அவர் ஓர் அறிஞர். ப்ல புத்தகங்களை படித்தவர்.. ஏதாவது பேசும்போது, அவற்றில் இருந்து அனாயசமாக மேற்கோள் காட்டுவார். புத்தகம் சொல்வதை தவிர இவருக்கு என்று தனியாக சிந்தனை இருக்கிறதா என நமக்கு தோன்றும்.
அவருக்கு என்று அல்ல.. உண்மையில் சொந்த சிந்தனை , சுய சிந்தனை என்று ஒன்று கிடையாது. எல்லா சிந்தனையுமே ஏதாவது ஒரு அச்சில் வார்க்க்கப்பட்டதுதான் . ( பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள், கடவுள் இல்லை என நம்புவார்கள்.. ஓர் ஆன்மீக சூழ் நிலையில் வளர்பவர்கள் , கடவுள் இருக்கிறார் என நம்புவார்கள்.. இரு தரப்புமே தாம் சுய சிந்தனையாளர்கள் என்றுதான் நினைத்துக்க்கொள்வார்கள் )
நம் சுற்றுப்புறமே நம் சிந்தனையை உருவாக்குகிறது.. எனவே சுதந்திரமான சிந்தனை என்று ஒன்று கிடையாது.. சிந்தனை நமக்கு தெளிவையும் அளிக்காது.
வந்து இருந்தவர் கற்பதில் ஆர்வம் மிக்கவர் . அறிவுசுமையை சுமந்து கொண்டு இருந்தார். சமஸ்கிருத மொழியில் உற்சாகமாக பேச ஆரம்பித்தார். கேட்பவருக்கு அது புரியுமா இல்லையா என்றெல்லாம் கவலையே படவில்லை..
தான் பேசியது எதுவும் புரியவில்லை என்பது கொஞ்ச நேரம் கழித்துதான் அவருக்கு தெரிந்தது,, எனக்கு அந்த மொழி தெரியாது என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது
“ உங்கள் சொற்பொழிவை கேட்டு இருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் வல்லவனாக இருக்கும் ஒருவர்தான் அப்படி பேச முடியும். அல்லது அதன் மொழி பெயர்ப்பையாவது நீங்கள் படித்து இருக்க் வேண்டும் “
மத புத்தகங்கள், ஆன்மீகம், மனவியல். தத்துவம் என எதுவும் படித்ததில்லை என்று சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.
படிப்புக்கு நாம் இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுப்பது வினோதம்தான். அறிவு ஜீவிகள் என்பவர்கள் ஒரு டேப் ரிக்கார்டர்கள் போல இருக்கிறார்கள்.. என்ன ரிக்கார்ட் ஆனதோ அதை ஒப்பித்தபடி இருக்கின்றனர் ( என்கவுண்டர் விவகாரத்தில், உணர்வு பூர்வ விபரங்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் , மனித உரிமை , சட்டம், லா பாயிண்ட் என இந்த அறிவு ஜீவீகள் உளறியதை , இங்கே நினைத்து பார்க்கலாம் )
இவர்களுக்கு அறிவு முக்கியம்.. அனுபவம் முக்கியமில்லை. ஒரு விஷ்யத்தை பற்றிய அறிவு அந்த விஷ்யததை நேரடியாக உணர்வதை தடுக்கிறது. அறிவு என்பது கற்காத ஒருவனை ஏங்க வைக்கிறது.. கற்றவனுக்கு மரியாதையை தருகிறது .
அறிவு என்பது ஒரு வகை போதை. இது புரிதலக்கு அழைத்து செல்லாது..
படிப்பதன் மூலம் அறிவை வளர்க்கலாம். ஞானத்தை ,புத்தியை அல்ல.
ஞானத்தை வாங்கும் கரன்சியாக அறிவை நினைக்க முடியாது. சிந்தித்தல் என்பது அறிதலை தடுக்கும். நம்பிக்கை , கருத்து , அறிவு போன்றவை ஞானத்துக்கு தடைக்கல்
( கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என முன்பே ஒரு நம்பிக்கை இருந்தால், உண்மை நிலை என்ன என்பது புரியாது.. ஒரு மனிதன் நல்லவனா , இல்லையா என்பதை திறந்த மனத்துடன் அணுகினால்தான் கண்டுபிடிக்க முடியும் )
எண்ணங்களால் நிறைந்த மனம் ஒரு பிரச்சினையை சரியாக கணிக்க முடியாது. சிந்தனை இருக்கும் வரை , அது தன்னை பற்றியேதான் நினைக்கும்.. எனவே புதிய கருத்துக்கள் நுழைய வாய்ப்பில்லை. ( நான் நாத்திகவாதி, ஆன்மீகவாதி , அந்த இய்க்கத்தை சேர்ந்தவன், இவர் ரசிகன் என்றெல்லாம் சொல்லி கொள்வதில் ஒருவகை ஆறுதல் கிடைக்கும். ஆனால் இது புரிதலை தடுக்கும் )
மனம் தான் நினைப்பதை உணமையாக்கும்… கடவுள் இல்லை என நினைத்தால் , இல்லை என அதனால் நிருபிக்க முடியும். இருக்கிறார் என நினைத்தால் அதையும் நிரூபிக்க முடியும். பறக்க முடியும் என நினைத்தால் , அதற்கான விமானத்தை கண்டுபிடிக்கமுடியும்… கெட்டதையே நினைத்து கெட்டவனாகவும் முடியும்…
“ சரி சார்.. ஆனால் கண்ட விஷ்யங்களை பற்றி நினைப்பதை விட , கடவுள் பற்றி நினைப்பது நல்லதுதானே “
நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம் . எதை நினைக்கிறோம் என்பது முக்கியம் அல்ல.. அது எப்படி செய்ல்படுகிறது என கவனித்தலே முக்கியம்.
