சென்ற
நூற்றாண்டின் இறுதிவரை இறந்தபின் என்ன நடக்கிறது
எனபது பற்றிப் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்து
கொண்டிருந்தன. ஆனால் பெருவாரியான மக்கள், விஞ்ஞானம், காலம்
காலமாக ஆவி பற்றியும் ஆத்மா பற்றியும்
தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைச்
சிதைக்கின்றன எனக் கருதினார்கள். ஆவி உலகம்
பற்றி நம்பிக்கை பெருகியது.
இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள மக்கள் ஊடகங்களைத்
துணை தேடலானார்கள். அவர்கள் இன்னமும் இறப்பிற்குப்
பின் வாழ்க்கை இருக்கிறது என்பதில் திட நம்பிக்கை
வைத்திருந்தார்கள்.
1882ல் ஒரு உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டு இறப்புக்குப் பின் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் துவங்கின. ஆனால் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான நம்பும்படியான ஆதாரம் எதுவும் கிட்டவில்லை. 1926ம் ஆண்டு, Sir William Barrett என்ற ஆராய்ச்சியாளர், 'இறக்கும்போது புலப்படும் தோற்றங்கள்' (Deathbed Visions) என்ற தனது புத்தகத்தில், இறப்பவர்கள், இறப்பதற்குமுன், வேறொரு உலகத்தைக் காண்கிறார்கள், இறந்தவர்களுடன் பேசுகிறார்கள்” என்று சொல்கிறார். இறக்கும்போது இசையையும் அவர்கள் கேட்டதாகவும், உடலைவிட்டு ஆவிபிரிவதைக் காண முடிந்ததாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால் இன்று வளர்ந்துவரும் மருத்துவ உலகில், இறக்கும் நிலையில் ஏற்படும் அனுபவங்கள் என்பவை அரிதாகவே இருக்கின்றன. முன்பெல்லாம், இறக்கும் தருவாயிலிருப்பவர்களைச் சுற்றி நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள்; தேவையான மருத்துவ வசதிகள் இருக்காது . இன்றோ பலருக்கு மருத்துவ மனையில் தான் உயிர் பிரிகிறது.- உயிர் பிரியும்போது பெரும்பாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். உற்றார் உறவினர் யாருமின்றி தனித்து மருத்துவவமனையில் இறப்பவர்களுக்கு இந்தமாதிரியான அனுபவம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்பதையே இது காட்டுகிறது.,
1975ல் ரோமன்மூடி என்பவர் "வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை" எனும் தனது கட்டுரையில், தான், இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார். "ஒருவர், இறக்கும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்., பிறகு ஒரு சத்தம், அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால், தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர், முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறார். ஒரு ஒளிசக்தி, அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில், அவருக்கு அமைதி, சந்தோஷம், அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் , அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என அவர் கூறுகிறார்.
பல விஞ்ஞானிகள் ரொமான்ட் மூடி கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார்கள். அவர்கள் மூடி, மிகைப்படுத்திக் கூறுவதாகக் கருதினார்கள். .இந்தச் சந்தேகங்களுக்கு விரைவிலேயே தீர்வு கிட்டியது. ஒரு இருதய நோய் நிபுணர் இறக்கும் தறுவாயிலிருந்த 2000 பேர்களிடம் பேசிய 20 வருட அனுபவம், மூடி கூறுபவை சரியென்று சான்றுரைக்கின்றன என்கிறார். சைப்ரஸிலிருந்து ஒரு பெண் எழுதும் அனுபவமொன்று மூடி கூறுவது சரியாயிருக்கலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.
அந்தப் பெண்ணுக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து நாலாவது நாள் அந்தப்பெண் பல மணி நேரங்களுக்கு நினைவிழந்தாள். தான் நினைவிழந்திருந்தாலும் உயிர் பிழைத்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட தான் மயக்கமாயிருந்த நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து கொடுப்பவரும் நிகழ்த்திய உரையாடல்களை நினைவுகூற முடிவதாகக் கூறினார். அவர் கூறுகிறார், " நான் எனது உடலுக்கு மேலே படுத்திருந்தேன் - எந்த வலியுமில்லை. அப்போது நான் கீழே இருக்கும் எனது உடலில் முகம் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப் பட்டேன். நான் அமைதியாக மிதந்து கொண்டிருந்தேன். பிறகு... நான் ஒரு இருண்ட இடத்தை நோக்கி - இருண்டிருந்தாலும் பயமேதுமில்லை. மிதந்து கொண்டிருந்தேன் - பிறகு ஒரே அமைதி. சிலபொழுதில் எல்லாமே மாறியது - மறுபடியும் எனது உடலுக்குள் வந்துவிட்டேன். மறுபடியும் வலியை உணர ஆரம்பித்தேன்"என்று.
