19 ஜூலை, 2011

மனக்குகை ஓவியன் ; இங்மர் பெர்க்மன்

இங்மர் பெர்க்மன்

http://www.ajayanbala.in


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 20


மனித மனத்தின் ஆழங்களை யார் அளக்கமுடியும்,ஆனால் தூய இலக்கியம் அதைத்தான் செய்கிறது என்றார் ருஷ்ய இலக்கியவாதியும் சாகாவரம் படைத்த 19ம் நூற்றாண்டு எழுத்தாளனுமான தஸ்தாயேவெஸ்கி. அவரைபோலவே திரைப்படம் எனும் அரிய கலையில் இப்பாதையில் பயணித்த மிகப்பெரும்கலைஞன் இங்மர் பெர்க்மன் . மனிதனை அழுத்தும் துன்பங்களையும் அவற்றிற்கும் கடவுளுக்குமான இடைவெளிகளும் தான் இவரது அனைத்துதிரைப்படங்களின் மையப்புள்ளி என்றாலும் அவ்ற்றை உயர்ந்த கலைபடைப்பாக மாற்றிய மேதமைதான் இவரை சினிமாவரலாற்றில் த்டம் பதிக்கவைத்துள்ளது. எவ்வள்வுக்கெவள்வு தனது தேடலைல் அவர் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ அதே தீவிரத்தையும் உழைப்பையும் தன் கலைத்த்ன்மைக்கும் செலவிட்டு தன்னை உறுதியான இடத்தில் தக்கவைத்துக்கொண்டது இவரது தனிச்சிறப்பு

1918ல் ஸ்வீடனில் ஒரு தீவிர கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த பெர்க்மன் தன் சிறுவயதில் ஒரு அழகான சிறைக்குள் வளர்ந்தார். அந்தசிறை அவரது கத்தோலிக்க மதம் .. அவரது தந்தை எரிக் ஒரு மத போதகராக இருந்த காரணத்தால் தேவாலாயங்கள்,பிரம்மாண்டமான மதில்சுவர்கள், அமைதியான உருக்கள், தாழ்ந்த விதானங்கள்,மெழுகுவர்த்திகள், மணியோசைகள் தேவ கீர்த்த்னைகள் ,தேவதைகள் ,மற்றும் சாத்தான்கள் என மதம் அவரை வேறு கவனங்களுக்கு திசை திருப்பவிடாமல் ஜன்னல்களை இறுக்க அடைத்திருந்தது. மட்டுமல்லாமல் தந்தையின் கண்டிப்பான குரல் பால்யத்தில் அவருடைய மனதில் வடுக்களாக ஆழபதிந்துபோனது. இன்று தன் திரைப்படங்களில் காண்ப்படும் சோகத்திற்கும் அழுத்தங்களுக்கும் மூலபடிமம் இங்கிருந்துதான் எடுத்தாளப்ப்ட்டது என பெர்க்மெனே பின்னாளில் தன் திரைப்பட்ங்கள் குறித்து கூறுமளவிற்கு அவரது பாதிரி தந்தையான் எரிக் மூர்க்கமான மதவெறியராகவும் கண்டிப்பான கணவனாகவும் தகப்பனாகவும் இருந்தார்.

இதன் காரணமாகவே எட்டுவயதிலேயே அவருக்கு மதத்தின் மீது வெறுப்பு தோன்ற துவங்கியது. இந்தவெறுப்பே அவருக்கு கலைகளின் மீதான
நாட்டத்தை திசை திருப்பியது. அப்போது அவருக்கு வடிகாலாக இருந்தவை பொம்மைகள்தான். விதவிதமான பொம்மைகளை செய்து அவ்ற்றை கதாபாத்திரங்களாக மாற்றி தனக்குதானே ஒரு பொம்மலாட்டம் நடத்தி பார்ப்பது அவருக்கு பிடித்த்மான பொழுது போக்கு. இந்த ஆர்வம்அவரை கொஞ்சம் கொஞ்சமாக உந்திதள்ளி நாடகக்கொட்டைகளின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தியது. ஸ்டாக்ஹோம் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முழுவதுமாக முடிக்கும் முன்பே எண்ணற்ற நாடகங்களுக்கு கதைவசனம் எழுதி, உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருந்தார்.

கஸ்பரின் மரணம் Caspar's Death. இதுதான் 1942ல் இவர் இயக்கத்தில் தயாரான முதல் நாடகம்.அடுத்த இரண்டு வருடங்களில் மேலும் சில நாடகங்களை உருவாக்கிய பெர்கமனுக்கு திரையுலகம் சுலபமாக சுவீகரித்துக்கொண்டது. ஆல்ப் சோஜ் பர்க் Alf Sjöberg. எனும் இயக்குனரின் ஹெட்ஸ் எனும் படத்தில் உதவியாளராக தன் வாழ்க்கையைதுவக்கிய பெர்க்மன் படத்தின் திரைக்கதைக்கும் பொறுப்புவகித்தார். ஒரு கண்டிப்பான ஆசிரியரைப்பற்றின கதை இது இத்னாலேயே வெளிப்புற காட்சிகளின்போது பெரும்பாலும் பெர்க்மெனே இயக்கவும் நேரிட்டது.இப்படத்தின் உலகாளாவிய வெற்றி காரணமாக அடுத்தவருடமே பெர்க்மன் தன் முதல் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார்.அடுத்த பத்துவருடங்களில் அசௌரவேகத்தில்ம்கிடத்ட்ட பன்னிரண்டு திரைப்படங்களை பெர்க்மென் இயக்கியிருந்தார். அனைத்துமே தனிமை அந்நியமாதல் என இருப்பின் தீராத வலியை பற்றிபேசும் திரைப்படங்களாக அமைந்திருந்தன. இவையனைத்துமே அவரது முழுமை எனும் உயரத்திற்கு அழைத்துசெல்லும் படிக்கட்டுகளாகவே அமைந்திருந்தன.


1955ல் இவர் இயக்கத்தில் வெளியான ஸ்மைல்ஸ் ஆப் சம்மர் நைட் Smiles of a Summer Night எனும் திரைப்படம்தான் பெர்க்மனின் முழு ஆளுமையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது. இந்தவெற்றியும் அங்கீகாரமும் அவரை அடுத்தடுத்த மகத்தான இரு வெற்றிகளை அடுத்தடுத்த வருஇடங்களில் உருவாக்க வைத்தது. தி செவன் த் சீல் The Seventh Seal மற்றும் Wild Strawberries வைல்டு ஸ்ட்ராபெர்ரீஸ் ஆகையவைதான் அந்த மகத்தான் இரு காவியங்கள்.

மொத்தம் முப்பத்தைந்தே நாட்களில் தயாரான செவன் த் சீல் உலகின் தலைசிற்ந்த பரிசான கேனஸ் விருதை பெர்க்மனுக்கு வாங்கி தந்தது.

வைல்ட் ஸ்ட்ராபரீஸ் ஐம்பதுகளில் வெளியான் உலகைன் தலைசிறந்தபடங்களில் ஒன்றாக கணிக்கப்பட்டது. உறவுகளின் சிறுசிறுகண்ணிகளினூடே மின்மினின்பூச்சிகளய் நம் மனதில் உண்டாகும் மாயங்களின் தொகுப்பாக இப்படத்தை சொல்லலாம்.

பெர்க்மனின் படத்தை பார்ப்பதற்கு நமக்கு மொழி அவசியமில்லை அவர்கள் என்ன பேசுகிறார்கள் கதை எங்கேநகருகிறது என்ற கேள்விகளூம் நமக்குபயன்படாது . அவரது காட்சிகளை உள்வாங்குவதற்கு இரண்டு கண்களும் அவரது உலகத்திற்குள் நம்மை விரல்பிடித்து அழைத்துசெல்லும் அந்த இசையை கேட்பதற்கு இரண்டு காதுகளும் மட்டும் நமக்கு போதுமானது. நம்மை அறியாமல் நாம் வேறு உலகத்திற்குள் மனித மனங்களின் இருண்மைக்குள் அலைவதை உணரமுடியும். வைல்ட் ஸ்ட்ராபெர்ரீஸ் அத்தகையதொருபடமாக அமைந்தது .இறப்புக்காக காத்திருக்கும் வயோதிகனின் மனதுக்குள் செல்லும் காமிரா நம்மை தனிமையின் ஆழத்துக்குள் அழைத்துசென்றுவிடுகிறது. பெர்க்மன் வாழ்க்கையில் ஒருமைல்கல்லாக நின்றது.

இதனைத்தொடர்ந்து த்ரூ த கிளஸ் டார்க்கி, தி சைலன்ஸ் , பெர்சோனா, வெர்ஜின் ஸ்பிரிங் க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், போன்ற மகத்தான் காவியங்கள் பெர்க்மனின் கைவண்ணத்தில் உலகசினிமாவுக்கு மாபெரும் நன்கொடையாக கிடைத்தன.

பெர்க்மனின் திரைப்படங்களின் வெற்றிக்கு சரிவிகிதாமான பங்களிப்பை தந்திருப்பவர் 1953க்குபிறகான அவரது எல்லாபடங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ஓளிப்பதிவாளர் சாம் நிக்விஸ்ட். நிக்ச்விஸ்டின் ஒளிப்பதிவுக்குள் பலசூத்திரங்கள் கட்டுண்டு ஒளிந்துகிடப்பதை ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளன் கண்டுணரமுடியும்.

பெர்க்மன் த்னது திரைப்படங்களுக்கு உலகமெங்கும் வரவேற்பை கண்டபோதிலும் தன் சொந்த நாடான ஸ்வீடனில் அவர் தொடர்ந்து அவமானப்படுத்துப்பட்டு வந்தார். ஸ்வீடனின் சக இயக்குனர் கள் அவர்மேல் கடும் விமரசனங்களை வைத்தனர். அவர்களுள் Bo Widerberg எனும் இயக்குனர் ஒருபடி மேலேபோய் 1962ல் ”பெர்க்மன் உன்னுடைய படங்கள் பழைய பனைமட்டையாக இருக்கின்றன,பார்க்க சகிக்கவில்லை தயவு செய்து உன் வாழ்க்கையில் ஒரு நல்ல படமாக எடுத்துவிடு ”எனும் வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரத்தை ஸ்வீடனில் விநியோகித்தார்.



இதுமட்டுமல்லாமல் 1976ல் அவரது வீட்டினுள் திடுமென புகுந்த போலிசார் அவரை கைது செய்தனர். கேட்டதற்கு அவர் வருமானவரி கட்டவில்லை என காரணத்தை சொன்னார்கள். இத்னால் பெரும் மனௌளைச்சலுக்கு ஆளான பெர்க்மன தீவிர நரம்புதளர்ச்சி நோய்க்கு ஆளானார்.பின் தனக்கிருந்த ஸ்டுடியோக்களை மூடிவிட்டு ஸ்வீடனை விட்டேவெளியேறி ம்யூனிச்சிற்கு சென்று த்னக்கன வீட்டை தேடிக்கொண்டார்.

இந்தப்ரசனைகளுக்கு பிறகு 1983ல் வர த்னது பாலயவாழ்க்கையை அடியொற்றி எடுத்த பேனி அண்ட் அலெக்ஸாண்டர் எனும் திரைப்படம் உலகாளவில் பிரம்மாண்டமான வெற்றியைபெற்றதோடு அவரது வாழ்நாளின் மிகச்சிறந்தபடமாகவும் உருக்கொண்டது. சிறுவயதில்தன் தந்தையிடம் அவர் வாங்கிய பிரம்படிகள் மிரட்சிகள் இவை உண்டாக்கிய மனவலிகளை தேர்ந்தெடுத்து பார்வையாளனுக்குள் மறக்கமுடியாத வடுக்களை நிகழ்த்தினார். நமக்குள் சிறுவயதிலிருந்து அழுத்தப்ட்ட பல்வேறு உணர்வுகளை கிளர்ந்தெழசெய்வதுதான் பெர்கமனின் வெற்றி .ஆனால் அதற்காக அவர் எப்போதும் மெனக்கெடுவதேயில்லை படத்தில் எங்கிருந்தூ அந்த உணர்வு நமக்குள் தோன்றுகிறது என்பதை நாமறியாவண்ணம் நம்மை நம் மேல் விழுந்த அடிகளை உணரசச்செய்வதுதான் பெர்க்மென் எனும் மகத்தான கலைஞனின் வெற்றியாக உலகசினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பிற்பாடு மீண்டும் ஸ்வீடனுக்குள் பெர்க்மென் திரும்பிய போது அரசாங்கம் பெரும் குற்ற வுணர்ச்சியுடன் அவரை வரவேற்று அவர்பெயரில் ஒரு திரைப்பட பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கியது.

1988ல் த்னது வாழ்க்கை வரலாற்றை மேஜிக் லாண்டர்ன் எனும்பெயரில் எழுதிய பெர்க்மன் 1993ல் பெஸ்ட் இண்டென்ஷன்ஸ் எனும் பெயரில் நாவல் ஒன்றையும் எழுதினார். பிற்பாடு சினிமாவுக்கனதிரைக்கதையாகவும் இதை வடித்தார். அவரது தாய்க்கும் தாமஸ் எனும் பாதிரியாருக்குமிடையில் நடந்த ஒரு உறவை அடிப்படையாக வைத்து அவர் இந்த கதையை எழுதியிருந்தார்.

பெர்க்மனின் திரைப்படங்கள் ஆஸ்கார்,கேன்ஸ், கோல்டன் குளோப்,பாப்டா, பெர்லின் தங்க கரடி உள்ளிட்ட உலகின் பலமூலைகளில் பலவிருதுகளை அள்ளிகுவித்துள்ளன.


1995ல் தன் 77ம் வயதில் Ingrid von Rosen என்ற வித்வைபெண்ணை அவர் திருமண்ம் செய்தபோது அவருக்கு அது முறைப்படி ஐந்தாவது திருமணம். இதற்கு முன்பான நான்கு மனைவிகளையும் சேர்த்து அவரது குழந்தைகள் எண்ணிக்கைபலவாக இருந்தாலும் மொத்தம் 12 குழந்தைகளைமட்டுமே அவர் த்ன் வாரிசுகளாக் அங்கீகரித்துள்ளார்

அவரது அனேக படங்களில் நடித்த உலகபுகழ் நடிகையான் லிவ் உல்மன் தானக் விரும்பி தாய்மை அடைந்து ஒரு குழந்தைக்கு தாயானார்.


உலகசினிமாவில் ஆச்சர்யமூட்டும் ஒற்றுமையாக விமர்சகர்கள் இவரையும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டனியோவையும் கருதுகின்றனர். காரணம் இருவரது வாழ்க்கையும் ஒரே தன்மையுடையன . பலவிடயங்களில் இருவருக்குமிடையே காணப்பட்ட ஆச்சர்யமான ஒற்றுமை இவர்களது மரணத்திலும் தொடர்ந்தது..

ஜூலை 30, 2007, ஒரே நாளில் இருவரது மரணச்செய்தியும் அடுத்தடுத்து வந்து உலகசினிமா ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாகியது.

அமரத்துவம் வாய்ந்த பெர்க்மனின் படங்களை நாம் இன்றும் பார்க்கும் போது அவர் நம் முதுகின் பின்னால் இருப்பதை அவரது படங்களின் மூலமாக உணரமுடியும் .
(தொடரும் )

உலக சினிமா வரலாறு : ராபர்ட் பேசும் மவுனத்தின் மொழி ;Robert Bresson(1901-1999)











நீங்கள் ஆழ்நிலை தியானம் செய்தது உண்டா. இல்லை என்றால் கவலை வேண்டாம் . ப்ரெஸ்ஸான் திரைப்படங்களை பாருங்கள் படம் அத்தகைய அனுபவங்களுக்குள் தானாக உங்களை இழுத்துச்சென்றுவிடும் .

ராபர்ட் ப்ரெஸ்ஸான்.

இத்த்தாலியின் கவித்துவ ஆளுமைகளான பெலினி ஆண்டோனியோனி ஆகியோருக்கு இணையான பிரான்ஸ் தேசத்தின் காட்சிக்கவிஞர். கவித்துவங்களுக்கும், தத்துவங்களுக்கும் இலக்கியங்களுக்கும் தனது படைப்புகளில் முக்கியத்துவம் கொடுத்தவர். அதன் வழியாக தனித்த இடததை உலக சினிமாவில் தேடிக்கொண்டவர்.

உலகசினிமாவரலாற்றில் அளப்பரிய சாத்னைகளை நிகழ்த்திய ப்ரான்சில் எழுந்த புதிய அலை சினிமாவுக்கு சற்று முன் வந்தவர் ராபர்ட் ப்ரெஸ்ஸான். இன்னும் சொல்லப்போனால் புதிய அலை உருவாக வழி செய்தவர் அல்லது அத்ற்குகட்டியம் கூறியவர் என்றும் கூட ப்ரெஸ்ஸானை கருதலாம். ஆனால் அக்காலத்தில் அவர் ஒருதிரைப்பட இயக்குனராக உலக அரங்கில் பெயர் வாங்க காத்திருந்த சமயத்தில் சற்று முன்பாக சட்டென எழுந்துவிட்ட புதிய அலைக்கு கிடைத்த வரவேற்பு இவரது புகழை ஒளிமங்க செய்துவிட்ட்து.கிட்ட்தட்ட புதிய அலை முழுவதுமாக ஓய்ந்த பின்தான் சினிமா விமர்சகர்களால் ராபர்ட்ப்ரெஸ்ஸான் உயிர்ப்பிக்கப்ப்ட்டார்.ஆனால் அப்பொழுது அவரது உச்சநிலைகள் அனைத்தும் இழந்து படைப்பு திறன் சமநிலைக்கு வந்திருந்தன.

கிட்டத்ட்ட 98 வயது வ்ரை வாழ்ந்த் ப்ரெஸ்ஸான் தன் வாழ்நாளில் மொத்தமாக எடுத்த படங்களின் எண்ணீக்கை வெறும் பதிமூணு மட்டுமே வெறும் பதின்மூன்றே படங்களில் தன் தனித்த்ன்மையை அவர் அழுத்தமாக நிறுவியமைக்கு ஒரே காரணம் அவர் கேமராவை தன் மனதைப்போல உணர்வுகளை நேரடியாக பிரதிபலிக்கும் ஊடகமாக பயனபடுத்தியிருந்த விதம்தான்.மவுனமான காட்சி நகர்வுகளினூடே அவர் பார்வையாளர்களின் மனதுக்குள் சிம்பொனியின் இசையை உணரவைத்தார்.
மேலும் அவரை வளர்த்த கத்தோலிக்கமனதின் சாரமானது அவரது உள்ளத்தில் ஊறியிருந்த காரணத்தால் அவரது காமராக்கள் காணும் பொருள்களில் யாவும் கடவுளைத்தேடவைத்தது. அவரது திரைப்படங்களில் காமிரா கதாபாத்திரங்களையும் கடந்து எப்போதும் சதா ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருப்பதை நம்மால் உணரமுடியும். இயற்கையின் ரகசியங்கள் குறித்த அந்த தேடல் தான் அவரது திரைப்படங்களிந்தனித்துவத்துக்கு முக்கியகாரணமாக விளங்குக்கிறது.


