24 செப்டம்பர், 2011

HIT LIST-2011 குடித்து விட்டு உளறாதீர்கள்....







வாழ்க்கை எப்போது சுவாரஸ்யம் பெறுகின்றது தெரியுமா?

நினைத்துக்கூட பார்க்க முடியாத நிகழ்வுகள் நடக்கும் பொதுதான்... சரி பாரில் தனியாக சரக்கு அடித்து விட்டு எதிரில் அறிமுகமில்லாதவரிடம் உளரும் டைப்பா நீங்கள்...?? அப்பஇந்த படம் உங்களுக்கானதுதான்

=====================
ஹிட் லிஸ்ட் படத்தின் கதை என்ன?,

சில நாட்களில்  நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அடிமேல் அடி விழும்,... அப்படி விழுந்தால் இன்று யார் முகத்தில் முழித்தோம் என்று செக் பண்ணி பார்ப்பது தமிழனின் மரபு சார்ந்த விஷயம்.

நீங்கள் காலையில் எழுந்து இருக்கின்றர்கள்...12 வருடம் உழைத்த கம்பெனி இன்று உங்களுக்கு புரோமோஷன் கொடுக்க போகின்றது என்று சந்தோஷமாக இருக்கின்றீர்கள்

காலையில் அந்த சந்தோஷத்தை கெடுக்க ஒரு போன் வருகின்றது...

ஓத்தா பாடு மவனே கை நீட்டி காசு வாங்கினியே... எப்ப கொடுக்க போற..??? இன்னும் ஒரு வாரம் டைம் அதுக்குள்ள கொடுக்கலை பருப்பு பரதநாட்டியம் ஆடும் என்று சொல்கின்றான் கடன் கொடுத்த அந்த ஊர் தாதா...




எப்படி இருந்தாலும் பிரமோஷன் வந்து விடும் வந்து விட்டால்... இந்த கடகை கொடுத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்... ஒம்மால கை நீட்டி காசு வாங்கனது உண்மைதான் அதுக்காக என்ன வேண்டுமானாலும் காலையில் போனில் பேசிடறதா?? பணம் வந்ததும் அவன் மூஞ்சில விசிறி அடிச்சிட்டு அவன் இருக்கவேண்டிய திசைக்கே திரும்ப கூடாது என்று நினைக்கின்றீர்கள்...

புரமோஷன் கொடுக்க வேண்டிய மீட்டிங் நடக்கின்றது... உங்கள் பெயர் அறிவிக்க  போகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் வேலையில் உங்களை விட ஜுனியர் அதுவும்  வருட ஜுனியருக்கு அந்த புரமோஷனை எடுத்துக்கொடுக்க உங்களுக்கு எப்படி இருக்கும்......

சார் அந்த பண்ணாடைக்கு எதுவும் தெரியாது...பைல் பாதுகாப்பு அறையில் எழாவது  ராக்கில் எந்த பைல் இருக்குன்னு எனக்குதான் தெரியும் என்று வெதும்புகின்றீர்கள்..

சரி வீட்டுக்கு போய் தன் மனைவியிடம் தன் சொந்த கதையும் சோககதையும் சொல்லாம் என்று நினைத்து போனால் உங்கள் வீட்டு பெட்ரூமில் இருந்து தலைகளைந்த படி சட்டை பட்டன் போட்ட படி, சாரி மச்சி என்ற படி உங்கள் பால்ய சிநேகிதன் வெளியே வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்....??? மனைவியை பார்த்தால் அவள் ஆடுதிருடிய திருடி போல முழுக்கின்றார்...

உங்கள் வயிறு எரியாது??? கண்டாரஓழிமுண்டை அப்படி என்னடி உனக்கு குறைவச்சேன் என்று புலம்புவீர்கள் அல்லவா???

மனம் வெறுத்து போய் பாருக்கு போகின்றீர்கள்.... அங்கு நடந்த கோவத்தை மனதில் வைத்தபடி குடிக்கின்றீர்கள்..

அங்கு ஒருவன் உங்களுக்கு நட்பாகின்றான்..அவன் இனி நீ என் நண்பன் உன் வேதனையை நான் தீர்ப்பேன் என்று வாக்கு கொடுக்கின்றான்...

யார் மீது எல்லாம் கோவம்.. அவர்களை என்ன செய்யலாம்
என்று கேட்க அவர்களை கொலை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றீர்கள்... அப்படியா ? அப்ப நீங்க அவுங்க பேரை எல்லாம் வரிசையா எழுது என்று அவன் சொல்லுகின்றான்....அதில் உங்கள் துரோக நண்பன், மனைவி, கடன் கொடுத்தவன், புரமோஷனை தட்டிப்பறித்தவன் என்று எல்லா பெயரையும் எழுதுகின்றான்....
அவன் சொல்லுகின்றான்.... நீ என் நண்பன்... நாளையில் இருந்து இவர்கள் நீ எழுதி கொடுத்த வரிசைபடி இறப்பார்கள் என்று சொல்லுகின்றான்...

போதையில் நீங்களும் இதை நான் எப்படி நம்புவது என்று கேட்கின்றீர்கள்... அவன் ரொம்ப கேஷூவலாக டிவியை காட்டி அன்று மாலை நகரில் நடந்த படுகொலை செய்தி ஒளிபரப்பாகின்றது.. அதன நான்தான் செய்தேன் என்று சொல்லுகின்றான்.....

