத்தினர் குறித்த அச்சத்தினால் இதற்கு தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய வேலையச் செய்ய இங்கிலாந்திற்குச் செல்கிறார். கிளர்வால் ஃபிராங்கண்ஸ்டைன் உடன் வருகிறார், ஆனால் அவர்கள் ஸ்காட்லாந்தில் பிரிகின்றனர். ஆர்க்னே தீவுகளில் இரண்டாவதை உருவாக்கும் நிகழ்முறையில் மற்றொரு அசுரன் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற முன் அனுமானங்களால் பீடிக்கப்படுகிறார். ஃபிராங்கண்ஸ்டைன் முடிக்கப்படாத திட்டத்தை அழித்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் அசுரன் ஃபிராங்கண்ஸ்டைனின் வரவிருக்கும் திருமண இரவில் பழிவாங்க சபதம் செய்கிறான். ஃபிராங்கண்ஸ்டைன் அயர்லாந்திற்கு திரும்பும் முன்னர் அசுரன் கிளர்வெலை கொலை செய்கிறான். அயர்லாந்திற்கு வரும் ஃபிராங்கண்ஸ்டைன் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் என்பதோடு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நிரபராதி என்று விடுவிக்கப்பட்டு தன்னுடைய உடல் நலத்தை சரிசெய்துகொண்டுவிடுகின்ற ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய தந்தையுடன் வீட்டிற்குத் திரும்புகிறார்.
வீட்டிற்கு வந்தவுடன் ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய உறவினரான எலிசபெத்தை திருமணம் செய்துகொள்கிறார், அசுரனின் அச்சுறுத்தல் குறித்து முழுதாக தெரிந்த நிலையில் அசுரனுடன் மரணப் போராட்டத்திற்கு தயாராகிறார். அசுரனைப் பார்ககையில் எலிசபெத் பயந்துவிடக்கூடாது என்று விரும்பும் ஃபிராங்கண்ஸ்டைன் அன்றிரவு அவளை அறையிலேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொள்கிறார். தனிமையிலிருக்கும் எலிசபெத்தை அசுரன் கொன்றுவிடுகிறான். தன்னுடைய மனைவி, வில்லியம், ஜஸ்டின், கிளர்வல் மற்றும் எலிசபெத்தின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தால் பீடிக்கப்பட்டு ஃபிராங்கண்ஸ்டைனின் தந்தையும் இறந்துவிடுகிறார். ஒருவர் மற்றொருவரை அழிக்கும்வரை அசுரனைத் தேடிக்கொண்டிருப்பது என்று ஃபிராங்கண்ஸ்டைன் உறுதியெடுத்துக்கொள்கிறார். பல மாதங்கள் தேடலுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் வட துருவத்திற்கு அருகாமையில் இருக்கும் ஆர்டிக் சுற்றில் சந்தித்துக்கொள்கின்றனர்.

வால்டனின் முடிவு விவரணை

ஃபிராங்கண்ஸ்டைன் விவரத்ததன் முடிவில் கேப்டன் வால்டன் இந்தக் கதையை சொல்லத் தொடங்குகிறார். ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய கதையை சொல்லி முடித்த சில நாட்களுக்குப் பின்னர் வால்டனும் அவருடை குழுவினரும் பனிக்கட்டியை உடைப்பதில்லை என்றும் வீட்டிற்குத் திரும்புவது என்று தீர்மானிக்கின்றனர். ஃபிராங்கண்ஸ்டைன் இறக்கையில் அசுரன் அவருடைய அறையில் தோன்றுகிறான். கப்பலை விட்டு நீங்கும் முன்னர் தன்னுடைய பழிவாங்கள் குறித்த அசுரனின் உறுதியான நியாயப்படுத்தலையும், தவறுக்காக வருந்துவதையும் வால்டன் கேட்கிறார், அசுரன் துருவத்தை நோக்கிச் சென்று தான் இருந்ததை ஒருபோதும் ஒருவரும் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் விதமாக தன்னுடைய ஈமச்சடங்கு சிதையில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளப்போவதாகவும் கூறுகிறான்.

தொகுப்பு

ஃபிராங்கண்ஸ்டைன் முதல் எழுத்துப்படி("அது என்னுடைய மனிதனை நான் கண்டுபிடித்த பயங்கரமான இரவு...")
How I, then a young girl, came to think of, and to dilate upon, so very hideous an idea?[2]
"கோடைகாலம் இல்லாத வருடமான" 1816 ஆம் ஆண்டு மழைக்கால கோடையில் 1815 ஆம் ஆண்டில் டம்போரா மலையின் உமிழ்வால் ஏற்பட்ட நீண்டகால குளிர் எரிமலை மழைக்காலத்தில் உலகம் தன்னைப் பூட்டிக்கொண்டது.[3] பதினெட்டு வயதான மேரி வோல்ஸன்கிராப்ட் கோட்வினும், அவருடைய காதலரான (பின்னாளில் கணவரான) பெர்ஸி பைஷி ஷெல்லியும் சுவிட்சர்லாந்தில் உள்ள லேக் ஜெனிவாவில் இருக்கும் வில்லா டியோடடியில் பைரன் பிரபுவைக் காணச் சென்றனர்.
காலநிலை சீராக அதிக குளிர்ச்சியடைந்த கோடைகாலத்தில் அவர்கள் வெளியே செலவிட திட்டமிட்டிருந்தவை யாவற்றையும் செய்துமுடிக்க முடியாததால் அந்தக் குழு விடியும்வரை உள்ளேயே இருந்துகொண்டிருந்தனர்.
மற்ற விஷயங்களுக்கிடையே, அவர்களுடைய உரையாடல் ரசாயன மின்னியக்கம் மற்றும் ஒரு பிணத்தை திரும்பக்கொண்டுவருவது அல்லது உடல் பாகங்களை ஒன்றிணைத்து உயிர் தருவதன் சாத்தியத்தைப் பற்றியதாகவும், இறந்த பொருள்களுக்கு உயர் தரும் சோதனைகளை செய்துபார்த்த 18 ஆம் நூற்றாண்டு இயற்கைத் தத்துவவாதியும் கவிஞருமான எராஸ்மஸ் டார்வினை நோக்கியும் திரும்பியது.[4] பைரனின் மாளிகையில் மரத் தீயைச் சுற்றி அமர்ந்தபடி இந்தக் குழுவினர் ஜெர்மானிய பேய்க் கதைகளைப் படித்து தங்களை மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டனர், அவர்கள் ஒவ்வொருவரும் சொந்தமாக இயல்கடந்த கதை ஒன்றை எழுதும்படி பைரன் தூண்டினார். சற்று நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்த மேரி கோட்வின் ஃபிராங்கண்ஸ்டைன் கருத்தாக்கை உருவாக்கியிருந்தார்:
I saw the pale student of unhallowed arts kneeling beside the thing he had put together. I saw the hideous phantasm of a man stretched out, and then, on the working of some powerful engine, show signs of life, and stir with an uneasy, half vital motion. Frightful must it be; for SUPREMELY frightful would be the effect of any human endeavour to mock the stupendous mechanism of the Creator of the world.[5]
சிறுகதையாக அனுமானித்திருந்த கதையை அவர் எழுதத் தொடங்கினார். பெர்ஸி ஷெல்லியின் ஊக்கவிப்பால் அவர் அந்தக் கதையை ஒரு முழு நீள நாவலாக நீட்டித்தார்.[6] அவர் சுவிட்சர்லாந்தில் இருந்த அந்த கோடைகாலத்தை "நான் முதன்முறையாக குழந்தைப் பருவத்திலிருந்து வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த" தருணம் என்று பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.[7] பால்கன் நாடுகளில் பயணம் செய்தபோது தான் கேட்டிருந்த இரத்தக் காட்டேரி கதைகளின் அடிப்படையில் பைரனால் ஒரு துணுக்கு கதையை மட்டுமே எழுத முடிந்தது, இதிலிருந்து ஜான் பொலிடோரி தி வாம்பயர் (1819) கதையை உருவாக்கினார், இது இரத்தக்காட்டேரி காதல் இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தது. இவ்வாறு, அந்த ஒரே சூழ்நிலையிலிருந்து இரண்டு முன்னோடியான திகில் கதைகள் தோன்றியிருந்தன.
1818 (எழுதப்பட்டது 1816–1817) இல் முதல் மூன்று தொகுப்பு பதிப்பிற்கான மேரி மற்றும் பெர்ஸி பைஷே ஷெல்லியின் எழுத்துப்படிகளும், பதிப்பாளருக்கான மேரி ஷெல்லியன் அசல் பிரதியும் தற்போது ஆக்ஸ்ஃபோர்ட் போட்லியன் நூலகத்தில் ஆவணமாக வைக்கப்பட்டிருக்கின்றன. போட்லியன் இந்தப் பிரதிகளை 2004 இல் பெற்றார், அவை தற்போது அபிஞ்சர் தொகுப்பிற்கு சொந்தமாக இருக்கின்றன.[8] 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 1 இல், பெர்ஸி ஷெல்லியன் கூடுதல் இணைப்புகள் மற்றும் குறுக்கீடுகள் ஆகியவற்றுடனான மெரி ஷெல்லியின் அசல் உரையின் ஒப்பீடுகளை உள்ளடக்கிய ஃபிராங்கண்ஸ்டைனின் புதிய பதிப்பை போட்லியன் பதிப்பித்திருக்கிறது. புதிய பதிப்பு சார்லஸ் இ. ராபின்ஸன் தொகுத்தது: தி ஒரிஜினல் ஃபிராங்கண்ஸ்டைன்

பதிப்பு

மேரி ஷெல்லி, ரிச்சர்ட் ரோட்வெல் ஓவியம் (1840–41)
மேரி ஷெல்லி 1817 ஆம் ஆண்டு மேயில் ஃபிராங்கண்ஸ்டைன்; அல்லது, நவீன பிரமீதீயஸை எழுதி முடித்தார், இது முதலில் 1818 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் ஹார்டிங், மேவர் & ஜோன்ஸ் என்ற சிறிய லண்டன் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டது. பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்ட இதில், மேரிக்காக பெர்ஸி பைஷே ஷெல்லி எழுதிய முன்னுரை மற்றும் அவருடைய தந்தையான தத்துவவாதி வில்லயம் கோட்வினுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தன. இது மூன்று தொகுப்புக்களோடு வெறும் 500 பிரதிகள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டன, இது 19 ஆம் நூற்றாண்டு பதிப்புக்களுக்கான வழக்கமான "மூன்று-அடுக்கு" வடிவத்தில் இருந்ததாகும். இந்த நாவல் முதலில் பெர்ஸி பைஷே ஷெல்லியின் பதிப்பாளரான சார்லஸ் ஓலியர் மற்றும் பைரனின் பதிப்பாளர் ஜான் முர்ரே ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஃபிராங்கண்ஸ்டைனின் இரண்டாவது பதிப்பு 1823 ஆகஸ்ட் 11 இல் இரண்டு தொகுப்புகளாக பதிப்பிக்கப்பட்டது (ஜி. மற்றும் டபிள்யு.பி. விட்டேகர்), இந்த முறை மேரி ஷெல்லியின் பெயர் ஆசிரியராக பதிவானது.
1831 அக்டோபர் 31 இல், ஒரு தொகுப்பிலான முதல் "வெகுஜன" பதிப்பு வெளிவந்தது, இது ஹென்றி கோல்பர்ன் & ரிச்சர்ட் பெண்ட்லியால் பதிப்பிக்கப்பட்டது. இந்தப் பதிப்பு முற்றிலும் தீவிரமாக மேரி ஷெல்லியால் திருத்தியமைக்கப்பட்டது என்பதுடன் இந்தக் கதையின் தோற்ற மூலம் குறித்த அலங்காரமான பதிப்பை வழங்கும் நீண்ட முன்னுரையும் அவரால் இணைக்கப்பட்டது. இந்தப் பதிப்பு இன்று மிகவும் விரிவாக படிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது, இருப்பினும் 1818 ஆம் ஆண்டின் அசல் உரையை உள்ளிட்டிருக்கும் பதிப்புக்கள் இப்போதும் பதிப்பிக்கப்படுகின்றன. உண்மையில் பல ஆய்வாளர்கள் 1818 ஆம் ஆண்டு பதிப்பிற்கே முன்னுரிமையளிக்கின்றனர். இது ஷெல்லியின் அசலான ஜுவனைத் தக்கவைத்திருப்பதாக வாதிடுகின்றனர் (பார்க்க டபிள்யு. டபிள்யு, நார்டன் விமர்சனப் பதிப்பில் ஆன் கே. மெல்லரின் "சூஸிங் எ டெக்ஸ்ட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் டு டீச்").

பெயர் தோற்றங்கள்

[ ஃபிராங்கண்ஸ்டைன் உருவாக்கம்

ஆங்கில கேலிச்சித்திரம் வரைபவர் உருவாக்கிய ஃபிராங்கண்ஸ்டைன் அசுரனுடன் தொடர்புடைய ஐரிஷ்காரர்; 1843 ஆம் ஆண்டு வெளியீட்டைச் சேர்ந்த படம்.[10]
ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய படைப்பை மறுதலித்ததன் ஒரு பகுதியாக உள்ள உண்மை என்னவெனின் அவர் அதற்கு பெயரிடவில்லை, இதனால் அது அடையாளமின்றிப் போகிறது. பதிலாக அது "அசுரன்", "பேய்", "பிசாசு", "ஈனன்", மற்றும் "அது" போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படுகிறது. ஃபிராங்கண்ஸ்டைன் பத்தாவது அத்தியாயத்தில் அசுரனுடன் உரையாடும்போது அவர் அதை "வெறுக்கத்தகுந்த பூச்சி", "விரும்பத்தகாத அசுரன்", "பிசாசு", "ஈன சாத்தான்" மற்றும் "விரும்பத்தகாத சாத்தான்" என்று குறிப்பிடுகிறார்.
ஃபிராங்கண்ஸ்டைன் சொல்லும்போது ஷெல்லி இந்தப் படைப்பை "ஆதாம்" என்று குறிப்பிடுகிறார். ஷெல்லி தனது கல்வெட்டுக் குறிப்பில் ஈடன் தோட்டத்தில் உள்ள முதல் மனிதனைக் குறிக்கிறார்:
என்னைக் களிமண்ணிலிருந்து படைத்த உன்னிடம் நான் வேண்டினேனா
என்னை மனிதனாக்கும்படி? நான் உன்னிடம் மன்றாடினேனா
இருளே என்னை மேம்படுத்து என்று?
ஜான் மில்டன், பாரடைஸ் லாஸ்ட் (X.743–5)
இந்த அசுரன் தவறுதலாக "ஃபிராங்கண்ஸ்டைன்" என்று அழைக்கப்படுகிறான். 1908 இல் ஒரு எழுத்தாளர் "அறிவிப்பூர்வமானவர்கள்கூட சில அருவருப்பான அசுரனை விவரிப்பதற்கு "ஃபிராங்கண்ஸ்டைன்" என்ற சொற்பதத்தை உலகம் முழுவதிலும் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது விநோதமானது" என்று எழுதியிருக்கிறார்.[11] எடித் வார்டனின் தி ரீஃப் (1916) கட்டுக்கடங்காத குழந்தையை "குழந்தை ஃபிராங்கண்ஸ்டைன்" என்று குறிப்பிடுகிறது.[12] தி ரோவரில் 12 ஜுன் 1844 இல் பதிப்பிக்கப்பட்ட டேவிட் லிண்ட்ஸேயின் "தி பிரைடல் ஆர்ணமண்ட்" "மோசமான ஃபிராங்கண்ஸ்டைன் உருவாக்குநர்" என்று குறிப்பிடுகிறது. ஜேம்ஸ் வேலின் பிரபலமான 1931 ஆம் ஆண்டு திரைப்படமான ஃபிராங்கண்ஸ்டைன் வெளிவந்த பின்னர் பெரிய அளவிலான பொதுமக்கள் இந்த அசுரனை "ஃபிராங்கண்ஸ்டைன்" என்றே பேசத் தொடங்கினர். இதற்கான குறிப்பு பிரைட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் (1935) மற்றும் அதே தொடரில் அடுத்தடுத்து வந்த சில திரைப்படங்களிலும், அபாட் அண்ட் காஸ்டெல்லோ மீட் ஃபிராங்கண்ஸ்டைன் போன்ற திரைப்படத் தலைப்புகளிலும் தோன்றுகின்றன.

ஃபிராங்கண்ஸ்டைன்

மேரி ஷெல்லி "ஃபிராங்கண்ஸ்டைன்" என்ற பெயரை ஒரு கனவுக் காட்சியிலிருந்து பெற்றதாகவே கூறிவந்தார். அசல் படைப்பு என்ற அவருடைய கோருதல் இருந்தபோதிலும் இந்தப் பெயரின் முக்கியத்துவம் அனுமானத்திற்கான மூலாதாரமானது. நேரடியாகவே, ஜெர்மனில், ஃபிராங்கண்ஸ்டைன் என்றால் "ஃபிராங்குகளின் கல்" என்று பொருள். இந்தப் பெயர், மேரி ஷெல்லி இந்த நாவலை எழுதும் முன்னர் படகில் செல்லும்போது பார்த்திருக்கக்கூடிய ஃபிராங்கண்ஸ்டைன் கோட்டை (பர்க் ஃபிராங்கண்ஸ்டைன் ) போன்ற பல்வேறு இடங்களோடு இது சம்பந்தப்பட்டிருக்கிறது. ஃபிராங்கண்ஸ்டைன் பாலடினேட்டில் உள்ள நகராகவும் இருக்கிறது; 1946க்கு முன்னர் போலந்து சிலேசியாவில் உள்ள Ząbkowice Śląskie ஷிலேஷியா ஃபிராங்கண்ஸ்டைன் என்றே அறியப்பட்டது.
மிகச் சமீபத்தில், இன் சர்ச் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் என்ற தன்னுடைய புத்தகத்தில் ராடு ஃப்ளோரஸூ, மேரியும் ஷெல்லியும் தாங்கள் சுவிட்சர்லாந்திற்கு செல்லும் வழியில் டர்மாஸ்டட் அருகில் ரைன் ஆற்றை சுற்றி அமைந்திருக்கும் ஃபிராங்கண்ஸ்டைன் கோட்டைக்கு வருகை புரிந்திருக்கின்றனர், அங்கே கான்ராட் டிப்பில் என்ற ரசவாதி மனித உடல்களைக் கொண்டு பரிசோதனை செய்திருக்கிறார், ஆனால் மேரி தன்னுடைய படைப்பு அசலானது என்ற பொதுக் கோருதலை தக்கவைத்துக்கொள்ள இந்த வருகையை வெளியிடவில்லை என்று வாதிடுகிறார். ஏ.ஜே.டே எழுதிய சமீபத்திய இலக்கியக் கட்டுரையில்[13] மேரி ஷெல்லி தன்னுடைய அறிமுக நாவலை எழுதுவதற்கு முன்பாக அவர் ஃபிராங்கண்ஸ்டைன் கோட்டைக்கு[14] சென்றுவந்திருக்கிறார் என்ற ஃப்ளோரஸூவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார். மேரி ஷெல்லியின் 'தொலைந்த' நாட்குறிப்புகளில் இருந்தது என்ற ஃபிராங்கண்ஸ்டைன் குறித்த குற்றச்சாட்டு ரீதியிலான விவரத்தை டே இணைத்திருக்கிறார். இருப்பினும், இந்தக் கருத்தமைவு குறித்த விமர்சனங்கள் இல்லாமல் இல்லை; ஃபிராங்கண்ஸ்டைன் நிபுணரான லியோனார்ட் வுல்ஃப் இதனை "ஏற்றுக்கொள்ள முடியாத...திட்டமிட்ட சதி"[15] என்கிறார், அத்துடன் 'தொலைந்த' நாட்குறிப்புகளும் ஃப்ளோரஸுவின் ஒப்புதல்களும் சரிபார்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.[16]