1901ல் பாரீசில் பிறந்த ப்ரெஸ்ஸானின் பால்யகாலம் கத்தோலிக்க மதத்தில் முழுமையாக ஊறியிருந்தது.மிகவும் கண்டிப்பான குடும்பத்தில் வளர்ந்ததால் பெலினி ஆண்டோனியோனி போலவெ மவுனமும் பயமும் அவரிடம் இயல்பாக குடிகொண்டன. பதின் வயதில் செவ்வியலையும் தத்துவத்தையும் படித்தார்.இதன் காரணமாகவோ என்னவோ பிற்காலத்தில் தன் உதவியாளர்களிடம் பேசும்போது கூட இயக்குனராக வேண்டுமானால் திரைப்பட கல்லூரியில் படிப்பதைக்காட்டிலும் தத்துவம் அழகு, கலை இலக்கியம் ஆகியவற்றை படிக்குமாறு வலியுறுத்தினார்.வாழ்வில் மிகச்சிறந்த ஓவியனாகவேண்டும் என லட்சியத்தை கொண்டிருந்தவர் வாழ்வின் விபத்து காரணமாக அருங்காட்சியக புகைப்படக்காராராக பணிசெய்ய நேர்ந்தது .

1934ல் தன் முதல் குறும்படமான public affairs படத்தை இயக்கினார் தொடர்ந்து இரண்டாம் உலக போர் பிரான்சை சுற்றிவளைத்தபோது போர்க்கால கைதியாக முகாமகளில் சிறைபிடிக்கப்பட்டார் .இந்த அனுபவங்கள் தான் அவரது இரண்டாவது படமான எ மேன் எஸ்கேப்டு 1956ல் வர காரணமக இருந்தன. இப்படம் அவருக்கு சுமாரன வெற்றியையும் அங்கீகாரத்தையும் உருவாக்கிக்கொடுதது .ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கிய முதல் திரைப்படம் அவருக்கு பெரும் தோல்வி .1951ல் எடுத்த அந்த திரைப்படம் Diary of a Country Priest
.அந்த தோல்வி அவருக்குள் பெரும் தோல்வியை உணரவைதது. உண்மையில் அவர் அப்படத்தின் மூலம் தான் புதிய கதையாடலை சினிமாவுக்கு தந்திருப்பதாக நினைத்தார். ஆனால் அப்படம் தோல்விக்கு பலகாரணங்கள் இருந்தன. மூன்றாவது திரைப்படம் 1959ல் வெளியானPickpocket . ப்ரெஸ்ஸானின் இப்படம் வெளியானபோது பிரான்சில் புதிய அலையிந்தாக்கம் அதிகமாக இருந்தது. ட்ரூபோவும் கோடார்த்தும் பிரான்சில் கடவுள்களாக மாறிவிட்டிருந்தனர். அந்த வெளிச்சத்தில் ப்ரெஸ்ஸான் திறமை உலக அரங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.
அதன் பிறகு 1962ல் The Trial of Joan of Arc 1966ல் Au hasard Balthazar
போன்றபடங்கள் இன்றளவும் உலகசினிமா அரங்குகளில் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் தன் தனித்தன்மையை பறைசாற்றுகின்றன.இவற்றுள் பல்தாஸர் படம் ஒருகழுதைக்கும் இளம் பெண்னுக்குமான் உறவை பேசும் திரைப்படம். இதில் படம் முழுக்க கேமாரா கழுதையின் பார்வையில்
கதாபாத்திரங்களை அவதானிப்பதாக படம் பிடிக்கப்பட்டிருந்தது சிறப்பு.


பிற்பாடு வெங்கட்சாமிநாதன் திரைக்கதையில் ஜான் ஆப்ரஹாம் எடுத்த அகரஹாரத்தில் கழுதை எடுப்பதற்கு இத்திரைப்படம் ஒரு அகத்தூண்டலாக இருந்திருக்கிறது எனபதை இருபடத்தையும் பார்பவர்களால் சுலபமாக உணரமுடியும்.



ப்ரஸ்ஸான் கண்கள் பாசாங்கற்றவை அவை வெறும் குழந்தையின் கண்களோடு காமிரா மூலம் காட்சிகளை தரிசிக்கின்றன. அவர் ஒருபோதும் பாத்திரங்களை பார்வையாளனின் இச்சைக்காகவோஅல்லது கதையை விவரிப்பதற்காகவோ பயன்படுத்துவதில்லை. காட்சிகளும் கதையீன் சரடை தாங்குவதில்லை.கிடதட்ட எல்லாமே தற்செயலாய் அவரது திரைப்படத்தில் நிகழ்கின்றன. ஒவ்வொருஷாட்டும் கூட முந்தின ஷாட்டின் தொடர்ச்சியை பிந்தொடர்வதில்லை.அவற்றைபற்றிகவலைப்படுவதுமில்லை.தன்னையல்பாக துண்டுதுண்டாக இயக்கம் கொள்கின்றன. அவர் நடிகரை பயன்படுத்துகிறபோதும் இதே பாணியையே பின்பற்றுகிறார். நடைகர்கள் என்ன கதாபத்திரம் என்பதை பற்ரி முழு ஓர்மையுடன் இயங்குவதில்லை. சாலையில் நடந்து செல்லும் ஒருவன் எத்த்னை வித்மான எண்ணக்களுடன் நடந்து செல்கிறானோ அதுபோலவே அவர்களும் வந்துசெல்கிறார்கள் . ஆனால் அவரது படத்தை பார்க்கும் ஒருவன் தன்னியல்பாக மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல பிந்தொடர்கிறான்அவர் இயக்கத்தில் வெளியான் நான்க்காவது திரைப்படமான பிக்பாக்கேட்டில் பிக்பாகெட் திருடனாக நடித்த நாயகன் நம்மை கவர்வதற்காக எந்த சாகசமும் செய்வதில்லை. ஆனால் தன்னியல்பாக அவனது உளவியல் நமக்குள் இயக்கம் கொள்ள நாமும் இன்னொரு திருடனாக் அல்லது அவன்மேல் பரிதாபம் கொண்டவனாக அவனை பின்பற்றி நடக்கிறோம். அதுபோல அவர்படங்களில் நடிக்கும் பாத்திரங்கள் அரிதாகத்தான் நம்மை நோக்கி திரும்புகின்றன. அவை இன்னும் சொல்லப்போனால் கேமாரவை நெரடியாக பார்ப்பதுமில்லை. அவரை பொறுத்தவரி நடிகன் ஒருகருவி அவ்வளவே.

இதன் காரணமாகவே ப்ரெஸ்சான் முறையாக பயின்ற நடிகர்களை தன் திரைப்படங்களுக்கு பயன்படுத்துவதில்லை. அவன் நடிக்கவேண்டியவிஷ்யங்களை சத்தம் மவுனம் கேமராகோணங்கள் மற்றும் நகர்வுக்கு பகிர்ந்து தந்து அவற்றின் மூலம் தன் கலையம்சத்தை மீள் செய்வார்.

பிரஸ்ஸோனின் திரைப்படங்கள் இத்தாலியின் நியோரியலிசம், மற்றும் பிரான்சின் புதிய அலை இரண்டுக்கும் இடைப்பட்ட படங்களை அவற்றின் கூறுகளை உள்வாங்கியவையாக உலகசினிமாவில் த இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றன.


ப்ரஸ்ஸானை ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்க அணுகினார். என் கடைசி படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா என ப்ரெஸ்ஸான் கேட்க பார்த்துவிட்டேன் என அவர் பதில் கூற உடனெ ப்ரஸ்ஸான் அதற்கு பிறகு நாம் பேச என்ன இருக்கிறது ஒருவிடயமும் இல்லை என கூறியபடி விலகிசென்றிருக்கிறார். ப்ரஸ்ஸானை அவரது திரைப்படங்களை இங்கிருந்துதான் நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்
( அடுத்த இதழில் பிரான்சில் எழுந்தது புதிய அலை) . http://www.ajayanbala.in

பிரான்சின் புதிய அலை : ஒரு செலுலாய்ட் புரட்சியின் கதை


>


பிரான்சின் புதிய அலை


உங்களின் சினிமாக்கள் அயோக்கியத்தனம் அது மக்களை ஒரு தந்திரவலைக்குள் வீழ்த்தும் குப்பை ,அங்கு மனதை கட்டிப்போடும் மாய்மாலம் மட்டுமே எஞ்சுகிறது...இது கலை இல்லை...உண்மையான கலை இந்த வேலையை செய்யாது ...அது மக்களை ஏமாற்றாது மாறாக தனக்குள் ஒரு அழகையும் வடிவத்தையும் உருவாக்கிக்கொண்டு மக்களையும் ரசிக்க வைக்கும்

இதெல்லாம் ....அக்காலத்தில் 1959 க்கு முன்பு வரையிலான உலகசினிமாக்களின் மீதான விமர்சனங்கள்

விமர்சித்தவர்கள் யார் ?

துடிப்பான இருபது முதல் முப்பது வயதுக்குட்பட்ட நான்கைந்து இளைஞர்கள்

கையேது சினிமா என அவர்கள் நடத்திய பத்திரிக்கையில்தான் அவர்கள் இப்படி அக்கால திரைப்படங்களை தங்களது கூர் விமர்சனங்களால் கிழித்து தொங்க விட்டனர்.

இவர்களுக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும் ..வெறும் எழுதிவிட்டால் போச்சா வந்து ஒரு படத்தை எடுத்து பார்க்கட்டும் அப்புறம் தெரியும் ..
என இயக்குனர்களும் பதிலுக்கு இவர்களை தூற்றினர்

காலம் கனிந்தது .. ஒரு நாள் அவர்கள் சொன்னது போலவே அந்த விமர்சகர்கள் படைப்பாளிகளாக மாறினர். தங்களை புதிய அலை என அவர்களாகவே அழைத்துக்கொண்டனர். படம் எடுக்க துவங்கினர்.
படம் வெளியான போது அந்த விமர்சகர்களின் படங்கள் அதுவரையிலான உலகசினிமாவையே புரட்டி போட்டது . உலகமெங்கும் அவர்களின் சினிமாக்களுக்கு அரங்கம் எழுந்து கைதட்டியது. ஒரு சாதராண திரைப்பட சங்கத்தில் துவங்கிய அந்த இளைஞர்களின் வாழ்க்கை பத்திரிக்கையாளராக மாறி பின் படங்களை விமர்சித்து பின் உலக சினிமாக்களுக்கே வழிகாட்டியாக மாறியது தனிக்கதை
அன்று அவர்கள் தோற்றுவித்த நியூ வேவ் எனும் புதிய அலை இயக்கம் இன்று உலகசினிமா வரலாற்றின் மகத்தான திருப்பு முனையாக காலத்தால் அழுந்த பதியப்பட்டுள்ளது

ப்ராங்கோய்ஸ் ட்ரூபோ, Francois Truffaut, ழான் லுக் கொதார்த். Jean-Luc Godard, கிளாத் சாப்ரோல், Claude Chabrol, எரிக் ரோமர்Eric Rohmer.
இவரகள்தான் அந்த இளம் இயக்குனர்கள் ..அதுவரையிலான இலக்கணங்களை உடைத்து சினிமாவுக்கு புது இலக்கணம் எழுதிய உலகசினிமாவின் சிற்பிகள்


இவர்கள் எப்படி ஒன்றிணைந்தார்கள் … இவர்களின் பிதாமகன் யார்... இவர்கள் இதற்காக பட்ட சிரமங்கள்... என்ன?



புதிய அலைக்குமுன் பிரான்ஸ்

இரண்டாம் உலகப்போரில் பிரான்சை நாஜிக்கள் தன் கைக்குள் வைத்திருந்த நேரம் அதன் ஜன்னல்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததகாலம் அது. கலையின் மீதும் சுதந்திரத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்ட பிரான்ஸ் தேசத்தவரை இந்த தடைகள் ரொம்பவே சங்கடப்படுத்தியது.. அதிலும் குறிப்பாக 1920 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட பிரான்சில் கலைச்செழுமையான காலத்தில் வாழ்ந்த ஆந்த்ரே பாஸின் , அலைன் ரெனாய்சிஸ் ,ஆஸ்ட்ரெக் ஆகிய கலைஞர்களுக்கு இது பெரும் நெருக்கடியை தோற்றுவித்தது. இதிலிருந்து தங்களை விடுவித்து கலையின் புதிய வெளிகளுக்கு தாவும் மனோ நிலையில் அவர்கள் உந்தி தள்ளப்பட்டபோது அவர்கள் அதற்கு வழியில்லாமல் அல்லலுற்றனர். போர் முடிந்தது நாஜிப்படைகள் பிரான்சிலிருந்து அகற்றப்பட்டன .. ஜன்னல்கள் திறக்கப்பட்டன புதிய காற்று புதிய வெளிச்சம் புதிய சிந்தனைகள் ...பிரான்சின் அறிவுலகத்துள் பெரும் பாய்ச்சலோடு புகுந்தது. கலைகளின்பாலும் தத்துவங்களின் பாலும் அதிக ஈடுபாடு கொண்ட ஆந்த்ரே பாஸினுக்கு சினிமாவின் மீது பார்வை குவிந்தது. இடது சாரி பார்வை கொண்ட பாஸின் அமெரிக்க படங்களின் முதலாளித்துவதன்மைகளையும் அதன் போலித்தனங்களையும் அவதானித்தார். இதில் உயிரோட்டம் இல்லை.. இவர்கள் சொல்வதில் பொய் இருக்கிறது .. ஆழ் மனங்களின் உள்ளுணர்வுகள் படைப்பாக இல்லை. ஏற்கனவே யாரோ ஒருவர் தீர்மானித்து எழுதப்பட்ட கதையை கேமரா மற்றும் படத்தொகுப்பினால் உருவாக்குவது மட்டுமே இயக்குனர் வேலை இல்லை என்றும் பத்திரிக்கைகளில் சாடினார். பாஸினுடன் அலெக்ஸாண்டர் ஆஸ்ட்ரெக் எனும் அறிஞரும் சேர்ந்தார். அவர்தான் பிற்பாடு எழவிருந்த புதிய அலை எனும் இயக்கத்துக்கு அடிநாதமாக இருந்த ”கேமரா ஒரு பேனாவை” போல எனும் முக்கியமான கருத்தாக்கத்தை வெளியிட்டவர்.



எழுத்தாளனுக்கு எப்படி பேனாவோ அது போல இயக்குனருக்கு கேமார செயல்படவேண்டும் . தன் சுயசிந்தனையுடன் தன்னியல்பாக எழுதுவது போல கேமராவால் ஒரு இயக்குனர் யாருடைய (குறிப்பாக தயரிப்பாளர்களின் ).
அதிகாரத்துக்கும் கட்டுபடாமல் உருவாக்கும் போதுதான் சினிமாவில் அசலான படைப்புத்தன்மைகள் வெளிவரும் எனக்கூறினார். உடன் ஹாலிவுட் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்வர்களான பிரிட்ஸ் லாங், டி டபிள்யூ கிரிபித் , ஜான் போர்ட்.. ஆகியோர் பற்றியும் அவர்களில் ஒளிந்துகொண்டிருந்த நவீன சினிமாவுக்கானகூறுகளையும் குறிப்பிட்டு ”சினிமா தி ஆர்ட் ஆப் ஸ்பேஸ்” எனும் கட்டுரை ஒன்றை எழுதினார் .

மிகச்சிறிய வட்டத்தாரால மட்டுமே படிக்கப்பட்ட இக்கட்டுரைகள் நாளடைவில் சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் புதுமை விரும்பிகளிடத்தும் புதிய வரவேற்பை பெற்றது. பிரான்சில் பல இடங்களில் சினிமா சங்கங்கள் எனப்படும் சிறு சிறு குழுக்கள் உருவாக்கம் பெற்றன.ஐம்பதுக்கும் குறைவான உறுப்பினர்களை கொண்ட இக்குழுக்கள் வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் நல்ல சினிமாக்களை இங்கு திரையிட்டு அதன் தரம் குறித்து காரசாரமாக விவாதித்தானர் . இப்படியான குழுக்களில் ஒன்று சினிமாத்தொக் பிரான்ஸ் Cinematheque Française, எனப்படும் குழு . ஹென்றி லாங் லோயிஸ் எனப்படுபவரால் நடத்தப்பட்டு வந்தது. இக்குழுவில் ஐம்பதுக்கும் குறைவானோர் தீவிரமான உறுப்பினர்கள் . அவர்கள் பெரும்பாலும் மவுனமொழி படங்களையே அதிகம் பார்த்தனர்.அதிகமான சினிமாவை பார்ப்பதன் மூலமாக மட்டுமே சினிமாவில் பயிற்சி பெற முடியும் எனபதை இக்குழு உறுதியாக நம்பியது . கூடுமானவரை வெளிமொழி படங்களை சப் டைட்டில் எனப்படும் மொழிமாற்ற எழுத்துருக்கள் இல்லாமல பார்த்து அதன் மூலம் இன்னும் கூடுதலாக காட்சி மொழிக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டனர் .

இந்த குழுவுக்குள் முதன்முதலாக ஒரு சிறுவன் ..16 வயதேயான சிறுவன் ஒருவன்வந்தான் . மிகவும் துறுதுறுப்பாகவும் மற்றவர்களைக்காட்டிலும் சினிமாக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவனாகவும் காணப்பட்ட அவன் தான் பிற்பாடு பிரெஞ்சு சினிமாவின் முகவரியாக மாறிப்போனான் .. அவன் பெயர் பிரான்ஸ்வா த்ரூபோ ...புதிய அலை இயக்கத்தின் மிக முக்கிய முதன்மை இயக்குனராக இன்றளவும் உலகசினிமாவால் அறியப்பட்டவன். அக்காலத்தில் சிறுவயதில் தந்தையின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் விதமாக சினிமா பார்க்க வந்த த்ரூபாவுக்கு அதுவே உணவாகவும் வேதமாகவும் வாழ்க்கையாகவும் மாறிப்போனது .

த்ரூபாவை போலவே சினிமாத்தொக் குழுவுக்கு ஒரு நாள் இன்னொரு இளைஞனும் வந்து சேர்ந்தான் . பிற்பாடு உலகசினிமாவில் தனித்தன்மை மிகுந்த இயக்குனராகவும் பல இயக்குனர்களின் மானசிக ஆசானாகவும் உருவானவன் .அவன் பெயர் கோதார்த். ழான் லூக் கோதார்த் என்பது முழுப்பெயர் . தனது தீவிரமான அரசியல் பார்வைகளாலும் மிகச்சிறந்த காட்சி கட்டமைபுக்களாலும் உலகசினிமாவுக்குள் அதிர்வலைகளை நிகழ்த்தியவன்(ர்).. சினிமா என்பது ஒரு ஒருவழிப்பதையானால் அது முடிவுறும் இடத்தில் நிற்பவர் கொதார்த். இவரது படங்களை வேதமாக கருதுபவர்களும் உண்டு ஆனால் அன்று சினிமாதொக் சங்கத்தினுள் நுழைந்த போதோ மிக சாதராணமான இளைஞன் ..இவரும் துவக்கத்தில் தந்தையாரது கொடுமையால் பாதிப்புக்கள்ளானவர். இதன் காரணமாகவே சினிமா சங்கங்களுக்கு சென்று சினிமா பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை பற்றி பின்னாளில் குறிப்பிடும் போது அக்காலங்களில் சினிமா திரையானது வீட்டு பிரச்சனைகளிலிருந்து தப்பித்து வேறு உலகங்களுக்கு செல்லும் சுவராக இருந்தது எனக்கூறியுள்ளார்.

இவர்களோடு அப்போது எரிக்ரோமர் Eric Rohmer. களவுத் சாப்ரோல் Claude Chabrol, போன்றவர்களும் தீவிரமாக இச்சங்கங்களில் ஈடுபட்டனர். இவர்கள் வெறுமனே திரைப்படங்களை பார்ப்பதோடுமட்டுமில்லாமல் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளை சேகரிப்பது.. மேலும் தங்களுக்கு பிடித்த இயக்குனர்களை பட்டியலிடுவது ,அவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டனர்.

இவரை போலவே இச்சங்கங்களில் அக்காலத்தில் ஈடுபட்ட அலைன் ரெனாய்ஸ், Alain Resnais, ழாக் ரிவெட், Jacques Rivette, , ரோஜர் வாதிம் Roger Vadim, போன்றவர்களும் பிற்பாடு குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

ஆனாலும் இவர்களுக்கும் முன் சொன்ன நால்வருக்கும் என்ன வேறுபாடு என்றால் முன்னவர்கள் இவர்களைக்காட்டிலும் கூடுதல் திறமை கொண்டவர்கள் என்பது மட்டுமில்லாமல் அடிப்படையில் எழுத்தாளர்கள்,... அதனால் இவர்கள் அக்காலத்தில் புதிய சினிமா மற்றும் கலை இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதின ஆந்த்ரே பசினுடன் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் . உடன் தங்களது விமர்சனங்களை அவ்வப்போது வெவ்வேறு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளாகவும் எழுதி சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கினர். துவக்கத்தில் இக்கட்டுரைகளுக்கு ஆங்காங்கு வரவேற்பு கிட்டவே நமக்கென்று ஒரு இதழ் இருந்தால் இன்னும் கூடுதலாக எழுதிகுவிக்கலாமே என்ற எண்ணம் இவர்களுக்குள் தோன்றியது... இதே சமயம் இவர்களது தத்துவ குருவான பாஸினுக்கு இதற்குமுன் அவர் தொடர்ந்து எழுதிவந்த இதழ் நின்று போக ..அனைவரது ஒத்துழைப்புடன் பாஸின் அடுத்த சில நாட்களிலேயே ஒரு புதிய இதழை துவக்கினார். கையேது சினிமா . Les Cahiers du Cinema.. சினிமா வரலாற்றில் சினிமாவளர்ச்சியில் ஏதேனும் ஒரு இதழுக்கு சிறுபங்களிப்பு இருக்குமானால் அது இந்த இதழுக்கு மட்டுமே இருக்கும்.

1951 ல் இந்த இதழின் முதல் பிரதி வெளியான போது அடுத்த சில வருடங்களில் இந்த இதழ் மகத்தானசசாதனைகளை செய்யப்போகிறது என யாரும் எதிர்பார்க்கவில்லை.
(பிரான்சின் புதிய அலை.... .11தொடர்ச்சி .. அடுத்த இதழில்)
நன்றி : புத்தகம் பேசுது ஆகஸ்ட் மாத இதழ் http://www.ajayanbala.in

சினிமா என்பது கணத்திற்கு இருபத்தி நான்கு சட்டகங்களாக சரியும் உண்மைகள்


உலக சினிமா வரலாறு 23
பிரான்சின் புதிய அலை பகுதி ; இரண்டு


தனது சினிமா குறித்த புதிய கோட்பாடுகளை உலகிற்கு அறிவிக்கும்விதமாக 1951ல் “கையேது சினிமா” Cahiers du Cinema எனும் இதழை துவக்கிய அதன் ஆசிரியர் ஆந்த்ரே பஸின் ... இளைய எழுத்தாளர்களை ஆரம்ப இதழ்களில் உள்ளே அனுமதிக்க தயங்கினார். அவர்களிடம் காணப்பட்ட அபரிதமான துடிப்பும் வேகமும் தான் இதற்கு காரணம் . அவர்களது விமர்சனங்கள் காரசாரமாக இருந்தன .. ஆனாலும் எரிக் ரோமர்,கோடார்ட், ரிவெட் , க்ளாத் சாப்ரோல் மற்றும் த்ருபோ போன்ற இளம்படைப்பாளிகள் இதழூக்கான மற்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். .. திரைப்பட இயக்குனர்களை பேட்டி காண்பது .. திரைப்பட விழாக்கள் பற்றி குறிப்பெழுதுவது போன்ற சிறு அள்வில் அவர்களது எழுத்துக்கள் பிரசுரமாகின. ஆனாலும் அதற்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடிக்கொண்டே இருந்தது. ஆந்த்ரே பஸின் ஒரு தந்தையை போல அவர்களை வழி நடத்தினார். குறிப்பாக த்ரூபோ ஆந்த்ரே பஸினின் செல்லபிள்ளையாகவே வளர்ந்தார். ஒருமுறை த்ரூபோ இளம் குற்ற வாளிகளுக்கான சிறையில் காவலர்களால் பிடிபட ஆந்த்ரேபஸின் தான் அவரை அங்கிருந்து மீட்டு வந்து தன்னோடு தங்க வைத்துக்கொண்டார்.
முதன்முதலாக் 1953ல் த்ரூபோ எழுதிய "A Certain Tendency of the French Cinema எனும் கடுமையான விமர்சனம் தாங்கிய கட்டுரையை ஆந்த்ரே பஸின் துணிந்து பிரசுரித்தார் . அக்கட்டுரை எதிர்பாராத விதமாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது . ஒரு பக்கம் பிரெஞ்சு சினிமாவின் அக்காலத்திய இயக்குனர்கள் கொதித்தெழ இன்னொருபக்கம் வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு . இக்கட்டுரைக்கு கிடைத்தவரவேற்பை தொடர்ந்து பஸின் கோடார்ட், சாப்ரோல் ,எரிக் ரோமர் என அனைவரையும் எழுதவைத்தார்.. இதழை இளைஞர்களின் எண்ணங்கள் முழுவதுமாக ஆகரமித்தன. சினிமா பற்றிய புதியகருத்துருவாக்கங்கள் உதித்தன. வெறுமனே நாவலில் இருப்பதை அச்சு பிறழாமல் ஸ்டூடியோவில் படம்பிடிக்கும் முறைமையை இவர்கள் கடுமையாக சாடினர்.விதிகளை உடையுங்கள் இவைதான் அவர்களின் கோஷம் சினிமா இயக்குனரின் ஊடகம் அங்கு தயாரிப்பாளனுக்கோ கதாசிரியனுக்கோ நடிகனுக்கோ முக்கியத்துவமில்லை. இயக்குனர் சர்வ சுதந்திரமாக தான் நினைத்ததை காமிராமூலமாக எழுதுகிற போதுதான் சினிமா எனும் கலை உயிர்பெறுகிறது என்பது போன்ற தங்களது கலைகோட்பாடுகளால் பிரெஞ்சு சினிமாவை அதிரவைத்த்னர்.

உலகசினிமாகளை தலைகிழாக புரட்டி தாங்கள் இயக்குனராக அங்கீகரிப்பவரது பட்டியலை வெளியிட்டனர். அமெரிக்காவின் கிரிபித், D.W. Griffith, விகட்ர் ஸ்ட்ரோஜம் ,Victor Sjostrom,பஸ்டர் கீட்டன் , Buster Keaton, சார்லி சாப்ளின்,Charlie Chaplin, எரிக் வான் ஸ்ட்ரோஹிம் Erich von Stroheim போன்றவர்களையும் பிற்காலத்தைய இயக்குனர்களில் ஆல்பிரட் ஹிட்ச்காக் Alfred Hitchcock , ஜான் போர்ட் john ford ஹாவர்ட் ஹாக்ஸ் Howard Hawks ஆர்சன் வெல்ஸ் Orson Welles ஜெர்மனியில் எர்னஸ்ட் லூபிட்ச் , Ernst Lubitsch, ப்ரிட்ஸ் லாங் Fritz Lang முர்னோ . Murnau இத்தாலியின் ரோபர்ட்டோ ரோஸலினி மற்றும் விட்டோரியா டிசிகா ஆகியோர் கொண்ட பட்டியலைமட்டுமே தாங்கள் அங்கீகரிக்கும் முழுமையான இயக்குனர்களாக அறிவித்தனர் . மற்ற்வர்கள் கதை சொல்லிகள் .அவர்கள் ஒருகதைக்குள் மக்களின் ஞாபகங்களை மூழ்கடித்தனர் . ஆனால் இவர்கள் மட்டும சினிமாவின் கலையை கதைகளையும் ரசிகணையும் கடந்து அழைத்து சென்றவர்கள் என அறிக்கை விட்ட்னர் .

எத்த்னை நாள்தான் விமர்சனம் எழுதுவது நமக்கான சினிமாவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக களத்தில் இறங்கினர் .அக்காலத்தில் இயக்குனராவதற்கான வழி முதலில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளர்களாக சேருவது பின் குறும்படம் எடுத்து அதன் மூலம் பெரிய தயாரிப்பாளர்களை பிடிப்பது. இதுதான் . ஏற்கனவே இவர்கள் மேல் அக்கால இயக்குனர்கள் கடுங் கோபத்தில் இருந்த காரணங்களால் அவர்கள் உதவி இயக்குனராக சேருவது அத்தனை எளிதான காரியமாக இல்லை . ஆளுக்கு வெவ்வேறான துறைகளின்மூலமாகவும் உதவி இயகுனர்களாக தாங்கள் அங்கீகரித்த இயக்குனர்களிடமும் முதலில் சினிமா தொழிலுக்குள் நுழைந்தனர். அத்ன்படி களாவுத் சாப்ரொல் 20 தி செஞ்சுரி பாக்ஸில் நிர்வாக பிரிவிலும் .கோடார்ட் ஒரு திரைப்படத்தின் மக்கள் தொடர்பு பிரிவிலும் நுழைய த்ரூபோ ரோபர்டோ ரோஸலினியிடம் ரிவெட் ரெனுவாரிடமும் உதவி இயக்குனர்களாக துறைக்குள் நுழைந்தனர் . சிலகாலம் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் சொந்தமாக தங்களது கைபணத்தை போட்டு படம் எடுக்க துவங்கினர் . அக்காலத்தில் அரசாங்கம குறும்படங்களுக்காக பொருளுதவி செய்தது ஆனால் அத்தகைய படங்களில் இயக்குனரின் வேலை ஸ்டார்ட் கட் சொல்வதாக மட்டுமே இருந்து வந்தது இதனால் தாங்களே சொந்த கம்பெனி துவக்கி படம் எடுத்த்னர். ஒருவருடைய படங்களில் மற்ற்வர்கள் உதவி இயக்குனராக சம்பளம் இல்லாமல் வேலை செய்தனர். அதன்படி முதலில் எரிக் ரோமர் ,மற்றும் ரிவட் ஆகியோர் படமெடுக்க கோதார்த், சாப்ரோல் ஆகியோர் திரைக்கதை எழுதினர். கோதார்த் ஸ்விட்சர்லாந்தில் இருந்த அணைக்கட்டு ஒன்றை ஆவணப்படாமாக முதலில் எடுக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் காசில்லாமல் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அத்ற்கு தெவையான மீத பணத்துக்காக அதே அணைக்கூட்டிலேயே கூலியாளாக வேலை செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு படத்தை முடித்தார் கோதார்த்.. இடைக்காலத்தில் த்ரூபோவுக்கு திருமணம் ஆகியிருந்தது . அவரது மனைவியின் தந்தை சற்று வசதிமிக்கவராக இருந்த காரணத்தால் சொந்தமாக கம்பெனி துவக்கசெய்து அவரது பணத்தின் மூலம த்ரூபோ குறும்படமெடுக்க துவங்கினார். முதல் திரைப்படம் Les Mistons . தொடர்ந்து இரண்டாவதாக அப்போது பிரான்சில் பெய்த அடைமழையை வைத்து மற்றுமொரு குறும்படம் எடுக்க துவங்கினார். ஒருகட்டத்தில் த்ரூபோவுக்கு அப்படத்தை எடுப்பது சிரமமாக இருக்க கோதார்த்திடம் காமிராவை ஒப்படைத்தார். அப்படத்தை தொடர்ந்து இயக்கிய கோதார்த் த்ரூபோவின் திரைக்கதையை பின் தொடராமல் தன்னிச்சையான படமாக எடுத்து படத்தை முடித்தார் . நியூவேவ் எனப்படும் புதிய அலையின் முதல் படமாக வரலாற்று ஆய்வாளர்கள் இப்படத்தையே குறிப்பிடுகின்றனர்.

இச்சூழலில் அரசாங்கத்தின் சில புதிய சட்டங்களின் மூலமாக வும் புதிய தொழில் நுட்பங்களின் மூலமாக சினிமா எடுக்கும் செலவு குறைய்ய துவங்க ஆந்த்ரே பஸின் தலைமையிலான அந்த புதிய இளைஞர் படைக்கு கதவுகளை திறந்து வழிவிட்டார் போலானது. அதுவரை பிரான்சுக்குள் மட்டுமே வீசிய புதிய அலை கரைகள் உடைத்து உலக நாடுகளெங்கும் வீச துவங்கிய காலமும் வந்தது.

புதிய அலை >
அதுவரையிலான விதிகளை உடைத்தெழுந்த புதிய அலை சினிமாக்களின் காலத்தை துவக்கியவர் ரோஜர் வாதிம் .. 28 வயது இளைஞர் அவரது And God Created Woman) (1956) என்ற படம்தான் அந்த பெருமைக்குரிய திரைப்படம் . தொடர்ந்து மெல்வில்,லூயி மால் , சாப்ரோல் போன்றவர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை பிரான்சில் மட்டுமே அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டிருந்தன. இது குறித்து 1957ல் பிரான்சில் வெளியான நாளிதழ் ஒன்றில் புதிய இளைஞர்கலின் சினிமா பற்றி ஒருகட்டுரை பிரசுரமானது. The New Wave: Portrait of Today’s Youth எனும் தலைப்பிட்ட கட்டுரையில்தான் முதன் முறையாக நியூ வேவ் புதிய அலை எனும் பதம் பயன்படுத்தப்பட்டது . ஆனாலும் கட்டுரை புதிய இளைஞர்கள் பெரிதாக எதுவும் சாத்தித்து விடவில்லை என்றே எழுதியிருந்தது . இந்நிலையில்தான் 1959ல் பிராங்கோய்ஸ் த்ரூபோவின் (The 400 Blows) (1959).எனும் படம் வெளியானது . பெற்றோர்களின் பொறுப்பின்மையால் சிறுவர்கள் படும் அவதியும் அத்னால திசை மாறும் அவர்களது வாழ்வையும் பற்ரிய இப்படம் காட்சி அமைப்பிலும் படத்தொகுப்பிலும் அதுவரையில்லாத புதிய் அணுகுமுறை கண்டு பார்வையாளர்கலும் விமர்சகர்களும் வியந்தனர். அவ்வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ந்த்னர் . சிலர் இதுதான் சினிமா என உற்சாகத்தில் இரைந்த்னர் . இது உண்மையை பேசுகிறது.இதுவரை பார்க்காத புது அனுபவத்தை உண்டாக்குகிறது என பரவசமடைந்தனர் . விழாவுக்கு வந்திருந்த் வெளிநாட்டு இயக்குனர்கள் மத்தியில் ஒரே இரவில் த்ரூபொ நாயகனாக மாறி உலக சினிமாவின் புதிய நட்சத்திரமாக பிரகாசித்தார் . இத்த்னைக்கும் அவர் எழுதிய ஒரு விமர்சனத்திற்காக முந்தைய வருட விழாவுக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது . அதே கேனஸ் திரைப்படவிழா இந்த வருடம் அவரை சிறந்த இயக்குனராக அறிவித்து பெருமை தேடிக்கொண்டது .. உலகசினிமா அரங்குகளில் எழுதியது பொல் படமெடுத்து நிரூபித்துகாட்டிய இளஞனை பற்றிய தகவல் பரபரப்பாக பேசப்பட்டது .

படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்போது த்ரூபோவிடம் அடுத்த படத்திற்காக அணுக த்ரூபோ இம்முறை தான் இயக்குவதை விட த்ன் நண்பன் இயக்குவது வரலாற்றிற்கு பெருமை சேர்க்கும் செயல் என்றார்

த்ரூபோ சொன்ன இயக்குனர் ழான் லூக் கோதார்த்
அவர் எடுத்த படம் (Breathless) (1960). அந்தபடமும் அடுத்த வருட பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளிக்க்கரடி விருதை வாங்க நியூவேவ் என பிரெஞ்சு நியூவேவ் என விமர்சகர்கள் ஒருமனதாக அழைக்க துவக்கினர் .
கோதார்த்தின் படங்கள் அனைத்து சம்பிரதாயங்களையும் உடைத்தது. இத்த்னைக்கும் அது வழக்கமான ஹாலிவுட் பி மூவி சஸ்பென்ஸ் வகைப்ப்டம்தான் ..ஆனாலும் காமிரா உயிரோட்ட்மாக அசைந்தது . படத்தொகுப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. சினிமா என்பது வெறும் கதை சொல்வது மட்டுமல்ல அதை தாண்டியது என்பதை அனைவரும் ஏற்க துவங்கினர்
(தொடரும் ) http://www.ajayanbala.in

உலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் 24:சினிமாவுக்கு தேவை ஒரு இளம்பெண் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி

ப்பாக்கி



பிரான்சின் புதிய அலை பகுதி ; மூன்று

பெர்லின் திரைப்படவிழாவில் தங்கக்கரடி வாங்கிய கையோடு இயக்குனர் கோதார்த் மற்றும் படத்தில் நாயகனாக நடித்த ழீன் பால் மண்டோ ஆகியோர் ஒரே இரவில் உலக நட்சத்திரங்களாக பிரகாசிக்க துவங்கினார். ப்ரெத்லஸ் படத்தின் வெற்றி அதுவரையிலான் பிரெஞ்சு சினிமா சரித்திரத்தை தலைகீழாக மாற்றியது புதிய அலை முழுமையாக உலகசினிமாவில் வீசதுவங்கியது பத்திரிக்கைகள் விமர்சகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறி தாங்கள் சொல்லியதுபோல செய்துகாட்டிய புதிய இளைஞர்களை கொண்டாடதுவங்கின .

ப்ரெத்லஸ் தந்த வெற்றியை தொடர்ந்து த்ரூபோ, கொதார்த் இருவரும் அமெரிக்க க்ரைம்நவால்களுக்குள் தீவிரமாக தங்களது தேடல்களை துவங்கினர். கதை எங்களுக்கு அவசியமில்லை. அது பார்வையாளனாய் தனக்குள் மூழ்கடித்துவிடும் . அத்ற்கு புத்தகம் போதும். இது சினிமா பார்வையாளனாய் கடைசிவரை இருக்கையில் உட்கார்த்திவைத்திருக்க எங்களுக்கு ஒரு தந்திரம் தேவைப்படுகிறது. ஒரு துப்பாக்கி ஒரு இளம் பெண் இருந்தால் போதும் சினிமாவுக்கு தேவையான மூலப்பொருள் இவ்வளவே..இதைவைத்துக்கொண்டு இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளை கட்டமைப்பதில்தான் எங்கள் சினிமா உறங்கிகிடக்கிறது என கோதார்த் வெளீப்படையாக அறிவித்தார். த்ரூபோவுக்கும் இதே பார்வைதான் என்றாலும் கோதார்த் அள்வுக்கு தொழில்நுட்ப பரிசோத்னை முயற்சிகளில் முழுமையாக அவர் இறங்க விரும்பவில்ல்லை.
கோதார்த்தை போல முழுக்க காட்சி அனுபவத்தை கொண்டிருத்தல் மற்றும் மரபுகளை உடைத்து புதிய வற்றை உருவாக்குதல் போன்றவற்றோடு சுவாரசியமான கதைகள் மற்றும் கதாபத்திரங்களையும் த்ரூபோ நம்பினார். காரணம் அவர் தயாரிப்பாளராகாவும் இருந்தார். அவரே தயாரித்த அவரதுஇரண்டாவது படமான ஷூட் தி பியானிஸ்ட் பிளேயர் 1960 படத்தின் தோல்விக்கு பிறகுதான் த்ரூபோ இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. . அதனால க்ரைம் திரில்லர் ஆகியவற்றுடன் சிறந்த கதைகளையும் உள்வாங்கி அவற்றை தன் காமிராவின் மூலம் மீண்டும் எழுதினார். அதன்படி பிரெஞ்சு நாவல் ஒன்றை ஒட்டி எடுத்த ஜூல்ஸ் அட் ஜிம் 1962 வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை ஈட்டியது. தொடர்ந்து டூ இங்கிலீஷ் வுமன்,1971 தி மேன் ஹூ லவ்டு வுமன்1977, க்ரீன் ரூம் ,1978வுமன் இன் நெக்ஸ்ட் டோர் ,1981 .. போன்ற காலத்தின் மகத்தான படைப்புகளை அவர் உருவாக்கினார். த்ரூபொவின் துவக்ககால திரைப்படங்கள் பெரிதும் அவரது சுய வரலாற்றை ஒட்டியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அவரது திரைப்படங்களில் தன்னியல்புத்த்ன்மையே வரது த்னைத்தன்மை ..அவரது கதாபத்திரங்கள் அடுத்து என்ன செய்யும் என்பதை எவரும் ஊகிக்க முடியாது. திரைக்கதையின் இந்த அவரது தன்னியல்புதன்மை காட்சிக்கொணாங்கள் ,படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுடபகூறுகளிலும் விரவி அசாத்திய உயிர்த்தன்மையை அவரது படங்களுக்கு வழங்கியது.
அவரது திரைப்படங்களில் வுமன் இன் நெக்ஸ்ட் டோர் அவரது பாணியிலிருந்து முழுமையான விலகிய படைப்பாகும். அழுத்த்மான உணர்வெழுச்சிகள் நிரம்பிய அப்படைப்பு புதிய அலைக்கு எதிரானதாக மரபான சினிமகாளை மீண்டும் கொண்டாடுவதாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கடுமையாக தாக்கினர்.

த்ரூபோவின் திரைப்படங்களின் கலாபூர்வ வெற்றிக்கு அவரது பெரும்பானமை திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ரிய நேஸ்டர் அல்மான்ரஸுக்கும் பெரும்பங்கு உண்டு .வெறுமனே இயக்குனராக அல்லாமல் ஒரு இயக்கத்தை முன்னெடுத்து செல்பவராகவும் அத்ன் சகலகூறுகளையும் முழுமையாக உணர்ந்து உலக சினிமாவின் வளர்ச்சிக்கு த்ன்னை அர்ப்பணித்துக்கொள்பவராகவும் செயல்பட்டதுதான் த்ரூபோவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் . மேலும் வெறுமனெ வணிக திரைப்பட இயக்குனர் என்றுமட்டுமே உலகசினிமா விமர்சகர்களால் முத்திரை குத்தப்ப்ட்ட ஹாலிவுட் இயக்குனரை தன் நண்பர் சாப்ரோலுடன் நேரில் சந்தித்து நீண்ட பேட்டி எடுத்து அதனை நூலாக வெளியிட்டார் . அந்த நூல் வெளியான பிறகுதான் ஹிட்சாக்கின் திரைப்படங்களின் மீதான் பார்வை விமர்சகர்களிடத்தில் முழுமையாக மாற்றம் கண்டது.அழ்ந்த மனைத நேயப்பற்றும் வாழ்க்கையின் மீதான் தீராத கவர்ச்சியும் உறவுகளின் போலித்த்னமையும், சம்பிராதயங்களின் மீதான் கேள்விகளும்,பால்யத்தின் பதட்டமும்,அளவற்ற காதலும் ,,கட்டற்ர காமமுமாக காண்ப்படும் த்ரூபோவின் படங்கள் மனித மனத்தின் ஆவணகாப்பகங்களாக படைப்பு நேர்த்தியுடன் உலகசினிமாவின் அணிகலன்களாக இன்றும் விளங்குக்கின்றன.

அதேசமயம் கோதார்த் த்ரூபோவிடமிருந்து முழுமையாக தன்னை விளக்கி கொண்டவர் .கோதார்த்தின் திரைப்படங்கள் அரசியல்பேசுபவை. துவக்ககாலங்களில் தீவிரமான மார்க்சியராக விளங்கிய கோதார்த் பின் மாவோ வின் சீன கம்யுனசிககருத்துக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார். அவரது திரைப்படத்தின் மீதான் ஆரவம் கூட ஒரு அரசியல் நடவடிக்கையே என அரசியலை கலையையும் பிரிக்கமுடியாத கூறுகளாக பாவித்தார்.பிற்பாடு த்ரூபோ வின் திரைப்படங்கள் வணிகவெற்றியை நோக்கி உந்திசென்றபோது தனக்கு முதல படவாய்ப்பு வாங்கி கொடுத்த நண்பர் என்றும் பாராமல் த்ரூபொவை பூர்ஷூவாவாக மாறிப்போன கம்யூனிஸ்ட் என பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

அமெரிக்க இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கிய எக்ஸ்போ 58 எனும் ஆவ்ணப்படத்தை பார்ததபோது தனக்கான சினிமாவின் விழிப்புணர்வை அடையப்பெற்ற கோதார்த் தனது ப்ரெத்லஸ் முதல் படத்திலேயே வழக்கமான சினிமாமொழியை முழுமையாக உடைத்து ஜம்ப்கட் எனும் புதிய உத்திமூலம் உலகசினிமாவை தன்பக்கம்திசை திருப்பிக்கொண்டார். அத்னாலதான் முதல்படத்தின் பிரம்மாணட வெற்றிக்கு பிறகு அவர் த்ரூபோவைபோல முழ்நீள படம் எடுப்பதை தவிர்த்து அல்ஜீரிய போர பற்றிய திரைப்படத்தை எடுப்பதில் முனைப்பு காட்டினார். தொடர்ந்து Woman Is a Woman (1961), Vivre sa vie (1962), Les Carabiniers (1963) மேற்சொன்ன மூன்று திரைப்படங்களும் அவரது ப்ரெத்லஸ் பொல பெரிய வெற்றியை ஈட்டவில்லை ஆனால் அடுத்து வந்த அவரது Le Mépris (1963),வணிக ரீதியாக பெரும் வெற்றியை அவருக்கு ஈட்டித்தந்தது.

கோதார்த் எந்த சமரசத்துக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாதவர் .நான் இவ்வுலகில் தொடர்ந்து எவரும் பார்த்திராத புதிய காட்சிகளை காமிராவின் மூலம் தேடுகிறேன்.அவற்றை எனக்குள்ளான அரசியல்மூலமாக தொகுத்து திரைப்படம் எனும் வடிவத்தில் செதுக்க முயல்கிறேன் இதுவே என் சினிமா என அறிவித்துக்கொண்ட கோதார்த் பார்வையாளனை எந்த தருணத்திலும் பொருட்டாக கருதியதில்லை. அவரது திரைப்படங்கள் கோர்வையாக இல்லை. புரியவில்லை .குழ்ப்பமாக இருக்கின்றன என தொடர்ந்து குற்றசாட்டுகள் வசையாக அவர் மீது விழுந்தவண்னமிருந்தன. ஆனால் அவற்றை சட்டைமீது விழும் இலையை விரல்களால் ஒதுக்குவதுபோல உதாசீனப்படுத்திவிட்டு தன்னுடைய படங்களில் தீவிரமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.பார்வையாளனை அந்நியப்படுத்தி அவனது நுகர்ச்சிதனமையிலிருந்து விலகி அவனுக்கு உணர்ச்சிகளை தூண்டும் திட்டமில்லாத அதேசமயம் அவனது சிந்த்னையை துண்டக்கூடிய காட்சிகளில்புதிய அனுபவத்தை உண்டாக்க கூடியபடைப்புகளை உருவ்வாக்குவதில் முனைப்பாக இருந்தார். புகழ்பெற்ற நாடக இயக்குனர் பெத்ரோல்ட் பிரெக்தின் நாடகங்களின் பால் ஈர்ப்புகொண்டிருந்த கோதார்த் அவரது நாடகத்தின் சில கூறுகளை தன் திரைப்படத்தில் பயன்படுத்தி பார்வையாளனின் இரண்டாவது வாசிப்புக்கு அல்லது இரண்டாவது பரிணமாத்துக்கு தன் திரைப்படங்களில் வழி சமைத்து கொடுத்தார்.பிற்காலத்தில் டிசிகாவெர்தோவ் எனும் ரஷ்ய இயக்குனர் பெயரில் உருவான குழுவில் இணைந்து திரைப்படங்களை இயக்க்கி வெளியிட்டுள்ளர். எண்ணற்ற முழ்நீள திரைப்பட்ங்களுடன் குறும்படங்கள் ஆவணப்படங்கள் என மாற்று சினிமா முயற்சிகளின் மூலம் வணிக சினிமாபோக்கு எதிராக செயல்பட்டவர் . ஆனாலும் கோதார்த் உலகின் த்லைசிறந்த இயக்குனர்கள் பலரால் இப்போதும் குருவாக மதித்து போற்றபடுபவர். Quentin Tarantino,Martin Scorsese, Bernardo Bertolucci, Arthur Penn, Richard Linklater, Gregg Araki, John Woo, Mike Figgis, Robert Altman, Steven Soderbergh, Richard Lester, Jim Jarmusch,Rainer Werner Fassbinder, Brian De Palma, Wim Wenders, Oliver Stone என அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டுசெல்கிறது. அவரது திரைப்படவாழ்வின் முழுமையான வெற்றிக்கு இதுவே தக்க சான்று . தன் எண்பதாவது வயதிலும் மறைந்த தன் புதிய அலை சகா எரிக் ரோமர் பற்றிய ஆவணப்படத்தை இயக்கி அவர் வெளியிட்டிருப்பது சினிமாவின் மீதான அவரது பற்றை நமக்கு நிரூபிக்கிறது

(அடுத்த இதழில் பிரெஞ்சு சினிமா அலை ..இறுதி பாகம் சாப்ரோல் ..எரிக் ரோமர் ழாக் ரிவெத் )












க்ளாத் சாப்ரோல் (24 June 1930 – 12 September 2010)
( claude chabrol photo)


சென்ற செப்டம்பர் 12ம் நாள் பிரெஞ்சு புதிய அலை சினிமாவின்மற்றுமொரு பிதாமகன் காளாத் சாப்ரோல் தன் எண்பதாவது வயதில் சினிமாவை விட்டு உயிர்பிரிந்தார். அவரது திரைப்படங்கள் மற்ரும் வாழ்க்கை குறிப்பு இத்தொடரின் அடுத்த பகுதியில் இடம் பெற உள்ளது.

அந்த உலகசினிமா மேதைக்கு புத்தகம் பேசுது சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்

- அஜயன்பாலா





http://www.ajayanbala.in

க்ளாத்ஷாப்ரோல், எரிக்ரோமர் மற்றும் ழாக்ரிவெத்:பிரான்சின் புதிய அலை பகுதி : நான்கு



உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 25


இந்த ஆண்டு உலக சினிமா தன் பங்குக்கு இரண்டு நட்சத்திரங்களை மண்ணுக்குள் அனுப்பியது. அவர்கள் இருவருமே நண்பர்கள். த்ரூபோ கோதார்த்துக்கு பிறகு போற்றப்படும் புதிய அலையின் மற்ற இரு முக்கியமான தூண்கள் .

க்ளாத் ஷாப்ரோல் எரிக் ரோமர். இவர்கள்தான் அந்த இருவர்
ஷாப்ரோல் கடந்த இரண்டுமாதங்களுக்குமுன் செப்டம்பர் 12லும் எரிக்ரோமர் கடந்த ஜனவரி 11ம் நாளிலும் தங்களது வாழ்வு எனும் மிக நீண்ட திரைப்பட்த்திற்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.

ஷாப்ரோலுக்கும் எட்ரிக் ரோமர் இருவருமே புதி ய அலைகுழுவில் பூரண இலக்கியத்தை நம்பியவர்கள் . கோதார்த் மற்றும் த்ரூபோ ஆகிய இருவரும் கூட எழுத்திலிருந்து சினிமாவுக்கு வந்த்ருந்தாலும் அவர்களை காட்டிலும் இலக்கியத்ன்மைக்கு தமது மடங்களில் இவர்கள் இருவரும் கூடுதல் மதிப்பை தந்திருந்தனர்.

கிளாத் ஷப்ரோல்

1930ல் வசதியான குடும்பத்தில் பிறந்தவரான ஷாப்ரோல் த்ரூபோ கோதார்த் ஆகியோரின் திரைப்பட சங்கங்களில் அவர்களுடன் இணைந்து பிற்பாடு ராணு சேவைக்கு போய் சினிமாஅசை காரணாமாக் பாதியில் ஓடிவந்து மீண்டும் நண்பர்களுடன் இணைந்து அவர்களோடு கையேது சினிமாவில் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் பங்களித்து பின் 20 செஞ்சுரி பாக்ஸின் பிரெஞ்சு விளம்பர பிரிவில் சிலகாலம் வேலை செய்து பின் அந்த வேலையை கோதார்த்திடம் கைமாற்றிவிட்டு தன் பணக்கார மனைவியின் கடைக்கண் அசைப்புக்கிணங்க தன் முதல் படமான ஹேண்ட்செம் செர்ஜ்படத்தை தயாரித்து இயக்கினார் . 1958ல் வெளியான இந்த படம்தான் நியூவேவ் இயகுனர்களின் முதல் படமாக வரலாற்றாய்வாளர்கள் தீர்மானிக்கபடுகிறது.அதன் பிறகு தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் திரைவாழ்க்கைக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஷாப்ரோல்
ஐம்பதுக்குமேற்பட்ட திரைப்படங்களை இயக்கி பிரெஞ்சு மற்றும் உலக சினிமாவுக்கு வளம் சேர்த்துள்ளார்




ஷாப்ரோலின் படங்களை பற்றி ஒட்டுமொத்தமாக அள்வீடு செய்வதானால் சுருக்கமாக இப்படி கூறிவிடலாம் . அவர் ஹிட்ச்காக்கின் பிரெஞ்சு நிழல்
இப்படி சொல்வது அவரது படங்களை குறைத்துமதிப்பிடுவதல்ல. ஷாப்ரோலை பொறுத்தவரை இப்படி யாரேனும் சொன்னால் அதையே தனக்கு கிடைத்த சிறந்த மதிப்பீடாக கொள்வார். அந்த அள்வுக்கு ஹிட்ச்காக்கையும் அவரது படங்களையும் நேசித்தவர். அதனாலதான் எரிக் ரோமருடன் இணைந்து ஹிட்சாக்கை பற்றி ஆய்வு செய்துஒரு நூலாக எழுதினார் . சினிமாவை புரிந்துகொள்ள மிகசிறந்த நூல் என விமர்சகர்கள் பலரும் அத்னை குறிப்பிடுகின்றனர். அது போல த்ரூபோ வுடன் இணைந்து ஹிட்ச்காக்கை நேரில் சந்தித்து பேட்டிகண்டு அதனை புத்தகமாக கொண்டுவந்தார். . அதுவரை உலக சினிமாவுக்கு கமர்ஷியல் இயக்குனராக மட்டுமே அறியப்பட்ட ஹிட்ச்காக்கின் படங்கள் இந்த புத்தகம் வந்த பிறகுதான் ஒரு கலைமதிப்பீட்டை பெற்றுக்கொண்டன.

புதிய அலை இயக்குனர்களில் அதிக கமர்ஷியல் வெற்றி பெற்ற இயக்குனர் என்ற பெருமை ஷாப்ரோலையே சேரும். அதற்கு காரணம் அவர் த்னது படைப்புகளில் உள் பொதிந்து வைக்கும் குறிய்யீடுகளை அவரே நேரடியாக படத்தில் சொல்லிவிடுவதுதான் . பொதுவாக கோதார்த் போன்றவர்கள் ஒருகாட்சியில் இடையிடையே ஒரு கடிகாரத்தையோ அல்லது பூனை தன் அசையும் வாலின் நிழலை பார்ப்பது போலவோ குறீடாக காண்பித்தால் அதற்கு தனி அர்த்தம் மறைந்து இருக்கும் . ஆனால் ஷ்ப்ரால் படத்திலோ அந்த குறியீடு எதை உணர்த்துகிறது என்பதையும் விளக்கிவிடும் .. ஷாப்ரோலின் கமர்ஷியல் வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம் . மேலும் ஷாப்ரோலின் பாணி தனித்வமானது.
அவரிடம் த்ரூபோவின் அழுத்த்மான கதையாடலோ கோதார்த்தின் மிகு புனைவு மொழியோ எரிக் ரோமரின் கவித்துவமோஇல்லை. மாறாக அவர் நேரிடையான இயல்பான திரைப்படத்தையே படைப்பாக வடிவமைத்தார். மேலும் இதர மூவரை போல பல்வேறு பாணி திரைபடங்களை கையாளாமால் அவர் ஹிட்ச்காக் பணி துப்புறியும் படங்களாகவே தன் தடத்தை தீர்மானித்துக்கொண்டார் .

ஷாப்ரோலுக்கு வரலாற்றீல் இன்னொரு பெயரும் உண்டு . அது தேவதை .. பண தேவதை .. படம் எடுத்து பாதியில் நின்ற பல புதிய அலை படங்களுக்கு பண உதவி செய்தவர். அவர் கல்யாணம் செய்து கொண்ட பணகார மனைவியின் மூலமாக தான் உருவாக்கிய AJYM FILMS மூலமாக இந்த பண உதவிகளை தக்க நேரத்தில் தந்துதவினார். எரிக் ரோமர் ..ழாக் ரிவெத் போன்றோரின் துவக்ககால திரைப்படங்களுக்கு ஷாப்ரோலே தயங்காமல் பண உதவி செய்து தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவும் படம் வெளிவரவும் உதவி செய்து புதிய அலையின் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்தார் .

எரிக் ரோமர்

எனது திரைப்படங்கள் ஒரு நாவலை போல .. அவர்கள் என் படத்தை பார்க்கவில்லை மாறாக நாவல் வாசிக்கும்போதான் உலகம் என்னடி அவர்கள் கற்பனையில் உருக்கொள்கிறதோ எப்படியான உணர்ச்சியில் அவர்கள் மனம் எழுச்சி கொள்கிறதோ அது போன்ற மன நிலையில்தான் என் படங்கள் பார்வையாளர்களை சென்றடைய விரும்புகிறேன்

மேலுள்ள வாசகம் எரிக் ரோமர் தன் படங்கள் பற்றி தானே கூறிக்கொண்டது. மற்ற நியூவேவ் இயக்குனர்களுக்கும் இவரும் இருக்கும் வித்தியாசம் அவர்கள் சிறுவயது தொட்டே சினிமாவை காதலைத்து வந்த்னர். ஆனால் எரிக் அப்படியில்லை அவருக்கு துவக்க காலங்களில் சினிமா ஈர்ப்பை தரவில்லை .