போதையில் போய் வீட்டில் படுத்து விட்டு ஆபிசுக்கு வந்தால் முதல் கொலை நடந்து இருக்கின்றது.... உங்களுக்கு எப்படி இருக்கும்?? மேலும் படத்தை திரையில் பாருங்கள்....
===================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.........
 சார் படத்தை பத்தி பல சுவாரஸ்யங்கள்  முன்னையே சொல்லிட்டிங்க... அதனால்   நாங்க படத்தை திரையில் பாத்துக்கறம்னு யாராவது ஒருத்தன் சொன்னிங்களா? இன்னும் சொல்லுங்கன்னு சொன்ன என்ன அர்த்தம்.. போ போய் படத்தை பாரு..
=================

படக்குழுவினர் விபரம்

Directed by     William Kaufman
Produced by    

    Freddy Braidy
    Rich Cowan
    Johnny Martin

Written by    

    Chad Law
    Evan Law

Starring    

    Cuba Gooding, Jr.
    Cole Hauser

Cinematography     Mark Rutledge
Distributed by     North by Northwest Entertainment
Motion Picture Corporation of America
Stage 6 Films
Release date(s)     April 3, 2011
Country     United States
Language     English
Budget     $6 million

 ============
படத்தின் டிரைலர்...


======================
பைனல்கிக்.............



RONIN –1998/கொள்ளை+திருடு+கார்ச்சேசிங்+துரத்தல்







உயிரை கொடுத்து வேலை செஞ்சேன் மச்சான்.... இப்படி ஒரு டயலாக்கை நம்மில் நிறைய இடத்தில் கேட்டு இருப்போம்.... அப்படி உயிரை கொடுத்து வேலை செஞ்சு இருந்தா...? பேச அவன் இருக்கமாட்டான்..... ஆனா அந்த வேலை எவ்வளவு சிரமம்?... அது எந்த அளவுக்கு பெண்டை கழட்டிச்சின்னு சொல்லத்தான் அந்த வாக்கிய பிரயோகம்......




பட் உயரைக்கொடுத்து வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்... அணுஉலைகளில், இராணுவத்தில், பாம்ஸ்குவார்டில் என்று  கரணம் தப்பினால் எந்த நேரத்திலும் உயிர் போய்விடும் என்று தெரிந்து   வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்...




மாபியா,உளவுத்துறை போன்றவற்றில் பல ரகசியங்கள் கட்டிக்காக்க பல உயிர்கள் பலி ஆகி  இருக்கின்றன..உதாரணத்துக்கு உங்க கிட்ட ஒரு வேலை கொடுக்கின்றேன்.. அதாவது ஒரு சாதாரண சூட் கேசை காட்டி,இந்த சூட் கேஸ் உன் உயரே போனாலும் திருடு கொடுக்க கூடாதுன்னு சொல்லறேன்.. அதுக்கு நீங்க  என்ன சொல்விங்க....? அதுக்கு உள்ள என்ன இருக்குன்னு கேட்பிங்களா? மாட்டிங்களா?? காரணம் உயிரே போனாலும்னு ஒரு வார்த்தையை வேற   நான் உபயோகபடுத்தி இருக்கேன்... கண்டிப்பா கேட்பிங்க? அதுதான் மனிதமனம்....




நான் சூட்கேசில் என்ன இருக்கின்றது என்று சொல்லவில்லை என்றால்  நான் சொன்ன வேலையை நீங்க செய்வீர்களா??? சான்சே இல்லை....






மச்சி அந்த பருப்பு ஒரு சூட்கேஸ் கொடுக்குமாம்? அதுல என்ன இருக்குன்னுகூட சொல்லாதாம்....ஆனா  உயிரே போனாலும் அதை எதிரிங்க கிட்ட இருந்து பாதுகாக்கனுமாம்.... என்னய்யா நியாயம் இதுன்னு   என்கிட்ட எதிரில் முனகாமல் பின் பக்கம் போய் முனகலாம்...




பட் இந்த சூட் கேஸ் எதிரிங்க கிட்ட சிக்காம கொண்டு போய்  சேர்த்துடுன்னா? தலையால செஞ்சுமுடிக்க இந்த உலகத்தில் ஆட்கள் இருக்கின்றார்கள்..... அப்படி ஒரு சூட்கேஸ்ல ரொம்ப முக்கியமான ரகசியம் இருக்கு...ஆனா என்ன இருக்குதுன்னு தெரியாம ஒரு கேங் அதை காப்பாற்றுகின்றது...ஒரு கேங் அதை கொள்ளை அடிக்குது.....






====================================================




RONIN-1998 ரோ  படத்தின் கதை என்ன???






முதலில் ரோனின் அப்படின்னா என்னன்னு நாம தெரிஞ்சிக்கனும் இல்லையா??எந்த கலைக்கும் ஒரு குரு  அவசியம்... அதே போல ஜப்பானின் சமுராய் கலைக்கு குரு மிகவும் முக்கியம்.. பட் குரு இல்லாமல் சமுராய் கலையில் தேர்ந்தவருக்கு ரோனின் என்று பெயர்...




சாம் (ராபர்ட் டி நீரோ) வின்சென்ட் (ஜேன் ரீனோ) டெயர்டிரி (நடாஷா) என ஐந்து புரோபஷனல் பய புள்ளைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து ஒரு சூட்கேசை ஆட்டைய போடனும்.... அந்த சூட்கேசை ஆட்டையை போடனும்னா? என்ன என்னவெல்லாம் செய்யனும்னு சாம் தலைமையில் திட்டம் போட்டு அந்த சூட்கேசை கொள்ளை அடிக்கறாங்க... ஆனால் அதில் நம்பிக்கை துரோகம், கொலைகள், கார் துரத்தல்கள், என  போய் கடைசியாக அந்த சூட்கேசை அபிட் விட்டார்களா? என்பதே மீதிக்கதை...




===============================================


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....














ராபர்ட் டி நீரோ,ஜேன் ரேனோ இரண்டு பேருமே நடிப்பில் அசத்துபவர்கள்.. இந்த படத்தில் பின்னி இருப்பார்கள்.. முக்கியமாக குண்டுகாயம் பட்டு நீரோ படுக்கையில் கிடக்கையில் அதன் பிறகு இருவருக்கும் ஏற்படும் காதலான நட்பு அசத்தல்...