விக்டர்

விக்டர் எனற பெயரின் சாத்தியமுள்ள விளக்கம் ஜான் மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட்டில் இருந்து பெறப்பட்டிருக்கிறது, இது ஷல்லியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகும் (பாரடைஸ் லாஸ்ட்டைச் சேர்ந்த ஒரு மேற்கோள் ஃபிராங்கண்ஸ்டைனின் முதல் பக்கத்தில் காணப்படுகிறது என்பதுடன் ஷெல்லியும்கூட அந்த அசுரன் இதைப் படித்துப்பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்). மில்தொடர் கடவுளை "தி விக்டர்" என்றே பாரடைஸ் லாஸ்ட்டில் குறிப்பிடுகிறார், அத்ததுடன் வாழ்க்கையை உருவாக்கி விளையாடும் கடவுளாக ஷெல்லி விக்டரைப் பார்க்கிறார்.
இதற்கும் மேலாக, அசுரனை ஷெல்லி சித்தரித்த விதம் பாரடைஸ் லாஸ்ட்டில் உள்ள சாத்தான் கதாபாத்திரக்கும் அதிக கடன்பட்டிருக்கிறது; உண்மையில், காவியக் கவிதையைப் படித்த பின்னர் தான் சாத்தானின் கதாபாத்திரத்திற்காக அனுதாபப்படுவதாகவும் அசுரன் கூறுகிறான்.
விக்டருக்கும் மேரியின் கணவரான பெர்ஸி ஷெல்லிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. விக்டர் என்பது பெர்ஸி ஷெல்லி அவருடைய சகோதரி எலிசபெத்துடன் இணைந்து எழுதிய கவிதைத் தொகுப்பில் அவருடைய புனைப்பெயராக இருக்கிறது, அதாவது அசல் கவிதை - எழுதியது - வி்க்டர் மற்றும் கேஸிர் .[17] விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனுக்கான மேரி ஷெல்லியின் மாதிரிகளுள் ஒன்றுதான் பெர்ஸி என்ற யூகமும் நிலவுகிறது, இவர் ஈடனில் "மின்சாரம் மற்றும் காந்தவிசையையும், வெடிமருந்து மற்றும் பல்வேறு ரசாயன எதிர்வினைகளையும் பரிசோதித்துப் பார்த்தவராவார்", அத்துடன் ஆக்ஸ்போர்டில் உள்ள அவருடைய அறை அறிவியல் உபகரணங்களால் நிரம்பியிருந்தது.[18] பெர்ஸி ஷெல்லி செல்வந்தரான கிராம நிலக்கிழாரும், வலுவான அரசியல் செல்வாக்குள்ள மற்றும் கோரிங் கோட்டை கோமகனான சர் பைஷே ஷெல்லி, மற்றும் அருண்டெல் முதல் இளவசரான ரிச்சர்ட் ஃபிட்ஸலானின் வழிவந்தவருடைய முதல் மகனாவார்.[19] விக்டரின் குடும்பம் அந்தக் குடியரசில் மிகவும் குறி்ப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது என்பதுடன் அவர்களுடைய முன்னோர்கள் நகர்மன்ற உறுப்பினர்களாகவும் அரசு அதிகாரிகளாகவும் இருந்தவர்கள். பெர்ஸிக்கு எலிசபெத் என்ற பெயர்கொண்ட சகோதரி உண்டு. விக்டருக்கு எலிசபெத் என்ற பெயர்கொண்ட தத்து சகோதரி உண்டு. 1815 பிப்ரவரி 22 இல், மேரி ஷெல்லி இரு மாதங்கள் முதிர்வுறாத குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்தக் குழந்தை இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இறந்துவிட்டது. பெர்ஸி அந்த முதிர்வுறாத குழந்தை குறித்து அக்கறை காட்டவில்லை என்பதோடு ஒரு மோசமான விவகாரத்திற்காக மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி கிளேரிடம் விட்டுவிட்டார்.[20] அந்த படைப்பிற்கு உயிர் வந்ததும் அதைப் பார்க்கும் விக்டர் இருப்பிடத்தை விட்டு சென்றுவிடுகிறார், இருப்பினும் புதிதாகப் பிறந்த அந்த உயிர் தன்னுடைய பெற்றோர் என்பதாக ஒரு குழந்தையாக அவரை அணுகுகிறது. அந்த உயிருக்கு விக்டரின் பொறுப்பு குறித்த கேள்வி இந்தப் புத்தகத்தின் முக்கியமான கருக்களுள் ஒன்றாக இருக்கிறது.

நவீன பிரமீதீயஸ்

நவீன பிரமீதீயஸ் என்பது நாவலின் துணைத்தலைப்பாகும் (சில நவீன பதிப்புகள் இந்தத் துணைத்தலைப்பை விட்டுவிட்டன, அது வெறும் அறிமுகம் மட்டுமே என்று குறிப்பிடுகின்றன). கிரேக்க தொன்மத்தின் வடிவங்களுள் ஒன்றான பிரமீதீயஸ் மனிதகுலத்தை உருவாக்கிய டைட்டன் ஆவார். சொர்க்கத்திலிருந்து ரகசியமாக தீயை எடுத்து அதை மனிதர்களுக்கு அளித்ததும் பிரமீதீயஸ்தான். ஜீயஸ் இதைக் கண்டுபிடித்ததும், அவர் பிரமீதீயஸை ஒரு பாறையில் வைத்து கட்டுகிறார், தினமும் ஒரு வேட்டைப் பறவை வந்து அவருடைய கல்லீரலை கொத்தித் திண்ணும், மறுநாள்தான் அந்த கல்லீரல் மீண்டும் வளரும் எனும்படி தண்டனையளிக்கிறார்; ஹீராக்கிள்ஸ் (ஹெர்குலிஸ்) வந்து அவரை மீட்கும்வரை அந்தப் பறவை மீண்டும் வந்துகொண்டிருந்தது.
பிரமீதீயஸ் லத்தீன் தொன்மத்திலும் குறிப்பிடப்படுகிறார், ஆனால் வேறுபட்ட கதையோடு. இந்தப் பதிப்பில் பிரமீதீயஸ் மனிதனை களிமண் மற்றும் தண்ணீரிலிருந்து உருவாக்குகிறார், இதுவும்கூட விக்டர் இயற்கையின் விதிகளுக்கு (வாழ்வு இயல்பாக எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது) எதிராக கலகம் செய்வதும், அதற்குப் பலனாக தண்டனை அடைவதுமாக ஃபிராங்கண்ஸ்டைனுக்கான கருவாக அமைந்திருக்கிறது.
1910 இல், எடிசன் ஸ்டுடியோஸ் ஷெல்லியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் சலனப் படத்தை வெளியிட்டது.
பிரமீதீயஸின் கிரேக்க தொன்மத்தில் வரும் டைட்டன் விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனுக்கு இணையாக இருக்கிறார். மனிதர்களை உருவாக்குவதில் டைட்டனின் புத்துருவாக்கப் பணிக்கு ஒத்ததாக புதிய அர்த்தங்களைப் பிரதிபலிப்பதன் மூலம் விக்டரின் பணியும் மனிதனை உருவாக்குவதாக இருக்கிறது. இவ்வழியில் சொர்க்கத்திடமிருந்து டைட்டன் தீயைத் திருடி மனிதர்களுக்கு அளித்ததைப் போன்று விக்டர் கடவுளிடமிருந்து படைப்பு ரகசியத்தைத் திருடுகிறார். டைட்டன் மற்றும் விக்டர் ஆகிய இருவருமே தங்களுடைய செயல்களுக்காக தண்டிக்கப்படுகின்றனர். விக்டர் தனக்கு நெருக்கமானவர்களின் இழப்பால் பாதிக்கப்படுவதன் மூலம் கண்டிக்கப்படுகிறார், தன்னுடைய படைப்பால் கொலைசெய்யப்படுவோம் என்ற பேரச்சத்தால் அவர் பீடிக்கப்படுகிறார்.
மேரி ஷெல்லிக்கு பிரமீதீயஸ் கதாநாயகன் அல்ல, ஒருவகையான பேய், அவனை அவர் மனிதர்களுக்கு நெருப்பைக் கொணர்ந்து மனித இனத்தை சுவைமிக்க உணவை உண்ணும்படி தூண்டியதாக குற்றம்சாட்டுகிறார் (வேட்டையாடுதல் மற்றும் கொலை செய்தலைத் தூண்டும் சமைத்தல் என்பதை நெருப்பு கொண்டுவந்துவிடுகிறது).[21] இந்த ஒப்புதலுக்கான ஆதரவு இந்த நாவலின் 17வது அத்தியாயத்தில் காணப்படுவதாக இருக்கலாம், இங்கே "அசுரன்" விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனிடம் பின்வருமாறு பேசுகிறான்: "என்னுடைய உணவு அந்த மனிதன் அல்ல; என்னுடைய பசியை ஆற்றிக்கொள்ள நான் அந்தப் பையனையும் ஆட்டையும் கொல்லவில்லை; சோளமும் பெர்ரிக்களுமே என்னுடைய ஊட்டச்சத்திற்கு போதுமானவையாக இருக்கின்றன." ரொமாண்டிக் யுகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு, மனிதர்களுக்கான பிரமீதீயஸின் பரிது 18 ஆம் நூற்றாண்டின் இரண்டு பெரிய உடோப்பிய உறுதிப்பாடுகளின் எதிரொலியாக இருக்கிறது: தொழில் புரட்சி மற்றும் பிரெஞ்சு புரட்சி, இவை இரண்டுமே உறுதிப்பாடுகளையும் அறியப்படாத சாத்தியமுள்ள குரூரம் ஆகிய இரண்டையும் கொண்டிருந்தன.
பைரன் குறிப்பாக அஸ்கிலஸ் எழுதிய பிரமீதீயஸ் பவுண்ட் என்ற நாடகத்தோடு பற்று கொண்டிருந்தார், பெர்ஸி ஷெல்லி விரைவிலேயே தன்னுடைய பிரமீதீயஸ் அண்பவுண்ட் (1820) நாடகத்தை எழுதவிருந்தார். "நவீன பிரமீதீயஸ்" என்ற சொற்பதம் உண்மையில் பெஞ்சமின் ஃபிராங்க்ளினையும் அவருடைய அப்போதைய சமீபத்திய பரிசோதனைகளாக இருந்த மின்சாரம் குறித்த பரிசோதனைகளையும் குறிப்பிடுவதற்கு இம்மாணுவல் காண்ட்டால் உருவாக்கப்பட்டதாகும்.[22]

ஷெல்லியின் மூலாதாரங்கள்

ஷெல்லி தன்னுடைய படைப்போடு நிறைய மூலாதாரங்களை இணைத்துக்கொண்டிருந்தார், இவற்றில் ஒன்று ஒவிட்டைச் சேர்ந்த பிரமீதீயன் தொன்மம் ஆகும். ஜான் மில்லடனுடைய பாரடைஸ் லாஸ்ட் , சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜின் தி ரிம் ஆஃப் தி ஏன்ஷியண்ட் மரைனர் ஆகியவற்றின் தாக்கம் அந்த அசுரன் அவற்றைக் கேபினில் காண்பது இந்த நாவலில் சொல்லப்படுவதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது. அத்துடன், இரண்டு ஷெல்லிக்களும் வில்லியம் தாமஸ் பெக்ஃபோர்டின் கோதிக் நாவலான வாடெக்கைப் படித்திருக்கின்றனர்.[சான்று தேவை] ஃபிராங்கண்ஸ்டைன் அவருடைய தாயார் மேரி வோல்ட்ஸ்டன்கிராஃப்டிற்கான நிறைய குறிப்புகளையும் உள்ளிட்டிருந்தது, அத்துடன் அவருடைய பிரதான படைப்பான எ விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் உமன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமநிலையற்ற கல்வி குறித்து விவாதித்தது. அவருடைய படைப்பில் தன்னுடைய தாயாரின் கருத்தாக்கங்கள் என்ற உள்ளிடல் இந்த நாவில் படைப்பின் கருவோடும் தாய்மையோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. ஃபிராங்கண்ஸ்டைன் கதாபாத்திரத்திற்கான சில கருத்தாங்களை ஹம்ப்ரி டேவியின் புத்தகமான எலிமண்ட்ஸ் ஆஃப் கெமிக்கல் ஃபிலாசபியிலிருந்து மேரி பெற்றுக்கொண்டிருக்கலாம், இந்தப் புத்தகம் குறித்து அவர் "படைப்பு என்று அழைக்கப்படக்கூடிய மனித சக்திகளுக்கு அறிவியல் வழங்கியிருக்கக்கூடியது; இவை அவனைச் சுற்றியுள்ள இருப்புக்களை மாற்றவும் மேம்படுத்தவும் அவனுக்கு சக்தியளிக்கக்கூடியவை..." என்று எழுதியிருக்கிறார்.

பகுப்பாய்வு

தன்னுடைய நாவலைப் பற்றிய ஒரு விளக்கம் அவர் தன்னுடைய தந்தையான வில்லியம் கோல்ட்வினின் அடிப்படைவாத அரசியல் குறித்து எழுதும்போது ஷெல்லியாலேயே மறைகுறிப்பாகத் தரப்படுகிறது:
The giant now awoke. The mind, never torpid, but never rouzed to its full energies, received the spark which lit it into an unextinguishable flame. Who can now tell the feelings of liberal men on the first outbreak of the French Revolution. In but too short a time afterwards it became tarnished by the vices of Orléans — dimmed by the want of talent of the Girondists — deformed and blood-stained by the Jacobins.[23]
ஒரு கட்டத்தில் ஷெல்லியின் நாவலில் அந்த அசுரன் பனிக்கட்டியாற்றில் விக்டரை எதிர்கொள்கிறான். அந்த அசுரன் தன்னுடைய தனிமையையும் தான் கைவிடப்பட்டதையும் விளக்குகிறான். விக்டரால் இப்போதும் தான் அந்த அசுரனைக் கைவிட்டதாக பார்க்க முடியவில்லை, தன்னுடைய பெற்றோர்கள் தான் குழந்தையாக இருக்கும்போது செய்ததைப் போன்று தான் அந்த அசுரனை நேசிக்கவும் அவனுக்காக நேரத்தை செலவிடவும் விரும்புவதாக நினைக்கிறார். இதுபோன்று விக்டருக்கு பற்றில்லாமல் போனது எதனால்? தன்னை ஒரு பெற்றோராக அவரால் ஏன் பார்க்க முடியவில்லை? தி நைட்மேர் ஆஃப் ரொமாண்டிக் ஐடியலிஸம் என்ற கட்டுரையில் அதன் ஆசிரியர், "ஃபிராங்கண்ஸ்டைன் தந்தையாகிவிடும்போது […], அவர் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடத்தில் கொண்டிருக்க வேண்டிய கடமைகளை வசதியாக மறந்துவிடுகிறார் […] ஒரு படைத்தோனாக அவரிடம் இல்லாத ஒரு பண்பு என்னவெனில் ‘தாங்கள் வாழ்வளித்த உயிரிடத்தில் அவர்கள் கடமைப்பட்டிருக்கும் ஆழமான பிரக்ஞை’ என்ற தன்னுடைய சொந்த பெற்றோர்களிடத்தில் இருந்த பாராட்டுணர்வு அவரிடம் இல்லாமல் போனதுதான் " (ஷெல்லி 391) "[ஃபிராங்கண்ஸ்டைனால்] வாழ்வில் வயது முதிர்ந்த பாத்திரம் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுவதால் […] அவர் படைப்பதற்கான சக்தியைத் […] தக்கவைத்துக்கொள்கிறார். அதேநேரத்தில் அவர் முற்றிலும் பொறுப்பற்றவராக இருக்கிறார் […] அத்துடன் தன்னுடைய ஒப்பந்தங்களின் தொடர்விளைவுகளை எதிர்கொள்ளும் துணிச்சலின்றியும் இருக்கிறார்" என்றும் இந்த ஆசிரியர் வாதிடுகிறார்.(ஷெல்லி 391) இந்தப் பத்திகள் விக்டர் தன்னுடைய படைப்பை நோக்கி தன்னுடைய மனதை அமைத்துக்கொண்ட விதத்தை விளக்குவதற்கு உதவுகிறது. எதிர்பாராதவிதமாக, விக்டரின் மகிழ்ச்சியான குழந்தைப்பருவம் யதார்த்த உலகிற்கு தயாராகவில்லை. அவர் வளரவேயில்லை என்பதோடு தன்னுடைய செயல்களுக்கான பொறுப்பையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. ஃபிராங்கண்ஸ்டைன் படைத்தவருக்கும் படைப்புக்கும் இடையிலுள்ள உறவையும், அன்பின் உலகளாவிய தேவை மற்றும் ஒருவருடைய பெற்றோர் மற்றும் சமூகத்திடமிருந்து ஏற்பிற்கான தேவையையும் கண்டுபிடிக்க முயல்கிறது. தன்னுடைய படைப்பை விக்டர் மறுதலிப்பது அந்த அசுரனை யாருமற்றவனாக்குகிறது, இந்த படைப்பினிடத்தில் கலங்க வைக்கும் கோபம் மற்றும் சீற்றத்தை உருவாக்குகிறது, அதனால் அவன் விக்டர் தன்னை மாய்த்துக்கொண்டும், அந்த அசுரன் தன்னை அழித்துக்கொள்ள விலகும் வரையிலும் விக்டரின் அன்புக்குரியவர்களைக் கொன்று குரூரமாக எதிர்வினை புரிகிறான்.
ஃபிராங்கண்ஸ்டைனில் காணக்கிடைக்கும் மற்றொரு கரு தனிமையும், அது மனிதர்கள் மீது ஏற்படுத்தும் விளைவும் ஆகும். இந்தக் கரு மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் சிந்தனைகள் மற்றும் அனுபவங்கள் வழியாக தெரிய வருகிறது: வால்டன், ஃபிராங்கண்ஸ்டைன் மற்றும் அசுரன். இந்தக் கதையின் தொடக்கத்தில் வரும் கடிதங்கள் முற்றிலும் வால்டனின் சாகசம் அதனுடைய மேன்மையையும் கவர்ச்சியையும் இழக்கத்தொடங்கும்போது தோன்றும் தனிமையின் உணர்வுகளாக இருக்கிறது. விக்டர் இந்தப் புத்தகம் முழுவதிலும் அச்சத்தையும் கவலையையுமே எதிர்கொள்கிறார். கதையின் தொடக்கத்தில் விக்டரின் வேலை அவரை அவருடைய குடும்பத்திலிருந்து பிரிக்கிறது. அவர் பல வருடங்களைத் தனிமையிலேயே கழிக்கிறார். அவருடைய குடும்பமும் நண்பர்களும் கதையில் பின்னாளில் இறக்கத்தொடங்கும்போது இந்த ஆரோக்கியமற்ற உணர்வுகள் தீவிரமடைகின்றன. அவர் "நீடித்த முதல் அதிர்ச்சியிலிருந்து முற்றிலுமாக மீண்டுவிட்ட இந்த மனநிலை என் ஆரோக்கியத்தை காவுகொள்கிறது. நான் மனிதனின் முகத்தைத் தவிர்த்தேன்; மகிழச்சி அல்லது மனநிறைவின் ஓசைகள் அனைத்தும் என்னை வதைத்தன; தனிமை மட்டுமே என்னுடைய ஒரே ஆறுதல் - ஆழ்ந்த, இருளடைந்த, மரணம் போன்ற தனிமை.” ஃபிராங்கண்ஸ்டைன் பின்வருமாறு கூறுகையில் இதேபோன்ற உணர்ச்சிகளைக் காட்டுகிறார் "இவ்வகையில் அமைவிக்கப்பட்ட சூழ்நிலையில் மிகவும் வெறுக்கத்தக்க வேலையில் ஈடுபடுவது, நான் ஈடுபட்டுள்ள உண்மைக் காட்சியிலிருந்து உடனடியாக என் கவனத்தை ஈர்ப்பதற்கான எதுவும் இல்லாத தனிமையில் மூழ்கிவிடுவது என் ஆன்மா சமநிலை குலைந்துபோகிறது; நான் அமைதியின்றியும் படபடப்புடனே பிறந்தேன்.” தனிமை தன்னை எவ்வளவு அழிவுப்பூர்மாக மாற்றிவிட்டது என்று பின்வருமாறு கூறுகையில் அசுரன சுருக்கமாக விவரிக்கிறான் “மாண்புமிக்க மற்றும் இயல்கடந்த அழகின் தொலைநோக்கு மற்றும் நற்பேறின் மாண்பு ஆகியவற்றால் நிரம்பியிருக்கும் ஒருவருடைய சிந்தனையின் பிறப்பாக நான் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அது இவ்வாறுதான் நடந்தது; வீழ்ந்துவிட்ட தேவதை ஒரு குரோதம் நிறைந்த பேய் ஆகிவிட்டது. இன்னும் கடவுள் மற்றும் மனிதனின் எதிரி தன்னுடைய தனிமையில் நண்பர்களையும் கூட்டாளிகளையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்; நான் முற்றிலும் தனிமையாகிவிட்டேன்.” ஷெல்லி தெளிவாகவே இந்தக் கருவை நாடியறிகிறார், தனிமை அவருடைய மையக் கதாபாத்திரங்களுக்கான மையக் கருவாக இருக்கிறது.
நைட்மேர்: பர்த் ஆஃப் ஹானரில் கிறிஸ்டோபர் ஃபிரேலிங் ஷெல்லி ஒரு சைவ உணவுக்காரர் என்பதால் நாவலில் விவரிக்கப்பட்டுள்ள வெட்டிக்கூறுபடுத்தலுக்கு எதிராக விவாதிக்கிறார். 3வது அத்தியாயத்தில் விக்டர் "உயிரற்ற களிமண்ணாக உருவாக்குவதற்கு வாழும் விலங்கை வதைத்தது" என்று எழுதுகிறார். அந்த அசுரன் கூறுகிறான்: "அந்த மனிதன் என்னுடைய உணவு அல்ல; என்னுடைய பசியை ஆற்றிக்கொள்ள நான் அந்த ஆட்டையும் மனிதனையும் கொல்லவில்லை."
சிறுபான்மை அபிப்பிராயத்தைக் குறிப்பிடும் ஆர்தர் பெல்ஃபேண்ட் தன்னுடைய ஃபிராங்கண்ஸ்டைன், தி மேன் அண்ட் தி மான்ஸ்டர் (1999, ISBN 0-9629555-8-2) என்ற புத்தகத்தில் மேரி ஷெல்லியின் நோக்கம் அந்த அசுரன் என்ற ஒருவன் இல்லவே இல்லை என்றும், விக்டர் ஃபிராங்கண்ஸ்டைன் மூன்று கொலைகளைச் செய்கிறார் என்றும் வாசகரைப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பதே என்று வாதிடுகிறார். இந்த விளக்கத்தில், இந்தக் கதை விக்டரின் அறம்சார் தரக்குறைவு குறித்த ஆய்வாக இருக்கிறது என்பதுடன் இந்தக் கதையின் அறிவியல் புனைவு அம்சங்கள் விக்டரின் கற்பனையே.
மற்றொரு சிறுபான்மை அபிப்பிராயமாக விமர்சகர் ஜான் லாரிட்ஸன் தன்னுடைய 2007 ஆம் ஆண்டு புத்தகமான "தி மேன் ஹு ரோட் ஃபிராங்கண்ஸ்டைனில் ", [24]மேரியின் கணவரான பெர்ஸி பைஷே ஷெல்லியே இதன் ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார். லாரிட்ஸனின் கருதுகோளுக்கு முக்கியமான மேரி ஷெல்லியின் ஆய்வாளர்களால் ஆதரவு அளிக்கப்படவில்லை[சான்று தேவை], ஆனால் இந்தப் புத்தகம் விமர்சகர் கேமிலி பேக்லியாவின்[25] பாராட்டுதலையும், ஜெர்மெய்ன் கிரீரின் விமர்சனத்தையும் பெற்றது.[26]
டெலாவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியரான சார்லஸ் இ. ராபின்ஸன் தன்னுடைய 2008 ஆம் ஆண்டு ஃபிராங்கண்ஸ்டைன் பதிப்பில் இந்த விவாதத்திற்குரிய கூற்றிற்கு ஓரளவு ஆதரவளிக்கிறார். ராபின்ஸன் கையெழுத்துப் பிரதிகளை மீண்டும் பார்வையிட்டார் என்பதோடு ஃபிராங்கண்ஸ்டைன் கையெழுத்துப்படிகள் முழுவதிலும் பெர்ஸி ஷெல்லியின் உதவி இருந்ததையும் ஏற்றுக்கொள்கிறார்.[சான்று தேவை]