ஆ1920ல் பிறந்த எரிக்கின் அசல் பெயர் மோரிஸ் ஹென்றி ஜோசப் ஷேரர் என்பதாகும் பிற்பாடு நாவல் எழுத துவங்கிய போது கில்பர்ட் என பெயரை மாற்றிக்கொண்டவர். ஸ்வீடன் இயக்குனர் எரிக் வான் ஸ்ட்ரோஹிம் மினால் உண்டான பாதிப்பின் காரணமாகவும் பின் அதனுடன் த்னக்கு பிடித்த சாக்ஸ் ரோமர் எனும் எழுத்தாளின் பெயரையும் இணைத்து எரிக் ரோமர் என்ற பெயரை தனக்குதானே சூட்டிக்கொண்டார்.

துவக்க காலங்களில் ஆசிரியராக பணி புரிந்த எரிக் குக்கு அந்த பணி பிடிக்கவில்லை. காரணம் எழுத்து அவருக்குள் ஊறிக்கொண்டிருந்தது,வேலையை விட்டு பத்திரிக்கை துறைக்கு பாய்ந்தார். .எலிசபத் எனும் அவரது முதல் நாவலை எழுதி வெளியிட்டார்.

பிறகு சினிமாதொக் திரைப்பட சங்கத்தில் சேர்ந்ததும் கையெது சினிமா இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றதும் அவரே அறியாமல் நிகழ்ந்த சம்பவங்கள்.அவரது 1958ல் அவரது முதல் படமான சைன் ஆப் லியோ வெளியானது. ஷாப்ரோல்தான் இதன் தயாரிபாளர். சிம்ம ராசியில் பிறந்தவனுக்கு குறிப்பிட்ட நாளில் பெரும் பணம் வரும் என்று யாரோ சொல்லும் ஜோசியத்தை நம்பி கையில் இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து விடுகிறான்.ஒருகட்டத்தில் நயாபைசா கூட கையில் இல்லாமல் தெருநாயாக அலையும் அளவுக்கு வாழ்க்கை சீரழிகிறது. முட்டாளத்னமாக ஜோசியத்தை நம்பினோமே என புலம்பிதவிக்கிறான். இரவில் தங்க கூட இடமில்லை. நண்பர்களின் ப்ளாட்டுக்கு தேடி செல்ல அவமானபடுத்தப்பட்டு வெளியேறுகிறான். அது அவனை தற்கொலை எண்ணத்துக்கே அழைத்துச்செல்கிறது. சாகதுணிந்தவன் தோளில் ஒரு கை
யாரோ ஒரு சொந்த கார கிழவி மண்டையை போட பல கோடி சொத்து அவனுக்கு வந்துள்ளதாக தகவல்.
ஆனால் இப்படம் வெளியான போது த்ரூபொ கோதார்த் ஷாப்ரோல் ஆகியோர் தங்களது முதல் படத்தில் ஈட்டிய வெற்றியை ஈட்டவில்லை. அதனால் முதல் படத்திலேயே சுருங்கிப்போன எரிக் மீண்உம் எழுத்து பணிக்கே திருமினார். சமயம் கிடைத்த போதெல்லாம் குறும்படங்களாக எடுத்து தள்ளிக்கொண்டிருந்தார். கிடத்ட்ட முதல் படம் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குபின் 1967ல் La Collectionneuse என்ற படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை ஈட்டிதந்து புதிய அலையின் சகாபத்தில் புதிய வரவாக பதிய வைத்துக்கொண்டது..அப்படம் சிறந்த படத்துக்கான பரிசான வெள்ளிகரடியை வென்றதோடு பலவேறு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றது.1969ல் வெளியான அடுத்த்படம் Ma nuit chez Maud சிறந்த அந்நிய மொழி படத்துக்கான ஆஸ்கார் பரிசை பெற்றது ...தொடர்ந்து எரிக்கின் படங்கள் பிரான்சை காட்டிலும் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றன .

புதிய அலையின் மற்ற இயக்குனர்களது படங்களைக்காட்டிலும் எரிக் கின் படங்களில் இலக்கியத்த்ன்மை அதிகம் இருப்பதை நம்மால் உணர முடியும்.
என்னதான் ஷாப்ரோலின் படங்கள் அக்காலத்தில் பிரான்சில் கமர்ஷியலாக வெற்றி பெற்றாலும் எரிக்கின் படங்கள் மிகதாமதமாக ஆனால் காலத்தால் அழியா புகழை சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்றுதந்தன .கென்ஸ் பெர்லின், வெனிஸ் என அனைத்து திரைப்பட விழாக்களில்லும் அவர் சிறந்த படத்துக்கான விருதை பெற்றிருக்கிறார்.

ழாக் ரிவெத்

1928ல் பிரான்சில் பிறந்தவர்.. புதிய அலை இயக்குனர்களில் மற்ற மூவரும் மறைந்தபின்னர் கோதார்த்தும் இவரும் தான் இன்னமும் உறுதியாக சினிமா வாழ்க்கையை நீட்டித்துக்கொண்டிருப்பவர்கள்.
ரிவெத்தின் முதல் படம் Paris nous appartient தான் பணி செய்த கையேது சினிமா நிறுவனத்திலேயே வட்டிக்கு பணம் வாங்கி தன் முதல் படத்தை எடுத்தார் . அப்படியும் பண் ப்ரச்னையால் அவரது சினிமா பாதியில் நின்ற போது த்ரூபோவும் ஷாப்ரோலும் அவருக்கு பண உதவி செய்து படச்சுருளை வாங்கிதந்து தொடர்ந்து படத்தை முடிக்க உதவி செய்தனர். படம் வெளியான போது எரிக் ரோமருக்கு நேர்ந்த அதே கதி நேர்ந்தது. முதல் படமே பெரும் தோல்விபடம் .எரிக்கை போலவே பத்து வருடம் கழித்து இவரது இரண்டாவது படம் L'amour fou வெளியாக அரசாங்கம் அதில் சட்டத்துக்கு புறம்பான காட்சிகள் இருப்பதாக தடை செய்ய போக அதுவே படத்துக்கு பெரிய விளம்பரமாகி பிற்பாடு பெரும் வெற்றிபடமாக மாறியது. அத்பிறகு தொடர்ந்து படங்களை இயக்கிவந்த ரிவெத்துக்கு பிற்காலத்திய படங்கள்தான் பெரும் புகழை பெற்றுதந்தன






http://www.ajayanbala.in

உலக சினிமா வரலாறு 26: மறுமலர்ச்சி கால உலக நட்சத்திரங்கள்






மறுமலர்ச்சி யுகம் 26

1.ஆண்டனி க்வின் (மெக்சிக்கொ)

பெலினியின் லா ஸ்ட்ராடா பட்த்தின் மூலம உல்க சினிமா ரசிகர்களுக்குள் ஆழமான இடத்தை தக்கவைத்துக்கொண்ட ஆண்டனி க்வின் ஐரிஷ் –மெக்சிகன் கலப்பினத்தில் பிறந்த மெக்சிக்கோ நாட்டை சேர்ந்தவர். ஆண்டனியோ ரொடால்போ க்வின் ஒக்சாகா Antonio Rodolfo Quinn Oaxaca என்பதுதான் இவரது அசல் பெயர். பணம் சம்ப்பாதிக்க குத்துசண்டையை தொழிலாக கொண்டிருந்த க்வின் இருபது வயதில் துண்டுதுக்கடா பாத்திரங்களில் த்லையை காட்டிக்கொண்டு சினிமாவுக்கு நுழைந்த்வர். கிட்ட்தட்ட இருபது வருட கடும் போராட்டத்துக்கு பிறகு தனது நாற்பதுகளில்தான் நாயகனாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். மார்லன்பிராண்டோவுடன் இவர் நடித்த விவா சபாட்டா இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை பெற்று தந்த்து.ஓவியர் வான்காவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வின்சண்ட் டி மென்னெளியின் லஸ்ட் பார் லைப் எனும் இத்தாலிய படம் இவருக்கு இரண்டாவது ஆஸ்கார் பரிசை நடிப்புக்காக வாங்கி கொடுத்துள்ளது.தொடரந்து பராபஸ் ,ஜோர்பா தி கிரீக்,லாரன்ஸ் ஆப் அரேபியா ,கன்ஸ் ஆப் நவரோன் ,ஒமர் முக்தார் என இவரது வரலாற்றில் பல வெற்றிபடங்கள் இவரது ஆளுமைமிக்க மிகச்சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள். மூன்று மனைவிகள் ஒரு காதலி பதிமூன்று குழந்தைகள் என பெருவாழ்வு வாழ்ந்த இக்கலைஞன் அடிப்படையில் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் சிறந்த எழுத்தாளர்.
2. மிஃபுனெ (ஜப்பான் )
அடிப்படையில் புகைப்படக்கலைஞரான் மிபுனே சினிமாவுக்குள் வந்த்தே தனிக்கதை. சீனாவில் பிறந்து பத்தொன்பது வயதுக்கு பிறகு புகைபட்துறையை தொழிலாக வரித்துக்கொண்டவர். பின் தங்களது பூர்வீகமான ஜப்பானுக்கு குடிபெயர்ந்து வந்த மிபுனெ வந்த இட்த்தில் புகைப்படகலைஞராக ராணுவத்தில் சிலகாலமும் உதவி ஒளிப்பதிவாளராக டு டோஹோ ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் வேலை நிறுத்தம் ஏற்பட்டு டோஹோ ஸ்டூடியோவிலிருந்து பல நடிகர்கள் வெளியேறிபோக ஸ்டூடியோ புதிய நடிகர்களுக்கு அவசரமாக அழைப்புவிடுத்து விளம்பரம் கொடுத்த்து. மிபுனேவுக்கெ தெரியாமல் அவரது நண்பர்கள் சிலரது இவரது புகைப்பட்த்தை ஒட்டி விண்ணப்பத்தை அனுப்ப அப்போது கிடைத்தான் உலக சினிமா ரசிகர்களுக்கான புதிய நடிகன் மிபுனே.
1947ல் வெளியான ஸ்னோ ட்ரெயில் என்பதுதான் மிபுனேவுக்கு முதல் படம் என்றாலும் அவர்து மூன்றாவதுபடமான ட்ரங்கன் ஏஞ்சல்தான் அவரது கணக்குபடி முதல்படம் காரணம் அப்பட்த்தின் இயக்குனர்...அவர் அகிராகுரசேவா. உலகசினிமாவுக்கு குரசேவா வழங்கிய வழங்கிய அருட்கொடைகளில் பெரும்பாலானவற்றில் நடித்த பெருமை கொண்டவர் மிபுனே. இத்த்னைக்கும் தன் எழுபதாவது வயது வரை தொடர்ந்து 170 படங்களில் பல்வேறுபட்ட இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்தாலும் குரசேவாவுடன் அவர் நடித்த பதினாறு படங்கள் மட்டும்தான் அவரை உலகசினிமாரசிகர்களின் ஒப்பற்ற நடிகனாக அறிமுகம் செய்துள்ளன. இந்த பதினாறுபடங்களும் 1948 முதல் 1965 வரையிலான காலட்ட்த்தை சேர்ந்த்வை . இக்காலங்களில் இகிரு எனும் ஒரே ஒருபடம்தான் மிபுனே இல்லாமல் குரசேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம். தன்னுடன் துவக்க காலத்தில் நடிப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்வான நாயகியையே வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்ட மிபுனே வின் நடிப்புத்திறனுக்கு ரெட்பியர்ட் ,செவன் சாமுராய், ரெட்பியர்ட் ,ஆகிய திரைப்படங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள்.
3. லிவ் உல்மன்
எழுபதுகளின் பெண்ணியவாதிகளின் அடையாளமாக விளங்கிய லிவ் உல்மன்
அடிப்படையில் நார்வே நாட்டை சேர்ந்த்வர்.
அதிகபட்சமாக நடித்த்து ஸ்வீடிஷ் இயக்குனர் பெர்க்மனின் திரைப்படங்களில்தான். பிறந்த்து. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில். அப்போது இவரது தந்தை ஜோஹன் உல்மன் ஏர்கிராப்ட் இஞீனியாராக பணிபுரிந்த காரணத்தால் இவர் அங்கே பிறந்தார்.பிற்பாடு கனடாவில் வளர்ந்த லிவ் உல்மன் அடிப்படையில் ஒரு நாடக நடிகையாகத்தான் தன் வாழ்க்கையை துவக்கினார். லிவ் உல்மன் இரண்டாவது பட்த்தில்தான் இயக்குனர் பெர்க்மனை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். பெர்சனோ எனும் அப்பட்த்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இவர் நடித்த சீன்ஸ் ஆப் மேரேஜ் எனும் பட்த்தின் மூலமாகத்தான் பெண்ணியவாதிகளின் பிம்பம் எனும் முத்திரை அழுத்தமாக இவர்மேல் பதியதுவங்கியது. தொடர்ந்து இவர் பெர்கமனுடன் நடித்த க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ் இவரது நடிப்புக்கு இன்னுமொரு மைல்கல். தொடர்ந்து பேஸ் டு பேஸ்,ஆட்டம் சொனாட்டா போன்ற படங்கள் இவருக்கு உல்கசினிமாவிழாக்களில் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுதந்துள்ளன . குறிப்பாக பெண்பாத்திரங்களின் நடிப்புசாயல்கள் ஒன்றேபோல் இருக்கும்விதிகளை தகர்த்து தான் ஏற்கும் பாத்திரங்களின் உணர்ச்சிகளை தனித்துவமாகவும் அழுத்த்மாகவும் பிரதிபலிப்பதன் மூலம் உல்மன் உலகசினிமா பார்வையாளர்களின் மத்தியில் த்னக்கென அழுத்த்மான முத்திரையை தக்கவைத்துக்கொண்டவர்.குறைவான படங்களே நடித்தாலும் இன்றுவரையிலும் காலத்தின் சிறந்த நடிகையருள் ஒருவராக பேசப்படுபவர், இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட . இவரது முஇதல் படம் சோபி சிற்ந்த பட்த்துக்கான விருதை மாண்ட்ரீல் திரைப்பட விழவில் இவருக்கு பெற்று தந்த்து. தொடர்ந்து இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும் பல திரைப்படவிழாக்களில் அவரை சிறந்த இயக்குனராக அடையாளம் காட்டி வருகிறது.

பஸ்கா தெரு பையன்கள்:போலந்து சினிமா



உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 29. போலந்து சினிமா


போலந்தின் துவக்க கால இயக்குனர் அலெக்ஸாண்டர் கோர்டா 1952ல் பஸ்காதெருவிலிருந்து ஐந்து பையன்கள் என்ற பெயரில் இயக்கிய படம் போலந்து சினிமா வரலாற்றில் முக்கிய்மான இடத்தை பிடித்த திரைப்படம்.அதற்கு முன் வரை போலந்து இரண்டாம் உல்கப்போர் முடிவுறும் வரை ஹிட்லரிடம் மாட்டி சிக்கி சீரழிந்து சீரழிந்து உருக்குலைந்து போயிருந்தது. 1945க்கு பிறகுதான் மெல்ல தலையெடுத்த தேசம் சினிமாவை பற்றியும் கொஞ்சம் யோசிக்க துவங்கியது. அதற்காக லாட்ஸ் எனும் திரைப்பட கல்லூரியையும் துவக்கியது. துவக்கிய வேகத்தில் அதிலிருந்து மூன்று இயக்குனர்கள் வெளிப்பட்டனர். அவர்களூள் ஒருவர்தான் அலெக்ஸாண்டர் கோர்டா. கோர்டா எடுத்த பஸ்கா தெருவிலிருந்து ஐந்து பையன்களுக்கும் உல்க சினிமாவுக்கும் பெரிய தொடர்பில்லை ஆனால் அப்ப்டத்தில் உதவி இயக்குனராக ஒருவர் பஸ்காதெருவின் ஆறாவது பையனாக ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் போலந்து என்ற தேசத்தின் பெயரை உலக சினிமா தளத்தில் உயரபிடித்து எழுந்தவர். அவர் ஆந்த்ரே வாஜ்டா

ஆந்த்ரே வாஜ்டா
Andrzej Wajda

சினிமாவின் இலக்கணம் அதன் காட்சி மொழி.
கேமராவுக்கும் கத்திரிக்குமிடையிலான இயக்குனரின் படைப்பாக்கத்தில் அதன் புரிதலில்.இரு தொழில் நுட்பங்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டதலின் மீதான காதலில் எழுகிறது இந்த காட்சி மொழி.
இந்த காட்சி மொழியில் பாண்டித்யமும் செய் நேர்த்தியுமிக்க மகத்தான உலக இயக்குனர்களின் பட்டியலில் அகிராகுரசேவா , ஜான் போர்ட் ஆகிய மேதைக்ளின் வரிசையில் போலந்து இயக்குனர் ஆந்த்ரே வாஜ்டாவுக்கென ஒரு சிறப்பிடம் உண்டு.

பஸ்கா தெருவிலிருந்து ஐந்து பையன்கள் படத்துக்கு பிறகு தன் சினிமாவாழ்க்கையை துவக்கிய ஆந்த்ரே வாஜ்டாவின் முதல் படம் ஜெனரேஷன் A Generation 1954ல் வெளியானது. கம்யூனிஸ்ட் சித்தாந்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் நடித்த ஜிபுவுஸ்கிக்கு போலந்தில் மிகபெரிய ரசிகர் கூட்டம் உண்டானது. இதில் நடித்த இன்னொருநடிகர் போலந்து வெளிக்கொணர்ந்த மற்றொரு உல்கசினிமா இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி. ஜெனரேஷனுக்கு பிறகு வாஜ்டா இயக்கத்தில் வெளியான Kanał (கனால் மற்றும் Ashes and Diamondsஆஷஸ் அண்ட் டைமண்ஸ் என வெளியான அடுத்தடுத்த படங்களும் கம்யூனிச கருத்தையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில் கனால் படம் அவருக்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான தங்கப்பனை விருதை வாங்கிதந்தது. 1968ல் இவர் எடுத்த Every thing for sale எவ்ரிதிங் பார் சேல் எனும் ப்டப்பிடிபின் போது இவரது ஆஸ்தான நாயகனும் போலந்து சினிமாவின் உச்ச கலாச்சார பிம்பமுமாக விளங்கிய ஜ்ஜிபுவுஸ்கி ரயில் பயணத்தின் போது எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணம் அடைய படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலை. தயாரிப்பு நிர்வகம் வேறு நஷ்டகணக்கை தாங்க முடியாமல் வாஜ்டாவை தொந்தரவு செய்ய துவங்க ..ஒரு நாள் மறுநாள் ஷூட்டிங் என சட்டென குழுவினருக்கு உத்தரவிட்டார்.. அனைவரும் புருவங்களை உயர்த்தினர். இவர் இனி யாரை வைத்து படமெடுக்க போகிறார் ஆச்சர்யத்துடன் பின் தொடர்ந்தனர். பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது. இப்போது கதையில் நாயகன் வாஜ்டா எனும் இயக்குனர். தன் புதிய படத்தில் நடித்த ஒரு பிரபலமான நடிகன் பாதியில் இறந்து போக அதிர்ச்சியில் உறைகிறார்.பின் அந்த இயக்குனர் அனுபவிக்கும் ப்ரச்னைகளூம் இது விடயமாக யார்யாரெல்லாம் பாதிக்கிறர்கள் ,சமூகம் இதனை எப்படியாக பார்க்கிறது என்பதே மீதிக்கதை. வாஜ்டாவின் இந்த அசாத்திய யோசனை மிகச்சிறந்த திரைக்கதையாக மாறி படத்தின் த்ரத்தை பெலினியின் 81/2 அளவுக்கு உயர்த்தியது. தொடர்ந்து வாஜ்டாவின் திரைப்படங்கள் உலகசினிமாவுக்கு கலைப்பொக்கிஷங்களாக அணீவ்குத்து நின்றன.