பெட்டியை அடிக்க போடும் திட்டங்கள் ரொம்ப அருமை முக்கியமாக பெட்டிக்கான பாதுகாப்பு என்ன? எத்தனை பேர்? போன்ற விபரங்களை கேமராவில் புதுமணதம்பதிகள் போல பதிவு செய்வது அருமை..








 எதிரி வீட்டை நோட்டம் விடுகையில் ஒரு கார் கடக்கும் போது நீரோ, நடாஷாவுக்கு ஒரு லிப் லாக் பண்ண....அந்த தனிமை  அந்த இருள் என்று அந்த சின்ன ஷாட்டில் நடாஷா வெளிபடுத்தும் சின்ன சின்ன உணர்வுகள் அற்புதம்... முதலில் நடாஷா உதடு துடைத்து விட்டு நீரோவை பார்க்க பின்பு நிரோவும் உதடு துடைத்து விட்டு ரோட்டை பார்க்க... நிரோ எதிர்பாராத நேரத்தில் அவர் மேல் பாய்ந்து வந்து உடகார்ந்து கிஸ்  பண்ணும் காட்சி நல்ல காதல் காட்சி....








1998 ல் வந்த இந்த படத்தை ஆங்கிலம் எனக்கு அதிகம் புரியாத அன்றைய நாட்களில் நான் ரசித்து பார்த்த படம் (இன்னைக்கு மட்டுமம் என்னவாம் என்று எனது மனசாட்சி கேட்பதை புறம் தள்ள முடியவில்லை..)










அந்நாளில் ஆங்கிலம் தெரியாவிட்டாலும் நான் ரசித்து பார்க்க மிக முக்கியமான காரணம் இந்த படத்தில் இருக்கும்  கார்சேசிங்தான்..




20 நிமிடங்களுக்கு வரும் இரண்டு கார்சேசிங் காட்சிகள் மயிரை நட்டுக்க வைக்கும்.. (எத்தனை நாளைக்குதான் மயிர்கூச்செரியும்னு எழுதறது....)




இன்னைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை விட அன்னைக்கு அந்த காட்சிகள் எடுக்க மேனெக்கெட்டு இருப்பதை பார்த்து மூக்கில் விரல் வைப்பீர்கள்...ஒரு ஷேக் இருக்காது....




இந்த படத்தில் எடிட்டிங்கில் வைப் மற்றும் டிசால்வ் கட் எந்த இடத்திலும்  யூஸ் செய்யவில்லை.....




கார் சேசிங்கின் போது அந்த காரின் சவுண்டைய அதாவது ரியல் சவுண்டைய பயண்படுத்தினார்கள்... அதாவது  சேசிங்கல் பின்னனி இசை சுத்தமாக கிடையாது.. அதனால் நீங்கள்  காரில் பயணிப்பது போலவே இருக்கும்.






நைஸ் மற்றறும் பாரிஸ்சில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்...




இந்த படத்தின் இயக்குனர் ஜான்பிரரன்க்மீர் முன்னால் கார் ரேஸ் டிரைவர் என்பதால் கார் சேசிங் காட்சிகள் கூடுதல் பலம்..








300 ஸ்டன்ட் கார் டிரைவர்கள் வைத்து  கார்சேசிங் காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்...




மொத்தம் 2220 ஷாட்டுகள் இந்த படம் திரைப்படமாக உதவிஇருக்கின்றது...




பாரிசின் பல சுரங்க பாதைகளில் கார்சேசிங் காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்... அதில் ஒன்று இளவரசி டயனா விபத்தில் சிக்கிய சுரங்கபாதையும்  ஒன்று.....






இயக்குனர் ஜான் பிராங்மீர் 1957ல் இருந்து  திரைபடங்கள் இயக்க ஆரம்பித்து 2002ல் தனது 72 வயதில்  பேத் டூ வார் என்ற திரைப்படத்தை இயக்கி கொண்டு இருக்கும் போது ஸ்பைனல்கார்டில் செய்த ஆபரேஷன் காரணமாக ஸ்டோக்கில் இறந்து போனார்....








கடைசி வரை இயக்குனர் அஸ்கார் அவர்ர்டு வாங்கவில்லை...ஆனால் அவர் வாங்கிய விருதுகள்...கீழே... ஆஸ்கார் விருது வாங்கிளால் என்ன? வாங்கா விட்டால் என்ன??? சென்னையில் ஒருவன் கடல் கடந்து இயக்குனர் ஜானை பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றேனே.. அந்த புகழ் ஒன்று போதும்....









 ======================


படக்குழுவினர் விபரம்..










directed by John Frankenheimer


Produced by Frank Mancuso Jr.


Screenplay by David Mamet


Story by J.D. Zeik


Starring Robert De Niro


Jean Reno


Natascha McElhone


Stellan Skarsgård


Sean Bean


Jonathan Pryce


Music by Elia Cmiral


Cinematography Robert Fraisse


Editing by Tony Gibbs


Studio FGM Entertainment


United Artists


Distributed by Metro-Goldwyn-Mayer


Release date(s) September 12, 1998 (Venice Film Festival)


September 25, 1998 (United States)


Running time 121 minutes


Country United States


Language English


Budget $55 million


Gross revenue $290 million





================





படத்தின் டிரைலர்....















=======================


பைனல்கிக்.....




இந்த படம் மூன்று பாட்ங்களை நமக்கு கற்றுக்கொடுக்கின்றது....






பாடம்...1




நம்பிக்கை என்பது வேறு.. சந்தேகம் என்று வந்து விட்டால் தீர்த்து கட்டிவிட வேண்டும்...




பாடம்..2


தேவையில்லாத கேள்விகள், தேவையில்லாத பதில்கள் மறந்து விட வேண்டும்...






பாடம்..3




நம்பிக்கையை முன் வைத்து சில விஷயங்களில் நாம் பயணபட்டுத்தான் ஆக வேண்டும்.. இந்த மூன்று லசன்களும் படத்திட்ன காட்சிகள் ஊடே இயக்குனர் சொல்லி இருப்பார்....