வரவேற்பு

இந்தப் புத்தகத்திற்கான தொடக்கநிலை விமர்சன வரவேற்பு சாதகமானதாக இல்லை, ஆசிரியரின் அடையாளம் குறித்த குழப்பமான யூகங்களால் இது சூழ்ந்திருந்தது. சர் வால்டர் ஸ்காட் "முழுமையாகப் பார்க்கையில் இந்தப் படைப்பு ஆசிரியரின் அசலான மேதைமையும் வெளிப்படுத்தலின் மகிழ்ச்சியான சக்தியும் சேர்ந்து எங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது", ஆனால் பெரும்பாலான விமர்சகர்கள் இதை "பயங்கரமான அருவருப்பை ஏற்படுத்தும் முட்டாள்தனமான பின்னல்" என்று கருதுகின்றனர் (குவார்டர்லி ரிவ்யூ ).
இத்தகையா விமர்சனங்கள் இருந்தபோதிலும் ஃபிராங்கண்ஸ்டைன் உடனடி வெகுஜன வெற்றியைப் பெற்றது. இது மெலோடிராமா நாடக அரங்கு தழுவல்களின் மூலமாக பரவலான புகழ்பெற்றது - மேரி ஷெல்லி 1823 இல் ரிச்சர்ட் பிரின்ஸ்லே பீகேயின் நாடகமான பிரிசம்ஷன்; ஆர் தி ஃபேட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் என்ற நாடகத்தின் தயாரிப்பைப் பார்த்திருக்கிறார். பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1821 இல் வெளிவந்திருக்கிறது (ஃபிராங்கண்ஸ்டைன்: ou le Prométhée Moderne மொழிபெயர்ப்பு ஜுல்ஸ் சலாதின்).
ஃபிராங்கண்ஸ்டைன் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதுடன் 1818 இல் பெயர் குறிப்பிடாமல் வெளிவந்ததால் அலட்சியம் செய்யப்பட்டும் இருக்கிறது. அந்தக் காலத்தைச் சேர்ந்த விமர்சனக் கண்ணோட்டங்கள் இரண்டு பார்வைகளை முன்வைக்கின்றன. பெல்லே அசெம்பிளி இந்த நாவலை "மிகவும் துணிச்சலான புனைவு" என்று குறிப்பிட்டிருக்கிறது (139). குவார்டர்லி ரிவ்யூ "கருத்துருவாக்கம் மற்றும் மொழி ஆகிய இரண்டிலுமே ஆசிரியர் வலிமையை பெற்றிருக்கிறார்" என்று கூறியிருந்தது (185). பிளாக்வுட்டின் எடின்பர்க் பத்திரிக்கையில் சர் வால்டர் ஸ்காட் இதன் ஆசிரியரை "அசலான மேதைமையும் வெளிப்படுத்தலின் மகிழ்ச்சியான சக்தியும்" என்று பாராட்டியிருந்தார், இருப்பினும் ஆசிரியர் அந்த அசுரன் உலகையும் மொழியையும் பற்றிய அறிவைப் பெறும் முறையை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளும்படிச் செய்யவில்லை.[27] எடின்பர்க் மேகஸின் மற்றும் லிட்டரரி மி்ஸ்ஸிலேனி "இந்த ஆசிரியரிடமிருந்து மிகவும் ஆக்கப்பூர்வமான படைப்புகளை" எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தது (253).
இதன் ஆசிரியர் வில்லியம் கோல்ட்வினின் மகளாக அறியப்படுகின்ற இரண்டு விமர்சனப் பார்வைகளில் இந்த நாவலின் விமர்சனம் மேரி ஷெல்லியின் பெண் இயல்பின் மீது தாக்குதல் தொடுக்கிறது. பிரிட்டிஷ் விமர்சகர்கள் இந்த நாவலின் குறைபாடுகளை ஆசிரியரின் தவறு என்றே விமர்சித்தனர்: "இதை எழுதியவர் ஒரு பெண் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்; இந்த நாவலில் மேலோங்கியிருக்கும் தவறு இதை இன்னும் மோசமாக்குகிறது; ஆனால் நம்முடைய ஆசிரியை தன்னுடைய பாலினத்தின் மேன்மையை மறந்திருப்பாரேயானால், நாமும் ஏன் கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; அத்துடன் நாம் மேற்கொண்டு கருத்தேதும் கூறாமல் இந்த நாவலை தள்ளுபடி செய்துவிடலாம்" (438). லிட்டரரி பனோரமா மற்றும் நேஷனல் ரிஜிஸ்டர் ஆகியவை இந்த நாவலை "பிரபலமான வாழும் நாவலாசிரியரின் மகளால்" படைக்கப்பட்ட "மிஸ்டர் கோல்ட்வின் நாவல்களின் அற்பமான சாயல்" என்று கடுமையாக விமர்சித்திருந்தது (414).
இந்த தொடக்ககால தள்ளுபடிகள் இருந்தபோதிலும் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து விமர்சன வரவேற்பு பெருமளவிற்கு நேர்மறையானதாகவே இருந்தது.[28] எம்.ஏ. கோல்ட்பெர்க் மற்றும் ஹெரால்ட் புளூம் போன்ற முன்னணி விமர்சகர்கள் இந்த நாவலின் "அழகியல் மற்றும் அறம்சார்" சார்புநிலையைப் பாராட்டினர்[29] என்பதோடு சமீபத்திய ஆண்டுகளில் இந்த நாவல் உளவியல் பகுப்பாய்வு மற்றும் பெண்ணிய விமர்சனங்களுக்குரிய பிரபலமான விஷயமாக இருந்துவருகிறது. இந்த நாவல் இன்று பொதுவாக ரொமாண்டிக் யுகம் மற்றும் கோதிக் இலக்கியம், மற்றும் அறிவியல் புனைகதை ஆகியவற்றிற்கான முக்கியப் படைப்பாக கருதப்படுகிறது.[30]

வெகுஜன கலாச்சாரத்தில் ஃபிராங்கண்ஸ்டைன்

பிரைட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைனில் (1935) வரும் காவிய அசுரனும், ஃபிராங்கண்ஸ்டைன் அசுரன் குறித்த ஹாலிவுட்டின் விளக்கமுமாக இருக்கும் போரிஸ் கார்லாஃப், ஜேக் பியர்ஸின் ஒப்பனை.
ஷெல்லியின் ஃபிராங்கண்ஸ்டைன் தற்போது பிரபலமாகியிருக்கும் பித்த அறிவியலாளர் வகையின் முதல் நாவல் என்று அழைக்கப்படுகிறது.[31] இருப்பினும், வெகுஜன கலாச்சாரம் விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனை எளிமையான, சிறந்த பொருளைத் தரக்கூடிய மிகமிக களங்கமுற்ற கதாபாத்திரமாக மாற்றிவிட்டது. இது அந்த அசுரனை உண்மையில் சித்தரிக்கப்பட்டதைக் காட்டிலும் மிகவும் உணர்ச்சிபெருக்குள்ள, மனிதத் தன்மை நீக்கப்பெற்ற ஒன்றாகவும் மாற்றிவிட்டது. அசல் கதையில் விகடர் செய்யும் மிக மோசமான விஷயம் என்னவெனில் இந்த அசுரனை பயமில்லாதவனாக படைத்ததுதான். திகிலை உருவாக்குவது அவர் நோக்கமாக இருக்கவில்லை. மேலும் இந்த அசுரனும்கூட ஒரு அப்பாவியான, விரும்பத்தகுந்த உயிராகவே தொடங்குகிறான். உலகம் அவன் மீது வன்முறையைத் திணித்து அவன் வெறுக்கத் தொடங்கும்வரை கூட அல்ல. அறிவியல்பூர்வ அறிவு தீமைக்கு சாத்தியமுள்ளதாகவும் அபாயகரமான முறையில் கவர்ந்திழுப்பதாகவும் நாவலின் முடிவில் விக்டரால் குறிப்பிடப்படுகிறது.[32]
இருப்பினும் இந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்ட உடனேயே, மேடை நாடக இயக்குநர்கள் இந்தக் கதையை மிகவும் காட்சிப்பூர்வமாகப் படைப்பதில் உள்ள பிரச்சினையைக் காணத்தொடங்கினர். 1823 இல் தொடங்கிய நாடகங்களில், நாடக எழுத்தாளர்கள் நாடகத்தைக் காட்சிப்படுத்தியது, அறிவியலாளரின் உள்புற பகுத்தறிவு மற்றும் அந்த அசுரன் வெட்டிவிடப்படுவது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். அசுரன் தன்னுடைய காட்சிப்பூர்வமான மற்றும் மிகவும் உணர்ச்சிப்பெருக்கான வன்முறையால் அந்த நிகழ்ச்சியின் நட்சத்திரமானான். இயற்கையின் புதிர்களை ஆராய்வதற்காக விக்டர் முட்டாளாக சித்தரிக்கப்படுகிறார். இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும் பின்னாளில் வந்த திரைப்படங்களைக் காட்டிலும் இந்த நாடகம் அசலான படைப்பிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.[33] சித்திரக்கதை பதிப்புக்களும் நிறைய வெளிவந்திருக்கின்றன, அத்துடன் ஃபிராங்கண்ஸ்டைன், ஆர் தி வாம்பயர்ஸ் விக்டிம் என்ற இசை பகடிப் பதிப்பு 1887 இல் லண்டனில் தயாரிக்கப்பட்டது.[34]
ஊமைப் படங்கள் இந்தக் கதையை உயிருடன் வழங்குவதைத் தொடர்வதற்கு போராடின. எடிசன் கம்பெனியின் ஒரு ரீல் ஃபிராங்கண்ஸ்டைன் (1910) மற்றும் லைஃப் வித்தவுட் சோல் (1915) என்ற திரைப்படம் போன்ற முந்தைய வடிவங்கள் கருவிற்கு நெருக்கமான வகையில் இருப்பதற்கு முனைந்தன. இருப்பினும், 1931 இல் ஜேம்ஸ் வேல் இந்தக் கதையை அதிரடியாக மாற்றி ஒரு திரைப்படத்தை இயக்கினார். யுனிவர்சல் பிக்சர்ஸில் பணியாற்றி வேலின் திரைப்படம் "டாக்டரின்" பிம்பம் என்று நவீன பார்வையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கின்ற சில ஆக்கக்கூறுகளை கதையின் கருவோடு சேர்த்திருந்தார். ஃபிராங்கண்ஸ்டைன் தொடக்கத்தில் ஒரு இயல்பான, இளம் மாணவராக இருக்கிறார்; உடல் பாகங்களை சேகரித்துக்கொண்டே தன்னுடைய எஜமானருக்கு ஒரு குற்றச்செயல் மூளையைக் கொண்டுவரும் தவறைச் செய்கின்ற இகோர்-போன்ற பாத்திரங்களின் (இந்தப் படத்தில் ஃபிரிட்ஸ் என்று அழைக்கப்படுவது) அறிமுகம்; மற்றும் பரபரப்பான படைப்பு உருவாக்க காட்சி ரசாயன நிகழ்முறைகளைக் காட்டிலும் மின்சார சக்தியிலேயே கவனத்தை செலுத்தியது. (ஷெல்லியின் அசல் உரையில் கதை சொல்பவராக வரும் ஃபிராங்கண்ஸ்டைன் தான் அசுரனை இந்த உலகிற்கு கொண்டுவந்த நிகழ்முறைகளை விவரிப்பதை உள்நோக்கத்தோடு தவிர்த்துவிடுகிறார், இதேபோன்ற பரிசோதனையை வேறு யாரேனும் செய்து பார்க்க முயற்சிப்பார்களோ என்ற அச்சமே காரணம்.) இந்தத் திரைப்படத்தில், அறிவியலாளர் இளமையை அறிந்துகொள்வதைக் காட்டிலும் ஒரு திமிர்பிடித்த, அறிவுஜீவியான, வளர்ந்த மனிதனாக வருகிறார். மற்ற அறிவியலாளர் தன்னார்வலர்கள் அவருக்காக அந்த அசுரனை அழிக்கின்றனர், இந்தத் திரைப்படம் அவருடைய செயல்களுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்படி கட்டாயப்படுத்தவில்லை. வேல்ஸின தொடரான பிரைட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் (1935) மற்றும் பின்னாளில் வந்த சன் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் (1939), மற்றும் கோஸ்ட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் (1942) ஆகியவை டாக்டர் ஃபிராங்கண்ஸ்டைனும் அதேபோன்ற பிற கதாபாத்திரங்களும் மேலும் மேலும் தீமை நிரம்பியவர்களாவதால் பரபரப்பான, திகிலான மற்றும் மிகைப்படுத்தல் என்ற பொது மையக்கருவை தொடர்ந்தது.[35]

த அப்பீல்

தி அப்பீல் ஜான் கிரிஷாம் (John Grisham) என்ற அமெரிக்க எழுத்தாளர், எழுதி 2007ஆம் ஆண்டில் வெளி வந்த புதினம் ஆகும். விறுவிறுப்பான சட்டத்துறைப் புதினங்களுக்குப் பெயர் பெற்ற ஜான் கிரிஷாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த சட்டத்துறை புதினத்தை படைத்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடைபெறும் ஒரு பூச்சிக் கொல்லி தயாரிக்கும் வேதிப் பொருள் நிறுவனத்திற்கும், அப்பொருளால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்குமிடையேயான வழக்கின் மேல் முறையீட்டின் பொழுது நீதிபதி தேர்தலில் தண்ணீராக ஓடும் பணத்தின் மூலம் தீர்ப்பு எப்படி மிகக் குறைந்த விலைக்கு சந்தைக்கு வருகிறது என்பதே கதையின் கரு.