அவற்றுள் Man of Marble (1976) - மேன் ஆப் மார்பிள் மற்றூம் The Orchestra Conductor (1980) ஆர்கஸ்ட்ரா கண்டக்டர் போன்ற்வை வாஜ்டாவின் மேதமைக்கு சான்றுகள்,இவற்றுள் மேன் ஆப் மார்பிள் இக்காலத்தில் பயன்படுத்த்படும் பின் நவீனத்துவ கதையாடல்களுக்கு முன்மாதிரி..சிறந்த திரைக்கதை வடிவத்துக்கும் உத்திகளூக்கும் இப்ப்டம் ஒரு நல்லதொரு பயிற்சி பாடம். 1981ல் இவர் இயக்கிய மேன் ஆப் ஐயர்ன் Man of Iron
பாரீசின் கான் திரைப்ப்ட விழாவில் சிறந்த படத்துக்கான் பரிசை பறித்து சென்றது


வாஜ்டாவின் படங்களூள் நான்கு படங்கள் தொடர்ந்து சிறந்த வெளிநாட்டு ப்டங்களூக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு வந்துள்ளன என்பது உலகின் இதர இயக்குனர்கல் எவருக்கும் இல்லாத சிறப்பு .

ரோமன் பொலான்ஸ்கி (18 August 1933 - )
(Rajmund Roman Thierry Polanski)

பல உலகசினிமாக்களை மிஞ்சும் திரைக்கதையை கொண்டது பொலன்ஸ்கியின் வாழ்க்கை.போலந்து பெயரை உலக அரங்கில் வாஜ்டாவுக்குபிறகு தோளில் தூக்கி சென்றவர் பொலன்ஸ்கி.ஹிட்லரது நாஜி ஆகரமிப்பில் தன் கண் முன்னே தாய் தந்தையை ராணூவத்தினர் வதை முகம்களுக்கு இழுத்து செல்வதை க்ண்டு அங்கிருந்துதப்பித்தார்.
..க்ராக்கோ ந்கர வீதிகளீல் பத்து வயதில் சுற்றிலும் குண்டு மழை பொழிய தனி ஆளாய் அனாதையாய் திரிந்து ..ஒரு விதவைபெண்ணீன் வீட்டில் தஞ்சமடைந்து பின் இரவில் அவளது பாலியல் துய்ப்பிற்கு ஆட்பட்டார். .பின் அங்கிருந்தும் தப்பித்து வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து இறுதியாக மாமாவீட்டில் தங்கி படித்துவந்தவர் பொலான்ஸ்கி .

பள்ளியில் தான் யூதன் என்று தெரிந்தால் அவமானப்படுத்துவோம் என தன் பெயருக்கு முன்னால் அவர் ரொமன் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொண்டார்.பின் அதுவே அவருடைய முழுபெயருமாக மாறியது.
பிறகு பொருக்கு திரும்பி வந்த தந்தையுடன் இணைந்து மீன்உம் புதிய வாழ்க்கையை துவக்கிணர். திரைப்பட் கல்லூரியில் அறிமுகமான தனக்கு மூத்த மாணவரான ஆந்த்ரேஜ் வாஜ்டவுட்ன் இணைந்து கொண்டர். அவரது ஜெனரெஷன் படத்தில் இவருக்கு நடிகராக பரிமளிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது. வாஜ்டா எனும் மிகசிறந்த குருவுடன் பணியாற்றிய பொலான்ஸ்கியின் முதல் படம் Knife in the Water நைஃப் இன் தி வாட்டர் 1962ல் வெளியாகியது. கடல் ஒரு படகு இவற்றூடன் ஒரு தம்பதி புதிதாக வரும் இளைஞன் .. என மூன்று பாத்திரங்களுடன் நகரும் திரைக்கதை மனிதர்களின் உள் மன அழுக்குகளை மவ்னமாக நமக்கு படம்பிடித்து காண்பித்த்படி இறுக்கமாக நகர்கிறது. படத்தின் த்லைப்பில் வரும் கத்தியை ஆண்குறியின் குறியீடாக பார்ப்பதாக விமர்சகர்கள் இப்ப்டத்தை உச்சி முகர்ந்தனர். விமர்சனங்கள் பொலான்ஸ்கியை உல்கசினிமா அரங்குக்கு முன் மொழிந்தது . பல திரைப்டவிழக்களில் பங்கேற்ற இத்திரைப்ப்டம் சிறந்த அந்நிய தேசத்து படபிரிவில் ஆஸ்கார் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டு அங்கு தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் இயக்கிய பொலான்ஸ்கி வெற்றீ இயக்குனராக பரிணமித்தார். அவரது படங்களீல் காண்பட்ட மிதமிஞ்சிய வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள் ஹாலிவுட்டுக்கு சிவப்புகம்பளம் விரித்து கொடுத்தது.ஆனால் அத்ற்குமுன் அவர் வழ்க்கை சில சிக்கல்களை எதிர்கொண்டது. அங்கு அவர் இயக்கிய Rosemary's Baby (1968) ரோஸமேரீஸ் பேபி எனும் படம் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் பரிசுக்கு அவரை பரிந்துரைத்தது.

1974ல் இவர் இயக்கிய Chinatown சைனா டவுன் இவருக்கு ஆஸ்கார் பரிசையும் பெற்றுதந்தது. 1979ல் வெளியான் டெஸ் Tess திரைப்படமும் இவருக்கு பல விருதுக்ளை பெற்று தந்து உயரத்துக்கு அழைத்து சென்றது அத்ன்பிறகு இவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்த இருபது வருடங்களுக்கு முழுவதுமாக முடக்கின.

புதிர்களும் மர்மமும் நிறந்த பொலன்ஸ்கியின் வாழ்க்கை பக்கங்களில் முதல் மனைவியாக வந்து சேர்ந்த்வர் பார்பரா .நடிகை.இரண்டொ வருடங்களில் இவரை விவாகரத்து செய்துவிட்டு லண்டனில் தன் படத்தில் நாயகியாக நடித்த ஷ்ரோன் டேட்டை மணந்தார்.
இக்காலத்தில் மிகவும் உலகம் முழ்க்க வலுத்து வந்த கட்டற்ற ஹிப்பி வாழ்க்கையில் வீழ்ந்தார். மது மாது கட்டற்ற முறைகளற்ற பாலுறவு ஆகியவற்றில் தன் மனைவியுடன் இணைந்தே ஈடுபட்டார்.வாழ்வின் மீதான வெறுப்புதான் என்னை இந்த உயரத்துக்கு அழைத்து சென்றது என வெளிப்படையாக கூறிய இவரது இந்த கேளிக்கை வாழ்வு மனைவியின் மர்மமான மரணத்தோடு ஒரு முடிவுக்கு வந்தது. பொலான்ஸ்கி படபிடிப்புக்கு சென்ற நாளில் பூட்டிய வீட்டில் அவரது மனைவி மற்றூம் தோழிகள் இருவர் மர்ம ஆசாமிகளால் கொலை செய்ய்ப்பட்ட சம்பவம் லண்டனை உலுக்கியது. பொலன்ஸ்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு தள்ளப்பட்டார்.விசாரணைக்கு பிறகு அக்கொலையை செய்தவன் பொலீசாரால் சிறைபிடிக்கப்பட்டு உண்மை விவரங்கள் வெளிவர பொலான்ஸ்கி வெளிவந்தார்.இக்கொலையை செய்தவன் மிகபெரிய ராக் இசைக்கலைஞன் . பல கிரிமினல் வழ்க்குகளூக்காக புகழ் பெற்றவன் என்ப்வை அக்காலகட்டத்தின் கலாச்சார குலைவுகளை நமக்கு உணர்த்த வல்லது

பின் ஹாலிவுட்டுக்கு சென்று பெரு வெற்றி பெற்ற இயக்குனராக பவனி வந்தபின்னும் துர்பலன் அவரை விடாமல் துரத்தியது. மார்ச் 11 ,1977 அன்று புகழ்பெற்ற வாக் எனும் இதழ் அத்ன் அட்டைபடத்துக்காக பொலன்ஸ்கியை அனுகியது, மாடலாக வந்த பெண் சமந்தா. 13 வயது. ஆனாலும் தோற்றத்தில் ஆளுமை. பிரான்ஸில் ராபர்ட் டி நீரோ வின் நீச்சல்குளம் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் அனுமதி வங்கி பொலான்ஸ்கி அவ்ளை கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்தார்.

இரண்டம் நாள் நடிகையின் அம்மா பாரிஸ் போலீசில் தன் மகளை
பொலான்ஸ்கி வன்புணர்ச்சி செய்து விட்டார் என குற்றச்சாட்டு வீச
அடுத்த நாள் உல்க பத்திரிக்கைகள் அனைத்திலும் பொலான்ஸ்கி செய்தியானார்.இவ்வழ்க்கைல் கலிபோர்னியா சிறையில் 90 நாட்கள் வசித்த பொலான்ஸ்கியின் திரையுலக வாழ்க்கை பெரும் இருளை சந்தித்தது. அதன் பின் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு
சுவிட்சர்லாந்து வந்து தன் மண்ணில் தஞ்சம் புகுந்தார்.இப்பவும் அந்தவழக்கு நிமித்தம் அமஎரிக்க கோர்ட்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டபோது சுவிட்சர் லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது.
இவ்வழக்கிலிருந்து மீண்டு வர பொலான்ஸ்கிக்கு வெகுநாட்கள் பிடித்தது. அத்ன்பிறகு மீண்டும் இயக்குனராகிய பொலான்ஸ்கி 1989ல் பிராண்டிக் Frantic எனும் படத்தில் நடித்த நாயகியை மூன்ற்வாதாக திருமண்ம் செய்து கொண்டார்.

என்னதான் போலந்து தேசத்திலிருந்து பொலான்ஸ்கி சென்றாலும் அங்கு அவருக்கு வெகுநாட்கள்வரை போதிய மதிப்பளிக்கபடவிலை. காரணம் ஒரு யூத்னாக அவர் பட்ட கஷ்டங்கள் பல இருந்தும் அவர் தன் வாழ்க்கைக்கு படத்தின் மூலம் உண்மையாக இருக்கவில்லை என்ற குற்றாச்சாட்டு .நெடுநாட்களாக தன்மீதிருந்த இக்குற்றசாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் 2002 ல் இவர் இயக்கிய திரைப்டம் The Pianist பியானிஸ்ட்.அந்த ஒருபடம் அவர் மீதிருந்த அனைத்து குற்றசாட்டுகளையும் கழுவி எடுத்து மீன்உம் அவரை உலகசினிமாவின் நட்சத்திரமாக பிரகாசிக்க செய்தது.கேன்ஸ் திரைப்ப்ட விழவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்துக்கான் ஆஸ்கார் விருது என எண்ணற்ற விருதுகளை அவருக்கு வாங்கி தந்து இழந்த பெருமைகளை மீட்டுகொடுத்தது.அதன்பிறகு 2005ல் ஆலிவர் ட்விஸ்ட் Oliver Twist எடுத்து தன் புகழை தக்க வைத்துக்கொண்ட பொலான்ஸ்கியின் சமீபத்திய படம் 2010ல் வெளியான The Ghost Writerகோஸ்ட் ரைட்டர். தன்னுடைய 83 வய்தில் அவர் இயக்கி வெளியிட்ட இப்படத்திற்கு பெர்லின் திரைப்ப்ட விழாவில் தங்க கரடி பரிசு பெற்றிருப்பது நாம் அனைவரும் உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய விடயம். http://www.ajayanbala.in

உலக சினிமா வரலாறு: வண்ணங்களின் வருகையும் ஹாலிவுட்டின் இசைபடங்களும்:

மறுமலர்ச்சி யுகம் : 31
gean kelly



fredastair with ginger rogers



உலக சினிமா வரலாறு
ஹாலிவுட் சினிமா

சினிமா கலையா வியாபாராமா என கேள்வி எழுந்த போது
ஐரோப்பிய நாடுகள் அது கலை உன்னதமான கலை என்றது
ஹாலிவுட் அது வியாபாரம் த்ரமான வியாபரம் என்றது
1930க்கும் 70க்குமிடைப்ப்ட்ட காலங்களில் சினிமா ஆகசிறந்த கலை எழுச்சிக்கு ஐரோப்பிய இயக்குனாரகளல் உந்தி தள்ளப்பட்டு அதன் சிகரத்துக்கு இழுத்துவரப்பட்ட அதேநேரம் ஹாலிவுட் வணிக சினிமாவில் பல பரிசோத்னை முயற்சிகளில் இறங்கியது.அதில்சில இயக்குனர்கள் மற்றும் படைப்பாளிகள் பல முத்திரைகளை பதித்து உல்கசினிமாவுக்கும் ஹலிவுட்டுக்கும் பெருமை சேர்த்தனர். அவையனைத்திலும் வியாபாரம் தான் நோக்கமாக இருந்தாலும் அந்த முயற்சிகளனைத்தும் குறிப்பிடத்தக்க படைப்புகளாக வெளிவந்த்ன . முழுவதும் இசைமற்றும் நடனத்துக்கு முக்கியத்துவம் தரப்ப்ட்ட இசைப்ப்டங்கள் , நாயகனை கொள்ளை கூட்ட ஆளாகவோ அல்லது அவர்கலீன் த்லைவனாகவோ சித்தரித்து தீமையின் அறத்தை பேசும் கேங்ஸ்டர் வ்கைப்ப்டங்கள் நகைச்சுவைபடங்கள் என பலவகையிலிருந்த்ன ..இவற்றோடு குவாடிஸ் ஸ்பார்டகஸ்,பென்ஹர் டென் கமாண்மண்ட்ஸ் பொன்ற இதிகாசம் மற்றும் புராணங்களை அடிப்ப்டையாக கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்ப்ட்ட பிரம்மாண்ட படைப்புகளும் வெளியாகி உல்கசினிமாவுக்கும் தொழில் நுட்பத்துக்கும் வளம் சேர்த்த்ன இவர்களின் சாத்னை பெரும்பாலும் பொழுது போக்கு வகையை சார்ந்தவை என்றாலும் வரலாற்றில் அவை குறிப்பிடத்தகுந்த இடத்தை பெற்றுள்ளன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை

இசைப்படங்கள்

1.விகட்ர் பிளமிங்

வண்ணபடங்களின் மீதான் முயற்சி சினிமாக்ண்டுபிடிக்கப்ப்ட்ட துவக்க காலத்திலிருந்தே மிலி போன்ற மேதைகளால் பரிசோதனை செய்யப்பட்டு வெளீயிடப்பட்டு வந்தது என்றாலும் அவை வண்ண பிலிம் சுருளில் அல்லாமால் பிற்பாடான படகலவை பட்ட்றைகளில் உருவாக்கப்பட்டு வந்த்ன .ஆனாலும் முதன்முறையாக பிரத்யோகமான முழுமையான வண்ணப்படம் எனும் பெருமையை உருவாக்கிய பெருமை இயக்குனர் விக்டர் ப்ளெமிங் கையே சாரும் . 1939 ஒரே ஆண்டில் இவர் இயக்கத்தில் உருவான இரண்டுபடங்கள்தான் ஹாலிவுட்டின் முழுமையான வண்ணபடங்கள். இரண்டுமே வெவ்வெற்று விதங்களில் வரலாற்ரில் நிலைத்துநின்றபடங்கள். அதில்முத்லில் வெளியான ப்டம் wizard of oz விசார்ட் ஆப் ஓஸ் .அதிசய உலகங்களும் வினொத உருவசித்திரங்களுமாக நிரம்பியிருந்த இப்படம் முழுவதும் பாடல்களால் ஆன இசைப்ப்டம். ஹாலிவுட் வரலாற்றில் இசைபடங்கள் எனப்படும் முக்கியமான அத்தியாயத்தில் இந்த படத்துக்கென எப்போதும் ஒருமுக்கியத்துவம் உண்டு சிறந்த ஐந்து இசைப்ப்டங்கள் எண்ற பட்டியலில்லும் எல்லா காலத்திலும் இடம்பெற கூடிய படமாக இது இருந்துவருகிறது. அதே போல பிளமிங் இயக்கத்தில் தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான் இன்னொரு வண்ணப்படம் கான் வித்த விண்ட் . மார்கரட் மிட்செல் என்பவர் எழுதிய அமெரிக்காவின் உள் நாட்டு போரின் போது உண்டாகும் காதலை அடிப்படையாக கொண்டு எழுதப்ப்ட்ட இந்நாவல் 1936ல் வெளியாகி அவ்வாண்டின் புலிட்சர் பரிசையும் ஈட்டியிருந்தது .
இக்கதைக்கு சிட்னி ஹாவர்ட் திரைக்கதை எழுத புகழ்பெற்ற நட்சத்திரங்களான் கிளார்க் கேபிள் மற்றும் விவியன் லீ ஆகியொர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த்னர். அந்த் ஆண்டின் ஆஸ்கார் விருத்துக்கு போட்டியிட்டு கிடத்ட்ட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை இப்ப்டம் வென்று ஹாலிவுட்டின் எல்ல்காலத்திலும் புகழ்மிக்க காவியமாக நிலைத்து நின்றது.

இப்படியாக ஒரே ஆண்டில் த்னது அடுத்தடுத்த இரண்டு படங்களீன் மூலம் ஹாலிவுட்டில் அழுத்தமாக முத்திரைபதித்த விகடர் பிளமிங் அடிப்படையில் ஒரு சண்டைபயிற்சியாளராக சினிமாவுக்குள் நுழைந்து பின் காமராமேனாக மாறி இயக்குனராக அவதரமெடுத்த்வர்.

இந்த இரண்டுபடங்கள் வண்ணபடங்களுக்கான அலையை ஹாலிவுட்டில் துவக்கி வைத்தாலும் அதற்குண்டான பெரும் பொருட்செலவுகாரணமாக மக்கள் கறுப்பு வெள்ளை படம் எடுபபதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்திவந்தனர்.