FLASH POINT-2007 ஹாங்காங்கின் ஆக்ஷன் அசத்தல்





சார் ரொம்ப நாள் ஆயிடுச்சி...
என்ன  சொல்லற???

ஒரு ஆக்ஷன் படம் பார்த்து...


அப்படியா நான் சொல்லற ஒரு ஹாங்காங் படம்  பாரு... ரொம்ப நல்லா இருந்திச்சி.. படம் பேரு பிளாஷ் பாயிண்ட்...

===========================

பிளாஷ் பாயின்ட் படத்தின் கதை  என்ன???

கதை 1997 க்கு முன் அதாவது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் ஹாங்காங்கில் இருந்த போது கதை நடக்கின்றது...டிடேக்ட்டிவ் சார்ஜன்ட் மா... (Donnie Yen)... ஒரு நேர்மையான  டிடேக்ட்டிவ்... போதை மருந்து கடத்தல் கும்பலை போட்டு சக்கையாக பிழிந்து எடுக்கும் நபர்...உதை என்றால் சாதாரணமாக உதைக்கமாட்டார்.. நல்லி எலும்பை கையில் எடுத்து கொடுத்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்....அதனாலே அவரை அராஜகாரர் என்று அவரை அவரது துறையில் விசாரனை கமிஷன் வைப்பார்கள்..


சார் போதை மருந்து கடத்தியவனை பிடிச்சி மட்டும் கொடுங்க.,.. சட்டம் தன் கடமையை செய்யும் என்றால் கேட்காதவர்... பிடித்து உதைத்து அடித்தே சிலரை படுத்த படுக்கையாக ஆக்கி இருக்கின்றார்...அதுக்கு அவர் சொல்லும் காரணம்... நான் நல்லவங்களை அது போல அடிக்கறது இல்லையே.. கெட்டவங்களைதானே நான் அடிக்கின்றேன்... காரணம்  நான் போலிஸ் பொரிக்கிங்களைத்தானே அடிக்கின்றேன் சொல்லுவார்....

அவருடைய வாழ்க்கையில் அண்ணன் தம்பி  என மூன்று போதைமருந்து கோட்டான்கள் அவர் கேஸ் வாழ்க்கையில் குறுக்கிட யார் ஜெயித்தார்கள் என்பது கதை... முக்கியமான விஷயம்...அவர்கள் மூன்று பேரும் கொடூரத்தின் உச்சம்...மிச்சத்தை திரையில் பாருங்கள்...

====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

வேட்டையாடு விளையாடு படத்தை போல இதில் வில்லன் கை ஓங்கி இருக்கும் படம்... போலிஸ் பக்கம் அதிக இழப்புகளை சந்தித்து வில்லன்களை வெற்றிகொள்ள செய்யும் படம் இது....

டோனி யென்னின் முரட்டுதனத்தை இந்த படத்தில் ரசிக்கலாம்... அவர் போதை மருந்து கும்பலை போட்டு உதைக்கும் எல்லா காட்சிகளிலும் கைதட்டலாம்..

வில்லன்  கும்பலின் கொடுரதனத்தை காட்ட பார்க்கிங்கில் கையை வெளியே காட்டுபவனின் கையை வெட்டுவது என சில விஷயங்களில் கொடூரம்...

ரொம்பநாளைக்கு அப்புறம் துப்பாக்கிகளை அதிகம் நம்பாமல் தற்காப்புகலைகளை பயண்படுத்தி போடும் சண்டைகாட்சிகள் ரொம்ப அற்புதம்...

இற்த படம்2007 ஆம் ஆண்டு வெளியானது... அடங்கொய்யல. இப்படி சொன்னா என்ன அர்த்தம்..?? நான் இப்பதான் இந்த படத்தை பார்த்தேன் என்று அர்த்தம்....

கடைசி பத்து நிமிடம் நடக்கும் அந்த கைகலப்பு சண்டைகாட்சிக்கா இந்த படத்தை தவறாமல் பாருங்கள்.,.. மிக அற்புதமான சண்டைக்காட்சி
=======================
படக்குழுவினர் விபரம்...

Directed by     Wilson Yip
Produced by    Nansun Shi
Donnie Yen
Written by      Szeto Kam-Yuen
Nicholl Tang
Starring           Donnie Yen
Louis Koo
Collin Chou
Lui Leung-Wai
Fan Bingbing
Music by         Chan Kwong-Wing
Cinematography         Cheung Man-Po
Editing by       Cheung Ka-Fai
Distributed by            Hong Kong:


Mandarin Films Distribution Co. Ltd.
China:
Polybona Films
Singapore:
Golden Village Pictures
United States:
The Weinstein Company
Dragon Dynasty (DVD)
Release date(s)          Hong Kong:
9 August 2007
China:
3 August 2007
Taiwan:
18 August 2007
Singapore:
2 August 2007
United States:
14 March 2008 (limited)
Running time 88 min.
Country           Hong Kong Hong Kong
Language        Cantonese
Budget            HK$10,000,000
==========================

படத்தின் டிரைலர்....

===========================
பைனல்கிக்..

இந்த படம்ஆக்ஷன் பிரியர்கள் அவசிய்ம பார்க்க வேண்டிய படம் அந்த கடைசி பத்து நிமிடம் சண்டைகாட்சிக்கா  பார்க்க வேண்டும்...

TRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.






உதவி செஞ்சா உபத்திரவம் வருமா? சர்வநிச்சயமா வரும்.. எப்படி சார் வரும்??




எங்க அம்மா சின்ன வயசுல இருந்தே நல்லொழுக்கம் மற்றும் நீதிக்கதைகள் சொல்லி என்னை வளர்த்தாங்க அதுனால நான் இதை எல்லாம் நம்பவே மாட்டேன்... சக மனிதனுக்கு உதவி செய்வது என் இயல்பு..