பொருளடக்கம்


கதைப்பாத்திரங்கள்

  • ஜேனட் பேக்கர் - புற்று நோய்க்கு தனது கணவனையும் மனைவியையும் இழந்து வழக்கு தொடுப்பவர்
  • கார்ல் ட்ருடூ - க்ரேன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் அதிபதி, தலைவர்
  • வெஸ் பெய்டன் - ஜேனட் பேக்கருக்கான வழக்கறிஞர்
  • மேரி க்ரேஸ் பெய்டன் - ஜேனட் பேக்கருக்கான வழக்கறிஞர்
  • ஷீலா மகார்தி - மிசிசிப்பி உச்ச நீதிமன்ற நீதிபதி
  • ரான் ஃபிஸ்க் - ஷீலா மகார்த்தியின் இடத்திற்காக அவரை எதிர்த்துப் போட்டியிடம் வேட்பாளர்
  • ப்ரையன் ரைனஹார்ட் - நீதிபதி தேர்தலில், கார்ல் ட்ருடூ சார்பாக செயல்பட்டு ரான் ஃபிஸ்கை வேட்பாளராக்கி அவர் வெற்றிபெற முயல்பவர்

கதைச்சுருக்கம்

எச்சரிக்கை : கதையின் கரு, முடிவு பற்றிய மேலோட்டம் தரப்பட்டுள்ளது
"க்ரேன் கெமிக்கல்ஸ்" நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக பல தொன் எடையுள்ள வேதிக்கழிவுகள் அடங்கியுள்ள பீப்பாய்களை போமோர் எனும் ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் புதைக்கிறது. வேதிப்பொருள் கசிந்து நிலத்தடி நீரில் கலப்பதால் அதனை பயன்படுத்தும் அவ்வூர் மக்கள் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். பிரச்சனை பெரிதாவது தெரிந்ததும் க்ரேன் அதனது உற்பத்தி பிரிவை மூடிவிட்டு ஊரைவிட்டு வெளியேறுகிறது. புற்று நோயால் பதிக்கப்பட்ட மக்கள் பலர் க்ரேன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முயல்கிறார்கள். க்ரேன் எனும் பெரிய நிறுவனத்தை எதிர்த்து போராடி நீதிமன்றம் செல்ல பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறுக்கிறார்கள். போமோரில் பிறந்து வழக்கறிஞரான மேரி க்ரேசும் அவரது வழக்கறிஞர் கனவரும், ஜேனட் பேக்கர் என்பவரின் வழக்கை நீதிமன்ற ஜூரி விசாரனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த வழக்கின் செலவிற்காக தங்களது சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலையிலும் தளராமல் போராடி வருகிறார்கள். வழக்கின் தீர்ப்பில் சான்றாயம்(Jury) க்ரேன் கெமிக்கல்ஸ் ஜேனட் பேக்கருக்கு 41 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் எனத்தீர்ப்பளிக்கிறது. க்ரேன் கெமிக்கல்சின் பங்கு நான்கில் ஒருபங்கிற்கு வீழ்ச்சியடைகிறது. நிறுவனம் திவாலாகும் நிலையில், அதன் அதிபதி கார்ல், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கு வரும்பொழுது எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற முயல்கிறார். இடையில் வரும் உச்ச நீதிமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கக்கூடிய ஒரு நீதிபதியை வேட்பாளராக்கி அவர் வெற்றி பெற பணத்தை செலவழித்து முயற்சி செய்கிறார்.
எச்சரிக்கை முடிவு

கதை அலசும் முக்கிய பிரச்சினை

நீதிபதிகள்,, நியமன முறையில் அல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் பின்விளைவுகள் பற்றி அலசுகிறது. அதேபோல பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் எப்படி தேர்தல்களை மறைமுகமாக திரித்து தங்களது சுய நலன்களை முன்னிறுத்திக்கொள்கின்றன என்பதையும் காண்பிக்கிறார். எல்லாவற்றையும் மேலாக, வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு மதம் எப்படி ஒரு நிகரற்ற தேர்தல் வெற்றி கருவியாக இருக்கின்றது என்பதையும் படம்பிடிக்கிறார்.

ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்

ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் (Angels & Demons) என்பது 2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த வகையில் விற்பனையான மர்மம்-நிறைந்த நாவலாகும், அதை எழுதியவர் அமெரிக்கன் எழுத்தாளரான டான் பிரவுன் ஆவார் மற்றும் அதனை வெளியிட்டோர் பாக்கெட் புக்ஸ் நிறுவனமாகும். இதன் கதையானது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சார்ந்த கற்பனை கதாபாத்திரமான ராபர்ட் லாங்க்டன் என்ற குறியீட்டமர்வு ஆராய்ச்சியாளர் இல்லுமினாட்டி என்ற பெயரில் வழங்கும் ஒரு இரகசிய சமுதாயத்தை சூழ்ந்திருக்கும் மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு, அவர் எடுத்துவரும் முயற்சிகளையும், மேலும் ஆன்ட்டி மேட்டர் என்ற பொருளை வைத்துக்கொண்டு வாட்டிகன் நகரத்தை அழிக்கும் சூழ்ச்சியை முறியடிக்க அவர் பாடுபடுவதையும் சுற்றி வருவதாகும். இந்தப்புத்தகம் வரலாற்றில் காணப்படும் அறிவியல் மற்றும் மதங்களுக்கு இடையே நிலவி வரும் முரண்பாடுகளை ஆதாரமாகக்கொண்டு, குறிப்பாக இல்லுமினாட்டி சமூகத்தினர் மற்றும் ரோமன் கத்தோலிக்க தேவாலய அமைப்புக்களுக்கு இடையே நிலவி வந்த பகைமையை அடிப்படையாகக் கொண்டு எழுதியதாகும்..
இந்த நாவலின் மூலமாக ராபர்ட் லாங்க்டன் என்ற கதாபாத்திரத்தை கதையின் முக்கிய பாத்திரமாக அறிமுகப்படுத்துகிறார், அதற்குப்பின் பிரவுன் 2003 ஆம் ஆண்டில் எழுதிய நாவலான, தி டா வின்சி கோட் மற்றும் 2009 ஆண்டில் எழுதிய நாவலான, தி லோஸ்ட் சிம்பல் என்ற இரு கதைகளிலும் அவரே கதாநாயகனாவார். இந்த நாவலின் பின்தொடர்ச்சியானது இரகசிய சமுதாயங்கள் தீட்டும் சதித்திட்டங்கள், ஒரே நாள் கொண்ட காலக்கெடு, கத்தோலிக்க கிறிஸ்துவ சமுதாயம் போன்ற பலவகைப்பட்ட நடையியல் மூலகங்கள் கொண்டதாகும். இந்நாவல்கள் அனைத்தும் பண்டைய வரலாறு, கட்டடக்கலை, மற்றும் குறியீட்டு முறைமை போன்ற ஆதாரங்களை மிகவும் வலிமையாகத் தழுவியிருப்பதை (சார்ந்திருப்பதை) நாம் காணலாம். இந்த நாவலின் திரைப்படத் தழுவல் ஒன்று மே 15, 2009 ஆம் ஆண்டில் வெளியானது, ஆனால் அதன் திரை வடிவமானது 2006 ஆம் ஆண்டில் வெளியான தி டா வின்சி கோட் திரைப்படத்தின், நிகழ்வுகளுக்குப் பிறகு நடந்தது போன்ற காட்சியமைப்புகள் கொண்டதாகும்.

வெளியீட்டிற்கான பின்னணி

இந்த புத்தகம், நிஜ வாழ்க்கையில் தட்டச்சுவரைபடங்களை உருவாக்கும் ஜான் லாங்க்டன் அவர்கள் படைத்த பல இருதலைகீழ்படைப்புகள் கொண்டதாகும்.[1] "ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்" மற்றும் "இல்லுமினாட்டி" வடிவமைப்புகளுடன், புத்தகத்தின் தலைப்பும் இருதலைகீழ்படைப்பு கொண்டதாக வடிவமைப்பு கொண்டதாகும்., அவற்றை கட்டியான அட்டை கொண்ட பதிப்புகளில் மேலட்டை வெளிப்புறத்திலும், மெல்லிய காகிதம் கொண்ட பதிப்புகளில் உள் அட்டையிலும் காணலாம். இதைத்தவிர, இந்த புத்தகத்தில் பூமி , காற்று , நெருப்பு , மற்றும் தண்ணீர் என ஆங்கிலத்தில் பொருள்படும் சொற்களும் இருதலைகீழ்படைப்பு வடிவமுறையில் வடிவமைப்பு கொண்டதாகும், அதனால் இந்த வடிவமைப்புக் கலையானது காட்சியில் வைக்கப்பட்டு இப்புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்துள்ளது.[2] இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் "இல்லுமினாட்டி வைரமும்" இந்த நான்கு மூலகங்களை வைரத்தின் வடிவில் இருதலைப்படைப்பு வடிவமைப்பு முறையை தழுவி படைத்ததாகும்.