இதற்குப்பிறகு சில ஆண்டுகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Kenneth Ring என்பவர் 1980ல் சாவின் விளிம்பிற்குச் சென்றுவந்த 102 பேரிடம் விவரங்கள் சேகரித்தார். அவற்றில் 50 சதவிகிதத்தினர் அடைந்த அனுபவத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் அடைந்த அனுபவங்களை, கென்னத் ரிங் 'அமைதி, உடலைவிட்டு உயிர் பிரிவது, ஒரு இருட்டு சுரங்கப்பாதையை அடைவது, வெளிச்சத்தைக் ககாண்பது, ஒளியை அடைவது' என ஐந்து பகுதிகளாகப் பிரித்தார். இதற்கடுத்த பகுதிகள் வெகு சிலராலேயே உணரப்பட்டன. எனவே, இறப்பின் போது காணும் காட்சிகளில் ஒரு ஒற்றுமை இருப்பதை அவர் கண்டார்.
இறப்பின் விளிம்பில் என்ன நடக்கிறது என்று ஆராயும் போது கலாசாரப் பின்னணியையும் கருத்தில் கொள்ளவேண்டுமா என்ற வினா எழுகிறது. கலாச்சார வேறுபாடு இல்லை என்று நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகள் கூறினாலும், மத அடிப்படை இந்த விஷயங்களை விவரிப்பதில் இடைப்படுகிறது என்பது தெளிவாகிறது. குழந்தைகளிடம் கூட சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் இறப்பின் விளிம்பில் மரணமடைந்த தங்கள் நண்பர்களையே காண்கிறார்கள் என்பது ஆச்சரியப் படவைக்கும் விஷயம் . இதற்குக் காரணம், அவர்களது நண்பர்கள் வியாதிகளின் காரணமாக மரணமடைவதென்பது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்ச்சி என்பதுதான். சிறுவயதுகளில் யாரும் நோயின் காரணமாக அதிகம் இறப்பதில்லை.
இறப்பிற்கு முன் ஏற்படும் அனுபவத்தைப் பெறுவதற்கு சாவின் விளிம்புவரை செல்லவேண்டுமா என்பது ஒரு கேள்வி - "இல்லை" என்பதுதான் இதற்கான பதில். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், மிகவும் களைப்பாக இருப்பவர்கள், மற்றும் சாதாரணமாக உழைப்பவர்களிடம்கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப்போல உண்மையானதாகவே தோற்றமளிக்கின்றன. ஒரு சுரங்கப் பாதைக்குள் போவதுபோலத் தெரியும் அனுபவம், ஒரு கற்பனைத் தோற்றமாகத் தெரிவதில்லை.- உடலுக்கு வெளியிலிருந்து நம்மைப் பார்ப்பதாகக் காணப்படும் இத்தோற்றம் உண்மையிலேயே நடப்பதாகவே தோன்றுகிறது.
சாவின் விளிம்பிற்குச் செல்லும் எல்லாருக்கும் இந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்படியென்றால் எத்தகைய மனிதர்களுக்கு இப்படியான அனுபவம் ஏற்படக்கூடும்? மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த அனுபவங்கள் ஏற்படும் என்றும் சொல்வதற்கில்லை. இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பலர் எல்லாரையும் போல பின்புலனும், மனதளவில் ஆரோக்கியமானவர்களுமாகவே இருக்கிறார்கள்.
இதைத்தவிர வரவேற்கவேண்டிய ஒரு விஷயம், இந்த அனுபவம் பெற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அவர்கள் போட்டி, பொறாமை, பேராசை போன்ற குணங்களிலிருந்து விடுபட்டு, மற்றவர்களின் நலனில் அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள். இறக்கும் தருவாயில் என்ன நடக்கிறது எ?ன்பது பற்றிய ஆராய்ச்சி, இந்த மனமாற்றத்திற்கான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை. எந்த ஆராய்ச்சியும் இதற்கு விடை காணாமல் முழுமையாய் இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக