24 செப்டம்பர், 2011

In Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ்-மகன் வயதில் ஒரு கொலைக்காரன்..



மங்காத்தா படத்துல அஜீத் கேரக்டர் எப்படி??



படத்துல அஜீத் கெட்டவன்சார்..




ஏன் கெட்டவன் ஆனார்..??



சார் படத்துல அஜீத் கெட்டவன்..அவ்வளவுதான்...



குட் எந்த பிளாஷ் பேக்கும் இல்லையா ?.



இல்லை சார்...



ஒரு கெட்டவன் கெட்டவன் தான் அதுக்கு எந்த பிளாஷ் பேக்கும் தேவையில்லை.. இன்னும் எத்தனை நாளைக்குதான் தமிழ்சினிமா கெட்டவன் என்றால் கெட்டவன் என்று தைரியமாக சொன்னது இல்லை.. அவன் நல்லவன்தான்... ஆனா சில பிரச்சனை அவன் வாழ்க்கையில் நடந்து விட்டதால் அவன் கெட்டவன் ஆயிட்டான் என்பதாகவே பலகதைகளில் கதாபாத்திரங்கள் சித்தரிக்கபடுகின்றன....இந்த பிரெஞ் படத்துல ஒரு கேரக்டர் சித்தரிக்கபடுது... அவன் கெட்டவன்..  அவன் ரொம்ப கெட்டவன் அவ்வளவுதான்.

============



In Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ் படத்தின் கதை என்ன?-



சாரா ஒரு நர்ஸ் அவளுடைய டீன் ஏஜ் பையன் வீட்ல நடக்கும் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போறான்..ஒரு நாள் நைட் ஆஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வரும்  போது ஆர்தர்ன்னு ஒருத்தன் சாராகார்ல வந்து விழறான்..

காரணம் அவனை யாரோ துரத்துராங்க... அவனை காப்பாற்றுகின்றாள்.. அவன் அவளது இறந்த மகனின் வயதை ஒத்து இருக்கின்றான்..ஆனால் அவன் கொடுர கொலைகாரன்.. முடிவு என்ன? திரையில் பாருங்கள்..



====================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...



மகன் இறந்து போனதால் தூக்கம் இல்லாமல் தவிக்கும் சாராவின் பாத்திரத்தில் நடித்து இருக்கும் பெண்மணி கச்சிதமாக  நடித்து இருக்கின்றார்..



ஆர்தர் ஒரு கொடுர கொலைக்காரன்..இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப்ப கொலை செய்பவன்.........



நான் லீனியர் டைப் திரைக்கதையில் இரண்டு விதமாக கதை சொல்லுகின்றார்கள்..



படத்தில் சில டுவிஸ்ட்டுகள் சுவாரஸ்யபடுத்துகின்றன..



ஆர்தரை மகன் போல நினைத்தே பல விஷயங்களை பொறுத்துக்கொண்டாலும் அவன்  சாராவை கிஸ் செய்ய வரும் போது விளக்குவது கவிதை...



கடைசியில் சோகமாய் ஒரு முடிவு.....



===============

படக்குழுவினர் விபரம்




Directors:
Caroline du Potet, Éric du Potet
Writers:
Caroline du Potet, Éric du Potet
Stars:
Anne Parillaud, Arthur Dupont and Thierry Frémont

=========

படத்தின் டிரைலர்




=========

பைனல்கிக்...

இந்த டைம் பாஸ் படம்தான் ... ஆனால் சின்ன சின்ன டுவிஸ்ட்டுக்காக பார்க்க வேண்டிய படம் .

DOG BITE DOG-(2006)உலகசினிமா/ ஹாங்காங்


இந்த படம் ஆர்ரேட்டிங் படம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்....
சமீபத்தில் நீங்கள் எந்த படத்தின் சாயலும் இல்லாமல் எந்த படத்தையும் எடுக்க முடியாது என்று பாலுமகேந்திரா சொல்லி இருக்கின்றார்...
என் அப்பாவின் அம்மாவின், சித்தப்பாவின், பழகிய ,கேட்ட, ரசித்த,படித்த விஷயங்களின் சாயல் இல்லாமல் யாரும் படமே எடுக்க முடியாது என்றார்....உங்களால் விமர்சனத்தை பொருட்படுத்தாமல் படம் எடுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்..அவரது சீடர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் தன்னை பாதித்த படங்களின்... பாதிப்பால் இந்த படம் என்று படம் முடிந்து ஒரு டைட்டில் போட்டு கிரேடிட் கொடுத்து நல்ல தொடக்கத்தை தொடங்கி வைத்தார்.......

 கதாநாயகி காலில் ஆணி குத்திக்கொண்டதும்.. அதிலும் ரத்தம்  வழிந்த காட்சியை பார்த்ததும்... ஓகே..தமிழ் மைனா ஹாங்காங்கில் இருந்து பறந்து வந்து இருப்பதை கண்டுகொண்டேன்....
=================================

DOG BITE DOG-(2006)உலகசினிமா/ ஹாங்காங் படத்தின் கதை என்ன??

கம்போடியரிவில் பணத்துக்காக எதையும் செய்யும் இளைஞன்... எதையும் என்றால் கொலை கூட...காரணம் பசிதான் பிரதானம்... எதிராளியை அடித்தால்தான் நல்ல சோறு தின்ன முடியம்..எது தேவையோ அதுவே தர்மம் என்பதை கொள்கையாக வைத்து இருப்பவன்..வாடிவாசலில் கொம்பு சீவி போட்டிக்கு தயாராக இருக்கும் மாடுகள் போல மனிதர்களை தயார் செய்து ஒரு பெரிய  போட்டி இடத்தல் இருவரில் அடித்து யார் வெற்றி பெருகின்றார்களோ அவர்களுக்கு பணம் அப்படி ஒரு பின்புலத்தில் இருக்கம் அவனை ஹாங்காங்கில் ஒரு கொலை செய்ய அழைப்பு வருகின்றது... 

ஹங்காங்கில்  ஒரு ஓட்டலில் சாப்பிட வந்த பெண்மணியை கொலையும் செய்கின்றான்...ஹாங்காங் போலிஸ் அவனை கைது செய்கின்றார்கள்.. அதில் இருந்து அவனை ஒரு வெய் என்ற இன்ஸ்பெக்டர் துரத்துகின்றான்... போலிஸ் பக்கம் பயங்கர இழப்பு  காரணம் பயபுள்ளை கொலை பண்ண தயங்கவே மாட்டான்... அப்படி இருக்கும் அவனுக்கு ஒரு பெண்ணின் சினேகம் கிடைக்கின்றது... அந்த பெண்ணை அவள் அப்பாவே புணருவதை பார்த்த பிறகுதான் அந்த பெண்ணுக்கு உதவி செய்கின்றான். அது காதலாக மாறுகின்றது...  போலிஸ் துரத்துகின்றது.. அவனும் அந்த பெண்ணும் என்னவானர்கள்.. திரையில் பாருங்கள்...

==========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

இந்த படம் தமிழில் வந்த மைனா படத்தை இந்த படத்தை பார்த்து கொஞ்சம் கொஞ்சம் நம்ம நேட்டிவிட்டிக்கு மாற்றி எடுத்து இருக்கின்றார்கள்...

இந்த படத்தின் டோன் முழுவதும் டார்க்க ஆக  மற்றும் மஞ்சளாக இருக்கும்.. இந்த படம் ஒரு neo-noir வகை படம்....

neo-noir வகை படம் என்றால்  சமுகத்தின் கருப்பு பக்கங்களை சொல்லும் படம் என்று அர்த்தம்.. தமிழில் அதுக்கு உதாரணம்... புதுப்பேட்டை மற்றும் இப்போது ரிலிசான ஆரண்யகாண்டம்..