2.ப்ரெட் ஆஸ்டர் & ஜிஞ்ஜர் ரோஜர்ஸ்
fred astaire and ginger rogers

இருவருமே டாப் டான்ஸ் எனும் தங்களது நடனத்தால் ஹாலிவுட் இசைப் படங்களின் மறக்க முடியாத ஜோடிகளாக கொடிகட்டி பறந்த்னர் .இருவரது நான்கு கால்களும் இணைந்து ஆடிய இசைபடங்கள் மொத்தம் பத்து. பத்து திரைப்படங்களும் இன்றும் பார்வையாளர்களை கட்டி போடும் இசை நடன காவியங்களக இன்றும் விமர்சகர்களால் வரவேற்கபடுகின்றன .இருவருமே அமெரிக்கவின் புக்ழ்பெற்ற வாடுவெல்லி நடனகுழுவில் தங்களது சிறுவயதிலிருந்து பயிற்சிபெற்று நடனமாடிவந்தவர்கள் . இவர்களூள் ப்ரெட் ஆஸ்டர் முன்னதாக திரைக்கு நடனம் ஆடவந்து புகழ்பெற்று வந்தார் தனது படங்களீன் நாயகிக்கு நடனம் கற்று தர ஒரு பெண்ணை தேடிய போதுதான் அறிமுகமானார் ஜிஞ்ஜர் ரோஜர்ஸ். தன் பதினேழாம் வயதில் திரும்ணமாகி அந்தவருடமே விவாகரத்தும் ஆகியிருந்த ஜிஞ்ஜர் ரோஜர்சின் நடனதிறமையை கண்ட ப்ரெட் ஆஸ்டர் ஆவரையே நாயகியாக நியமித்தார்,

1933ல் வெளியான Flying Down to Rio ப்ளையிங் டவுன் டு ரியோ தான் இருவரும் இணைந்துநடித்த முதல்படம் .பிறகு The Gay Divorcee , Roberta,
Top Hat என 1939வரை அடுத்த் ஆறு ஆண்டுகளில் இருவரும் ஒன்பது படங்கள் தொடர்ந்து இணைந்து ஆடி இசைப்படங்களின் அழிக்க முடியாத சகாபதமாக விளங்கினர். 39க்குபின் சரியாக பத்து வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து இறுதியாக ஒருபடம் ஜோடி சேர்ந்த்னர் . THE BARKLEYS OF BROADWAY (1949) . அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசிபடமான இப்ப்டம்தான் அவர்கள் நடிப்பில் வெளியான ஒரே வண்ண படமும் ஆகும் .
3. வின்சன்ட் டி மின்னளி

Vincente Minnelli

An American in Paris (1951), Brigadoon (1954), Kismet (1955), and Gigi (1958) போன்ற புகழ்பெற்ற இசைப்ப்டங்கள் முலம் ஹாலிவுட் இசைப்டங்களுக்கு பெருமை சேர்த்தவர் வினசண்டி மின்னலி. துவக்கத்தில் நாடகங்களுக்கு நடன ஒத்திகை செய்துவந்த மின்னளியின் முத்லபடம் Cabin in the Sky (1943) இரண்டாவதுபடம் Meet Me in St. Louis இந்தபடத்தின் படப்பிடிப்பின்போதுதான் நாயகி ஜூடி கர்லண்டின் மீது காதல்வயப்பட்டு திருமண்ம் செய்துகொண்டார் இருவருக்கும் பிறந்த மகள் லிசா மின்னளி.பின்னாளீல் ஆஸ்கார்பரிசுபெற்ற புகழ்பெற்ற பாடகியாக திகழ்ந்தார்.

தனது Gigi (1958) ப்டத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் பரிசுபெற்ற இயக்குனர் மின்னளி அக்காலத்தில்புக்ழ்பெற்று விளங்கிய நடிகர்கள் Spencer Tracy, Gloria Grahame, Kirk Douglas, Anthony Quinn, Arthur Kennedy, Shirley MacLaine and Martha Hyer. என அனைவரையும் தன் இசை நடன படங்களில் நடிக்கவைத்து புகழீட்டிதந்துள்ளார். 1986ம் ஆண்டு இவர் இறப்பதற்கு ஒருவாரத்திற்குமுன் பிரெஞ்சு அரசாங்கம் இவரது திரையுலக சாத்னைக்ளை பாரட்டி , the Commander Nationale of the Legion of Honor, எனும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது .

4,ஜீன் கெல்லி
Jean Kelly

அமெரிக்க இசைபடங்களின் வரலாற்றில் ப்ரெட் ஆஸ்டருக்குபிறகு வந்த நடன நட்சத்திரம் ஜீன் கெல்லி. துவக்கத்தில் ப்ரெட் ஆஸ்டரின் ரசிகனாக இருந்த கெல்லி பிற்பாடுதானும் அதுபோல ஹாலிவுட்டின் நடன நட்சத்திரமாக மாற விரும்பி திரைப்படதுறைக்குள் வாய்ப்புதேடிஅலைந்தார். 1942. For Me and My Gal
இவரது முதல்படம் . ஆனால் இப்ப்டம் சரியாக போகவில்லை. துவக்கத்தில் நடித்த மற்ற சில படங்களும் படு தோல்வியை தழுவின. இரண்டுவருடம் ராணுவசேவைக்கு சென்று திரும்பினார் .1951ல் வெளியான் அமெரிக்கன் இன் பாரீஸ் An American in Parisஎனும் ஒரேபடம் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றியது . இதுநாள் வரையிலுமான அமெரிக்காவின் முழுவதுமான இசை வகைப்பாட்டு படங்களில் மிகசிறந்தபடமாக இரண்டு ப்டங்கள் கருதப்படுகின்றன. அவற்றில் அமெரிக்கன் இன் பாரீஸ் ஒன்று இரண்டாவதாக கருதப்படும் படமும் ஜின்கெல்லி நடித்த படமே .அது அடுத்த வருடமே வெளியாகி அமெரிக்க பட்ங்களின் வசூல் வரிசையில் பெரும் சாத்னை நிகழ்த்தியது அத்திரைப்ப்டம் சிங்கிங் இன் தி ரைன் (1952) Singin' in the Rain. மவுனபட காலங்களில் பின்னணி இசைக்கலைஞர்கள் தியேட்ட்ரகளீல் பாத்திரங்க்ளுக்கு வாய் அசைப்பதும் அவ்வப்போது பாடல் பாடுவதுமாக தொழிலில் கொடிகட்டிபறந்த்னர். சத்தசினிமா வந்ததும் நடிகர்களே பாட துவங்கியபின் இந்த திரைமறைவு கலைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்து வீதிக்கு வந்த்னர் .அப்படி வீதிக்கு வந்த கலைஞர்கள் சத்த சினிமாவில் நடிகர்களாக மாறி எப்படி சாத்னைசெய்தார்கள் என்பதுதான் கதை .முழுவதும் பாடலிம் நடனமுமாக இருந்த இப்ப்டத்தில் ஜீன்கெல்லி இணை இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
இப்ப்டத்தில் இவரது அபாரமான கலைசேவையை பாராட்டி ஆஸ்கார் இவருக்கு சிறப்பு விருது தந்து கவுரவப்ப்டுத்தியது. 1996.ன் ஒரு நாளில் உறங்கிக்கொண்டிருக்கும்பொது இறந்து காலத்தில் உறைந்து போனார் ஜீன்கெல்லி





5.ராபர்ட் வைஸ்

ஜீன் கெல்லிக்கு பிறகு அமெரிக்க இசை படவரலாற்றின் முக்கிய நட்சத்திரம் ராபர்ட் வைஸ் .திரைப்பட த்யாரிப்பாளர் இயக்குனர்
திரைப்ப்ட மொழி ஆளுமையில் தனித்த்ன்மை கொண்டவரான ராபர்ட் வைஸ் இயக்கிய இரண்டு படங்கள் இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரைப்ப்ட மொழி மற்றும் புதிய உத்திகளின் மேல் ஆர்வம் கொண்ட பலருக்கும் மிகசிறந்த பாடபுத்தகமாய் விளங்குபவை
1961ல் வெளியான் வெஸ்ட் சைட் ஸ்டோரி West Side Story (1961)
மற்றும் 1965ல் வெளியான் சவுண்ட் அப் மியூசிக் The Sound of Music
இவைதான் அந்த இரண்டுபடங்கள் இரண்டும் இவரே இயக்குனர் இவரே தயாரிப்பாளர். இவற்றூள் வெஸ்ட் சைட் ஸ்டோரி ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் கதையை 60களின் இளைஞர்க்ளின் உலகுக்கு ஏற்றார் போல் மாற்றி உருவாக்கப்ப்ட்ட திரைக்கதை. தொழில் நுடபத்தில் இன்றைய நவீன படங்களுக்கும் சவால் விடும் உயந்த தொழில் நுட்பம். பெரும்பாலும் இரவில் எடுக்கப்ப்ட்ட இப்ப்டம் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒருநல்ல கையேடு என்று கூட சொல்லலாம். அந்தவருட ஆஸ்கார் போட்டியில் இப்ப்டம் மொத்தம் பத்து விருதுகளை வென்று சரித்திர சாத்னை படைத்தது . ஜெர்மி ராபிண்ஸ் Jerome Robbins எனும் நண்பரோடு சேர்ந்து இப்படத்தை அவர் இயக்கியிருந்த காரணத்தால் சிரந்த இயக்குனருக்கான் விருதை தன் நண்பருடன் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்.

அதுபோல 1965ல் வெளியன் சவுண்ட் ஆப் மியூசிக்கின் பாடல்கள் இன்றளவும் பிரசித்தம் .இந்தபடமும் அந்தவருடத்துக்கான் ஆஸ்கார் போட்டியில் கலந்துகொண்டு ஐந்து விருதுகளை வென்று சாத்னை படைத்தது. மட்டுமல்லாமல் இப்படம் வசூலில் ஏற்படுத்திய மகத்தான சாத்னையை அடுத்த பத்துவருடங்கள்ளுபிறகு வந்த ஸ்டார் வார்ஸ் எனும் படத்தால் மட்டுமேமுறியடிக்க முடிந்தது.

(தொடரும்)

கொள்ளை கூட்ட குண்டர்கள் மற்றும் இருள்பட நாயகிகள் :உலக சினிமா வரலாறு



உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 30
ஹாலிவுட் சினிமா

அமெரிக்க சூழலில் 1930ல் ஏற்ட்ட பொருளாதரவீழ்ச்சியை தொடர்ந்து மக்கள் மத்தியில் உண்டான வெறுப்பு கோபம் ஆற்றாமை போன்ற வை பல விதி மீறல்களுக்கு உந்திதள்ளின . வெறுமனே புஜபலம் காட்டும் நாயகர்க்ள் மீதும் .காதலிக்காக தன்னை தூயோனாக சித்தரிக்கும் நாயகர்கள் மீதும் மக்க்ளுக்கு வெறுப்பு உண்டாக துவங்கியது . போ போ இதெல்லாம் பழைய கதை என வெற்று நாயகத்த்ன்மையை மக்கள் புறக்கணிக்க துவங்கினர்


அவர்களது அவ நம்பிக்கைகளுக்கு தக்க தீனியாக வந்திறங்கிய படங்கள்தான் இந்த குண்டர் வகை படங்கள்

வழ்க்கமான சினிமா உலகின் ஒருமுகத்தை மட்டுமே காண்பித்து வருகிறது அத்ன் நாயகர்கள் நல்லவர்கள் மிக நல்லவர்கள் மிக நல்லவர்கள் .அவர்கள் காதலுக்காக எதையும் செய்யும் கனவான்கள். ஏழைகளுக்காக இரங்குபவர்கள் அநீதிக்ளை கண்டு பொறுமுபுவர்கள் .
ஆனால் உண்மையில் உல்கம் நல்லவர்களால் மட்டுமா இயங்குககிறது. உலகத்தை இயக்குவது கெட்டவர்களும்தான்
ஆனால் அவர்களும் மனிதர்கள்தான்.அவர்களுக்குள்ளும் நட்பு இருக்கிறது காதல் இருக்கிறது. அவர்கள் தொழிலிலும் சில நேர்மைகள் விதிகள் இருக்கிறது.அவர்களுக்கும் கண்ணீர் இருக்கிறது வன்மம் கோபம் பழிவாங்கும் உணர்ச்சிகள் இருகின்றன இதை பிரதிபலிக்கும் வகையில் ஹாலிவுட்டில் சில படங்கள் வெளிவந்த்ன .அவற்றுக்கு அவர்கள் சூட்டிய பொத்தாம் பொதுவான் பெயர் கேங்ஸ்டர் சினிமா. நம் ஊர் பஷையில் சொல்வதாக இருந்தால் அவற்றை கொள்ளை கூட்ட குண்டர்களின் வகையான சினிமா என கொச்சையாக கூறலாம்


அமெரிக்க சினிமாவின் முதல் முழு நீள படமே ஒரு கேங்க்ஸ்டர் படம்தான் . 1903ல் வெளீயான கிரேட் ட்ரெயின் ராபரி கொள்ளையடிப்பதிலும் வன்முறையிலும் அமெரிக்கர்களுக்க்கு இருக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்தியது

பிறகு 1912ல் வெளியான கிரிபித்தின் The Musketeers of Pig Alley (1912) த்ரீ மஸ்கிட்டர்ஸ் ஆப் பிக் ஆலி எனும் படத்தை தொடர்ந்து The Regeneration (1915) Underworld (1927)
என அவ்வபோது கொள்ளையடிப்பவர்கள் பற்றிய படங்கள் வந்தாலும்
பேசும் படங்கள் வந்த பிறகுதான் கேங்ஸ்டர் எனும் குண்டர் வகைபடங்கள்
வெளிவரத்துவங்கின .அதிலும் குறிப்பாக மெர்வின் ராய் இயக்கத்தில் வெளியான லிட்டில் சீசர் Little Caesar (1930) தான் இத்தகைய குண்டர் வகைபடங்களின் ஆதாரபூர்வமான முதல் படம்

இப்படம் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணம் அப்போது அமெரிக்காவையே அச்சுறுத்தி வந்த அல் கொப்பான் என்ற மிகபெரிய
கடத்தல் மாபியா. அல்கொப்பான் இத்தாலியில் ஒரு முடிதிருத்துபவரின் மகனாக பிறந்து பிழைப்புதேடி அமெரிக்கவந்து அடியும் உதையும் பட்டு மெல்ல திருப்பி அடிக்க துவங்கி தாதாவாக மாறியவன் . அக்காலத்தில் அமெரிக்காவில் மதுபானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. அப்போது கள்ல சந்தையில் மது விற்பனையை துவக்கி அத்ன் மூலம் பெரும் இருள் சாம்ராஜ்யத்தை அமெரிக்காவில் நிறுவிக்கொண்டு பின் அரசாங்கத்துக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்தவன். இவனது இந்த வாழ்க்கையை அப்படியே நகல எடுத்தார் போல் வெளியானதுதான் லிட்டில் சீசர் .நாயகனாக அல்கொப்பான் வேடத்தில் நடித்த எட்வர்ட்.ஜி .ராபின்சன் ஒரே படத்தில் நட்சத்திர நடிகராக மாறீனார் .

இதுபோன்ற கொள்ளைகூட்ட நாயகனக நடிக்கவென்றே பிறந்த இன்னொரு நட்சத்திர நாயகன் ஜேம்ஸ் கேக்னி.குள்ளமான தொற்றம் சப்பையான மூக்கு தட்டையான முகம் குட்டையான கழுத்து என அவரது தொற்றமே சற்று மிரளவைக்க கூடியதாக இருக்கும்.இந்த தோற்றத்தை கொண்டு அவர் மக்கல் மத்தியில் பெரும் புக்ழடைந்ததற்கு ஒரே காரணம் ஜேம்ஸ் கேக்னியின் அசாத்திய நடிப்புத்திறன் .வில்லியம் வெல்மன் இயக்கத்தில் வெளியான The Public Enemy (1931) அவரை உச்ச் நட்சத்திரமாக பிரகாசிக்க வைத்தது 1933ல் வெளியான இவரது படமான் லேடிகில்லர் உருவாக்கத்தின் போது அப்ப்டத்தின் த்யாரிப்பாளரன் டேரில் எப் ஜானுக் தன் கதை இலாகாவுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார். கேக்னியை பொறுத்த்வரை அவரது கதாபத்திரங்கள் இப்படி இருந்தால்தன் எடுபடும் ..
உலகமே தவறாகத்தன் இயங்கிக்கொண்டிருக்கிறது .. நான் செய்வது மட்டும்தான் சரி. அவனாக் முடுயாதது என எதுவும் இல்லை . எல்லவற்றுக்கும் ஒரு பேரம் ஒரு விலை இருக்கிறது .. இதுதன் அவன் கொள்கை .. இப்படியாக அவருடைய கதாபத்திரம் செதுக்கப்ட்டால்த்தன் அவரது தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்கும் என எழுதினார் .

இரும்பை உருக்கிவார்த்தால் போல உறுதியான் உடம்பை வைத்துக்கொண்டு அசையாமல் கண்களை இடுக்கியபடி முஷ்டியை முறுக்கிகொண்டு பல்லை கடிக்கும் போது ஜேம்ஸ்கேக்னியை கண்டு அரங்கமே பயத்தில் உறையும்.. எலிபோல க்றீச்சிடும் அவரது குரல் அதை இன்னும் அதிகமாக்கும்.இன்னொருவகையில் அடிதட்டு மக்க்ளின் நாயகனாகவும் அவர் திரைப்ப்டங்களில் வர்ணிக்கப்பட்டார் கேக்னியின் பொத்தனிடப்படத சட்டையும் அசட்டையான் உடல் மொழியும் அதிகாரத்தையும் ஒழுக்க விதிகளையும் கேலி செய்பவை
.இன்று வ்ரையிலான கோபக்கார இளைஞன் மற்ரும் எதிர்நாயகர்களின் முதல் படிவம் ஜேம்ஸ் கேக்னி. 1939ல் கெக்னி நடித்து வெளியான் மற்றொரு குண்டர் படம் . The Roaring Twenties . இப்பத்தில் வரும் ஒரு வசனம் புகழ்பெற்றது . ”எப்போதெல்லாம் உனக்கு வேலைகிடைக்கிறதோ அதை இன்னொருவரை வைத்து செய் இதுதான் இத் தொழிலின் வேதம் ”.
தொடர்ந்து கொள்ளை கூட்ட நாயகனாக அவர் நடித்த
white heat 1949 என்றபடமும் அவருக்கு பெரும் பணத்தையும் புகழையும் பெற்றுதந்தன. பிற்காலத்தில் தன் இந்த இமேஜை போக்கும் விதமாக நகைச்சுவை படங்களிலும் நடித்து புகழ்பெற்றார் ஜேம்ஸ் கேக்னி

குண்டர் படங்களீல் புகழ்பெற்ற மற்றொருபடம் ஸ்கெர் பேஸ். வெட்டுபட்ட முகம் . ஏற்கனவே சொன்ன ஒரிஜினல் தாதா அல்கொப்பானின் மற்ரொருபெயர்தான் இது. ஆனல் கதை அவனிடம் அடியாளாக இருந்த டோனியை பற்றியது. படத்தில் டோனி பாத்திரத்தில் நடித்தவர் பால் முனி புகபெற்ற நடிகர். புகபெற்ற திரைகதையாசிரியரான் பென் ஹெக்ட் பத்தேநாளில் வெறும் பத்திரிக்கை செய்திக்ளை மட்டுமே வைத்துக்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தார்.படத்தில் மொத்தம் முப்பது கொலைகள் ஆனால் ஒரு இடத்திலும் ரத்தம் காண்பிக்க படவில்லை . நாயகனின் அம்மா மகனை கெட்டவன் அயோக்கியன் என்றுதான் கடைசி வரை சொல்லுவார். இதே படம் பிற்பாடு 1983ல் அல்பாசினோ நடிக்க வெளீயகி பெரும் வெற்றி பெற்றது. இன்றுவரை உலகின் அனைத்து மொழிகளிலும் எடுக்க்படும் அடியாள் தாதா படங்களுக்கெல்லம் இப்ப்டம் ஒரு பைபிள் போல .. ஹாவர்ட் ஹாக்ஸ் இயக்கிய இப்ப்டத்தின் த்யரிப்பாள்ர் ஹாவர்ட் ஹூக்ஸ் .ஒரே மாதிரியன் பெயர் கொண்டதால் அக்காலத்தில் இருவருக்குமிடையே அதிக குழப்பம்
தொடர்ந்து தி கில்லர்ஸ் 1946,கிஸ் அப் டெத் 1947,ஐ வாக் அலோன் 1947
கன் கிரேசி 1950,மற்றும் கிஸ் டுமாரோ குட்பை 1950, போன்றபடங்கள் கெட்ட நாயகர்களின் கதைகளை பேசி ஹாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றன.இதுவே பிற்பாடு போனி அண்ட் க்ளைடு 1967 காட்பாதர் 1&2 1972 ,1974, .டோனி பிராஸ்கோ 1997.போன்ற படங்களாகவும் வெவ்வேறான வடிவங்க்ளில் வந்து பெரும் வெற்றி பெற்றன


சிஐடி க்களின் சினிமா அல்லது பிலிம் நோயர்
film noir

1946ல் பிரெஞ்சு விமர்சகர் நினோ பிராங் உருவாக்கிய சொல்தான் இந்த பிலிம் நோயர் . நோயர் என்றால் பிரெஞ்சில் குறைந்த ஒளி அல்லது இருள் என்பது அர்த்தம். இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐரொப்பாவில் ஏற்பட்ட மிகபெரிய மன அழுத்தம் அவநம்பிக்கை அவர்களுக்கு இருள் உல்கத்தின் மீதான் நம்பிக்கையை தோற்றுவித்தன . ஆள் இல்லாத இருண்ட வீதிகளின் மீதும் துப்பாக்கியிலிருந்து வெளியாகும் புகையின் மீதும்.. உடலைகாண்பித்த்வறு கிசுகிசுப்புடன் நாயகனை நெருங்கும் நாயகியின் சொருகிய விழிகளின் மீதும் .சத்தமில்லாமல் மார்பை பிடித்த்படி சரியும் வன்முறைகளின் மீதும் அபரிதமான் கவர்ச்சி உண்டாகதுவங்கியது.