[ கதைக்கரு

இதன் கதையானது ஹார்வர்ட் பல்கலைக்கழக குறியீட்டமர்வு ஆராய்ச்சியாளர் ராபர்ட் லாங்க்டன் அவர்களை சுற்றி வருவதாகும், அவர் இல்லுமினாட்டி என அறியப்படும் பழம்பெரும் இரகசிய சமுதாயத்தினரை தடுத்து நிறுத்தி, அவர்கள் கைப்பற்றிய மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நூதனமான ஆன்ட்டி மேட்டர் என்ற கருவியை வைத்துக்கொண்டு வாட்டிகன் நகரத்தை அழிப்பதைத் தடுத்துப் பாதுகாப்பதேயாகும்.
சிஈஆர்என் என்ற நிறுவனத்தின் இயக்குனரான மாக்ஸிமிலியன் கொஹ்லர் ஒரு நாள் அவர்களுடைய நிறுவனத்தின் மிகவும் மரியாதைக்குரிய இயற்பியல் வல்லுனரான, லியோனார்டோ வெட்றா என்பவர், அவருடைய மிகவும் பாதுகாப்பான, மற்றும் தனிப்பட்ட குடியிருப்பில் கொலையுற்று இறந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரது மார்பில் ஒரு குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது— அது "இல்லுமினாட்டி" என்ற சொல்லின் இருதலைகீழ்படைப்பு என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார்- மேலும் அவரது கண் அதன் இடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதை காண்கிறார். அவர் காவல் துறையின் உதவியை நாடாமல், கொஹ்லர் அந்த தலைப்பை இணையதளத்தில் ஆராய்ந்து பார்க்கிறார் மேலும் இறுதியில் அவர் லாங்க்டன் என்பவருடன் தொடர்பு கொள்கிறார், அவர் இல்லுமினாட்டியினரைப்பற்றி நன்கு அறிந்த ஒரு வல்லுனராவார். கொலையாளியை கண்டுபிடிப்பதற்கு கொஹ்லர் அவருடைய உதவியை நாடுகிறார்.
கொலை நடந்த இடத்தில் லாங்க்டன் கண்ட காட்சி அவரை உறைய வைக்கிறது; அந்த குறியீடு உண்மையானதாக தெரியவருகிறது, மேலும் செவி வழிக்கதையாக கேட்டு வந்த இரகசிய சமுதாயத்தின் பரம்பரை, அழிந்து விட்டதாக கருதியது, மீண்டும் புத்துயிர் பெற்றதாகத் தோன்றியது. கொஹ்லர் வெட்றாவின் தத்து மகளான வெட்டோரியாவை கொலை நடந்த அறைக்கு வரும்படி அழைக்கிறார், மேலும் இந்த இல்லுமினாட்டி சமூகத்தினர் கால் கிராம் அளவுடைய ஆன்ட்டி மேட்டர் அடங்கிய குப்பி ஒன்றை—அது அழிக்கும் தன்மையுடைய மிகவும் ஆபத்தான பொருளாகும் மற்றும் அதன் ஆற்றல் ஒரு சிறிய அணு ஆயுதத்தைப் போன்றதாகும், அப்பொருள் பொதுவாக காணப்படும் எந்தப்பொருள் மீதும் இடிபட்டாலோ அல்லது தொட்டாலோ, உடனுக்குடன் வெடித்துச்சிதறும் தன்மை கொண்டதாகும். சிஈஆர்என் நிறுவனத்திலுள்ள மின்சாரம் அதில் பாய்ந்து கொண்டே இருக்கும் பொழுது, அதனால் ஏற்படும் காந்த மண்டலங்களின் ஆற்றல் காரணமாக மேலும் அந்த குப்பியின் உட்புறம் ஓர் உயர்ந்த வெற்றிடத்தை கொண்டதாக உருவாக்கப்பட்டதால், ஆன்ட்டி மேட்டரின் சொட்டானது (துளி), குப்பிக்குள்ளேயே எங்குமே இடிக்காதவண்ணம் மிதந்தபடியே வைத்திருக்கும்; ஆனால் அதன் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டால், அது தானாகவே அதனுடைய காப்புநகல் மின்கலத்தில் இருந்து மின்சாரம் பெற்று அதன் அந்தரத்தில் தொங்கும் நிலைமை பாதுகாக்கப்படும், ஆனால் இந்த மின்சாரம் 24 மணி நேரங்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும், மின்கலம் புலன் இழக்கும் அந்த நேரத்தில், இந்த ஆன்ட்டி மேட்டர் கீழே விழுந்து விடும், மேலும் அது குப்பியின் அடி பாகத்தை அடைந்து, தன்னைத்தான் வெடித்து அழித்துக்கொள்ளும். இல்லுமினாட்டி சமூகத்தினர் இந்தக் குப்பியைத் திருடி வாட்டிகன் நகரத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார்கள் மேலும் அதற்கு முன்வசம் ஒரு பாதுகாப்பு நிழற்படக்கருவி (காமெரா) பொருத்தியுள்ளார்கள். அதனுள் அமைந்துள்ள டிஜிட்டல் கடிகாரம் நொடிகளை காட்டிக்கொண்டே வருகிறது மேலும் முடிவில் வெடித்துச்சிதறும் தருணம் வரும் வரை அது நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கும்.
லாங்க்டன் மற்றும் வெட்டோரியா இருவரும் வாட்டிகன் நகரத்தை பதற்றத்துடன் அடைகிறார்கள், அங்கே அண்மையில் போப்பரசர் இறந்துவிட்டார், மேலும் பாதிரியார்களின் கூட்டம் ஒரு புதிய போப்பரசரை தெரிவுசெய்ய குழுமியுள்ளனர். கார்டினல் மோர்டாடி, தேர்வு நடப்பதற்கு இடம் வழங்கியவர், நான்கு பிரிஃபெரிட்டி அல்லது விரும்பத்தக்க மற்றும், தேர்வில் நிற்பதற்குத் தகுதியுடைய கார்டினல்மார்கள், வந்து சேராமலிருப்பது அவருக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதர பாதிரியார்கள் வந்த பிறகு, லாங்க்டன் மற்றும் வெட்டோரியா தகுதி வாய்ந்த கார்டினல்மார்களை தேடிக்கொண்டு கிளம்புகின்றனர், அப்படி தேடும்பொழுது, ஆன்ட்டி மேட்டர் அடங்கிய குப்பியையும் கண்டுபிடிக்கலாம் என்ற நப்பாசையும் எழுகிறது. அவர்கள் இப்படி தேடிக்கொண்டு இருக்கும் பொழுது, அவர்களுக்கு கமேர்லேங்கோ கார்லோ வென்ட்ரெஸ்கா (இறந்த போப்பரசரின் நெருங்கிய உதவியாளர்) மற்றும் வாட்டிகன் நகரத்தின் ஸ்விஸ் பாதுகாவலர், அவர்களில் கம்மாண்டர் ஓலிவெட்டி, காப்டன் ரோசெர், மற்றும் லெப்டினண்ட் சார்ட்ராண்ட் போன்றோர் உதவ முன்வருகிறார்கள்.
பிரிஃபெரிட்டி கார்ட்சினல்மார்கள் மறைந்து போனதற்கு ஏதோ வகையில் இல்லுமினாட்டி சமூகத்தினரே காரணம் என்ற நம்பிக்கையில், லாங்க்டன் திரும்பவும் "பாத் ஒப் இல்லுமிநேசன்" (தீப அலங்காரப் பாதை) என்ற பாதையை பின்பற்றி, அது இல்லுமினாட்டி சமூகத்தினர் புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்கு ஏற்படுத்திய பழமையான மற்றும் விரிவான செய்முறை கொண்டதாகும்; உறுப்பினர்களாக சேர நினைக்கும் மக்கள் ரோம் நகரத்தில் இங்கும் அங்கும் விட்டு வைக்கப்பட்ட சிறிய தடயங்களை தொடர்ந்துசென்று இலக்கத்தை அடைய முயற்சிக்க வேண்டும். சரியான முறையில் தடயங்களை தொடர்ந்து சென்றால், அவரால் இல்லுமினாட்டி சமூகத்தினர் சந்திக்க இருக்கும் ரகசிய இடத்தை கண்டுபிடிக்க முடியும் மேலும் உறுப்பினராகவும் சேரயியலும். மதம் சார்ந்த மற்றும் மறைந்த வரலாற்றைப்பற்றிய அறிவாற்றலை வைத்துக்கொண்டு, லாங்க்டன் பாத் ஒப் இல்லுமிநேசன் (தீப அலங்காரப் பாதை) பாதையில் சென்று, பிரிஃபெரிட்டி கார்டினல்மார்கள் மறைந்து போனதற்கான காரணத்தையும் மற்றும்ஆன்ட்டி மேட்டர் குப்பியின் இருப்பிடத்தையும் தடயங்களின் அடிப்படையில் கண்டறிய முனைகிறார்.
பெர்னினிஸ் ஹப்பைகுக் மற்றும் ஏஞ்செல், மற்றும் அகோச்டினோ சிகிஸ் ப்ய்ரமிடல் வால் டோம்ப்.
இந்தப்பாதையானது லாங்க்டன் அவர்களை ரோம் நகரில் உள்ள நான்கு முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்கிறது, (வாட்டிகன் நகரம் ரோம் நகரத்தின் உள் அடங்கியது), ஒவ்வொன்றும் உயிர் வாழ்வதற்காக அத்தியாவசியமாக தேவைப்படும் நான்கு அதிமுக்கியமான மூலகங்கள் என்று இல்லுமினாட்டி சமூகத்தினரால் நம்பப்படுபவை: பூமி, காற்று, நெருப்பு, மற்றும் நீர் அல்லது தண்ணீர். ஒவ்வொரு இடத்திற்கும் வந்தபின்னால், லாங்க்டன் ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்தை சம்பந்தப்படுத்தும் வகையில் ஒரு பிரிஃபெரிட்டி கார்டினல் கொலையுண்டிருப்பதை காண்கிறார்: முதல் கார்டினலின் உடலில் பூமியின் இருதலைகீழ்படைப்பு குறிக்கப்பட்டிருப்பதை காண்கிறார், அவரது வாயில் மணல் திணித்து மூச்சுத் திணறி புதைக்கப்பட்டிருந்தார்; இரண்டாமவர் காற்றின் இருதலைகீழ்படைப்புடன் கூடிய குறியீட்டுடன் காணப்பட்டார் மேலும் அவருடைய நுரையீரல் துளைக்கப்பட்டிருந்தது; மூன்றாமவருக்கு நெருப்புச் சின்னத்தால் இருதலைகீழ்படைப்பு பொறித்துள்ளது மேலும் அவர் உடல் நெருப்பில் எரிக்கப்பெர்றார்; மற்றும் நான்காமவர் தண்ணீர் இருதலைகீழ்படைப்புடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு பெரிய நீரூற்றின் அடியில் மூழ்க வைத்திறந்தார்..
செயிண்ட் பீட்டரின் சதுக்கத்தில் தெற்கு போனேன்டே.
முதல் இரண்டு பிரிஃபெரிட்டி கார்டினல்களின் உடல்களை (பூமி மற்றும் காற்று) கண்டபின், லாங்க்டன் சண்டா மரியா டெல்லா வெட்டோரியா பசிலிகாவிற்கு விரைந்து செல்கிறார் மேலும் அங்கே அவர் மூன்றாவது பிரிஃபெரிட்டி கார்டினலை கடத்திச்சென்ற கள்வன் மூன்றாவது கார்டினல் மீது நெருப்பை பற்றவைக்கும் காட்சியை பார்க்கிறார். கடத்திச்சென்ற கயவன், லியோனார்டோ வெட்றாவை கொலை செய்து ஆன்ட்டி மேட்டர் குப்பியைத் திருடியதும் அவனே, ஒரு அனாமதேய கொலைகாரனாவான் மேலும் அவன் இல்லுமினாட்டி சமூகத்தினரின் தலைவரான "ஜானுஸ்" என்பவரின் கட்டளைகளை நிறைவேற்றி வருகிறான், ஆனால் ஜானுஸ் என்பவனின் உண்மையான அடையாளம் யாருக்கும் தெரியாது. கம்மாண்டரான ஓலிவெட்டி கொலை செய்யப்படுகிறார், மேலும் லாங்க்டன் கொலையாளியுடன் நடந்த போராட்டத்தில் மயிரிழையில் உயிர் தப்புகிறார் ஆனால் கொலையாளி எப்படியோ வெட்டோரியாவை கடத்திச்சென்று விடுகிறான். லாங்க்டன் எப்படியோ தப்பித்துக்கொண்டு மற்றும் இறுதி மூலகத்தை (தண்ணீர்) குறிக்கும் இருப்பிடத்தில் மீண்டும் கொலையாளியைப் பார்க்கிறார், ஆனால் அவரால் கடைசி கார்டினலைக்காப்பாற்ற இயலவில்லை.
எக்ஸ்டசி ஓப் செயின்ட் தெரேசா.
இருந்தாலும் லாங்க்டன் பாத் ஓப் இல்லுமிநேசன் (தீப அலங்காரப்பாதை) பாதையை இறுதி வரை பின்பற்றி கொலையாளியை கண்டுபிடித்து வெட்டோரியாவைக் காப்பாற்ற நினைக்கிறார். அவரது வேட்கை அவரை காஸ்டல் சாண்ட் ஏஞ்சலோவிற்கு எடுத்துச்செல்கிறது, அது வாட்டிகன் நகரத்தில் உள்ள பாப்பரசரின் அறைக்கு நேராக எடுத்துச்செல்லும் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட ஓர் சுரங்கப்பாதையை மறைத்து நிற்பதாகும். லாங்க்டன் வெட்டோரியாவை விடுதலை செய்கிறார், மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து கொலையாளியை பல நூறு அடிகள் கீழே விழுந்து இறக்கும்படி தள்ளி விடுகின்றனர். இருவரும் மீண்டும் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிகாவிற்கு விரைந்து திரும்பி வருகின்றனர், அங்கே அவர்கள் கொஹ்லர் தனியாக காமேர்லேங்கோவுடன் சண்டை புரிவதை பார்க்கிறார்கள். லாங்க்டன் மற்றும் வெட்டோரியா, கொஹ்லர் ஜானுசாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர், மேலும் அவர் தேவாலயத்திற்கு எதிராக செய்த சதியை நிறைவேற்ற இறுதிப்படியாக கமேர்லேங்கோவை கொலை செய்ய வந்திருப்பதாக பயப்படுகின்றனர். கமேர்லேங்கோ வலி தாங்காமல் கதறும் சத்தத்தைக்கேட்டு, அவர் மீது இல்லுமினாட்டி வைரத்தின் குறியீட்டை பொறிக்கப் பார்க்கிறார், ஸ்விஸ் பாதுகாவலர்கள் விரைந்து அறையினுள் நுழைந்தார்கள் மேலும் கொஹ்லர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். இறப்பதற்கு முன்னால், கொஹ்லர் லாங்க்டனிடம் ஒரு விடியோ டேப்பை தருகிறார் மேலும் அது அனைத்தையும் விளக்கிக்கூறும் என்று சொல்லி மறைந்துவிடுகிறார்.
நான்கு நதிகளின் நீரூற்று.
குப்பியில் காணப்படும் நேரம் குறைந்து வருவதால், ஸ்விஸ் பாதுகாவலர்கள் பசிலிகாவை காலி செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தேவாலயத்தை விட்டு வெளியேறும் தருணத்தில், கமேர்லேங்கோ மெய்மறந்து போகிறார் மேலும் பசிலிகாவிற்குள் மீண்டும் நுழைகிறார், ஆண்டவன் அவரிடம் ஆன்ட்டி மேட்டர் குப்பி இருக்கும் இடத்தை சூசகமாக காண்பித்ததாக விளக்கமளிக்கிறார். லாங்க்டன் மற்றும் சிலர் தொடர்ந்துவர, பசிலிகாவின் அடியில் உள்ள தாழ்வாரத்தின் அற்றத்திற்கு செல்கிறார் மேலும் செயிண்ட் பீட்டரின் கல்லறையின் மேல் குப்பி இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். லாங்க்டன் மற்றும் காமேர்லேங்கோ ஆன்ட்டி மேட்டர் குப்பியை மீட்டெடுக்கின்றனர் மேலும் ஒரு ஹெலிகாப்டருக்குள் ஐந்து நிமிடங்களே மீதம் இருக்க நுழைகின்றனர். கமேர்லேங்கோ எப்படியோ வான்குடை (பாராச்சூட்) மூலமாக கீழே குதித்து செயிண்ட் பீட்டரின் கூரையில் வந்திறங்குகிறார், அதே வேளையில் குப்பியும் ஆகாயத்தில் யாருக்கும் தீங்கிழைக்காமல் வெடித்துச்சிதறுகிறது. லாங்க்டன் என்னவானார் என்பது உடனுக்குடன் தெரியவில்லை, ஏன் என்றால் ஹெலிகாப்டரில் இன்னொரு வான்குடை பொருத்தப்பட்டிருக்க வில்லை. செயிண்ட் பீட்டரின் சதுக்கத்தில் முன்னர் நின்றுகொண்டிருந்த மக்கள் யாவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, கமேர்லேங்கோ புன்னைகைத்தபடி அவர்கள் முன்னால் வெற்றிகரமாக நின்று கொண்டிருக்கிறார். இந்த "அதிசயமான" நிகழ்வின் காரணமாக, பாப்பரசருக்கான பாதிரியார்களின் தேர்வுக்கூட்டம் காதொலிக்க முறைமையை புறகணித்து காமேர்லேங்கோவை புதிய பாப்பரசராக தேர்வு செய்யலாமா என்று விவாதிக்கத்தொடங்குகிறார்கள். லாங்க்டன் எப்படியோ ஹெலிகோப்டரில் இருந்த ஜன்னல் திரையை ஒரு வான்குடையைப்போல் பயன்படுத்தி வெடிவிபத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார் மேலும் டைபர் தீவுக்கு அருகாமையிலுள்ள டைபர் நதியில் வந்து விழுகிறார், அந்த தீவானது அதிசயப்படும் வகையில் நோய்களை தீர்க்கவல்ல இறைவனின் அருள் பெற்ற தீவாக பெயர் பெற்றதாகும். அவருக்கு அடிப்பட்டிருந்தாலும், அது தீவிரமானதல்ல.
லாங்க்டன் செயிண்ட் பீட்டர்சுக்கு திரும்பிவருகிறார் மேலும் கொஹ்லர் கொடுத்த டேப்பை இதர கர்டினல்மார்களின் கூட்டத்துடன் பார்வையிடுகிறார். லாங்க்டன், வெட்டோரியா, மற்றும் இதர கார்டினல்மார்கள் காமேர்லேங்கோவை வழிமறித்து சிஸ்டைன் சாபெல் (சிறுகோயில்) என்ற இடத்தில் எதிர்கொள்கிறார்கள், அங்கே கடைசியில் உண்மை தெரியவருகிறது; இந்த நாவல் துவங்குவதற்கு முன்னால், திருத்தந்தை அவர்கள் லியோனார்டோ வெட்றாவை சிஈஆர்என் -னில் அவரது ஆராய்ச்சிகளைப்பற்றி அறிந்துகொள்ள சந்திப்பதாக இருந்தது. வெட்றா, ஒரு தீவிர கத்தொலிக்கராகும், அவர் மனிதன் மற்றும் இறைவன் இடையே ஒரு பாலத்தை அறிவியலால் இணைக்க இயலும் என்ற நம்பிக்கை கொண்டவராவார், இந்த நம்பிக்கையை அவர் ஆன்ட்டிமேட்டர் என்ற பொருள் மீது அவர் புரிந்துவரும் ஆராய்ச்சி மேலும் வலுப்படுத்தியது. வெட்றாவின் நம்பிக்கைகளால் காமேர்லேங்கோவிற்கு மிகவும் மன உலைச்சல் ஏற்படுகிறது, அவர் தேவாலயம் மட்டுமே, அறிவியல் அல்ல, உண்மையான கிறிஸ்துவர்களுக்கு பக்க பலமாக அமையும் என்ற தீவிர நம்பிக்கை கொண்டவராவார். வெட்றாவைப்பற்றிய விவாதங்களுக்கு இடையில், திருத்தந்தை அறிவியலுக்கு ஆதரவு அளித்ததற்கான காரணம், அறிவியல் மூலமாக அவருக்கு ஒரு குழந்தை உண்டானதே என்பதை தெரிவிக்கிறார். இதற்கான விளக்கத்திற்கு செவி கொடுக்காமல் (குழந்தை செயற்கை முறையில் பிறந்ததாக), மற்றும் இதனால் திருத்தந்தை கொடுத்த வாக்கின் படி தனது கற்பை பாதுகாக்கவில்லை என்ற நினைப்பு, அவரை பயமுறுத்தியது மேலும் இந்த நிலைமையை "சரிகட்ட" அவர் ஒரு சதித்திட்டத்தை தீட்டினார். அவர் பாப்பரசருக்கு விஷம் வைத்துக்கொன்றார் மேலும், மறைமுகமாக இல்லுமினாட்டியின் தலைவர் (ஜானுஸ்) என்ற முறையில், ஒரு கொலையாளியை வேலையில் அமர்த்தினார், அவருக்கும் அவருடைய முந்தைய தலைமுறையினரைப் போலவே கத்தோலிக்க மத தேவாலயத்தினர் மீது அறப்போர் நடந்த பொழுது பகைமை நிலவியது, வெட்றாவை கொல்வதற்கும், ஆன்ட்டி மேட்டர் குப்பியை திருடுவதற்கும், மேலும் அந்த நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்மார்களை, அதுவும் பாப்பரசரை தெரிவு செய்வதற்கான பாதிரியார்களின் தேர்வுக்கூட்டம் சந்திக்க இருந்த வேளையில், கடத்திச்சென்று கொல்வதற்கும் அவர் கட்டளைப்படி செய்து முடிக்க அவன் துணிந்தான். செயிண்ட் பீடேர்சில் ஆன்ட்டிமேட்டர் குப்பியை வைத்ததும் காமேர்லேங்கோவின் ஏற்பாடே மேலும் கடைசி நிமிடத்தில் தனக்கு ஒரு ஒளி கிடைத்தது போல் பாசாங்குசெய்தார், அப்படி அவர் வீரசாஹச செயல்களை புரிந்து மக்களிடம் கிறிஸ்துவமதத்தைக் காப்பாற்றிய ஒரு ஒப்பற்ற வீரர் என்ற நற்பெயரை பெறலாம் என்ற நப்பாசையில் அவர் இவ்வாறெல்லாம் செய்தார். இப்படியாக இல்லுமினாட்டி என்ற சமூகத்தினருக்கும் இந்த நாவலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது, மேலும் அவர்கள் இதில் காட்டிய "ஈடுபாடு" வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக கமேர்லேங்கோ தீட்டிய திட்டங்களின் ஒரு அம்சமாகும். முதலில் இருந்தே லாங்க்டன் சந்தேகித்தது போல, இல்லுமினாட்டி சமூகத்தினரின் செயல்பாடுகள் எப்போதோ மாண்டுபோய்விட்டது (அழிந்து விட்டது) என்பது ஊர்ஜிதமானது.
ஒரு கடைசி திருப்பு முனையாக, மேலும் தெரிய வந்தது என்ன என்றால், இறந்து போன பாப்பரசருக்கு, செயற்கை முறையில் பிறந்த மகன், கமேர்லேங்கோ வென்ட்ரெஸ்கா என்பவரே ஆவார் என்பதாகும். பலரின் இறப்பிற்கு காரணமாகவும், குறிப்பாக தமது தந்தையாரை கொலை செய்த காரணங்களுக்காகவும் குற்ற உணர்வுகள் மேலோங்கியதால், திடீரென்று துக்கத்தில் ஆழ்ந்த வென்ட்ரெஸ்கா, தன்னை முழுக்க முழுக்க எண்ணையால் நனைத்துக்கொண்டு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பல பார்வையாளர்கள் கொண்ட கூட்டத்தினரின் முன்னிலையில், நெருப்பு வைத்து தன்னை எரித்து பலிகொடுத்து விடுகிறார். பாப்பரசருக்கான பாதிரியார்களின் தேர்வுக்குழு கார்டினல் மோர்டாடி அவர்களை புதிய பாப்பரசராக தெரிவு செய்கிறது. முரண் நகை திருப்பு முனையாக, ஒரு சொல் விளையாட்டு மூலமாக, அது பாப்பரசருக்கான தேர்தலுக்கான புதிய ஏற்பாடு என்ற முறையில் காணப்படும் சிறு பிழைகள் காரணமாக ஏற்பட்டது, பாப்பரசராக இரு நபர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்: அனைத்து கார்டினல்மார்களும் உரத்த குரலில் வென்ட்ரெஸ்காவின் பெயரை, அவர் தன்னைத்தானே எரித்துக்கொள்வதற்கு முன்பு அறைகூவியதால் அவர் பெயரும், மேலும் பொதுவான பதிவுமுறையில் மோர்டாடி அவர்களும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
லாங்க்டன் மற்றும் வெட்டோரியா தமது விடுதிகளுக்குத் திரும்பி செல்கின்றனர். புதிய பாப்பரசரிடம் இருந்து வந்த ஒரு தகவல் மற்றும் பொட்டலத்தை லெப்டினண்ட் சார்ட்ராண்ட் லாங்க்டன் அவர்களுக்கு வழங்குகிறார். அந்தப் பொட்டலத்தில் "இல்லுமினாட்டி வைரத்தின்" குறியீடு உள்ளது, அதை அவர் லாங்க்டன் அவர்களுக்கு என்றென்றைக்குமே வைத்துக்கொள்ள அனுமதிக்கும் நன்றிக்கடன் ஆகும்.