காலில் ஆணி குத்தி அந்த பெண்ணை மருத்தவமனை தேடி முதலில் பல் டக்டரிடம் போய் அப்புறம் என்று பல டுவிஸ்ட்டுகள் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்..


இந்த படத்தின் கிளைமாக்ஸ் இதயத்தை கொஞ்சம் கணக்க வைக்கும்...

படத்தில் , ரத்தம், வெட்டு, எல்லாம் அதிகம் அதிகம்...

அந்த பெண்ணுடன் எற்படும் சினேகம் ஏற்படும் பல காட்சிகள் நல்ல ரசனை.. அதே போல போலிஸ் பக்கம் சேதம் அதிகம் என்பதால் கிடைத்த விட்னஸ் எல்லாரையும் போட்டு சாத்து சாத்துவதை  பார்க்கும் போது போலிஸ் ஆல்வேஸ் போலிஸ்தான்.. போல.... அதுக்கு நாடுகள் எல்லைகள் ஒரு பொருட்டு அல்ல ...

போலிஸ் பாத்திரத்தில் குற்றவாளியை வெறிக்கொண்டு தேடும் போலிஸ் வெய் காதாபாத்திரம் அசத்தல் அந்த வெறி...உண்மை.. 

இயக்குனர் Cheang Pou-Soi வெறிகொண்ட மட்டும் ஒரு படத்தை எடுத்து இருக்கின்றார் தலைப்புக்கு பொருத்தமானது போல......
========
படம் திரையிடபட்ட விழாக்கள்....
The Film played later that year at the Tokyo International Film Festival. In 2007, the film played at the Deauville Asian Film Festival, the Amsterdam Fantastic Film Festival, the New York Asian Film Festival, the Fantasy Film Fest (Germany) and the Fantasia Festival in Montreal.
 

========

படக்குழுவினர் விபரம்..


Directed by     Cheang Pou-Soi
Produced by    Sam Leong
Shin Yoneyama
Written by       Szeto Kam-Yuen
Matt Chow
Melvin Li
Starring           Edison Chen
Sam Lee
Cheung Siu-Fai
Lam Suet
Music by         Ben Cheung
Cinematography          Fung Yuen-Man
Editing by       Angie Lam
Distributed by             Art Port
United States:
Dragon Dynasty (DVD)
Release date(s)            August 17, 2006
Country           Hong Kong
Language        Cantonese
Khmer

===================
படத்தின் டிரைலர்..




======================
பைனல்கிக்..

இந்த படம் வன்முறை அதிகம் கொண்ட படம்...இந்த படம் தமிழில் மைனாவாக  சில பல மாற்றங்களுடன்... வந்து இருக்கின்றது...ஏற்கனவே பார்த்த முடிச்சிகள் என்பதால் இது பார்க்கவேண்டியபடம்..இது...



I Saw the Devil-2010/உலகசினிமா/கொரியா/ரேப் செய்யும் சைக்கோ...





இந்தபடம் மற்றும் இந்தபதிவு பொது இடத்தில் படிக்க உகந்தது அல்ல..கண்டிப்பாக வயதுக்கு வந்தோருக்கானது..ஆர் ரேட்டிங் படம்......
 

 =========

தெளிய வைத்து அடித்தல் என்றால் என்ன??
ஒருவன் தவறு செய்து விட்டான்...ஒருவனை அடித்துக்கொண்டு இருக்கின்றோம்..  அவன் அடி வாங்கி,அடி வாங்கி மயக்க நிலைக்கு போய் விட்டான் என்று வைத்துக்கொள்வோம்...அப்போது அவனை அடித்தால் அவனுக்கு வலி தெரியுமா?, தெரியாது... அடிக்கும் பர்பஸ் வேஸ்ட் அல்லவா?? சரி...
 மயக்க நிலையில் இருக்கும்  அவனை அடித்து என்ன பயன்...?? மயக்கத்தில் இருக்கும் அவன் மீது தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளிந்த உடன் அடித்தால், நாம் அடிப்பதில் அர்த்தம் இருக்கும் அல்லவா-?? இதற்கு  பெயர்தான் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தல்...
இன்னும் புரியலை என்றால் அவ்வை சண்முகி படத்தில் முதலியார் மணிவண்ணன் அவ்வை சண்முகியை பின் தொடரும் டெல்லிகணேஷை பாஜாரில் சட்டையை பிடித்து போட்டு சாத்து சாத்து என்று சாத்துவதை பார்த்து விட்டு வரவும்...


பாதாங்கொட்டை பொறுக்க போன பையனை தலையில் சுட்டு சாவடிப்பவர்களும் இருக்கின்றர்கள்.... பல கொலை செய்த சைக்கோவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் என்று  சொல்லூபவர்களும் உண்டு...

கர்பினியான காதலியை ரேப் செய்து, துண்டு துண்டாக வெட்டி வீசும் சைக்கோ கொலையாளியை, கண்டு பிடித்து தப்பிக்க விடுவீர்களா?

அது எப்படி தலைவரே முடியும்...ங்கோத்தா என் கைல அந்த நாரக்........மவன் கிடைச்சா கைமா பண்ணிடுவேன்..புள்ளத்தாச்சி பொண்ணை ரேப்  செஞ்சவனை சும்மா விட சொல்லறியா??

கூல் மேன்.. கூல் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் இல்லையா-.??? அது என்னன்னு பார்க்கலாம்..

=========================


I Saw the Devil-2010/உலகசினிமா/கொரியா/படத்தின் கதை என்ன??

ஜோ ஒரு கர்பிணி பெண்(Oh San-ha)... காரில் தன் வீட்டுக்கு வரும் போது இரவு பனி மழையில் கார் நககராமல் வண்டித்தனம் செய்ய, உதவி செய்ய வருவது போல் வரும் குயூங் என்பவன்.. ஜோவை ரேப் செய்து கொலை செய்கின்றான் அந்த சைக்கோ....

ஜோவின் அப்பா ஒரு டிடேக்டிவ், அந்த பெண்ணின் காதலன் பெயர் சூ (Lee Byung-hun) அவன் ஒரு சிக்ரேட் ஏஜென்ட்...அந்த பெண்ணை மட்டும் அல்ல அதன் பின்னும் தன் கைவரிசையை பெண்களிடம் காட்டும் சைக்கோ குயூங்கை வெறித்தனமான, கொலைவெறியோடு, தேடிப்பிடித்து (Choi Min-sik) கொள்ளாமல் சின்ன சின்ன காயங்கள் உருவாக்கி அவனை தப்பிக்க விடுகின்றான்....ஏன்...?


சைக்கோ குயிங் ரொம்ப புத்திசாலி என்பதும் உயிரோடு விட்டது ரொம் தப்பு என்று சூவுக்கு  உரைக்கும் போது எல்லாம் எல்லை மீறி போய் விடுகின்றது.. அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்நதுக்கொள்ளுங்கள்..

==========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

ரொம்ப ரொம்ப காண்ட்ராவர்சியலான இந்த படம் கொரிய மொழி படம் கொரியாவுலே  பல இடங்களில் கத்திரிக்கு இரையாகி  ஆர் ரேட்டிங் முத்திரையோடு வெளி வந்த படம் இந்த படம்..