கடவுளை பற்றி நினைக்கலாம் அல்லது கீழ்த்தரமாக எதையாவது நினைக்கலாம். நினைப்புக்கேற்ப விளைவுகள் உண்டு.
ஆனால் இரண்டிலுமே சிந்தனைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. தன்னையே அது முன் நிறுத்துகிறது ஆகவே கடவுளை பற்றி நினைத்தாலும், கீழ்த்தரமாக எதையாவது நினைத்தாலும் அடிப்படையில் இரண்டுமே ஒன்றுதான்.. ( விளைவுகள் வேறு வேறாக இருக்கும் என்பது வேறு விஷ்யம் ) .
இப்படி ஆதிக்கம் செலுத்தும் மனதின் செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சம்பவம் நடக்கிறது . அதை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதுதான் நம் அனுப்வம்.. இந்த அனுபவம் வார்த்தை வடிவில் மாறி மனதில் நினைவாக பதிகிறது . இப்போது நமக்கு கிடைக்கும் அனுபவங்களை வைத்து இந்த நினைவு , மனதில் மாற்றம் அடைந்து பதிகிறது..இந்த அடிப்படையில் செயல்படுவதைத்தான் சிந்தனை என்கிறோம் . (அதாவது நிகழ்காலத்தை , கடந்த காலத்தை வைத்து சந்திக்க முயல்கிறோம் )
“ அவ்வள்வுதானா? ஆழந்த சிந்தனை, புத்தாக்க சிந்தனை , மாற்று சிந்தனை என்றெல்லாம் இல்லையா.. எல்லாமே டேப் ரிக்கார்ட் மாதிரி, மெம்ரி அடிப்படையிலான் செயல்தானா ? “
புனித சிந்தனை, அறிவு ஜீவி சிந்தனை என்றெல்லாம் மனம் தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் , ஆனால் எல்லாவர்ருக்கும் அடிப்படை ஒன்றுதான் . உயர்ந்த விஷ்யத்தை பேசுவதால் உயர்ந்தவன் என்பது இல்லை.. உய்ர்ந்த விஷ்யங்கள் மனதில் பதிந்து இருக்கின்றன என்பதே இதன் பொருள். இதற்கு காரணம் நம் ச்சுழ் நிலை ( என்வே யாரையும் இளக்காரமாக நினைக்க கூடாது )
“ எண்ணங்களுக்கு அப்பால் நான் எப்படி செல்வது ?:
தவறான கேள்வி.. எண்ணங்களுக்கு அப்பால் நாம் செல்ல முடியாது, ”நான்” என்பது எண்ணங்களினால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்.. எண்ணம் இல்லை என்றால் நான் இல்லை.. எனவே எண்ணத்திற்கு அப்பாற்பட்ட நிலைக்கு “ நான் “ செல்ல முடியாது.
எண்ணம் என்பது முடிந்த நிலையில் உண்மை தன்னை வெளிக்காட்டும் . இதை படித்து தெரிந்து கொள்ள முடியாது
” அப்படி என்றால் உண்மையை எப்படித்தான் கண்டு பிடிப்பது? “
கண்டு பிடிக்க முடியாது.
கண்டு பிடிக்க முயற்சி செய்தால் , நாம் கண்டு பிடிக்க விரும்புவதே, நம் கண் முன் நிற்கும் . அது உண்மையாக இருக்காது,
எந்த கட்டுபாடும் , முயற்சியும் இன்றி மனம் அடங்கிய நிலையில் உண்மை தன்னை வெளிக்காட்டும்,. எந்த விருப்பு வெறுப்பும் இன்றி இந்த உண்மையை பார்த்த்லே விடுதலைக்கு வழி..
உண்மையே நம்மை விடுவிக்கும்.. முயற்சி அல்ல..