நடிகர்கள்

  • ராபர்ட் லாங்க்டன் : ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் குறியீட்டமர்வுத் துறையில் பேராசிரியர் மற்றும் இந்த நாவலின் முதன்மை நாயகன் ஆவார். அவர் லியோனார்டோ வெட்றாவின் கொலைக்கு காரணமாக இருந்த மர்மத்தை துலக்க உதவுவதற்காக சிஈஆர்என் நிறுவனத்திற்கு விமானம் மூலமாக பறந்து வருகிறார். அவர் ஒரு ஜோடி சிநோஸ் கால்சட்டைகள், ஆமைக்கழுத்து கொண்ட சட்டை, மற்றும் கம்பளத்தாலான மேல் சட்டை அணிந்தவராக விவரிக்கப் படுகிறார். அவர் பெயரானது ஜான் லாங்க்டன் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்ததாகும்.
  • லியோனார்டோ வெட்றா : சிஈஆர்என் நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானி மற்றும் ஒரு பாதிரியார். அவர் ஹஸ்ஸாஸ்ஸின் என்ற கொலையாளியால் கொலை செய்யப்பட்ட பொழுது ஆன்ட்டி மேட்டர் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மேலும் அவர் வெட்டோரியா வேட்ராவின் வளர்ப்புத்தந்தையாவார்.
  • வெட்டோரியா வேட்ரா : வெட்றாவின் வளர்ப்பு மகள். அவள், அவள் தந்தையைப்போல, சிஈஆர்என் நிறுவனத்தில் பணிபுரிபவராவார். அவர் உயிரியல் மற்றும் இயற்பியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். வெட்டோரியா அவருடைய தந்தையுடன் ஆன்ட்டி மேட்டர் பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் என்பதை புத்தகத்தை படிப்பவர்கள் முதலிலேயே அறிந்திருப்பார்கள்.
  • கமேர்லேங்கோ கார்லோ வென்ட்ரெஸ்கா : பாப்பரசரின் நெருங்கிய பாதிரியார்களின் கூட்டத்தினராக கமேர்லேங்கோவாக இருப்பவர். (பாப்பரசரின் துணையாளர்) அவர் பாப்பரசரை கொலைசெய்தார், மற்றும் அவரே கொலையாளியின் உயிரியலுக்குரிய தந்தை என்பது பிறகு தெரியவருகிறது. கொலையாளியுடன் தொடர்பு கொள்வதற்கான அவருடைய இரகசிய குறியீட்டுப்பெயர், "ஜானுஸ்", இரு முகம் கொண்ட பிறப்பிற்கும் இறப்பிற்கும் காரணமான ரோமானியக் கடவுளாவார், மேலும் அவருடைய நினைவாகவே ஆங்கில மாதமான ஜனவரி என்ற பெயர் கொண்டவராவார்.
  • கார்டினல் சவேரியோ மோர்டாடி : பாப்பரசரின் நெருங்கிய பாதிரியார்களின் கூட்டத்தினரில் மிகவும் பெரியவரான கார்டினல், மற்றும் தற்பொழுது காலேஜ் ஓப் கார்டினல்ஸ் என்ற கல்லூரியில் முதல்வராக பணிபுரிபவர். அவர் மறைந்த பாப்பரசரின் டெவில்ஸ் அட்வகேட் (பேய்களின் வக்கீல்) ஆவார்.
  • கம்மாண்டர் ஓலிவெட்டி : ஸ்விஸ் பாதுகாப்பாளர்களின் கம்மாண்டர் (ஆணை அதிகாரி). முதலில் அவர் ஹஸ்ஸாஸ்ஸின் என்ற கொலையாளியுடன் பேசும் வரை, அவர் லாங்க்டன் மற்றும் வெட்டோரியா தெரிவித்த கோரிக்கைகளை நிராகரித்தார். அவரும், அவருடன் கூடிய இதர ஸ்விஸ் பாதுகாவலர்களும், வாட்டிகன் நகரில் எங்கேயோ தெரியப்படாத இடத்தில் மறைக்கப்பட்டிருந்த ஆன்ட்டி மேட்டரை வெறியுடன் தேடி வந்தனர். அவர் சண்டா மரியா டெல்லா வெட்டோரியா தேவாலயத்தில் ஹஸ்ஸாஸ்ஸின் என்ற கொலையாளியால் கொல்லப்படுகிறார்.
  • கேப்டன் ரோசெர் (ரிச்டர்) : கம்மாண்டர் ஒலிவெட்டிக்குப்பிறகு வரும் இரண்டாவது கம்மாண்டர். அவருடன் மாக்ஸ் கொஹ்லர் தொடர்பு கொண்டு, அசலாக (உண்மையாக) நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில், அவருக்கு தெரிந்ததை அவரிடம் தெரிவிக்கிறார். ரோசெர் ஒரு இல்லுமினாடஸ் ஆக இருக்கலாம் என்று தவறாக புரிந்துகொண்டு, அவரை லெப்டினண்ட் சார்ட்ராண்ட் கொன்றுவிட்டார்.
  • ஹஸ்ஸாஸ்ஸின் : தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஜானுஸால் கொலை செய்வதற்காக கூலியாளாக அமர்த்தப்பட்டவர், மாறுவேடத்திலுள்ள கமேர்லேங்கோ. அவர் மத்திய கிழக்கு நாட்டுக்காரர் மேலும் பெண்களை சித்திரவதை செய்வதில் இன்பம் பெறுபவராக நாவலில் வெளிப்படுகிறார். இவன் லியோனார்டோ வெட்றா, பிரிஃபெரிட்டி கார்டினல்மார்கள் , மற்றும் கம்மாண்டர் ஒலிவெட்டியை கொலை செய்து விடுகிறான். காஸ்டல் சாண்ட் ஏஞ்சலோ என்ற இடத்தில் ஒரு பால்கனியில் இருந்து லாங்க்டன் அவரை தள்ளி விடுகிறார் மற்றும் கீழே அவர் அடுக்கி வைத்திருந்த பீரங்கி குண்டுகளின் மீது விழுந்து, முதுகெலும்புகள் உடைந்து, இறந்து போகிறார்.
  • மாக்ஸிமிலியன் கொஹ்லர் : இவர் சிஈஆர்என் நிறுவனத்தின் இயக்குனராவார். அவருக்கு பக்கவாதம் இருந்தபோதும், சிஈஆர்என் னில் அவரை கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவரது கைச்சக்கரஇருக்கை வண்டி பல விதமான மின்னணுவியல் கருவிகளைக் கொண்டது, எடுத்துக்காட்டாக கணினி, தொலைபேசி, பேஜர் கருவி, விடியோ காமெரா மற்றும் ஒரு துப்பாக்கி. அவர் லாங்க்டன் அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவரது நண்பனான, லியோனார்டோ வெட்றாவை கொன்றவனை கண்டுபிடிக்க அவரது உதவியை நாடுகிறார். அவரது பக்கவாதத்திற்கு தேவாலயமே காரணம் என்று குறை கூறுகிறார், மற்றும் அவரது பெற்றோர் மிகவும் மதத்தின்மேல் பற்றுவைத்ததனால் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்க அவர்கள் முன்வரவில்லை, மேலும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ஒரு விஞ்ஞானியாக ஆனார் என்று கூறுகிறார்.
  • குந்தர் க்ளிக் மற்றும் சினிதா மாக்ரி  : பிபிசி யைச் சார்ந்த செய்தித் தொகுப்பாளர் மற்றும் படப்பிடிப்பு குழுவினர். ஹஸ்ஸாஸ்ஸின் வாட்டிகன் நகரத்தில் நடக்கும் நிகழ்வுகளை எடுத்துச்சொல்ல அவர்களுடன் தொடர்பு கொண்டான். பரபரப்பான செய்திகளுக்கும் மற்றும் சதித்திட்டம் சார்ந்த தகவல்களுக்கும் க்ளிக் பெயர் பெற்றவராவார். அதே வேளையில், மாக்ரி, ஒரு படப்பிடிப்பு வல்லுநர் மற்றும் க்ளிக்கிற்கு உகந்தவர் ஆவார். அவர்களுக்கு நாவலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியைப்பற்றியும் அதீதமான அறிவாற்றல் இருக்கிறது, பாப்பரசரின் நெருக்கமான பாதிரியார்களின் கூட்டத்தினரில் இருந்து மோர்டாடியை பாப்பரசராக தெரிவு செய்வது வரையிலான அனைத்துமே அவர்களுக்கு அத்துப்படியாகும்.
  • லெப்டினண்ட் சார்ட்ராண்ட் : ஒரு இளவயது ஸ்விஸ் பாதுகாவலர். அவர், கம்மாண்டர் ஓலிவெட்டி மற்றும் காப்டன் ரோசெர், அனைவரும் இணைந்து வாட்டிகன் நகரத்தில் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆன்ட்டி மேட்டர் குப்பியை மும்முரமாக தேடுகிறார்கள். கேப்டன் ரோசெரை தவறாக இல்லுமினாடஸ் என்று புரிந்துகொண்டு, அவரை சுட்டுக் கொன்றுவிடுகிறான். கதை முடியும் தருவாயில், திருத்தந்தை அவரிடம் இல்லுமினாட்டி வைரத்தை, வரையறையில்லா நன்றிக்க்கடனாக கருதி லாங்க்டன் அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
  • கார்டினல் எப்நேர் (எப்னல்) : நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்களில் ஒருவர் மற்றும் பிரான்க்புர்ட், ஜெர்மனி நாட்டைச் சார்ந்தவர். அவரை மூச்சுத்திணறவைத்துச் சாகடித்தார்கள், அவர் வாய்க்குள் அழுக்கு மற்றும் மணல் திணிக்கப்பட்டது.
  • கார்டினல் லமஸ்ஸே : நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்களில் ஒருவர் மற்றும் பாரிஸ், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். அவரது நுரையீரலை துளைத்து சாகடிக்கப்பட்டார், அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.
  • கார்டினல் கைடெரா : நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்களில் ஒருவர் மற்றும் பார்செலோனா, ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவர்.அவர் உடல் உயிருடன் எரித்துச் சாம்பலாக்கப் பட்டது.
  • கார்டினல் பக்கியா : நான்கு பிரிஃபெரிட்டி கார்டினல்களில் ஒருவர் மற்றும் மிலன், இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் மற்றும் புதிய பாப்பரசராக தெரிவு செய்வதற்கு மிகவும் விரும்பப்பட்டவர். அவர் தண்ணீரில் மூழ்க வைத்து சாகடிக்கப்பட்டார்.

தவறான கணிப்புகள்

இந்த நாவலின் முதல் பதிப்பு ரோம் நகரத்தைச்சுற்றி இருக்கும் பல இடங்களை தவறான கணிப்புகளுடனும் மேலும் இத்தாலிய மொழியின் பயன்பாடு தவறாகவும் இருந்தது. மொழியில் காணப்பட்ட பிழைகள் நாளடைவில் இதர பதிப்புகளில் திருத்தப்பட்டன.[3]
திட்டவட்டமான அறிமுகத்துடன் எழுதப்பட்டிருந்தாலும், இந்த நாவலில் பலதரப்பட்ட வல்லுனர்கள் பலதரப்பட்ட பொருட்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வரலாறு சார்ந்த விளக்க உரைகளை விரிவாக அளித்துள்ளார்கள் ஆனால் திறனாய்வாளர்கள் அவற்றில் பல பிழைகளை கண்டறிந்து சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக ஆன்ட்டி மேட்டர் பற்றிய கலந்துரையாடல்களை குறிப்பிடலாம், புத்தகத்தில் ஆன்ட்டி மேட்டர் பயன்படும்வகையில் தேவைப்படும் அளவிற்கு உற்பத்தி செய்யலாமென்றும், மற்றும் அதன் மூலம் என்றுமே வற்றாத அளவுக்கு மட்டற்ற ஆற்றலை (மின்சக்தியை) பெறலாமென்றும் கூறப்ப்பட்டுள்ளது. சிஈஆர்என் நிறுவனம் ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் குறித்த ஒரு கேள்வி-பதில் பதிப்பில், ஆன்ட்டி மேட்டர் தயாரிப்பதற்கே மிகையான அளவில் சக்தியின் தேவை இருப்பதாகவும், அதனால் ஆன்ட்டி மேட்டர் ஒரு மின்சாரம் வழங்கும் கருவியாக இருக்க இயலாது என்றும் தெளிவு படுத்தியுள்ளனர்.[4] அதே பதிப்பில் காணப்படும் நாவலைப்பற்றிய இன்னொரு குற்றச்சாட்டு, இணையதளத்தை கண்டுபிடித்தது சிஈஆர்என் என்று நாவலில் குறிப்பிட்டு இருந்தாலும், அசலில் இணையதளத்தை கண்டுபிடித்தது யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஓப் டிபென்ஸ் ஆகும். மேலும் வேர்ல்ட் வைட் வெப்பை கண்டு பிடித்தது சிஈஆர்என் னை சார்ந்த டிம் பெர்னேர்ஸ் லீ குழுவினராகும். இருந்தாலும், புத்தகம் என்ன குறிப்பிடுகிறது என்றால், சிஈஆர்என் வேர்ல்ட் வைட் வெப்பை கண்டுபிடித்தது, இணையதளத்தையல்ல என்பதே.[5]
ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் டிகோடெட் , அமெரிக்கன் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்கின் விளக்கப்படம், தி ஹிஸ்டரி சேனல் மூலமாக, முதல் முதலாக மே 10, 2009 அன்று, நாவல் திரைப்படமாக எடுக்கப்படும் முன்னரே ஒளிபரப்பப்பானது. இந்த விளக்கப்படம் நாவலில் வந்துள்ள பலதரப்பட்ட இடங்களை ஆராய்கிறது, மேலும் காணப்படும் பிழைகளை சுட்டிக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சிஈஆர்என் அலுவலர் சொன்னதாவது, கடந்த 20 வருடங்களாக, சுமாராக ஒரு கிராமின் 10 பில்லியனின் ஒரு பாகமே இதுவரை இந்த வசதியில் ஆன்ட்டி மேட்டர் தயாரிக்கப் பட்டிருப்பதாகவும் மேலும் அதனுடைய வெடிச்சத்தம் ஒரு பட்டாசின் அளவே இருக்கும், நாவலில் கூறியிருப்பதைப் போல் பயங்கரமானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதே.[6]
"இல்லுமினாட்டி" என்ற சொல் பொதுவாக பவேரியா என்ற நாட்டில் ஆடம் வேயஷுப்து என்பவரால் 1776 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சமூகத்தை குறிக்கும்,[7] அதனால் நாவலில் வருவதுபோல் இந்த சமூகத்திற்கும் மற்றும் கலிலியோ மற்றும் பெர்னினி போன்றோருடன் இருக்கும் தொடர்பு வெறும் கட்டுக்கதையாகும், அதே போன்று "பாத் ஓப் இல்லுமிநேசன்" (தீப அலங்காரப் பாதை) என்பதும் கட்டுக்கதையே, ஆனால் அந்த பாதையில் பெர்னினியின் கலைப்படைப்பு உண்மையானதாகும், மேலும் அது போன்று வாட்டிகன் நகரத்தின் தாழ்வாரத்தில் காணப்படும் வேலைப்பாடுகளும் உண்மையானவையாகும்.(நாவலின் கூற்றுப்படி அல்லாமல், முதலில் பதிவு செய்யும் பயணிகளுக்கு இவற்றை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது[8]).


டு கில் எ மாக்கிங் பேர்ட்

டு கில் எ மாக்கிங் பேர்ட் (To Kill a Mockingbird) 1960ல் அமெரிக்காவில் வெளிவந்த ஒரு புனைவுப் புதினம். இதன் ஆசிரியர், ஆர்ப்பர் லீ ஒரு அமெரிக்கப் பெண். இப்புதினம் நவீன அமெரிக்க இலக்கியத்தில் ஒரு செவ்வியல் படைப்பு. மிகவும் பிரபலமடைந்த இப்புதினம் புலிட்சர் பரிசு பெற்றது. இக்கதை 1962ல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருதும் பெற்றது


ஆசிரியர் குறிப்பு

ஆர்ப்பர் லீ 1926ல் அமெரிக்காவில் அலபாமா மாகாணத்திலுள்ள மன்ரோவில் ஊரில் பிறந்தார். 1944 – 45ல் ஹண்டிங்டன் கல்லூரியில் (மாண்ட்கமெரி) படித்தார். 1945 முதல் 1949 வரை அலபாமா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். படிக்கும் காலத்திலேயே கல்லூரி இதழ்களில் எழுதினார். அந்தக் காலத்தில் அதிகம் பேசப்படாத இனவெறியின் அநீதி குறித்துக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். 1950 ல் நியூயார்க் நகருக்கு இடம் பெயர்ந்து அங்கு பிரிட்டிஷ் வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனத்தில் முன்பதிவு எழுத்தராகப் பணிபுரிந்தார். அவரது இளவயது நண்பரான ட்ரூமன் கப்போட்டியின் ஆலோசனையின்பேரில் மன்ரோவில் பற்றிய கட்டுரைகளும் கதைகளும் எழுதி அவற்றைப் பிரசுரிப்பதற்கு இலக்கிய முகவர்களை நாடினார். ஜே. பி. லிப்பின்காட் என்ற முகவர் பணியிருந்து விலகி முழுநேர எழுத்தாளராகி எழுதும்படி யோசனை கூறினார். அதன்படி விமானப்பணியினை விட்டுவிட்டு நண்பர்களின் ஆதரவுடன் ஒரு வருடகாலம் தொடர்ந்து எழுதினார். டு கில் எ மாக்கிங் பெர்ட் என்ற இந்த புத்தகத்தை எழுதி முடிக்க அவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஜூலை 11, 1960ல் இப்புதினம் வெளியானது. ஹார்ப்பர் லீ எழுதி வெளியான புதினம் இது ஒன்று மட்டும்தான். இவர் தன்னையோ தனது புத்தகத்தையோ 1964க்குப் பிறகு அதிகமாக விளம்பரப்படுத்தவில்லை.

கதைச் சுருக்கம்

இக்கதையின் கருத்தும் கதாபாத்திரங்களும் ஹார்ப்பர் லீ சிறுவயதில் (1936) வாழ்ந்த ஊரில் வசித்த மனிதர்களையும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் களமாகக் கொண்டுள்ளது. அட்டிகஸ் ஃபின்ச் அலபாமாவிலுள்ள மேகோம்ப் (கற்பனை) ஊரில் வசிக்கும் ஒரு வழக்கறிஞர். மனைவி இறந்துபோனதால் தனது மகன் ஜெம் மற்றும் மகள் ஸ்கெளட்டுடனும் வாழ்ந்து வருகிறார். கதை முழுவதும் 6 வயது சிறுமியான ஸ்கெளட் (scout) தனது அனுபவங்களைக் கூறுவதாக அமைந்துள்ளது. அவளது தந்தையின் அன்பும் அரவணைப்பும், அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு வரும் நண்பனோடு விளையாடிய விளையாட்டுக்கள், பள்ளியில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், அக்கம் பக்கத்தில் இருப்போரின் குணாதிசயங்கள் என பலவிதமான அனுபவங்களைக் கதை அழகாக விவரிக்கிறது. ஒரு சமயம் அவளது தந்தை ஒரு நீக்ரோவின் சார்பில் வாதாட நேர்ந்ததும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களும் கதையினை வளர்க்கிறது. சமுதாயக் கருத்துக்கள் கதையோட்டத்தில் கலக்கப் பட்டுள்ளது. இக்கதையில் அக்காலத்தேய இனப்பாகுபாட்டினால் நடந்த கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்டாலும் கதை சொல்லும் முறையில் நகைச்சுவை இழையோடுகிறது. ஸ்கெளட்டின் தந்தை கதாபாத்திரம் (அட்டிகஸ் ஃபின்ச்) எல்லோரும் நமக்கு இப்படி ஒரு தந்தை இருக்கக் கூடாதா என்று நினைக்கத் தூண்டும்வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது.

கதைப்பாணியும் விமர்சனமும்

மாக்கிங்பேர்ட் பறவை; அப்பாவித்தனத்தைக் குறிக்க லீ இதனை பயன்படுத்த்தியுள்ளார்
டு கில் எ மாக்கிங் பெர்ட் தெற்கத்திய காதிக் (southern gothic), மற்றும் பில்டங்ஸ்ரோமன் (bildungsroman) பிரிவைச் சேர்ந்தது. இனவெறியின் அநீதிகளும் வெகுளித்தனத்தின் முடிவும் இக்கதையின் முக்கியக் கருப்பொருட்கள். பல ஆங்கிலம் பேசும் நாடுகளில் சகிப்புத்தன்மை மற்றும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பண்புகளைக் குழந்தைகளிடம் வளர்க்கும் விதமாக இந்தக் கதை பாடமாகச் சொல்லித்தரப் பட்டது. ஆனால் இனவெறி பற்றிக் குறிப்பிடும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட அடைமொழிகளைக் காரணம் காட்டி இப்புத்தகம் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பும் எழுந்தது. கறுப்பினக் கதாபாத்திரங்கள் முழுமையாக சித்தரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் சிலர் முன் வைக்கின்றனர். வெள்ளையின மக்கள் இப்புதினத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டாலும் கறுப்பின மக்களிடம் இருவிதமான கருத்துக்கள்தான் உள்ளன.
30க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இப்புத்தகத்தை மதிப்பாய்வு செய்து வேறுபட்ட விமர்சனங்களைத் தந்துள்ளன. சமீபத்தில் பிரிட்டிஷ் நூலகத்தினர் பைபிளுக்கும் மேல் ஒருபடி உயர்த்தி ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இறப்பதற்கு முன் ஒரு முறையாவது இதனைப் படித்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர்.

தாக்கம்

2007ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கத்தை லீக்கு வழங்குகிறார் ஜார்ஜ் புஷ்
டு கில் எ மாக்கிங் பெர்ட், புத்தகம் ஹார்ப்பர் லீக்கு இலக்கிய வட்டத்தில் மட்டுமல்லாது மன்ரோவிலும் அலபாமா முழுவதிலும் பெருமை தேடித் தந்தது. வெளியாகி ஒரே வருடத்தில் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது. இதுவரை 30 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி உள்ளது. இன்னமும் அச்சேறிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இலக்கிய உலகில் இப்புதினம் ஒரு பெரிய அலையையே ஏற்படுத்தியுள்ளது. இக்கதை 1962ல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருதும் பெற்றது. 1990லிருந்து ஹார்ப்பர் லீ பிறந்த ஊரான மன்ரோவில்லில் இக்கதை ஒவ்வொரு ஆண்டும் நாடகமாக நடத்தப்படுகிறது.

உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி

மரணதண்டனை வேண்டாம்
கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி

அ.ஞா. பேரறிவாளன்
மரண தண்டனைச் சிறைவாசி
த.சி.எண். 13906
நடுவண் சிறை, வேலூர் - 2

அன்புக்குரியீர்,

வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன்.

எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை வாழ்கின்ற தன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது மனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது நீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.

கைது செய்யப்பட்டதன் பின்னணி

1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.

ஏற்கனவே 10-6-1991 மற்றும் 11-6-1991இல் எமது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் (வேலூர் மாவட்டத்தில்) தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், திராவிடர் கழகத்தவர் வீடுகளில் விசாரணை மேற்கொண்டபோது எமது இல்லத்திற்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்போது என்னைப் பற்றியும் கேள்வி எழுப்ப, எனது பெற்றோர் நான் சென்னை பெரியார் திடல், விடுதலை அலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றும் விவரத்தையும், அங்கு தங்கியுள்ள விவரத்தையும் கூறி அழைத்து வந்தனர்.