இந்த படத்தின் இயக்குனர் குட் பேட் தி விசார்ட் படத்தை இயக்கியவர்.. குட் பேட் அக்லி என்ற கிளசிக் படத்தின் கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மிக அழகாக இயக்கிய அந்த படத்தை யாரும் தவற விடாதீர்கள்.. அந்த படத்தை பார்க்கும் போது இயக்குனர் Kim Ji-woon ஆசியாவின் தவிற்க்க முடியாத இயக்குனர் என்பது  உங்களுக்கு புரிய வரும்...

ஒரு பெண் கொலையாகின்றாள்.. அவள் உடல் பாகங்கள் கண்டு எடுக்கப்படுகின்றன.... மொத்தம் 20 நிமிடங்கள் இடம் பெறும் இந்த காட்சிகள், நம்மை அந்த இடத்துக்கு அழைத்து செல்லும் காட்சி....

உதாரணத்துக்கு கர்பினி பெண் ஜோ கெடுக்கப்பட்டு அரைமயக்கத்தில் இருக்கும் போது அவளை வெட்ட அந்த சைக்கோ குயூங் ஆயதங்களை எடுப்பதை பார்த்து விட்டு.. அரைமயக்கத்தில் இருக்கும் ஜோ, அந்த சைக்கோவிடம்.. என்னை கொல்லாதே.. நான் கர்பமாக இருக்கின்றேன் என்று சொல்லி முடிக்கும் போது ஓங்கி கத்தியால் அவள் கையை வெட்டுவது போலான காட்சியை இயக்குனர் வைத்தால் என்ன செய்வார்கள்.. நிறைய இடத்தில்  கத்தரியை போடத்தான் செய்வார்கள்..

ஆனால் மேலே சொன்ன உதாரண காட்சியில் கெடுப்பதை காட்ட மாட்டார்கள்..துண்டு துண்டாக வெட்டுவதை காட்டமாட்டார்கள்.. எல்லாமே லீட் ஷாட்தான்...இதைதான் கொலைக்காரன் செய்து இருப்பான் என்று உணர்த்தும் காட்சிகளை அப்படி இலைமறைக்காய்மறைவாக எடுத்தாலும், நமக்கு பீ பி ஏறுவது நிஜம்..

4 பேர் தன் காதலியைகொன்று இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகபடுபவர்களை தேடிப்பிடித்து அவர்களை அழிப்பதும் அதில்ஒரு ரேப் செய்யும் குற்றவாளியை கட்டி போட்டு அடித்து கர்பினி ஜோவின் போட்டோவை காட்டி இவளை உனக்கு தெரியுமா? என்று கேட்க? எனக்கு தெரியாது என்று சொல்ல சரி போக போகின்றான் என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்கும் போது  ஒரு பைப் ரேஞ் எடுத்துக்கொண்டு வந்து அந்த ரேப் குற்றவாளியின் குஞ்சை அடித்தே நசுக்கும்  காட்சி.. யப்பா...அந்த காட்சியை பார்த்தா  இனி எவனும் ரேப்பே செய்யமாட்டான்...

சைக்கோவாக நடித்து இருப்பவர் ஓல்ட் பாய் கொரிய படத்தில் மெயின் ரேக்டரில் நடித்து இருப்பவர்... சைக்கோ கேரக்டரை மிக கணக்கச்சிதமாக செய்து இருக்கின்றார்...

வல்லவனுக்கு வல்லவனாக  அந்த சைக்கோ கேரக்டர் இருப்பதே இந்த படத்தை வித்யாசப்படத்தி காட்டுகின்றது.

படத்தின் சின்ன டுவிஸ்ட்டாக மனித கறி தின்னும் இன்னோரு சைக்கோ நாளைக்கு சாப்பாட்டுக்கு இன்னைக்கே ரெடி செய்யறேன். என்று சொல்லி விட்டு முத்திய பிராய்லர் கோழியை  பார்ப்பது போல ஒரு இளம் பெண்ணை வெட்டி துண்டு போட அழைத்து வரும் காட்சி  செம டுவிஸ்ட்...

இன்னும் படத்தின் சுவாரஸ்யங்களை சொன்னால் படம் பார்க்கும் போது இண்ட்ரஸ்வராது என்பதால் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்..

சரி இருந்தாலும்  சைக்கோவை  தப்பிக்க விட்டு விட்டு ஒரு நர்சை ரேப் பண்ண முயற்சிக்கும் போது ஹீரோ பூந்து குட்டையை குழப்பும் காட்சி செமை....

படம் முடிந்ததும் யாரோ ஒருவர் நச்சு நச்சுன்னு நடு மண்டையில அடிச்சி தும்வம் செய்வது போல இருப்பது இயக்குனரின் வெற்றி....
============================
இந்த படம் கலந்து கொண்ட விழாக்கள் மற்றும் விருதுகள்..
Awards and nominations

2011 47th Paeksang Arts Awards[11]

    Grand Prize Award for Film - Lee Byung-hun

2011 17th FANT-Bilbao Fantasy Film Festival[12]

    Official Selection Best Film

2011 29th Brussels International Fantastic Film Festival[13]

    Golden Raven

2011 5th Asian Film Awards[14]

    Best Editing – Nam Na-young

2011 31st Fantasporto Film Festival[15]

    Fantasy section Best Director - Kim Ji-woon
    Orient Express sidebar Best Film

2010 31st Blue Dragon Film Awards

    Best Cinematography – Lee Mo-gae
    Best Music – Mowg
    Best Lighting – Oh Seung-chul
    Nomination – Best Leading Actor – Lee Byung-hun
    Nomination – Best Art Direction – Jo Hwa-sung
    Nomination – Technical Award – Jung Do-ahn, Lee Hee-kyung

2010 13th Director's Cut Awards

    Best Actor – Choi Min-sik

2010 47th Grand Bell Awards

    Best Lighting – Oh Seung-chul
    Nomination – Best Actor – Lee Byung-hun
    Nomination – Best Actor – Choi Min-sik
    Nomination – Best Film

 
=====================================

படக்குழுவினர் விபரம்...



Directed by     Kim Ji-woon
Produced by    Kim Hyung-woo
Jo Sung-won
Kim Jae-young
Kim Jung-hwa
Written by       Park Hoon-jung
Starring          

    Lee Byung-hun
    Choi Min-sik

Music by         Mowg
Cinematography          Lee Mo-gae
Editing by       Nam Na-young
Studio             Showbox/Mediaplex
Distributed by             Showbox/Mediaplex
(South Korea)
Magnet Releasing
(US)
Release date(s)            August 12, 2010 (South Korea)
March 4, 2011 (United States)
Running time 144 minutes
Country           South Korea
Language        Korean
Gross revenue             $12,132,588

============================================
படத்தின் டிரைலர்..




==================================
பைனல்கிக்...


இந்த படத்தின் திரைக்கதை தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை என்றாலும் நாயகினின் சிவபூஜையில் கரடி லாஜிக் நிச்சயம் ரசிக்க வைக்கின்றது...ஆனால் அதையும் அசால்ட்டாக மீறும் சைக்கோ படத்தின் இரண்டாம் பகுதி சேசிங் சுவாரஸ்யம்...
கண்டிப்பாக இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம்.

THE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின் துரத்தல்..



எச்சரிக்கை... இந்த படம்  வயதுக்கு வந்தோருக்கானது.. 


ரொம்ப நாளைக்கு பிறகு அதகளமான ஒரு துரத்தல் படம் பார்த்த திருப்தி இந்த படத்தை பார்த்த போது ஏற்ப்பட்டது..
நள்ளிரவில் ஒரு மணிக்கு சும்மா பார்க்கலாம் என்று ஓட விட்ட இந்த படம் பத்தாவது நிமிடத்தில் தூக்கத்தை போக்கவைத்து விட்டது.. அப்டி ஒரு பரபரபப்பான திரைக்கதை.. சான்சே இல்லை..