20களீல் கலைஇலக்கியத்தில் தாக்கத்தை வெளிப்படுத்திய ஜெர்மன் எக்ஸ்பிரஷ்னிசத்தின் கலைகூறுகள் தான் இதன் முன்னொடி என வகைப்படுத்துகின்றனர் விமர்சகர்கள் . முப்பதுகளில் வெளியான ஜெர்மன் படங்கள்தான் பிலிம் நோயருக்கு தோற்றுவாய். இயக்குனர் பிரிட்ஸ்லாங் இயக்கத்தில் 1931ல் வெளியான் M எனும் படம்தான் பிலிம் நோயர் படங்களின் முதல் படம் என்கின்றனர்.பிரிட்ஸ் லாங் ஹாலிவுட்டுக்கு வந்தபின் வெளியன fury (1936) You Only Live Once (1937) போன்ற இவரது இருள் உலக படங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் வசீகரித்தன

கேங்கஸ்டர் படங்களுக்கும் பிலிம் நோயருக்கும் பெரிய வித்தியாசமெதுவும் இல்லை. இரண்டுக்கும் குற்றமும் குற்றம் நடக்கும் இருள் உலக்மும் தான் பொது . என்ன கேங்ஸ்டர் படங்கள் கொள்ளையர்களின் அறத்தை பேசுவதாக இருந்தால் பிலிம் நோயர் அந்த உலகின் மர்மத்தை எந்த கருதுகோளுமில்லாமல் தொழிநுட்பத்தின் வழியாக நெருங்கி பார்ப்பது..
கேங்ஸ்டர் படங்களில் கதையுலகமும் அது மாந்தர்களையும் வைத்து வகைபடுதத்படுகிறது . பிலிம் நோயர் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. வித்தியாசமான கேமராகோணங்களும் அசத்தியமான க்ளோசப் கட்சிகளும் இதன் தனித்த்ன்மை. பிலிம் நோயரில் நாயகர்கள் பெரும்பாலும் சிஐடி வகை துப்புறிவாளர்கள்அசந்தர்ப்பத்தில் குற்றம் செய்து தப்பிக்க வழிதேடுபவர்கள் .அரசியல்வதிகளின் கைப்பவைகள் , அடியாட்கள் கொளையாளீகள் போன்றவர்கள்தான் இப்ப்டத்தின் நாயகர்கள்.
1940ல் போரிஸ் லாங்ஸ்டர் இயக்க்த்தில் வெளீயான் Stranger on the Third Floor (1940) தன் அங்கிகரிக்கப்பட்ட ஹாலிவுட்டின் முதல் இருள் படமாக கருதப்படுகிறது.தொடர்ந்து வெளியான ஆர்சன் வெல்ஸின் படங்கள் பிலிம் நோயருக்கு சிறந்த உதாரணங்கள் . Citizen Kane (1941) The Lady from Shanghai (1948) Touch of Evil (1958) போன்ற படங்கள் இருள் உல்கை பிரதிபலிப்பையாகவும் மர்மங்களைபின் தொடரும் காட்சிகளாகவும் வெளிவந்து பெருவெற்றி பெற்றன. இவகைப்பாட்டில் வெளியகி பெருவெற்றிபெற்ற பல படங்களின் நாயகர்களும் நாயகிக்ளும் பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள் அல்லர். அனைவரும் சாதாரண மானவர்கள் .ஆனால் அதே சமயம் இப்ப்டங்களில் நடித்த காரணத்தால்
நடிகைகள் சுலபத்தில் புகழின் உச்சியை தொட்டனர்.

இவ்வ்கைபடங்களில் அவர்கள் இனிக்க இனிக்க பேசும் காரிகைகள் . உதட்டைசுழித்துக்கொண்டு கதநாயகனின் மார்பை தழுவும் அவர்களின் கண்களுக்கு அப்பால் பலவித ரகசியங்க்ள் ஒளிந்துகிடக்கும்.அவர்களது உடம்பில் பதுங்கியிருக்கும் துப்பாக்கி திடுமென வெளிப்பட்டு நாயகனின் நெற்றி பொட்டை குறிபார்க்கும்.பில்லி வைலடர் இயக்கத்தில் வெளியான டபுள் ஐடெண்டிட்டி Double Indemnity 1941 ப்டத்தில் நடித்த பார்பரா ஸ்டான்விக்Barbara Stanwyck's இந்த கதபாத்திரத்தில் நடுத்து புகழ்பெற்றவர் இது போல The Blue Angel, ப்டத்தில் நடித்த Marlene Dietrich, Gilda (1946) ப்டத்தில் நடித்த ரிட்டா ஹெய்வொர்த், The Postman Always Rings Twice (1946)படத்தில் நடித்த லெனா டர்னர்,The Killers (1946),படத்தில் நடித்த அவ கார்டனர் மற்றும் Out of the Past (1947) ப்டத்தில் நடித்த ஜேன் க்ரீர் போன்ற நடிகைகள் இது போன்ற கெட்ட பாத்திரத்தில் நடித்து மிக நல்ல பெயர் வாங்கி புகழடைந்தவர்கள் .


நன்றி: புத்த்கம் பேசுது
அடுத்த இதழில்
கம்யூனிஸ பயமும் அமெரிக்க ஜேம்ஸ் பாண்டுகளின் தோற்றமும்

ஜேம்ஸ் பாண்டுகளின் அட்டகாசமும் அமெரிக்காவின் கம்யூனிச பயமும்


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் -31
http://www.ajayanbala.in


ஜேம்ஸ் பாண்டுகளின் அட்டகாசமும் அமெரிக்காவின் கம்யூனிச பயமும்




காதலியாக நடித்த காரிகை காட்டிகொடுத்துவிட்டாள். வெளியில் எதிரிகள் வரும் சத்தம். சடாரென கத்வை திறந்துகொண்டு படிகட்டில் ஏறுகிறான். பின்னால் துப்பாக்கீயுடன் துரத்தும் எதிரிகள் . கதவை திறந்தால் மொட்டை மாடி....சுற்றிலும் பெருநகரம்.. பெரும் காற்று தப்பிக்க வழியே இல்லை . .கண்ணிமைக்கும் நேரத்தில் முதுகு பின்னால் துப்பாக்கியுடன் எதிரிகள் வளைத்துவிட்டனர். கீழே அதளபாதாளம்

கைகளை விரித்த்படி அவர்களைநோக்கி திரும்புகிறார் ஜேம்ஸ் பாண்ட் . சரணடையும் தொனியில்

அடியாட்களை விலக்கிகொண்டு வரும் மைய வில்லன் முகத்தில் அனாயசமான சிரிப்பு

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் ..

நீ இப்போது வசமாக மாட்டிக்கொண்டய் .. உன் இறுதி பிரார்த்தனைக்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொள்

ஒரு நொடி ஜேம்ஸ்பாண்ட் அந்த வில்லனை பார்ப்பார்

அடுத்து என்ன நடக்க போகிறது என தியேட்டரில் அனைவரும் கண்ணை விரித்துக்கொண்டு சீட்டின் நுனியில் அமர்ந்திருப்பார்கள் .


உலகம் முழுக்க வெற்றிபெற்ற ஹேம்ஸ் பாண்ட் படங்களின் பின்னிருந்த வெற்றி ரகசியம் இதுதான் .

பார்வையாளனை முழுதாய் கட்டிபோடும் த்ரில்லான சம்பவங்கள் விறுவிறுப்பான திரைக்கதை. பிரம்மாண்டமான காட்சிகள்.வியக்கவைக்கும் தொழில் நுட்பம் இவைதான் அவற்றின் சூத்திரம் .இவற்றோடு இன்னொன்றும் அது ஜெம்ஸ் பாண்ட் கதாபாத்திர சித்தரிப்பு .

அவர் துணிச்சலும் புத்திசாலித்தனமும் நிறைந்த்வர். அவர் அசகாய சூரர்.சுலபத்தில் பெண்களிடம் மயங்காதவர். எதையும் செய்வார் எப்படியும் செய்வர்.

ஆனால் உண்மையில் யார் இந்த ஜேம்ஸ் பாண்ட் என ஆராய்ந்தால் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அதற்கு தலைகீழ்

ஆம் கோழைத்த்னம் பயம் இவற்றின் காரணமாக உருவாக்கம்
கொண்டவர்தான் இந்த அசகாய வீரர் ஜேம்ஸ்பாண்ட்.

ஜேம்ஸ் பண்ட் என்பவர் தனி நபர் அல்லர்.அவர் ஒருநாட்டின் சமூகத்தின் பிரஜை .

அமெரிக்காவோடு எந்த நாடு எப்போதெல்லாம் முரண் கொள்கிறதோ ஜேம்ஸ் பாண்டின் அடுத்தவில்லன் அவராகத்தான் இருப்பார்

இப்படியாக துவக்கத்தில் ரஷ்யா அடுத்து கியூபா ஈராக் என தன் வில்லன்களின் பட்டியலை அது தன் எதிரி நாடுகளிடமே இனம் கண்டது


இதைபற்றி இன்னும் விரிவாக தெரிவதற்குமுன் இந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களைபற்றி மேலோட்டமாக தெரிந்துகொள்வோம்


Ian Lancaster Fleming (28 May 1908 – 12 August 1964)

இயான் பிளமிங் லண்டனை சேர்ந்தவர்.
இவர்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் கதைகளை முதலில் நாவலாக உருவாக்கியவர்.
அப்பா வாலண்டைன் பிளமிங் இங்கிலாந்து மாநிலங்களவை உறுப்பினர்.தாயார் எவ்லின் . துவக்கத்தில் பத்திரிக்கையாளராக பணியற்றிய ப்ளமிங் இரண்டாம் உலகப்போரின் போது
ராணுவ வீரராகவும் பின் லெப்டினட் கமாண்டராகவும் அதன் பின் கமான்டராகவும் பதவி உயர்வு பெற்று களத்தில் பேர் கண்டவர்.. ஹிட்லரது நாஜிபடைகளின் கப்பல் படைகளை கண்டறிந்து அவற்றை நிர்மூலமாக்குவதர்ற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திக்கட்டியவர் . குறிப்பாக உளவு வேலைகளில் அவர் காட்டிய புத்திசாலித்தனம்தான் அவரது அடுத்தடுத்த உயர்வுகளுக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியது போருக்குபிறகு இந்த அனுபவங்களை வைத்து நவலாக எழுத முடிவு செய்த ப்ளமிங் அதற்காக அமர்ந்து எழுத நிம்மதியான ஒரு இடம் தேடினார் . அப்ப்பொது அவரது நண்பரும் பறவைகள் கவனிப்பாளரும் எழுத்தாளருமான பாண்ட் என்பவர் ஜமைக்காவில் இருந்த தன் தோட்டத்தில் இடம் தந்தார். ஆனால் அந்த இடத்தைகாட்டிலும் அவரது மகனின் பெயர் பிளமிங்கை வசீகரித்தது. ஜேம்ஸ்பாண்ட் .அடிக்கடி முணூமுணுத்து பார்த்தார். பிடித்துபோக அப்போது உருவான பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட். காஸினோ ராயல் எனும் அவரது அந்த முதல் நாவலில்தான் 007 என்ற எண்ணோடு சேர்த்து ஜேம்ஸ்பாண்டை பிளமிங் அரிமுகம் செய்வித்தார்.அந்த புத்த்கம் வெற்றிபெற வெற்றிபெற அடுத்த பத்து வருடத்தில் பன்னிரண்டு ஜேம்ஸ் பாண்ட் நாவல்களை எழுதிமுடித்து வீடுபேறையும் பெற்ருக்கொண்டார்

உண்மையில் இன்று பாண்ட் படங்களுக்குபின்பாக பேசப்படும் அமெரிக்க அரசியலுக்கும் பிளமிங்கும் நேரடி தொடர்பில்லை . ஆனால் அவரது இரண்டாவது நாவல் ரஷ்யாவை களனாக கொண்டு எழுதப்பட அதை வாசித்த அப்போதைய ஜனாதிபதியான ஜான் எப் கென்னடிக்கு அது மிகவும் பிடித்து போனது .காரணம் அன்று அமெரிக்கா முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் பயம். குறிப்பாக ஸ்டாலின் கலத்திய ரஷ்யாவின் அபரிதமான வளர்ச்சி காரணமாக அமெரிக்காவுக்கு ஒரு பயம் இருந்தது. மேலும் இரண்டாம் உலக்போருக்குபின் முதலாளித்துவ நாடுகள் கம்யூனிஸ நாடுகள் என்ற இரண்டுபிரிவாகத்தான் உல்கமே அணிதிரண்டது .

இவற்றில் அணிசேராநாடுகள் மூன்றாம் உலகநாடுகள் என்றும் அணிசேரா நாடுகள் என்றும் தன்னை அறிவித்துக்கொண்டன.இந்தபின்னணி காரணமாக த்ன்னுடைய முதாளித்துவ கொள்கைக்கு எங்கே ஆபத்து நேருமோ என பயந்த அமெரிக்க அரசு நாட்டில் கம்யூனிச ஆதர்வாளர்களை ஒற்று உளவறிந்து தீவிர வேட்டையடிவந்தது. இச்சூழலில் மக்களுக்கு த்ங்களின் தேசத்திடம் இருந்த அபிமானத்தை அதிகரிக்கவும் உலக நாடுகளிடம் குறிப்பாக கம்யுனிச நாடுகளிடம் ஒரு போலியான பிம்பத்தை தோற்றுவிக்கவும் விரும்பியது அமெரிக்க அரசாங்கம் அதற்கான
தக்க சமயத்தில் வந்து சேர்ந்தவர்தான் இந்த ஜேம்ஸ்பாண்ட் . அச்சமயம் அமெரிக்காவின் ஜனதிபதியாக இருந்த கென்னடிக்கு ஜேம்ஸ்பாண்ட் நாவல்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. குறிப்பாக ரஷ்ய எதிர்ப்பு நாவலான ரஷ்யா இன் லவ் எனும் நாவலைபடித்த கென்னடி த்னக்கு பிடித்த நாவல் என வெளிப்படையாக கூற அப்போதுதான் அமெரிக்க மக்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவலை தேடிபிடிக்க துவங்கினர்.

இப்படியாக தந்திரமாக மக்களிடம் அதன் மீதான மோகத்தை அதிகரித்த கென்னடி பிற்பாடு 1960ல் மரியன் ஓட்ஸ் என்பவர் மூலம் பிளமிங்கை லண்டனிலிருந்து வரவழைத்து பொதுவிருந்தில் சந்தித்தார். அன்று இரவே பிளமிங்கின் நாவல்கள் படமாக்கும் இரகசிய ஒப்பந்தங்களும் முடிவானது.அமெரிக்க அரசாங்கத்தின் எதிரி நாடுகளை பிரதான எதிரியாக சித்தரித்து மேலும் நாவல்கள் எழுதவேண்டும் என்பதும் அதில் எழுதப்படாத ஒப்பந்தம்
அதன்படி பிளமிங்கின் நாவல்களின் படமாக்கும் உரிமைகள் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலருக்கு வழங்கப்பட்டன .ஹாலிவுட்டுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இப்படிப்பட்ட ரகசிய உறவுகள் காலம்காலமாக இருந்து வருவது பலரும் அறியாதது.

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தயாரிக்க முடிவுசெய்தபின் அந்த படத்தை இயக்க பலரது பெயர் ஆலோசிக்க பட்டது அதில் ஹிட்ச்காக்கும் ஒருவர்.
ஆனால் முதல் படமான டாக்டர் நோ வை இயக்கிவர் டெரண்ஸ் யங்.
அதே போல் அப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட்வேடத்தில் நடிக்க பலரது பெயர்கள் பரீசீலிக்கபட்டன.
அதில் சூப்பர்மேனக நடித்து புகழ்பெற்ற கிறீஸ்டோபர் லீயும் ஒருவர்.. இயான் பிளமிங் தன்னுடைய உறவினராக இருந்த காரணத்தால் லீயை பரிந்துரைத்தார் ஆனால் அது நிராகரிக்கபட்டது.பிற்பாடு அதே பாண்ட் வேடத்தில் நடித்த ரோஜர் மூர் பெயரும் முதலில் பரிசீலிக்கப்ப்ட்டது ஆனால் வாய்ப்பு கிட்டியது என்னவோ நடிகர் சீன கானரிக்குத்தான். முதல் படம் உட்பட மொத்தம் ஏழு படங்களில் சீன்கானரி ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்தார்.
சீன்கானரியை காட்டிலும் அதிக படங்களில் பாண்ட்வேடத்தில் வந்தவர் ரோஜர் மூர்தான் . முதல் பாண்ட் வேடம் இவர் ஏற்ற போது இவருக்கு வயது 45 .. யார் சிறந்த பாண்ட் சீன்கானரியா ரோஜர் மூரா என பலரும் பட்டிமன்றமே நடத்தும் அள்விற்கு இருவருக்கும் ஆதரவு இருந்தது. இதன் பிறகு ஜார்ஜ் லெஸன்பி –ஒரு படத்திலும் ,திம்மோதி டால்டன் –இரண்டு படத்திலும்,,பியற்ஸ் பிராஸ்னன் ,-நான்கு படத்திலும்,தற்போது டேனியல் கிரேக் _இரண்டு படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்துள்ளனர்.

சினிமா எனும் கவர்ச்சியான் ஊடகத்தை தன் அரசியலுக்கு லாவகமாக பயன்படுத்திய அமெரிக்க அராசங்கத்தின் இந்த தந்திரங்கள் காலத்தில் செல்லுபடியாகாமல் சரிந்து விழத்தொடங்கிவிட்டன .இந்த அசகாய சூரர்களின் நாயகத்ன்மைகள் எத்தனை போலியானவை என்பதை அமெரிக்க மக்களே இப்போது உணரதுவங்கிவிட்டனர் .

இப்போது சமீபமாக வில்லன்களுக்கான பஞ்சம் காரணமாக நாட்டையும் மக்களையும் விட்டு இயற்கைக்கும் கற்பனை மிருகங்களுக்கும் திருப்பிக்கொண்ட ஹாலிவுட்படங்கள் சமீபத்திய சுனாமிக்கு பிறகாவது எதார்த்துக்கு திரும்புமா என்பது கேள்விக்குறி