அஞ்சு வருசத்துக்கு முன்னே சென்னையில் ஓஎம்ஆர் ரோடு போட ஆரம்பிச்சாங்க... அப்ப மிட் நைட்டு சோழிங்கநல்லூர்கிட்ட ஒரு சேட்டு வந்த கார் விபத்துக்குள்ளாயிடுச்சி.. சேட்டு குத்து உசிரும் கொலை உசிருமா காரு உள்ள ரத்த சகதியா உயிருக்கு போராடிக்கிட்டு கிடந்தாரு.. அந்த பக்கமா போன பல பேர் நமக்கு ஏன் வம்புன்னு போயிட்டாங்க..



சின்ன வயசுலேயே தன் அம்மாவால நீதிக்கதைகள் சொல்லி வள்ர்க்கப்பட்ட அந்த நல்லவன் வந்தான்... செட்டை பக்கத்துல இருக்கற தனியார் மருத்துவமணையில் சேர்த்தான்..



வீட்டு அட்ரசை கொடுத்து விட்டு, வீட்டுக்குபோய் பசியில் ஒரு கவளம் சோத்தை எடுத்து வாயில வைக்கலாம்னு நினைக்கறான் போலிஸ் வந்து  நிக்குது....?



வீட்டை விட்டு வெளிய  வந்தவனை விவரம் சொல்லாமலேயே  அந்த  நல்லவனை  போலிஸ் போட்டு  மிதிக்க ஆரம்பிச்சிடுச்சி..வலி உயிர் போவுது... எதுக்கு சார் இப்படி போட்டு என்னை வெளுத்து வாங்கறிங்க என்று கேட்டான்.. 

சேட்டை காப்பாத்தி ஆஸ்பிட்டல் சேர்த்த சரி.. சேட்டு கார்ல ஒருஅரைகிலோ தங்க கட்டி வச்சி இருந்தார் அது எங்கன்னு கேட்டு அந்த நல்லவனுக்கு செமை உதை...போலிஸ் பையனை பொளந்து எடுத்துட்டானுங்க..



பாவி சேட்டு பத்து நாளைக்கு அப்புறம் கோமா, கோவா எல்லாம் சுத்திட்டு நினைவுக்கு வந்ததும்.. யோவ் அரைகிலோ தங்க கட்டி எங்கய்யான்னு கேட்டா? அன்னைக்கு தங்கம் எடுத்துக்கிட்டு போகலாம்னுதான் பார்த்தேன்.. நைட் நேரம் அதனால எதுக்கு ரிஸ்க்குன்னு லாக்கர்லேயே வச்சிட்டு வந்துட்டேன்னு சொன்னானாம்..



பத்து நாளா போலிஸ் ஸ்டேஷன்ல பயிறை இரைய உட்டு இரைய உட்டு உதை வாங்கி கிட்டு கிடந்த அந்த நல்லவனுக்கு போன உயிர் அப்பதான் திரும்பி வந்துச்சாம்...



அது போலத்தான் 400 மில்லியன் மதிப்புள்ள பாண்டு பத்திரத்தை ஒருகொள்ளை கும்பல் திருடிக்கொண்டு செல்ல முயற்சிக்க அதை தடுத்தவனை போலிஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்குமா? நல்லதுதானே செஞ்சான் என்று நீங்கள் கேட்கலாம்..அவன் நல்லது செஞ்சானா இல்லையான்னு இந்த படத்தை பாருங்க??



====

TRIBLE TAP-2010/ஹாங்காங் படத்தின் கதை என்ன??



கென் (Louis Koo) ஒரு கம்பபெனியில் பைனான்ஸ் மேனேஜர்..துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம்  வென்றவன்.. ஒரு நாள் 400மில்லியன் மதிப்புள்ள ஒரு பண்டு பத்திரத்தை கொள்ளை அடிக்க நடக்கும் முயற்சியை கென் தடுக்கின்றான்...

இதில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு ஆட்கள் கொல்லப்பட, ஒரு டிராபிக்போலிஸ் நிறைய காயங்களுடன் தப்பிக்கின்றார். கொள்ளை அடிக்க வந்த ஒருத்தன் தப்பிக்கின்றான்.. என்னதான் துப்பாக்கி சுடுவதில் வீரனா இருந்தாலும் சட்டத்தை கையில் எடுத்தது தப்பு என்று சொல்லி கென்னை போலிஸ் வட்டம் இருக்குகின்றது...

அதுக்கு  காரணம். கென்னோடு துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவதாக வந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்ரி (Daniel Wu).. ஒரு கட்டத்தில் கென் மீது தவறு இல்லை என்று கோர்ட் விடுவிக்கின்றது... ஆனால் ஜெர்ரி கென் மீது ஒரு கண் வைத்துக்கொண்டுஇருக்கின்றான்... எப்படி ஒரு கண்ணை கென் மீது ஜெர்ரி  வைத்துக்கொண்டு இருந்தான் என்று உங்கள் இரு கண்களால் திரையில் பரபரப்பாய் பார்த்து மகிழுங்கள்.........

=====================



படத்தின் சுவாரஸ்யங்களில் சில..



ரொம்ப நாளைக்கு அப்புறம் பரபரக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் பார்த்த திருப்தியை இந்த படம் கொடுக்கும்...



கென் மூவ் ரொம்ப அபாரம்.. ஜெராக்ஸ் எடுக்கும் போது கை நடுங்கும் காட்சியில்.. முதல் தடவையாக இறப்பை பார்த்த காரணத்தால் கை நடங்குகின்றது என்று சொல்லி சமாளிக்கும் காட்சி அற்புதம்..



ஜெர்ரி தன் போலிஸ் புத்தியோடு கென்னை அனுகும் ஒவ்வோரு காட்சிக்கும்  கென் கவுண்டர் கொடுக்கும் காட்சி படத்தின் பெரிய சுவாரஸ்யம்.