வேலையில் உயர்வு தாழ்வு என்பது இந்த உலகத்தில் இல்லை.. கால் வயிற்று பசியை போக்க எதையும் செய்து இருக்கின்றார்கள், தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள பிடிக்காத தொழிலையும்  பலர் செய்து இருக்கின்றார்கள்..சமுகத்தில் தலைநிமிர்ந்து வாழ எந்த தொழிலையும் இந்த  உலகில் மனிதர்கள் செய்து இருக்கின்றார்கள்.. இன்னமும் செய்து வருகின்றார்கள்..

யாருமே எந்த தொழிலையும் வேண்டும் என்று செய்வதில்லை சூழ்நிலை செய்ய வைக்கின்றது.. அது எப்படிங்க?? ஒரு டிடெக்டிவ் எப்படி விபச்சார மாமாவா ஆகமுடியும்...?? சூழ்நிலை...

=========
அவன் நல்ல டேலன்ட்டான பையன்தான்..இளம்வயது. காமத்தை அனுபவிக்க ஒரு விபச்சார பெண்ணை போனில் அழைக்கின்றான்.. அவளோடு உறவு கொள்ள முயற்ச்சிக்கும் போது அவனுக்கு சமாச்சாரம் எழுந்திருக்கவில்லை... இம்போனன்டான அவனது இயலாமை  கோபமாக மாறுகின்றது... கோபமாக மாறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்..??? பொத்திகிட்டு உட்கார்ந்து இருப்பீர்கள்... ஆனால் ஒரு விபச்சார பெண் இவன்  பொட்டைதனத்தை கேலி செய்ய.. அவனுக்கு கோபம் வருகின்றது.. கோபம் என்றால் சாதாரண கோபம் அல்ல.. கொலை செய்ய வேண்டிய அளவுக்கு  கோபம்... ஒரு விபச்சார பெண்ணை  வர வைத்து கைகாலை கட்டி போட்டு சுத்தியால் தலையில் அடித்துக்கொள்வதுதான் அவனது ஸ்டைல்...ஒன்னு இல்லை இரண்டு இல்லை 12 கொலைகள் செய்கின்றான்..போலிஸ் என்ன பூப்பறித்துக்கொண்டு இருந்ததா??

 ===========================

THE CHASAR-2008 உலகசினிமா/கொரியா படத்தின் கதை என்ன???

இயோம் (Kim Yoon-seok)  ஒரு டிடெக்டிவ்..பணப்பிரச்சனையால் பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் மாமாவேலைக்கு மாறுகின்றான்...

இயோம்க்கு ஒரு உதவியாளன்... அவனது வேலை பார்க்கிங்கில் இருக்கும் எல்லா காரிலும்  வைப்பரில் ஒரு பிட்டு நோட்டிஸ் வைப்பான்... அதில் இப்படித்தான் எழுதி இருக்கும்... இந்த நம்பருக்கு போன் செய்தால் இந்த பிகர் கிடைக்கும் என்று போன் நம்பர் மற்றும் அந்த பெண்ணின் அரை நிர்வாண போட்டோ அதில் இருக்கும்....போன் செய்தால் வீடு தேடி வரும் என்பது போலான சேவை....

ஆனால் அவன் அனுப்பிய இரண்டு பெண்கள் இதுவரை வீடுதிரும்பவில்லை... அவர்கள் என்னவானார்கள் என்பது இயோமுக்கு தெரியாது..அவனை பொறுத்தவரை அந்த பெண்களை கடத்தி வேறு யாருக்கோ யாரோ விற்று விட்டார்கள் என்று மட்டும் அவனுக்கு புரிகின்றது... முக்கியமா குறிப்பிட்ட நம்பரில் இருந்து  பெண் வேண்டும் என்று  கேட்டு போன் வந்தால், அவர்கள் சொன்ன அட்ரசுக்கு பெண்ணை அனுப்பிவைத்தால் அந்த பெண் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.. அந்த குறிப்பிட்ட நம்பரில் இருந்து போன் வருகின்றது.. வேலை பிசியில் இயோம் மறந்து விட்டான்.. கிம் ஜி என்ற பெண் தனது ஐந்து வயது பெண்குழந்தையை வளர்க்க  விபச்சார தொழில் செய்கின்றாள்..அவளுக்கு அன்று உடல்நிலை சரியில்லை.இயோம் வலுக்கட்டாயமாக அவளை தொழிலுக்கு அனுப்புகின்றான்.  ண்கள் காணமல் போகும் அந்த குறிப்பிட்ட போன் நம்பருக்குதான் கிம் ஜி அனுப்பப்பட்டதை உணர்ந்து அவளை எச்சரிக்கின்றான். ஆனால் அந்த சைக்கோ அதுக்கு இடம் கொடுக்கவில்லை... ஆனால் இயோம் தனது டிடெக்டிவ் மூளையை வைத்து தன் பெண்களை யார் கடத்துகின்றார்கள்.. என்று கண்டு பிடிக்கின்றான்...அவனை துரத்தி போலிசில் ஒப்படைக்கின்றான்.. இருந்தாலும் வலுவான ஆதாரம் இல்லாத காரணத்தால் அந்த சைக்கோ வெளியே வருகின்றான்..ஆனால் விட முயற்சியுடன் கிம் ஜியை தேடுகின்றான்.. அந்த பெண் கிடைத்தாளா? என்பதை வெண்திரையில் காணுங்கள்..


=======================

வெகு நாட்களாகவிட்டது விரல் நகம் கடித்துக்கொண்டு அடுத்து  என்ன என்ற ஆர்வத்துடன் படம் பார்த்து......... அந்த குறையை இந்த சவுத்கொரியன் படம்  நேற்று இரவு தீர்த்துவிடடது.. இன்னும் நிறைய படங்கள் பார்த்து விட்டு எழுதாமல்  வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும் போது இந்த படம் முதலில் முந்திக்கொண்டு விட்டது...

அதீத வன்முறை காட்சிகள் படத்தில் இருந்தாலும்.. அதை தூக்கி சாப்பிடும் விதமாக  படத்தில் இருக்கும் சேசிங் இந்த படத்தை தூக்கி நிறுத்துகின்றது...

முதல் காட்சியில் ஒரு விபச்சார பெண் காணாமல் போகும் காட்சியை ஸ்டாப் பிளாகில் காட்டும் அந்த காட்சியும், அந்த மழைகாட்சியும் இணைந்து இருக்கும் போது இயோம் வந்து நான் துரத்தி கண்டுபிடிக்கின்றேன் என்று சொல்லும் காட்சியில் படம் வேகம் எடுக்கின்றது..

நம் ஊர் குழந்தையை விட கொரிய குழந்தைகள் இன்னும் டெலன்ட்க இருக்கின்றார்கள்.. டிஎன்ஏ டெஸ்ட் போன்றவற்றை ஒரு சின்ன பெண் பேசுகின்றாள் என்பதை விட அந்த அளவுக்கு அவள் கவனிக்கின்றாள் என்று சொல்லும் காட்சி அருமை..
இந்த படம் ஒரு நாள் இரவில் நடக்கும் துரத்தல் காட்சிகளை உள்ளடக்கியது என்பதால் படத்தில்  வேலை செய்த டெக்னிஷியன்களின் பருப்பு பரதநாட்டியம் ஆடி இருக்கும் என்பதை காட்சிகளை பார்க்கும் போது தெரிகின்றது....மிக முக்கியமாக ஸ்டேடிகேம் ஆப்பரேட்டர்...அந்த உழைப்பை நல்ல எடிட்டிங் காப்பாற்றி இருக்கின்றது...

இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னோருவர்...இயோமின் உதவியாளராக வரும் அந்த பிட் நோட்டிஸ் கொடுக்கும் அந்த பையன்..கொத்து சாவியை கொடுத்து எந்த வீட்டில் அது பொருந்துகின்றது என்று சொல்லியதை அப்படியே பின்பற்றுவது சிறப்பு...

 அந்த பெண் தப்பித்து விட்டாள் என்று நினைக்கும் போது அந்த பெண்ணின் மண்டையில் சுத்தியலால் அடித்து தெரிக்கும் ரத்தம் நாம் மனதில் நினைக்கும் திரைக்கதைக்கு கொடுக்கும் மரணஅடி...ங்கோத்தா நீங்க என்ன பெரிய மயிறா?? இங்க நான் டைரக்டரா? இல்லை படம் பார்க்கும் நீங்க டைரக்டரா? என்று  இயக்குனர் Na Hong-jin நம்மை பார்த்து நக்கலாக வைச்ச ஷாட்டுதான் அது....

படம் நெடுகிலும் நிறைய டுவிஸ்ட்டுகள்.. அந்த கார் மேதலில் ஏற்ப்படும் ஓட்டம் படம் நெடுகிலும் இருப்பது இந்த படத்தின் சிறப்பு..


இந்த படத்தின் ஹீரோவுக்கும் அந்த சைக்கோவுக்கும் நடக்கும் அந்த கடைசி கட்ட சண்டைகாட்சியில் நீங்கள் ஹீரோவாக மாறி வெறிப்பிடித்தது போல வில்லனை அடிக்க நினைப்பது இந்த படத்தின் திரைக்கதை வெற்றி..

கடைசி காட்சி நெகிழ்ச்சியான காட்சி....

இந்த படத்தை வார்னர்பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கின்றது..ஹீரோ லியினர்டோ டிகாப்பிரியோ நடிக்க இந்த படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றது...
 ====================

இந்த படம் வாங்கி குவித்த விருதுகள்...


    2008 Puchon International Fantastic Film Festival
        Best Film
        Best Actress (Seo Yeong-hee)
        Asian Award
    2008 Daejong Film Awards
        Best Film
        Best Director
        Best Actor
        Best Production
        Best Cinematography
        Popularity Award (Kim Yoon-seok)
    2008 Blue Dragon Film Awards
        Best Actor (Kim Yoon-seok)
    2009 Yubari International Fantastic Film Festival
        Yubari Fantaland grand-prix:
    2009 Deauville Asian Film Festival
        Best Action Asia Film
    2009 Asian Film Awards
        Best Editor (Kim Sun-min)

====================

படக்குழுவினர் விபரம்
 Directed by     Na Hong-jin
Produced by     Kim Su-jin
Yun In-beom
Written by     Na Hong-jin
Lee Shin-ho
Starring     Kim Yoon-seok
Ha Jeong-woo
Music by     Kim Joon-seok
Choe Yong-rak
Cinematography     Lee Seong-jae
Editing by     Kim Sun-min
Distributed by     South Korea:
Showbox
United Kingdom:
Metrodome
Release date(s)     South Korea:
14 February 2008
United Kingdom:
19 September 2008
Running time     123 min.
Country     South Korea
Language     Korean
Admissions     5,120,630
Gross revenue     US$35,760,133

==================
படத்தின் டிரைலர்...


================
பைனல்கிக்...

இந்த படம்  பார்த்தே தீர வேண்டியபடம்...ஒரு படத்தை பதபதைப்பாக பார்க்க வைக்க ஒரு தில் வேண்டும்.. அந்த தில் இந்த படத்தில் இருக்கின்றது.. வழக்கமான கொரிய வன்முறை இந்த படத்திலும் இருக்கின்றது...நீங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ஒன்று நினைத்தால் அதை திரைக்கதையில் மாற்றும் இயக்குனர்..இயக்குனருக்கும் நமக்கான சேசிங்தான் இந்த படத்தின் வெற்றி... சியோலில் இருந்த உண்மையான சீரியல் கில்லர் யோ யங் சூல் என்பவன் மபோ கு மாவட்டத்தில் நடத்திய  கொலைகளின் சம்பவங்களின் கோர்வை இந்த  விறு விறுப்பான திரில்லர் படம்..


Memories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வாழ்வில் மறக்கமுடியாத கொலைகள்...)

.)



மறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா?? எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்...அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..



நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்... சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும்.

உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா??


பிடிக்காது...

ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல...

சரி கொலை செய்தால்... ??


நிச்சயம் பிடிக்காது...யாருக்குதான் பிடிக்கும்...

அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி... கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து  கொலை செய்தால்???


அவனை நிக்க வச்சி தூக்குல போடனும்....அவன் ....ன்னியை நசுக்கிடனும்... சரி கோபம் வருகின்றது... இது பொதுமக்களின் கோபம் சாதாரணமனிதனின் கோபம்....இதுவே சட்டம் ஒழுங்கை  காப்பாற்றும் காவல் துறையில்  இருந்தால்  எந்த ...........பையன்டா அவன் என்று அவனை கண்டுபிடிக்க அலைவீர்கள்.. அல்லவா???


அவன் பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்தால் கூட பரவாயில்லை கொலைக்கு முன் அந்த பெண்ணை படுத்தும் சித்தரவதைகளை பார்க்கும் போது   ரொம்ப கொடுமையானது... மார்பகத்தை அறுப்பது.. பெண்உறுப்பில் துர்பூசனி துண்டுகளை நுழைத்து வைப்பது..


ஒரு சின்ன படிக்கும் பெண்ணை கடத்தி கற்பழித்து  கொலை செய்து..அந்த பெண் டிபன் பாக்சில்  சாப்பிட வைத்து இருக்கும் முள் கரண்டி ,ஸ்பூன் போன்றவற்றை கொலையான  படிக்கும் பெண்ணின் பெண்உறுப்பில் பிரேதபரிசோதனையின் போது பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்??  அந்த பெண்ணை நேற்றுதான் உயிரோடு சந்தித்து இருந்தால்  உங்கள் கோபம் பன்மடங்காக மாறும் அல்லவா??

  இந்த படம் கதையல்ல இந்த படம் ஒரு உண்மை சம்பவம்.....


murders of memories-2003 உலகசினிமா/சவுத்கொரியா படத்தின் கதை என்ன..??

1986ல் இருந்து 1991வரை அதாவது இடைப்பட்ட இந்த 5 வருடங்களில் பத்து அப்பாவி  பெண்கள்... பெண்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக கொடுரமாக கடத்தி கற்பழித்து கொலை செய்யபடுகின்றார்கள்...

போலிஸ் 3000 பேருக்கு மேல் இன்வஸ்ட்டிக்கேஷன் செய்யறாங்க  ... ஒரு பப்பும் வேகலை..நம்ம ஊர் போலிஸ் போல தப்பு  செய்யதவனை எல்லாம் புடிச்சி நீ தானே செஞ்ச.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோன்னு கும்மறாங்க....அதுக்கு நடுவுல உண்மையான குற்றவாளியை தேடுறாங்க...

ஆனா ரெண்டு போலிஸ்காரங்க அந்த கொலையாளியை தேடுறாங்க...அவுங்க இல்லாம...