சட்டவிரோதக் காவல்

என்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது 12-6-1991 அன்று அனுப்பி வைப்பதாக வாக்குறுதி, கூறியே அழைத்துச் சென்றனர். நேரே மாடியில் உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு துணை தலைமை ஆய்வாளர் ராஜு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் தியாகராசன், சலீம் அலி மற்றும் பலர் இருந்தனர். என்னைப் பற்றியும் எனது கல்வி, குடும்பப் பின்னணி பற்றியும் விசாரித்தனர்.

எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே, என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.

அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.

ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.

இதை ஏன்? கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார்? என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.

மல்லிகையின் கீழ் தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குதான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல் ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.

ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.

குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.

இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள் என்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், இலண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது.

இந்த நேரத்தில் என்னை சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததற்கான சில அத்தாட்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, புலனாய்வு அதிகாரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் தனது சாட்சியம் பக்கம் 942-ல், 11.6.1991 அன்று எனது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் உள்ள எனது வீட்டில் சோதனை செய்து, எட்டு பொருட்களைக் கைப்பற்றியதை ஒப்புக் கொள்கிறார். 11.6.1991 அன்று என்னைப் பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் பக்கம் - 451ல் கூறுகிறார். 13.6.1991 அன்று எனது தாயார், மல்லிகைக்கு எனது மாற்றுடை கொண்டுவந்தபோது, அவரை சந்திக்க அனுமதி தராமல் துணியை மட்டும் பெற்றுக் கொடுத்தனர் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக எனது ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் 11.6.1991 அன்றைய சம்பவத்திற்குப் பின் 19.6.1991 வரை எந்த விவரமும் காணப்படவில்லை. மேலும், வாக்குமூலப்படி என்னை 18.6.1991 அன்று கைது செய்ததாக உள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 அன்று காலை 9.00 மணிக்கு பெரியார் திடல் அருகில் கைது செய்ததாக உள்ளது.

இவையே என்னை எவ்வாறு எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தி, பொய் வழக்குத் தொடுத்தனர் என்பதற்கு சான்றாக உள்ளது.

முதல் நீதிமன்ற ஆஜர் படுத்தல்

இவ்வாறு மறுநாள் காலை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று பொய்கூறி அழைத்துவந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான சித்ரவதைகளுக்குப் பின்னர் 19.6.1991 அன்று செங்கல்பட்டு நோக்கி என்னையும், எமது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இராபர்ட் பயஸு என்பவரையும் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அப்போது நான், இன்றுடன் என்னை விடுதலை செய்துவிடப் போகிறார்கள். தொல்லைகள், சித்ரவதைகள் முடிந்தன என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம், அப்போது எனக்கு எந்த சட்டமும் தெரியாது. அதற்கு முன்னர் எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது.

இந்த நிலையில் செங்கை நீதிமன்றத்தினுள் எமது வேன் நுழைந்தது. அப்போது மேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் எங்களை வாய் திறக்கக்கூடாது என்றும் அவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையயன்றால் மீண்டும் மல்லிகை அழைத்துச் சென்று துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர். எனவே நாங்கள் மிரண்ட நிலையில் இருந்தோம். பின்னர் உள்ளே அழைத்துச் சென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி அழைத்தார். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு அறைக்குள் அனுப்பி விட்டனர். பின்னர் நீதிமன்ற கூண்டிலேறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏதோ வாதம் புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது அவர் எனக்கு 18.7.1991 வரை காவல் நீட்டிப்பு கொடுப்பதாகக் கூறினார் எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும் மல்லிகை சித்ரவதைக் கூடத்திற்கே அழைத்து வரப்பட்டோம்.

அந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சித்ரவதைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால் அடிப்பர் பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு சித்ரவதைகள் தொடர்ந்தன.

இரண்டாவது நீதிமன்ற ஆஜர்படுத்தல்

இரண்டாம் முறையாக உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா நீதிமன்றத்தில் நீதிபதி திரு. சித்திக் முன்பு நான், ராபர்ட் பயஸ், கோடியக்கரை சண்முகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம். அப்போது எனது உறவினர்கள் 200 பேர் அல்லது 300 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர் கூறி அழைத்தனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன் மற்றும் சில ஆய்வாளர்கள் வந்திருந்தனர். மேல் மாடியில் நீதிபதி அமர்ந்திருந்த அறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டோம். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவரும் எம்மிடம் நீதிபதி முன்பு அமைதியாக நின்றுவிட்டு அவர் கூறுவதைக் கேட்டு தலையசைத்துவிட்டு வரவேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்கும்போது துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.

நாங்களும் ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி 16.8.1991 வரை காவல் நீட்டிட்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு அமைதியாக வெளியேறினோம். ஒரு அரை வினாடி கூட எமக்கு அங்க நிற்க அவகாசமிருக்கவில்லை. நீதிபதி எம்மை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனவே பயத்தின் காரணமாகவும், நீதிபதி எவ்வித விசாரிப்புகளும் செய்யாததாலும் எம்மால் எந்த முறையீடும் செய்ய முடியவில்லை.

பின்னர் மல்லிகை அலுவலகம் அழைத்து வந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் என்னிடம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டம் யார்? 200,300 பேர் இருந்தனரே, அவர்கள் யார்? நீ வரச் சொன்னாயா? என்றார். எனக்குத் தெரியாது என்றும் எனது உறவினர்களாக இருக்கலாம், என்னால் சரியாகப் பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது என்றும் சொன்னேன். மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னை உங்கள் காவலில் வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் சொல்ல முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார். பக்கத்தில் இருந்த ஆய்வாளர்களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது உறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.

மூன்றாவது நீதிமன்ற ஆஜர் படுத்தல் மற்றும் வாக்குமூலத்தில் கையயாப்பம் பெற்ற முறை

மூன்றாம் முறையாக நாங்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது. அந்தக் கிளைச் சிறை வளாகம் சிபிஐ துறையினரால் தத்தெடுக்கப்பட்டு எங்களை அடைத்து வைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது. என்னை மல்லிகையிலிருந்து 3.8.1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான் பொறுப்பிலிருந்தார். தினமும் அதிகாரிகள் முறைவைத்து துன்புறுத்துவர்.

அங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்ரவதைக் கூடம்) வைத்துதான் சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாய கையயழுத்துகள் பெற்றார். அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினர். எனக்கும் தடா சட்டம் தெரியாது. எனக்கு மட்டுமன்று தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது. இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன். ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.

எனவே, தடா சட்டம் தெரியாது; ஒப்புதல் வாக்குமூலம் தெரியாது; அதன் சட்ட ரீதியான தாக்கம் தெரியாது, என்றாலும் கையெழுத்திட்டு விட்டேன். கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில் 16.8.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார். முழுக்க முழுக்க சிபிஐ-யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பி ஓடியதால் சுட்டோம் என்று கூட கணக்குக் காட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும், கிளைச்சிறை இருந்த சூழலும், அச்சமும், சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து விட்டன.

வாக்குமூலம் பற்றிய எனது முறையீடுகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்புரையும்

அன்றே நானும், ராபர்ட்பயஸும் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு தண்டனைச் சிறைவாசிகள் அணியும் வெள்ளுடை தரப்பட்டது. வேறு எந்த உடையும், பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. ஓலைப் பாயும், தலையணையும், போர்வையும் மட்டுமே தரப்பட்டன. இவை அனைத்தும் ஒரு மரண தண்டனை சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதை பின்னரே அறிந்தோம். அப்போது எமக்கு சிறை விதிகள் தெரியாது.

சிபிஐ அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் ஒவ்வொரு விசாரணை சிறைவாசியை கொண்டு வரும்போதும் எமது அடைப்பிற்கு வந்து வழக்கு பற்றி விசாரணை மேற்கொள்வார். அப்போது எமக்கு அவ்வாறு விசாரிக்க போலீஸ் அதிகாரிக்கு அதிகாரமில்லை என்பது தெரியாது. எனவே சிபிஐ-யின் காவலில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. சிறை என்ற உணர்வே இல்லை.

இந்தக் கொடுமைகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கே நீண்ட நாட்கள் பிடித்தன. அவ்வாறு மீண்டு, தடா சட்டம் பற்றி, வாக்குமூலங்கள் பற்றி அறிய நேர்ந்தபோது நான் கையெழுத்திட்ட முறையை, எனக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை விளக்கி 11.2.1992 தேதியிட்டு மனு கொடுத்து, அது கு.ப. மனு எண்.137/92 என தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு எமக்கு ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பனவற்றின் பிரதிகள் தரப்பட்டவுடனே மனு ஒன்றைச் சமர்ப்பித்தேன். அதிலும் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்ற விவரத்தையும், எனவே அவற்றை ஏற்கக்கூடாது எனக் கோரியும் கொடுத்தேன். இது 26.8.1992ஆம் தேதியில் என்னால் தரப்பட்டு கு.ப. மனு எண்.582/92 என தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஒரு வருத்தத்திற்குரிய வியத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா அவர்கள் பக்கம் 87-ல்,

“ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”

என்று தெள்ளத் தெளிவாகவே நாம் புகார் கூறவில்லை என்று கூறுகிறார். உண்மையில் 11.2.1992 மற்றும் 26.8.1992 ஆகிய தேதிகளில் மனுக்களாகவும், சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசனிடம் குறுக்கு விசாரணை செய்யும்போதும், 313 குற்றவியல் நடைமுறைச் சட்டம். கேள்விகளின் போதும் எவ்வாறு துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்துப் பெற்றனர் என்பதைக் கூறியுள்ள நிலையில் நீதியரசர் இவற்றை கவனத்தில் கொள்ளாமை எமக்கு மிகுந்த வேதனை தருகிறது.

சிறைத் துன்பங்கள்

1.9.1991 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். ஒரே சகோதரனான எனது தேவை மிகுதியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளை சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது.

எம்மைப் பொறுத்தளவில், சிறையில் நாம் சாதாரண சிறைவாசிகளாக பார்க்கப்படவில்லை. எமது சிறை நடவடிக்கைகள் எதுவும் கணக்கிலெடுக்காமல், வழக்கில் இறந்துபோன நபர்களின் சமூக அந்தஸ்து மட்டுமே கணக்கிலெடுக்கப்பட்டது. எமக்காக புதிய விதிகள் இயற்றப்பட்டன.

உதாரணமாக, இன்றளவும் நாம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, ஒரு மரணதண்டனை சிறைவாசியைக் கூட தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று உச்சநீதிமன்ற ஆணைகள் இருந்தும்கூட, ஏற்கனவே தனிமைச் சிறையில் இருந்த ஒரே காரணத்தினால் மரணதண்டனை இரத்து செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உள்ள நிலையிலும் நாம் மட்டும் கடந்த எட்டரை ஆண்டுகளாக தனி அடைப்பில், தனிமைச் சிறையில் வதைக்கப்படுகிறோம். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு (எண் 13359/91) தாக்கல் செய்தோம். சில பரிகாரங்கள் கிடைத்தும் அவை நடைமுறையில் கிடைக்காவண்ணம் தடுக்கப்பட்டன.

1992ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இரத்த உறவினர்கள் மட்டுமே (அதாவது பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, பிள்ளைகள் மட்டுமே) பார்க்க அனுமதி உண்டு என்று ஆணையிட்டது அரசு. எனது தாத்தா, பாட்டிகள்கூட பார்க்க அனுமதி மறுத்தனர். எனது பாட்டி என்னைச் சந்திக்க அரசிடம் அனுமதி கேட்டு எத்தனையோ மனுக்கள் கொடுத்து போராடினார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வந்த பின்னரே பார்க்க முடிந்தது.

என்னைப் பார்க்க எனது பெற்றோர், நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மிகுந்த தொல்லைகள் தரப்பட்டன. இந்த தொல்லைகளுக்கு அஞ்சியே பலரும் வருவதைத் தவிர்த்தனர். அவ்வாறு எனது பெற்றோர் என்னைப் பார்க்க வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. காரணம் பார்வையாளர் அறை கண்ணாடி இழைத் தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகப் பேச முடியாத நிலை. சைகையால் மட்டுமே பேச முடிந்தது. தனது மகனின் விரல்களைக் கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை.

இந்தக் கண்ணாடிக் கொடுமை எமது உறவினர்க்கு மட்டுமல்ல, எம்மைப் பார்க்க வரும் எமது வழக்குத் தொடர்பான வழக்கறிஞர்களுக்கும் இருந்தது. இதனால் எமது வழக்கை நாங்கள் விளக்க முடியாமல் தவித்தோம். இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தோம். எந்தஒரு சிறைவாசிக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை, தனது வழக்கறிஞருடன் சுதந்திரமாக பேசும் உரிமை மறுக்கப்பட்டிருக்காது என்று என்னால் கூறமுடியும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் எமது வழக்கறிஞருடனான ஒருவருக்கொருவர் படித்துக் காட்டும் வசதி கடைசி வரை மறுக்கப்பட்டே வந்தது.

1993ஆம் ஆண்டு எம்மை பூவிருந்தவல்லி சிறையில் அடைத்த பின்னர், எக்காரணமிட்டும் சிறைவளாகத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என அரசு ஆணையிட்டது. இதனால் பல துன்பங்களை எதிர்கொண்டோம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் கூட நீண்ட சட்ட போராட்டங்கள் நிகழ்த்த வேண்டியிருந்தது.

சிறை மதிலை ஒட்டியே நீதிமன்றம் என்பதால் நாம் மற்ற சிறை வாசிகளைப் போல வீதிகளை கூட பார்க்க முடியாமல் முடக்கப்பட்டோம். சிறை மாற்றங்கள், மருத்துவ பரிசோதனை என்பவற்றுக்காக 7 முறை மட்டுமே 8 ஆண்டுகளில் நாம் வீதிகளை, மக்களைப் பார்த்துள்ளேன்.

பூவிருந்தவல்லி சிறைவளாகம் முழுக்க மேலே இரும்பு கம்பிகளால் போர்த்தப்பட்டும், கீழே காங்கிரீட் தளம் போடப்பட்டும் இருந்தது. வெயில் காலங்களில் சொல்லொன்னா வேதனைகளுக்கு உள்ளானேன். தூக்கத்தை இழந்தேன். மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். இந்த அழுத்தமே 24வது வயதிலேயே எனக்கு உயர் ரத்த அழுத்த நோயை பரிசாகக் கொடுத்தது. தற்போது மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இந்த நோய் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டில் கேளா ஒலி அலைக் கதிர் பகுப்பாய்வு பரிசோதனையும் 1997ஆம் ஆண்டில் எதிரொலி இதய பகுப்பாய்வு பரிசோதனையும் செய்துள்ளேன். தற்போது மாத்திரைகளுடன்தான் உயிர்வாழ்வு. இது பற்றி தேசிய மனித உரிமை கமிசனுக்கு முறையிட்டுள்ளேன். 1996ல் திரு.சர்மா என்ற கமிசன் அதிகாரி சிறை நிலையைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக எனது துன்பத்திற்கும் மேலாக எனது பெற்றோர் எனது நிலையால் மிகுந்த துன்பம் அனுபவிக்கின்றனர். 20 வயதே நிறம்பாத (பிறந்த நாள் 30-7-71) தங்களது ஒரே மகனை சட்டத்தின் காவலர்கள் என்று நம்பி விசாரணைக்கு என சி.பி.ஐயிடம் தாங்களே முன்வந்து ஒப்படைத்து விட்டு இன்று துன்பத்தைச் சுமந்து நிற்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக அவர்களது வாழ்விலும் இன்ப நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அவர்கள் மட்டுமல்ல 26 வயது நிறைவடைந்த கனிணிவியல் பொறியாளர் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இன்று தனது திருமணத்தை எனது விடுதலைக்காக ஒத்திவைத்திருக்கும் எனது இளைய சகோதரியின் வாழ்வும் துயரத்தில் நிற்கிறது.

ஒப்புதல் வாக்குமூலத்தின் நம்பகத் தன்மை

ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டது மட்டமல்ல, என்னைச் சார்ந்த அனைவருக்குமே இதே தண்டனை தரப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இவற்றிற்கு காரணம் என்ன? ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுகிற காவல் அதிகாரிகள் எழுதி எம்மிடம் துன்புறுத்தி பெற்ற கையொப்பங்களை நம்பி அளிக்கப்பட்ட தண்டனை அல்லவா காரணம்.

இன்று தடா சட்டப்படி நாம் குற்றமேதும் இளைக்கவில்லை. இவ்வழக்கிற்கு தடா பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த கொடூரச் சட்டத்தின் ஒரு அங்கமான காவல் அதிகாரி பெறும் வாக்குமூலம் செல்லுபடி ஆகும் என்ற பிரிவை மட்டும் செல்லாததாக அறிவித்து அதனடிப்படையில் தண்டனை, அதிலும் மரண தண்டனை என்பதுதான் வேதனை அளிக்கிறது.

இன்று நடைமுறையில் இல்லாத, எமது வழக்கிற்கு பொருந்தாது எனக்கூறப்பட்ட இச்சட்டத்தினால் 60 நாட்கள் போலீஸ் காவல் (அதிலும் 30+30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஓராண்டு காலம், பிணையில் விடாமை, உயர்நீதிமன்ற வாய்ப்பு பறிப்பு, மூடிய அறை விசாரணை, ரகசிய சாட்சிய முறை, போலீஸ் அதிகாரி முன் கொடுக்கும் வாக்குமூலம் செல்லும், குற்றமற்றவர் என நிரூபிக்கும் பொறுப்பு என எத்தனை அடிப்படை உரிமைகளை நாங்கள் இழந்துவிட்டோம். இவற்றை யாரால் எமக்கு திருப்பி அளிக்க முடியும்?

இருந்தாலும் இவை அனைத்தையும் நீதி அரசர்கள் கட்டாயம் மறுசீராய்வு மனுவில் கணக்கில் எடுப்பார்கள், திறந்த மனதுடன் பார்ப்பார்கள், தடா சட்டமே பொருந்தாது என கூறியவர்கள் இதையும் தெளிந்த மனதுடன் ஆராய்ந்து எமக்கு நீதி வழங்குவார்கள் என்று நம்பினேன். முடிவில் மிக மோசமாக ஏமாற்றப்பட்டேன்.

இந்த நேரத்தில் எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று கூறப்படுவதன் நம்பகத்தன்மை பற்றி சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

1. 60 நாட்களுக்கும் மேலான காவலின் பின்பு 14.8.1991 மற்றும் 15.8.1991 அன்று, அதாவது போலீஸ் காவல் முடியப் போகும் 16.8.1991 அன்றைக்கு முந்தைய நாளில் வாக்குமூலம் எடுத்ததாகக் கூறுவதை எவ்வாறு நம்புவது? இவ்வழக்கில் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படும் 17 பேரும் காவல் முடியும் ஒரு நாளுக்கு முன்புதான் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

2. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழுவில் (சிபிஐ / எஸ்.ஐ.டி) அங்கமாகச் செயல்பட்ட சாட்சி 52 காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் சாட்சியம் எவ்வாறு ஏற்கத்தக்கது? (நீதியரசர் தாமஸ் பக்கம் 35)

இந்த இடத்தில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகச் சாட்சியளித்த சாட்சி 52 தியாகராசனின் சாட்சியம் ஏற்கத்தக்கதா என்பதற்கு, அவர் தொடர்புடைய வேறு வழக்கு பற்றிக் கூறிட விரும்புகிறேன். கேரள மாநிலத்தில் நடந்த அவ்வழக்கு பற்றியும், அவ்வழக்கில் சாட்சி 52 நடந்து கொண்ட முறை பற்றியும் பிரண்ட் லைன் ஏட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே சாட்சி 52 தியாகராசனின் நம்பகத்தன்மையை எடுத்துக் கூறுமென நம்புகிறேன். இவ்வாதத்தை நான் எனது 313. குற்றவியல் நடைமுறைச் சட்டம். பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

3. சாட்சி 52 தியாகராசன் தனது சாட்சியத்தில் 14.8.1991 அன்று இரவு 11 மணிக்கு சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறைக்கு வந்து எதிரி ராபர்ட் பயஸ் என்பவரிடம் வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறுகிறார். இந்த நடவடிக்கை அரை மணி நேரம் நீடித்தது என்றும் கூறுகிறார்.

ஆனால் இவரே வேறு இடத்தில் எனது வாக்குமூலம் தொடர்பாக சாட்சியமளிக்கும்போது, 14.8.1991 அன்று இரவு 11.30 மணிக்குச் சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறை வந்து எனது வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறுகிறார்.

இதிலிருந்தே இவர் முன்பே தயார் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு இயந்திரத்தனமாக சாட்சியமளித்துள்ளது தெரிகிறது.

4. எனது ஒப்புதல் வாக்குமூலம் எனப்படுவதன் முதல் நாள் நடவடிக்கையின் இறுதியில் எனது பெயருக்கு பதிலாக ராபர்ட் பயஸ் பெயர் எழுதப்பட்டுள்ளது. என்னை முன்னிலையில் வைத்துக் கொண்டு முறையாக இந்த ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்தால் பெயர் மாற்றம் வருமா?

5. ஒப்புதல் வாக்குமூலப்படி 3.5.1991, 4.5.1991 ஆகிய நாட்களில் நான் சென்னையில் இருப்பதாக உள்ளது. ஆனால் சாட்சி 75 வசந்தகுமார் என்பரின் சாட்சியப்படி 3 அல்லது 4ம் தேதி அவருடன் நான் திருச்சியில் இருப்பதாக உள்ளது.

6. எனது வாக்குமூலத்தின்படி ஹரிபாபுவிற்கு நான் படச்சுருள் கொடுத்ததாகவும், பாக்கியநாதனின் வாக்குமூலத்தில் அவர் கொடுத்ததாகவும், சாட்சி 72 இராமமூர்த்தி என்பவரின் 164-குற்றவியல் நடைமுறைச் சட்டம். வாக்குமூலப்படி சுபாசுந்தரம் கொடுத்தார் எனவும் உள்ளது. சம்பவ இடத்தில் ஹரிபாபு பயன்படுத்தியது ஒரு படச்சுருள் என்று கூறப்படுகிறது. இறுதியில் என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எப்படி?

7. வாக்குமூலத்தின்படி நான் மே மாதம் முதல் வாரம் இரண்டு 9 வோல்ட் மின்கலம் வாங்கியதாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே என் மீது மே மாதம் முதல் வாரம் எனக் குறிப்பிட்டு குற்றச்சாட்டு வரையப்படுகிறது. நீதியரசர் வாத்வா பக்கம் 300) ஆனால் சாட்சி 91 மொய்தீன் என்ற கடைக்காரர் சாட்சியப்படி மே மாதம் இரண்டாம் வாரம் என்றுள்ளது.

8. வாக்குமூலத்தில் சிவராசன் அந்த இரண்டு மின்கலங்களையும் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தியதாகக் காணப்படுகிறது. ஆனால் நிபுணர்களான சாட்சிகள் 252 சீனிவாசன், 257 மேஜர் சபர்வால், 280 சந்திரசேகரன் ஆகியோர் சாட்சியப்படி ஒரு பேட்டரிதான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

9. சாட்சி 75 வசந்தகுமார் சிவராசனின் நெருங்கிய கூட்டாளி என்று வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் அவரோ தனக்கு சிவராசனின் பெயர்கூடத் தெரியாது என சாட்சியமளித்துள்ளார்.

10. 22.5.1991 அன்று பாக்கியநாதன் வீட்டிலிருந்து எனது பொருட்களை கொண்டு சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் விசாரணை அதிகாரி சாட்சி 288 இரகோத்தமன் சாட்சியம், சான்றாவணம் 1344 என்பவற்றில் 24.5.1991 என்று காணப்படுகிறது.

11. எனது வாக்குமூலப்படி 23.5.1991 அன்று ஹரிபாபுவின் உடலை எடுப்பது தொடர்பாக சுபா சுந்தரத்திடம் கூறுமாறு சிவராசன் கேட்டுக் கொண்டதாக உள்ளது. ஆனால் பாக்கியநாதனின் வாக்குமூலப்படி ஹரிபாபுவின் வீட்டு முகவரியை அறிவதற்காக சுபாசுந்தரத்திடம் சென்றதாக உள்ளது.மேற்சொன்னவை சில உதாரணங்களே. இதுபோல் பலவும் உண்டு. காரணம், நடந்தவற்றை எழுதியிருந்தால் முரண்பட வாய்ப்பில்லை.

வாக்குமூலத்தில் உள்ள அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது. ஒரு சில உண்மைகளைக் கொண்டு தங்களது வழக்கிற்கு ஏற்ப எழுதிய கதைதான் இந்த வாக்குமூலங்கள். இத்தனை முரண்பாடுகளைக் கொண்ட வாக்குமூலத்தை நம்பித்தான் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சாதகமாய்ப் பேசும் ஆவணக் குறிப்புகள்

எமது கடுமையான மறுப்பிற்குப் பின்னரும், வாக்குமூலங்கள் ஏற்கப்பட்டாலும் கூட ஒரு வாதத்திற்காக அவற்றை ஏற்றுக்கொண்டாலும் எனக்குச் சாதகமான சங்கதிகள் பலவும் அதில் உள்ளன. அவற்றைத் தங்களது பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

1. வாக்குமூலத்தில் உள்ளபடி நான் எல்.டி.டி.ஈ.க்காக மாதச் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன். பல எல்.டி.டி.ஈ. உறுப்பினர்களுக்கு வேலை செய்ததாகவும், சிவராசன் ஒரு சீனியர் எல்.டி.டி.ஈ. ஆள் என்பதால் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன் என்றும் காணப்படுகிறது. எங்கும் கொலைச் செயலுக்கு ஒப்புக் கொண்டு வேலை செய்ததாகக் காணப்படவில்லை.

2. எக்ஸ்.பி.392 என்ற 7.5.1991 தேதியிட்ட கம்பியில்லாச் செய்தியின்படி சிவராசன், சுபா, தனு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும் என்ற உள்ளது. இதை நீதியரசர்களும் ஒப்புக் கொள்கின்றனர். எனது வாக்குமூலப்படி நான் 7.5.1991க்கு முன்பு தான் சிவராசனுக்கு மோட்டார் சைக்கிள், கார் பேட்டரி, 9 வோல்ட் பேட்டரி ஆகியவை வாங்கித் தருகிறேன். எனவே உள்நோக்கம் தெரிந்து வாங்கித் தர நியாயமில்லை.

3. 21.5.1991 அன்று இரவு 9.30 மணிக்கு அதாவது சம்பவம் நடைபெறும்போது பாக்கியநாதனுடன் சினிமா பார்க்கச் சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. உண்மையில் எனக்கு சம்பவத்தின் விவரம் முன்பே தெரிந்திருந்தால், சதியாளனாக இருந்தால், குற்றம் நடக்கும் நேரத்தில் நண்பருடன் சினிமா பார்க்க முடியுமா?
(சினிமா பார்த்துவிட்டுத் திரும்பி வரும் வழியில்தான் ராஜீவ் கொலை பற்றி அறிந்ததாக வாக்குமூலத்தில் உள்ளது.)

4. 23.5.1991 அன்று காலை சம்பவ விவரங்களை சிவராசன் கூறுவதாகவும், மாலை நளினி விவரித்தார் எனவும் வாக்குமூலத்தில் காணப்படுகிறது. உடனே நான் பாக்கியநாதன் வீட்டில் தங்கியிருப்பது உசிதமாகப் படவில்லை என்று கருதி இடம் மாறிச் சென்றுவிடுவதாக உள்ளது. எனவே சம்பவத்தைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் 21.5.1991க்கு முன்பே வேறு இடம் சென்றிருப்பேன். சிவராசன், நளினி ஆகியோர் மூலம் 23.5.1991 அன்று தெரியவந்ததால்தான் அன்று இடம் மாறுவதாக உள்ளது.

5. அவ்வாறு பாக்கியநாதன் வீட்டிலிருந்து நான் எனது சொந்த ஊரான சோலையார் பேட்டையில் உள்ள எனது வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவே வாக்குமூலத்தில் காணப்படுகிறது. நான் குற்றம் இழைத்திருந்தால், குற்ற மனப்பான்மையோடு இருந்திருந்தால் சொந்த வீடு செல்லாமல் வேறு மறைவிடம் நோக்கித்தானே சென்றிருப்பேன்.

6. இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு பற்றி எந்தப் புலனாய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இதை நீதிபதி ஜெயின் கமிசனும் குறிப்பிட்டு இன்று அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு கண்காணிப்புக் குழு இது குறித்து ஆராயக் கோரப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் வெடிகுண்டு பற்றி புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால் எனது நிலை விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால் எனது நிலை என்ன?

இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு தொடர்பான புலனாய்வில் எத்தனை ஓட்டைகள் உள்ளன என்பது குறித்து இந்தியா டுடே, மே 21, சூன் 5, 1996 (தமிழ்) இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதையும் நான் எனது 313- குற்றவியல் நடைமுறைச் சட்டம் பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

மேற்சொன்னவை மட்டுமே என்னை நிரபராதி என எடுத்துக்கூற போதுமானது எனக் கருதுகிறேன்.

எனது வேண்டுதல்

அன்புக்குரியீர், மேற்சொன்னவற்றை எல்லாம் மறுசீராய்வு மனுவில் எடுத்துரைத்திருந்தால் நீதியரசர்கள் உண்மை உணர்ந்திருப்பார்களே என்று எம்மை நோக்கி கேள்வி எழுப்பக்கூடும். உண்மை என்னவெனில் இதைவிடக் கூடுதலாகவே எமது வழக்கறிஞர் மறுசீராய்வு வாதுரையில் எடுத்துரைத்தார். எமது குற்றமற்ற தன்மையை, எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எழுத்து வடிவில் மறுசீராய்வு மனுவில் சமப்பித்தோம். ஆயினும் கூட நீதி மறுக்கப்பட்டு விட்டது.

கொடுமை வென்னவெனில், மறு சீராய்வு மனு மீதான தனது உத்தரவில் நீதியரசர் வாத்வா.

(“Mr. Natarajan, who appeared for the convict review peritioners, submitted that he convict was not challenging the finding of guilt of the peritioners and was confining the review petitions only on question of award of death sentence)

தண்டிக்கப்பட்டுள்ள மறுசீராய்வு மனுதாரர்களுக்காக வாதிட்ட திரு. நடராசன் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்ற முடிவை எதிர்க்கவில்லை என்றும் மரணதண்டனை விதிப்பது தேவைதானா என்று அளவோடு மறுசீராய்வு மனுக்களை கட்டப்படுத்திக் கொள்வதாகவும் எடுத்துரைத்தார்.

என்று குறிப்பிட்டுள்ளார். எமது எழுத்துப்பூர்வமான மறுசீராய்வுக்கான மனுவை படித்தறிந்தாலே இதற்கான விளக்கத்தை தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் நீதியில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் மிக மோசமான முறையில் ஏமாற்றமடைந்தேன். தயவுகூர்ந்து இதை நீதித்துறை மீதான குற்றச்சாட்டாக தாங்கள் பொருள் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உண்மை என்னவெனில் எமது வழக்கைப் பொருத்தளவில் நீதிமன்றம் நீதி வழங்குதலில் சற்றுத் தடுமாற்றம் கண்டுவிட்டது என்பதை உறுதியோடு சொல்வேன். அதேவேளை, பொதுவில் நீதிமன்றம் கூறுவதையே உலகம் ஏற்கும், நம்பும் என்பதையும் அறிந்துள்ளேன்.

குறைந்தபட்சம் உங்களைப் போன்ற அறிவிற் சிறந்தவர்களிடமும் மனித உரிமைப் போராளிகளிடமாவது உண்மையை நிலைநாட்டி விட வேண்டும் எனத் துடிக்கிறேன். என்னை விடுதலை செய்யும் உத்தரவை வழங்கத் தங்களால் இயல முடியவில்லையானாலும் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் எந்தக் கணத்திலாவது உணர்வீர்களேயானால் அதுவே எனது விடுதலைக்கான வெற்றி என்பதை உறுதியோடு சொல்வேன்.

என் வழக்குத் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புரை பக்கங்களையும் நீதியரசர்கள் அவற்றில் செய்துள்ள பிழைகளையும் எழுதி இணைத்துள்ளேன். படித்தறிந்து எனது தரப்பு உண்மைகளை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

தடா எனும் ஆள்தூக்கிச் சட்டம் எத்துணை எதிர்ப்பைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தச் சட்டம் அத்தனை எதிர்ப்பையும் பெறுவதற்கான காரணமாய் அமைந்தது தடா சட்டப்பிரிவு 15 என்ற ஒப்புதல் வாக்குமூலப் பிரிவு என்பதையும் நன்கறீவீர்கள்.

இந்தக் கொடூரச் சட்டத்தின் கீழ்தான் எமது வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆயினும் இறுதியில், நாங்கள் பயங்கரவாதிகளில்லை என்றும் தடா சட்டம் இவ்வழக்கில் பொருந்தாது என்றுரைத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் செல்லும் என்று தீர்ப்பளித்திருப்பதும் அந்த வாக்குமூலம் என்பதை மட்டுமே கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பதும் மிகுந்த வேதனையளிக்கும் செயலாகும். 12,15 என எண்களின் விளையாட்டிற்கு எமது உயிர் விலையாக்கப்பட்டுவிட்டது என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.

எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுச் செய்தியை அறிந்தபோது, உலகத்தின் மிகக் கொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர். ஆகவே, இரு தரப்பு வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மைதான் வெளிப்படும் என்று எண்ணிவிடாதீர்கள் என்ற லெனின் அவர்களின் கூற்றைத்தான் வருத்தத்தோடு எண்ணிப்பார்த்தேன்.

சட்டப்படி நான் எந்தக் குற்றமும் செய்தவனல்ல. நியாயப்படியும் குற்றமற்றவனே. என்றாலும் எமதுத் தரப்பு நியாயங்களைவிட மறைந்தவர் உயர் பதவி வகித்தவர் என்பதுதான் முன் நின்று வழக்கின் முடிவைத் தீர்மானித்து விட்டது.

தனிமனித விருப்பு வெறுப்புக்கள்தான் பல நேரங்களில் பலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கான கடந்தகால சான்றுகள் பலவுண்டு. அன்று கேகர் சிங் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்ட போது யாரும் குரல் கொடுத்துவிடவில்லை. ஆனால் இன்று எமக்கான நிலைமை அவ்வாறில்லை என்பதை உணர்ந்துள்ளேன். அதையிட்டு நான் மகிழ்சசி கொள்கிறேன். எமக்காக ஒலிக்கும் அந்தக் குரல்களே எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது.

எனது இந்த முறையீடு வெற்றுப் புலம்பல்கள் அல்ல. ஒரு நிரபராதியான மனிதனின் உள்ளத்து உண்மைகள். இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்றாலும், நான்கு சுவற்றுக்குள் நடந்தேறிய உண்மைகள் பலரால் அறியப்பட வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதன் விளைவுதான் இந்த முறையீடு.

சிலவேளை, எனது நீதிக்கான நெடும் போராட்டத்தில் இந்த மடல் வேறு பல மனித நேயங்கொண்ட இதயங்களையும் இணைக்கக்கூடும். அதை எதிர்பார்த்தே நான் ஆவலோடு இதை எழுதுகிறேன்.

எனது வேண்டுதல் எல்லாம், திறந்த மனதுடன் அணுகுங்கள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எம்மைப் பாருங்கள் என்பதுதான்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனின் நியாயத்திற்காகப் போராடும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை, உறுதியைப் பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது உண்மை வெல்லத்தான் வேண்டும். உறுதுணை செய்யுங்கள்.

எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக உதாரணமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க வாருங்கள்.

வேதனைகள் எம்மோடு முடியட்டும். விடியப் போகும் காலைப் பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம் நிரபராதிகளைக் கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்.

இறுதியாக உலகப் பொதுமறை தந்த பெருநாவலரின் மேற்கோளோடு நீதிக்கான இம்முறையீட்டை முடிக்கிறேன்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு


நீதி வெல்லட்டும்!

இப்படிக்கு
அ.ஞா. பேரறிவாளன்

தமிழினம்?

           ஊழலுக்கு எதிராக ஒரு கிழவன் போடும் நாடகத்தில் ,ஆர்ப்பரிக்கும் இந்த மானகேட்டதேசம், எம் இனம் அழிந்தபோது கண்மூடி கொண்டதை ,மனிதாபிமான இரக்கம் காட்டாததை ,இந்த நாட்டின் சாதிய கொடுமைக்கு எதிராக கவலைபடாத ஹசாரேக்கள் ,தூக்கை எதிர்நோக்கி இருக்கும் எம் உறவுகளுக்கு கவலைபடாத மீடியாக்கள் ,த்தூ  ,நான் இந்தியன் என்பதை வெறுக்கிறேன் ,கொலைக்கு கொலைதான் தீர்வு என்றால் ,மனிதம் எப்படி புனிதமாகும் ,இரக்ககுணமும் சகிப்புத்தன்மையும் தானே மனிதனை மேம்பட்டவனாக பரிணமிக்கசெய்கிறது,மன்னிப்பதுதானே உலகத்தின் அனைத்து மதங்களும் ,வேதங்களும் ,தத்துவங்களும் சொல்லும் மேம்பட்ட பண்பு ,ஒரு உயிருக்காக (ராஜீவ் காந்தி )ஒரு இனத்தையே(ஈழம் )அழித்து,இனகலப்ப்டம் செய்து வரலாற்றை திருத்தி எழுத நினைக்கும் ,மனிதர்குல மாந்தர்கள் ,இன்னும் சினம் குறையாத அகோரபசியுடன் ,'அகோரி'களாகி ,எம் உறவுகளின் (பேரறிவாளன் ,சாந்தன் ,முருகன் )உயிரைகுடிக்க அலைகிறார்கள் ,தமிழ் உங்களை மன்னித்தாலும் ,உலகமனித சமூகம் மன்னிக்காது ,உலக வரலாறு மன்னிக்காது,ஹிட்லரை இந்த உலகசமூதாயம் எப்படிஅருவெறுப்பாக ,அசிங்கமாக ,அரக்கனாக ,மனிதகுல எதிரியாக நினைக்கிறதோ ,அதைவிட மிக கேவலமான பழிசொல்லுக்கு ஆளாகிவிட்டிர்கள் ,உங்களை இந்த உலகம் ஒருபோதும் மன்னிக்காது,எம் தமிழினம் உங்களை வேரறுக்கும் ?!??????????????