மிகச்சரியாக காய் நகர்த்தும் கென்னை  மடக்க எடுக்கும் பிரயாத்ததனங்களில் தோற்று போக.. அவன் வெளியே வந்து தசறு  செய்ய வேண்டும் என்றால் அவனை எரிச்சல் படுத்த வேண்டும் என்று சொல்லித்தரும் ஜென் குரு போலான போலிஸ் ஆபிசர் நண்பன்...



தான் சிரித்து  பேசிவிட்டால்  எங்காவது எப்படியாவது உளறிவிட வாய்ப்பு இருப்பதாக நினைத்து உம் என்று இருக்கும் கென் கேரக்டரைசேஷன் அருமை.



ஜெர்ரியின் பாடிலாங்வேஜ் அற்புதம்...போலிஸ் ஆபீசராக பிரமாதப்படுத்தி  இருக்கின்றார்..



கிளைமாக்சில் மூளை சாவு அடைந்து இறந்தவன் என்பதால் அந்த குடும்பத்தை சமாதானபடுத்தி அந்த ஆப்பேரேஷனுக்கு ஒத்துக்கொள்ள செய்வதும் அதுக்காக அந்த இறுதி அரசு மரியாதை சூப்பர்...





=========

படக்குழுவினர் விபரம்

Directed by    Derek Yee

Produced by Henry Fong

Written by      Chun Tin-nam

Lau Ho-leung

Derek Yee

Starring          Louis Koo

Daniel Wu

Charlene Choi

Li Bingbing

Music by         Peter Kam

Cinematography       Anthony Pun



Editing by      Kwong Chi-leung

Studio             Beijing Poly-bona Film Publishing Company

Sil-Metropole Organisation

Emperor Motion Pictures

Film Unlimited

Distributed by            Emperor Motion Pictures

Release date(s)           1 July 2010

Running time             118 minutes

Country          Hong Kong

Language       Cantonese

==========

படத்தின் டிரைலர்


=========

பைனல்கிக்.



இந்த படம்  பார்க்க வேண்டியபடம்... நல்ல ஆக்ஷன் நல்ல விறுவிறுப்பான காட்சிகளை கொண்ட ஆக்ஷன் படம்..மூவிஸ் நவ் அலிபாயிடம் இந்த படம் இருக்கின்றதா என்று கேட்டுப்பாருங்கள்..இந்த தளம் உங்களுக்கு பிடிச்சி இருந்தா உங்க நண்பர்கள் நாலு பேருக்கு அறிமுகபடுத்துங்க அதுவே போதும்..


RYNA –(2005) உலகசினிமா/ரோமானியா


உங்கள் பெண் பிள்ளைக்கு தலையில் முடி அதிகம் வளர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..??
 
இது என்ன சார் கேள்வி.. பொம்பளபுள்ளைக்கு முடிதான்சார் அழகு...

சரி.. அந்த பெண் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்று  சொன்னால் எதிர்ப்பீர்களா??

எங்க சார் இப்ப இருக்கும் பயபுள்ளைங்க கேட்குது?? பியூட்டி பார்லர்னு போயி சரிசமமா முடியை கட் செஞ்சி விட ஆயிரம் ரூபாய் தென்டம் அழுதுட்டு வருதுங்க... எந்த கேள்வியையும் என்னால்  கேட்க முடியறதில்லை.. அப்படியே எதாவது கேட்டா?? டாடி இது எல்லாம் உங்க காலம்னு கிடையாது என்று பதில் வருகின்றது..


சரிங்க வேறு என்னவெல்லாம் உங்க வயதுக்கு வந்த பெண் செய்துகிட்ட எதிர்ப்பிங்க...??,

லிப்ஸ்ட்டிக் போட்டா எனக்கு பிடிக்காது???

ஏன் சார் உங்க பொண்ணு உதடு அழகா இருக்கும் அல்லவா??

ஜாக்கி நீங்க என்ன கேட்டங்க?? பிடிக்குமா?பிடிக்காதா??ன்னு கேட்டிங்க..அழகு அழகில்ல என்பது  வேற விஷயம் எனக்கு பிடிக்காது அவ்வளவுதான்..

உங்க பெண்ணுக்கு என்னதான் கஷ்டம் என்றாலும் உங்க வயதுக்கு வந்த பெண்ணுக்கு மிலிட்டரி  கட்டிங் மெஷின் போட்டு முடி வெட்டி விடுவிங்களா?

ஜாக்கி,வயசு பொண்ணை மிலிட்டரி  கட்டிங் போல முடி வெட்டி விட்ட பாக்க சகிக்காதே?? அது பாவமாச்சே??

ஒகே... ரோமரினியாவில் இருக்கும் ஒரு அப்பா ரெய்னான்ற தன் பொண்ணை ஆம்பளை பிள்ளை போல வளர்க்கனும்னு இப்படி எல்லாம் செய்யறார்.....

======================= 
RYNA –(2005) உலகசினிமா/ரோமானியா  படத்தின் கதை என்ன??

ரோமாணியாவில் ஆற்றின் கழிமுகத்துவரத்துக்கு அருகில் இருக்கும் சின்ன ஒரு நிலப்பரப்பில் சின்ன பெட்ரோல் பங்க் வைத்து நடத்தும் தம்பதிகளின் ஒரே பெண்  குழந்தை ரெய்னா..அந்த குடும்பத்தில் மொத்தம் நாலு பேர்தான்.. ரெய்னா அப்பா அம்மா, அப்பாவை பெற்ற தாத்தா ரெய்னா அவ்வளவுதான்...ரெய்னா அப்பா பெட்ரோல் பங்க் மற்றும்  கார் மெக்கானிக்.. அதனால் தன் பெண்ணை ஆன் போல உடை உடுக்க வைத்து  பள்ளிக்கு அனுப்பாமல் காரை ரிப்பேர் செய்ய அவளை உதவிக்கு வைத்துக்கொள்கின்றார்...