108 மில்லயின் போலிஸ்காரவுங்க எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு கருமமே கண்ணாக அந்த சைக்கோ டாகை தேடிகிட்டு இருக்காங்க.... ஆனா இன்னைக்கு வரைக்கும் அந்த சைக்கோவை பிடிக்க முடியலை.... இதுதான் கதை.. ஆனா இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஒரு கவிதையான நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்... அது என்னன்னு திரையில பாருங்க...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

ஒரு உண்மை சம்பவத்தை வச்சிகிட்டு அதை அப்படியே  கவிதையா காட்சி படுத்தி இருக்கும் இயக்குனரின் உத்தி அற்புதம்...


ஒரு சைக்கோ படம்தான்... அந்த சேசிங்தான் படத்தின் அடிநாதமே... இந்த படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் எல்லா  பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் திரைப்படத்தில் இந்த கிளைமாக்ஸ்  சான்சே இல்லை..


கொலையாளி யாருன்னு நல்லவ தெரியும் இருந்தாலும் அவனை கைது செய்ய முடியாது காரணம்.. சரியான எவிடென்ஸ் இல்லாததுதான்...


கொலைநடந்த இடத்தில் இருக்கும் தடையங்களை அங்கு இருக்கும் பொது ஜனங்கள் அவர்களைஅறியாமலேயே அழித்து விடுவது...


 கொலை நடக்கும் இடத்தில் ஒருவன் இரவு நேரத்தில் ஜட்டி பிராவை எடுத்து வந்து அதை தரையில் பரப்பி அதை பார்த்துக்கொண்டு கைமைதுனம் செசய்யும் போது கொலைக்காரன் மாட்டிவிட்டான் என்று நினைக்கும் போது அதன்பின் தொடரும் அந்த சேசிங்... செமை..


கொலைகாரன் தெரிந்து விட்டான்.. இருந்தாலும அவனை கைது செய்யமுடியாமல் தவிப்பதும்... அவனை கண்டுபிடித்த பிறகும்,ஒரு கொலை நடக்க போகின்றத என்று தெரிந்தும் எப்படி தடுப்பது என்று அலைவதும் அன்று இரவு  பள்ளி விட்டு வீடு செல்லும் பெண்ணை கொலை செய்வதையும் மறுநாள் கொலை நடந்த இடத்துக்கு போய் இயலாமையில் தவிப்பதும் அந்த இன்ஸ்பெக்டர் செமையான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்...

படம் பார்க்கும் போதே அந்த கொலைகாரனை புடிச்சி சாவடிக்கனும் என்று ஒரு வெறி உங்களுக்கு தோனும் பாருங்க.. அதுதான் இந்த படத்தின் சிறப்பு...




நினைச்சி இருந்தா நிறைய வல்கர் ஷாட் வச்சி இருக்கலாம்.. ஆனா எல்லாம் இலைமறைகாய்மறைவாக டைரக்டர் ஷாட்டுகளை வைத்து இருப்பார்....
அந்த ஷாட்டுகளை பார்க்கும் போதே பரிதாபம் மேலிடும்...

இந்த படம் பல்வேறு விருதுகளை  அள்ளிகுவித்தது.

இந்தபடம்தான் மிஷ்கினின் இப்போது சேரனை வைத்துஎடுதுதக்கொண்டு இருக்கும் யுத்தம் செய் படம் என்று சிலர் சொல்கின்றார்கள்..









படக்குழுவினர் விபரம்..


Directed by     Bong Joon-ho
Produced by     Cha Seoung-Jae
Written by     Bong Joon-ho
Kim Kwang-rim
Shim Sung-bo
Starring     Song Kang-ho
Kim Sang-kyung
Kim Roe-ha
Park Hae-il
Byeon Hee-bong
Music by     Tarō Iwashiro
Distributed by     CJ Entertainment
Release date(s)     2003
Running time     127 min.
Country     South Korea
Language     Korean
Budget     $2,800,000 US


Memories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வாழ்வில் மறக்கமுடியாத கொலைகள்...)



மறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா?? எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்...அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..



நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்... சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும்.

உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா??


பிடிக்காது...

ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல...

சரி கொலை செய்தால்... ??


நிச்சயம் பிடிக்காது...யாருக்குதான் பிடிக்கும்...

அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி... கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து  கொலை செய்தால்???


அவனை நிக்க வச்சி தூக்குல போடனும்....அவன் ....ன்னியை நசுக்கிடனும்... சரி கோபம் வருகின்றது... இது பொதுமக்களின் கோபம் சாதாரணமனிதனின் கோபம்....இதுவே சட்டம் ஒழுங்கை  காப்பாற்றும் காவல் துறையில்  இருந்தால்  எந்த ...........பையன்டா அவன் என்று அவனை கண்டுபிடிக்க அலைவீர்கள்.. அல்லவா???


அவன் பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்தால் கூட பரவாயில்லை கொலைக்கு முன் அந்த பெண்ணை படுத்தும் சித்தரவதைகளை பார்க்கும் போது   ரொம்ப கொடுமையானது... மார்பகத்தை அறுப்பது.. பெண்உறுப்பில் துர்பூசனி துண்டுகளை நுழைத்து வைப்பது..


ஒரு சின்ன படிக்கும் பெண்ணை கடத்தி கற்பழித்து  கொலை செய்து..அந்த பெண் டிபன் பாக்சில்  சாப்பிட வைத்து இருக்கும் முள் கரண்டி ,ஸ்பூன் போன்றவற்றை கொலையான  படிக்கும் பெண்ணின் பெண்உறுப்பில் பிரேதபரிசோதனையின் போது பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்??  அந்த பெண்ணை நேற்றுதான் உயிரோடு சந்தித்து இருந்தால்  உங்கள் கோபம் பன்மடங்காக மாறும் அல்லவா??

  இந்த படம் கதையல்ல இந்த படம் ஒரு உண்மை சம்பவம்.....


murders of memories-2003 உலகசினிமா/சவுத்கொரியா படத்தின் கதை என்ன..??

1986ல் இருந்து 1991வரை அதாவது இடைப்பட்ட இந்த 5 வருடங்களில் பத்து அப்பாவி  பெண்கள்... பெண்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக கொடுரமாக கடத்தி கற்பழித்து கொலை செய்யபடுகின்றார்கள்...

போலிஸ் 3000 பேருக்கு மேல் இன்வஸ்ட்டிக்கேஷன் செய்யறாங்க  ... ஒரு பப்பும் வேகலை..நம்ம ஊர் போலிஸ் போல தப்பு  செய்யதவனை எல்லாம் புடிச்சி நீ தானே செஞ்ச.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோன்னு கும்மறாங்க....அதுக்கு நடுவுல உண்மையான குற்றவாளியை தேடுறாங்க...

ஆனா ரெண்டு போலிஸ்காரங்க அந்த கொலையாளியை தேடுறாங்க...அவுங்க இல்லாம...


108 மில்லயின் போலிஸ்காரவுங்க எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு கருமமே கண்ணாக அந்த சைக்கோ டாகை தேடிகிட்டு இருக்காங்க.... ஆனா இன்னைக்கு வரைக்கும் அந்த சைக்கோவை பிடிக்க முடியலை.... இதுதான் கதை.. ஆனா இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஒரு கவிதையான நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்... அது என்னன்னு திரையில பாருங்க...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

ஒரு உண்மை சம்பவத்தை வச்சிகிட்டு அதை அப்படியே  கவிதையா காட்சி படுத்தி இருக்கும் இயக்குனரின் உத்தி அற்புதம்...


ஒரு சைக்கோ படம்தான்... அந்த சேசிங்தான் படத்தின் அடிநாதமே... இந்த படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் எல்லா  பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் திரைப்படத்தில் இந்த கிளைமாக்ஸ்  சான்சே இல்லை..


கொலையாளி யாருன்னு நல்லவ தெரியும் இருந்தாலும் அவனை கைது செய்ய முடியாது காரணம்.. சரியான எவிடென்ஸ் இல்லாததுதான்...


கொலைநடந்த இடத்தில் இருக்கும் தடையங்களை அங்கு இருக்கும் பொது ஜனங்கள் அவர்களைஅறியாமலேயே அழித்து விடுவது...


 கொலை நடக்கும் இடத்தில் ஒருவன் இரவு நேரத்தில் ஜட்டி பிராவை எடுத்து வந்து அதை தரையில் பரப்பி அதை பார்த்துக்கொண்டு கைமைதுனம் செசய்யும் போது கொலைக்காரன் மாட்டிவிட்டான் என்று நினைக்கும் போது அதன்பின் தொடரும் அந்த சேசிங்... செமை..


கொலைகாரன் தெரிந்து விட்டான்.. இருந்தாலும அவனை கைது செய்யமுடியாமல் தவிப்பதும்... அவனை கண்டுபிடித்த பிறகும்,ஒரு கொலை நடக்க போகின்றத என்று தெரிந்தும் எப்படி தடுப்பது என்று அலைவதும் அன்று இரவு  பள்ளி விட்டு வீடு செல்லும் பெண்ணை கொலை செய்வதையும் மறுநாள் கொலை நடந்த இடத்துக்கு போய் இயலாமையில் தவிப்பதும் அந்த இன்ஸ்பெக்டர் செமையான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்...

படம் பார்க்கும் போதே அந்த கொலைகாரனை புடிச்சி சாவடிக்கனும் என்று ஒரு வெறி உங்களுக்கு தோனும் பாருங்க.. அதுதான் இந்த படத்தின் சிறப்பு...




நினைச்சி இருந்தா நிறைய வல்கர் ஷாட் வச்சி இருக்கலாம்.. ஆனா எல்லாம் இலைமறைகாய்மறைவாக டைரக்டர் ஷாட்டுகளை வைத்து இருப்பார்....
அந்த ஷாட்டுகளை பார்க்கும் போதே பரிதாபம் மேலிடும்...

இந்த படம் பல்வேறு விருதுகளை  அள்ளிகுவித்தது.

இந்தபடம்தான் மிஷ்கினின் இப்போது சேரனை வைத்துஎடுதுதக்கொண்டு இருக்கும் யுத்தம் செய் படம் என்று சிலர் சொல்கின்றார்கள்..





படத்தின் டிரைலர்..





படக்குழுவினர் விபரம்..


Directed by     Bong Joon-ho
Produced by     Cha Seoung-Jae
Written by     Bong Joon-ho
Kim Kwang-rim
Shim Sung-bo
Starring     Song Kang-ho
Kim Sang-kyung
Kim Roe-ha
Park Hae-il
Byeon Hee-bong
Music by     Tarō Iwashiro
Distributed by     CJ Entertainment
Release date(s)     2003
Running time     127 min.
Country     South Korea
Language     Korean
Budget     $2,800,000 US





Mother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா/துப்பறியும் அம்மா..



துப்பறியும் சாம்பு கேள்வி பட்டு இருக்கோம் அது என்ன?- துப்பறியும் அம்மா? மேல படிங்க அப்புறம் கேள்வி எல்லாம் வக்கனையா கேட்கலாம்.....


தான் பெற்ற பிள்ளை எப்படி இருந்தாலும் அதனை வளர்ப்பதும் பாசம் காட்டுவதும்தான் இந்த உலகின் இயல்பு....

அப்படித்தான் அந்த அம்மாவும் இருக்கின்றார்...பையன் பெரிய பையன்தான் ஆனால் மனநலம் குன்றியவன் என்று சொல்ல முடியாது.. பர்பெக்ட்டான ஆள் என்றும் சொல்லமுடியாது.. ரெண்டு கெட்டான் லிஸ்ட்டில்  யோசிக்காமல் தாராளமாக சேர்க்கலாம்...

சார் இப்படி சொன்ன எப்படி சார்.. ஒன்னு அவனை பைத்தியம்னு சொல்லுங்க.. இல்லைன்னா  நார்மலான பையன் சொல்லுங்க.. இரண்டும் கெட்டான்னா எப்படி???

நீங்க ஒன்னாவது  படிக்கும் போது  எத்தனை முறை பெண்சில் சீவும் போது கையை கிழுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள். என்று சொல்ல முடியுமா?

அவன் சொல்லுவான்....

ரோஸ்லீன் டீச்சரிடம் நீங்கள் எத்தனை முறை பிரம்பால் உதை வாங்கி இருக்கின்றீர்கள்...  அந்த பிரம்படி எதுக்காக வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா?
அனால் அவன் சொல்லுவான்.. எதுக்கு ரோஸ்லீன் டீச்சர் அடித்தார்கள் என்று---???? எந்த தவறுக்கு தெரியாமல் அடித்து விட்டு தலை கோதி நெற்றியில் முத்தம் இட்டார்கள் என்று அவன் சொல்லுவான்...

ஆனா...அம்மாக்கூடத்தான் போய் படுத்துக்குவான்..எருமை வயசானாலும் அம்மா மார்பை பிடித்து பிசைந்து விட்டு மிக நெருக்கமாய படுத்துக்கொள்வான்...

அம்மாவிடம் தான் ஒரு பெண்ணிடம் நான் படுத்தேன் என்று சொல்ல... இவன் எங்க படுத்து இருப்பான்? என்று அவன் அம்மா யோசித்து அவன் ஒன்னுக்கு இருக்கும் போது அவனது ஆண்குறியை பார்த்தாலும் அவனுக்கு கூச்சமே இருக்காது...ஒன்னுக்கு அடித்துக்கொண்டே....அம்மா கொடுக்கும் சூப்பை குடிக்கும் ரகம்...

இப்ப சொல்லுங்க அவன் ரெண்டும் கெட்டான இல்லையா??

அதனாலதான் சொன்னேன் அவன் ரெண்டும் கெட்டான் என்று..அப்படி ஒரு ரெண்டும் கெட்டன் மீது ஒரு இளம்பெண்ணை கொலை செய்த பழி வந்து விழுகின்றது... அவனின் அம்மா தன் பிள்ளை கொலை செய்யும் அளவுக்கு கெட்டவன் இல்லை.. அவனே ஒரு ரெண்டும்கெட்டான் என்பதால் கொலைப்பழி விழுந்த தன் மகனை மீட்க போராடும் ஒரு தாயின் கதை  மதர் என்ற கொரிய திரைப்படம்.


===================

Mother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா படத்தின் கதை என்ன??


ஹேய் ஜா.. ஒரு விதவை பெண்மணி சிறிய அளவில் மனம்நலம் பிழறிய தன் மகனோடு வசித்து வருகின்றார்.. அவளுக்கு உலகமே தன் மகன்தான்..மகன் தோஜுன் ஒரு இரண்டும் கெட்டடான்..ஆனால்தான் ஒரு மனநலம் குன்றியவன் என்று பிறர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளும் ரகம் இல்லை..அவன் மீது ஒரு இளம் பெண்ணை கொலை செய்த பழி அவன் மீது விழுகின்றது...லாஜிக் எல்லாம் சரியாக இருப்பதால் அவனை கைது செய்து சிறையில் அடைக்கின்றது போலிஸ்.. தன் மகள் குற்றமற்றவன் என்று நிருபிக்க தோஜுவின் அம்மா தன் மகன் கொலை செய்ததாக சொல்லப்படும் இளம் பெண்ணின் கொலைக்கான பின்னனியை ஆராய்கின்றாள்... முடிவு திடுக்.. அப்படி என்னங்க திடுக்..? போய் திரையில் பாருங்கள்...