 ஒரு வகையில் அது சுயநலம்தான்... அந்த பெண் காதில் கம்மல் போட்டால் கூட எதிர்ப்புதான்...  கொஞ்சம் முடி வளர்ந்தாலும் மிஷின் வைத்து ஒட்ட கட் பண்ணி விடுவார்.. ரோட்டில் எதாவது வண்டி ரிப்பேர்  ஆகி விட்டால் ரெய்னாவிடம் ஒரு டூல் கிட் கொடுத்து ஒரு சைக்கிளையும் கொடுத்து காரை ரெடி பண்ணி கொடுத்து விட்டு வரச்சொல்லுவார்...அப்படித்தான் அவளுக்கு ஒரு டாக்டரும் போஸ்ட்மேனும் பழக்கம் ஆகின்றார்கள்.. வீட்டில் வருமை பெட்ரோல் ஸ்டேஷன் மெயின் ரோட்டில் இருக்காமல் உள்ளே தள்ளி இருப்பதால் மெயின் ரோட்டுக்கு பெட்ரோல் பங்க் மாற்ற வேண்டும் என்றால் அந்த நகரின் மேயரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும்.... அந்த மேயருக்கோ.. ரெய்னா மீது கண்....ஒரு நான் ரெய்னாவின் அப்பாஹவம் மேயரும் குடித்து விட்டு வரும் போது நல்ல போதையில் ரெய்னா அப்பா இருக்கும் போது ரெய்னாவை மேயர் கெடுத்து விடுகின்றான்... ஆனால் ரெய்னா மறுநாள் காலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தாலும் மேயரை மாட்டி விடவில்லை.. காரணம்  என்ன என்பதை திரையில் பாருங்கள்...........

==========================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

ரொம்ப நாள் கழித்து உலக படம் பார்த்த ஒரு நிறைவை இந்த படம் எனக்கு கொடுத்தது...

படம் முழுக்க பச்சை பசேல் என்று காட்டாமல ஒரு வித எல்லோ டோனில் படம் முழுவதும்.....

என்னதான் மகள்மீது பாசம் இருந்தாலும் தன் கையாலாகத தனத்தை மகள் மீது திணிக்கும் ஒரு அப்பாவின்  கதையும் அதை எதிர்க்க துணிவில்லாமல் அடங்கி போகும் மகளுக்கான கதை இது..

முடி வெட்டும் போது மேல்  சட்டை கழட்டி விட்டு அரை நிர்வாணமாக உட்கார்ந்து முடி வெட்டிக்கொண்டு இருக்கும் ரெய்னாவும், அதனை பைனாகூலரில் பார்க்கும் விடலைகளை பார்த்த உடன் தன் வெற்று மார்பை ரெய்னாமுடிக்கொள்வதும் அந்த பெண்மைக்கு  உரிய காட்சியை விளக்கும் காட்சிகள் என்றாலும் வயதுக்கு வந்த பெண் அப்பா எதிரில் மெல் சட்டை இல்லாமல் அப்பாவுடன்  உட்காந்து முடிவெட்டிக்கொள்வதா? என்று இங்கு பெரிய எதிர்பே எழும்..

ரெய்னா ஒரு பனியன்... உள்ளாடை கூட உள்ளே போட மாட்டாள்.. ஒரு பேண்ட் அதுவும் மெக்கானிக் போட்டுக்கொள்ளும் பேண்ட் இதுதான் அவள் காஸ்ட்யூம்...

மொத்தம் எட்டு கேரக்டர்தான்... இதுதான் படம்...

ரெய்னாவுக்கு புகைபடம் எடுக்க பிடித்தாலும் அதை அனுமதிக்காத தந்தை...


எனக்கு இந்த படத்தில் எனக்கு பிடித்த கேரக்டர்.. ரேய்னா தாத்தா கேரக்டர்தான். .. இரவில் முதல் தளத்தில் இருந்து இரவில் ஒன்னுக்கு அடிப்பது... கற்பழிக்கபட்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து மருத்துவ உதவி செய்யாமல் அவளை உறுப்புகளை சுத்தம் செய்ய அவளை குளிக்க அழைத்து சென்று உடைகள் களைய முற்படுகையில் ரெய்னா தாத்தா வந்து தன் மகனை கெட் அவுட் என்று கத்திவிட்டு பேத்தியை மருத்துமணையில் சேர்த்து  சிகிச்சை கொடுப்பது அருமை...

அப்பாவின் மீது இருக்கும் கோபத்தை காட்ட என்ன செய்வது என்று  தெரியாமல் காருக்கு அடியில் படுத்துக்கொண்டு கதறுவது அருமை..


அம்மா போன ஊருக்கு மகள் போகின்றாள்...

ரெய்னா காதலித்த டாகடரும் அதே ஊர்...

போஸ்ட்மேன் மேயர் காரின் பிரேக்கின் கழட்டி விட்டு விடுகின்றான்.. என்று பல காட்சிகள் கதை ஓட்டத்தில் படத்தின் முடிவை சொல்லி விட்டு செல்லுகின்றார்கள்...

ரெய்னா கிளம்பும் போது அவள் அப்பா அவளை கட்டி பிடிப்பார்.. அப்போது என்னதான் பாசமாக அப்பாவாக இருந்தாலும் பாசமான புருசனாக இருந்தாலும் கையாலாகாத ஆண்மகனை எந்த பெண்ணும் மதிப்பது இல்லை....

இந்த படம் பல உலகபடங்களில் கலந்து கொண்டு பல விருதுகைளை பெற்றது...
 ========
படக்குழுவினர் விபரம்
 Director: Ruxandra Zenide
Writers: Marek Epstein, Ruxandra Zenide, and 1 more credit »
Stars: Doroteea Petre, Valentin Popescu and Matthieu Rozé
Country: Switzerland | Romania
Language: French | Romanian
Release Date: 24 November 2006 (Romania) See more »
Filming Locations: Danube Delta, Romania 

படத்தின் டிரைலர் ..


பைனல்கிக்...