===========
படத்தின்சுவாரஸ்யங்களில் சில...

நாலே  நாலு மெயின் கேரக்டர்கள்... இவர்களை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் அதகளம் பண்ணி இருக்கின்றார்கள்.

திரைக்கதையின் ஆதார சுருதிகளுக்கு  எந்த குறையும் வைக்காமல் சினிமா பண்ணி இருக்கின்றார்கள்..

செமையான சஸ்பென்ஸ் திரைக்கதை... அந்த செஸ்பென்சை ஒரு வயதான பெண்மணியிடம் கொடுத்து ஓப்பன் பண்ணிக்கொண்டு மிக முக்கியமாக லாஜிக் மீறாமல் பண்ணி இருப்பது பெரிய விஷயம்.


கேரக்டர்கள் ஓப்பன்  செய்வதில் கேரக்டர்களை விவரிப்பது போன்றவற்றை கணக்கச்சிதமாக செய்து இருக்கின்றார்கள்.. முக்கியமாக பெண்ஸ் கண்ணாடி உடைப்பைது தான் என்று  சொல்வது... எதையும் இரண்டு முறை திருப்பி செய்வது போனற்வற்றை குறிப்பிட்டு சொல்லலாம்..

இந்த படத்தின் முதல் காட்சி நம் ஊர் தியேட்டரில் ஓடி இருந்தால்.. மச்சி ஒரு கிழ புடாங்கு பஸ்ட்டு ஷாட்டுலேயே வந்து லூசுப் பு.......... போல ஆடிக்கிட்டு இருக்குன்னு சொல்லி இருப்பாங்க.....இன்பேக்ட் படம் அப்படித்தான் ஆரம்பிக்குது.. பட் ஆடிக்கொண்டு இருக்கும் அந்த பெண்மணி சேகாம் தாங்காமல் அழுதுக்கொண்டு ஆடும் போது இன்னும்  அந்த பெண்மணியோடு நெருங்குகின்றோம்...

தன் மகளை கைது செய்து  செல்லும் போது ரோடில் ஒடும் ஓட்டம் சான்சே இல்லை...அந்த விபத்து காட்சியும் அருமை...
விபத்து நடநது முடிந்தவுடன் தன் மகனிடம் அடி ஏதாவது பட்டு இருக்கின்றதா? என்று உறுதிபடுத்திக்கொள்ள சொல்ல.. பையன் இரண்டு கையும் கைவிலங்கு போட பட்டு இருப்பதை பார்த்து கலங்குவது சிறப்பு...

நாலுவருடம் உலக கோப்பை புட்பாலை வைத்து வரும் அந்த டயலாக்குகள் அற்புதம்...

ஒரு பள்ளியில் படிக்கும் பெண் நான் பதில் சொல்கின்றேன்.. பாருங்க எனக்கு பீரியட்...எனக்காக சானிடரி நாப்கின் வாங்கி வரமுடியுமா? என்றதும் அந்த அம்மா கேரக்டர்... ஓடீ வாங்கி பில் போடும் இடத்தில் அந்த  வயதை வைத்து மெனோபாசை கடந்த லேடிக்கு இந்த சமாச்சாரம்  எதுக்கு என்பதாய் பில் போடும் பெண்மணியின்  சின்ன ஆச்சர்ய பார்வைகளில் எல்லாம் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள்.



மகன் சிறையில் இருக்கும் தவிப்பை தன் நடிப்பு மூலம் வெளிபடுத்தி அந்த அம்மா கேரக்டர் பெண்மணி நம் மனதில் நின்று இருகின்றார்...


கிளைமாக்ஸ் செமை அற்புதம்...அந்த தொடையில் அக்கு பஞ்சர் ஊசி மூலம் பலதை சொல்லி விடுகின்றார்கள்...
கடைசி கிளைமாக்ஸ் என்ன என்று புரிந்தவர்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள் புரியாதவர்கள் மெயில் அல்லது தொலைப்பேசியில் என்னுடன் பேசுங்கள்.. சொல்லுகின்றேன்.

இந்த படத்தில் ஒளிப்பதிவில் லாங் ஷாட்ஸ் எல்லாம் அற்புதம் முக்கியமாக  அம்மா பையனுக்கு ஒன்னுக்கு இருந்துக்கொண்டே இருக்கும் போது சூப் கொடுக்கும் அந்த பெரிய சுவர்..டூவைலைட்டில் கோல்ப் கிரவுண்ட்...அற்புதமான காட்சிகள்...

கிளைமாக்ஸ் உணர்த்தும் சேதி..எது தேவையோ அதுவே தர்மம்.. என்ற அடிப்படை தத்துவத்தில்தான் முழுபடமும்..

இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் ஆனால் ஒரு உடலுறவு சீன் வருவதால் ஜாக்கிரதை...

இந்த படத்தைபார்த்து முடிக்கும் போது இப்படி ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை நான் பார்க்கவில்லை என்று நிச்சயம் சொல்லு வீர்கள்.. காரணம் இயக்குனர்... Bong Joon-ho இவரின் முந்தையபடமான மேமரிஸ் ஆப் மார்டர் படத்தின் டைரக்டர் தான் இந்த படத்தின் டைரக்டர்.... அப்ப எப்படி படம் இருக்கும்னு நீங்களே முடிவு செஞ்சிக்கோங்க...

தனது படங்களில் கிளைமாக்சில் ஹைக்கூவாக காட்சி படுத்துதலில் இவருக்கு நிகர் இவரே...
=========

படம் வாங்கிய விருதுகள்....

 the film was selected as South Korea's official submission for the Academy Award for Best Foreign Language Film at the 82nd Academy Awards..

Kim-Hye-ja won Best Performance by an actress for the film at the 2009 Asia Pacific Screen Awards.

It won the awards for best film, best screenwriter, and best actress at the 4th Asian Film Awards.

It won the award for Best Foreign Language Film at the Kansas City Film Critics Circle Awards 2010.

===========
படத்தின் டிரைலர்..



===============
படக்குழுவினர் விபரம்


Directed by    Bong Joon-ho
Produced by Choi Jae-won
Seo Woo-sik
Written by      Bong Joon-ho
Park Eun-kyo
Starring          Kim Hye-ja
Won Bin
Jin Goo
Yoon Je-moon
Music by         Lee Byung-woo
Cinematography       Hong Kyeong-pyo
Editing by      Moon Sae-kyoung
Studio             CJ Entertainment
Barunson
Distributed by            CJ Entertainment (South Korea)
Optimum Releasing (UK)
Magnolia Pictures (USA)
Release date(s)           16 May 2009 (Cannes Film Festival)
28 May 2009 (South Korea)
Running time             128 minutes
Country          South Korea
Language       Korean
Gross revenue            $17,108,773

 
==============
பைனல்கிக்..

மேமரிஸ் ஆப் மர்டர் படத்தை எப்படி பதை பதைத்து  பார்த்தீர்களோ அதே போலத்தான் இந்த படத்தையும் நீங்கள் பார்ப்பீர்கள்... அற்புதமான  சஸ்பெண்ஸ் திரில்லர்.. நெவர் மிஸ் இட்.......இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம்..
இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..9003184500
 =======