இந்த படம் பார்த்தேதீரவேண்டியபடம்..மிக நாட்களுக்கு பிறகு உலக சினிமா தியேட்டரில் பார்த்த ஒரு எபெக்ட்... காரணம் மிக மெலிதாய் நகரும் காட்சி அமைப்புகள்..

The Housemaid (2010 film) உலகசினிமா/சவுத்கொரியா... வேலைக்கார பெண்ணின் காதல்..









இந்த படம் ஆர் ரேட்டிங் திரைப்படம்..  கண்டிப்பாக வயதுக்கு வந்தோருக்கானது...



ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன...தற்கொலைகள் சாதாரணமானவை அல்ல..
அது மரணத்தை துச்சமாக மதிக்கும் ஒருவனின் வாழ்வியல் விடுதலைக்கான மாற்று வழி..



திருப்பூரில் கடந்த ஆறுமாத்தில் மட்டும்300க்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.. நிறைய காரணங்கள் இருக்கலாம்..ஒவ்வோரு மரணத்துக்கு பின்னும் நிறைய வலிகள் வேதனைகள் இருக்கின்றன. வெளியே சொல்ல முடியாத கதைகள் இருக்கின்றன..நம்பமுடியாத திருப்பு முனைகள் அடங்கி இருக்கின்றன.



இன்றைய தினசரிகளை எடுத்து புரட்டினால்  பெண்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் ஒரு நாளைக்கு ஒன்று இரண்டாவது கண்ணில் சிக்கும்... அதில்  பெரும்பாலும் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லும்.. ஆனால் உண்மை வேறு.. கணவனின் கொடுமை,மாமியார் நாத்தனார் கொடுமை, கர்பமாக்கி கைவிட்ட காதலன்,ரத்த உறவுகளின் மீதான காதல் என்று அந்த தற்கொலைக்கதைகளை அடுக்கிகொண்டே போகலாம்.



காமம் பொதுவானது..அது ஏழை பணக்காரன் என்று பாகுபாடு காட்டியதில்லை..ஆனால் ஒரு பணக்கார குடும்பம் காமத்தினால் காதலினால் ஏற்படும் சிக்கலை ஒரு போதும் பெருதுபடுத்துவதில்லை..ஆனால் நடுத்தர குடும்பம் அப்படி அல்ல..அதை விட விளம்புநிலை மனிதர்கள்... தங்கள் உயிரையே கொடுத்து விடுவார்கள்..


அப்படி அடுத்த வேலை சோத்துக்கு கஷ்டப்படும்,  அப்பா இல்லாத ஏழ்மை குடும்பத்தில் வசிக்கும் வயதுக்கு வந்த பெண், வறுமை சூழல் காரணமாக ஒரு செல்வந்தர் வீட்டுக்கு  வேலைக்கு போய், ஹவுஸ்ஓனரின் காம இச்சைக்கு பலியாகி அவள்  என்னவாகின்றாள் என்பதே இந்த படத்தில் சொல்ல வருகின்றார்கள்..

=============

தி ஹவுஸ்மெயிட் படத்தின் கதை என்ன??



Eun-yi வறுமை குடும்பத்தில் உழலும் ஏழைப்பெண்.. அப்பா இல்லை.. அம்மா மட்டும்தான்.. பெரிய பண்ணகார செல்வந்தர் Hoon அவனது மனைவி ஹாரா..ஹாரா கர்பமாக இருக்கின்றார்..நாமி என்ற ஆறு வயது பெண்குழந்தை இருக்கின்றது.. அதே வீடடில் வேலை 20 வருடம் வேலை செய்யும் வேலைக்கார ஆயாவிடம் உதவிக்கு ஒரு பெண் வேண்டும் என்று சொல்ல  அந்த பாட்டி Eun-yi வேலைக்கு  சேர்க்கின்றாள். மனைவி நிறைமாத கர்பிணி  காம இச்சைக்கு வழக்கம் போல தமிழ்சினிமாவில் மச்சினி பலியாவாள்.. இந்த படத்தில் வேலைக்கார பெண் Eun-yi  அதனால் அவள் கர்பமாகின்றாள்  அவளின் முடிவு என்ன என்பதை திரையில் பாருங்கள்..


===============


படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


படம் முழுக்க  ஏழு பேர்தான்... முதல்  காட்சியில் தற்கொலை செய்த கொள்ளும் பெண்ணை காட்டும் போது மட்டும்தான் ஜனசந்தடி ஆனால் அதுக்கு பிறகு படத்தில் பெரும் பாலும் இந்த ஏழே கதாபாத்திரங்கள்தான்...



இந்த படம் 1960 ல் வெளிவந்த படத்தின் ரிமேக்...


செல்வந்தர் வீடு என்பதற்கு சின்ன ஆறுவயது பெண் பள்ளி விட்டு வீடு வரும்  போது அந்த சின்ன பெண்ணின் அலட்டலில் தெரிந்து விடுகின்றது பணக்காரத்தனம் என்றால் என்னவென்று... அதாவது இருபது வருடம் அந்த வீட்டில் வேலை செய்யும் பாட்டிக்கே அதுதான் நிலைமை...



ஆனால் அந்த சிறும நாமி  Eun-yi வோடு நட்பாய் ஒட்டிக்கொள்கின்றாள்..




இப்படி ஒரு பணக்கார வாழ்க்கை, இது போலான அழகான குழந்தை நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று வறுமையில் வாடும் வயதுப்பெண் நினைப்பது இயல்பு அல்லவா அதனை காட்சிகளில் இயக்குனர் சொல்லிய விதம் கவிதை.


எல்லா காட்சிகளும் மிக கவிதையாக மெனக்கெட்டு எடுத்து இருக்கின்றார்கள்..



20 வருடங்களாக வேலைக்காரியாக  இருக்கும் பெண்மணியின் நடிப்பும் அந்த பெண்ணின் தீர்க்கமான பார்வையும் அருமை.. அதுமட்டும் அல்ல.. அந்த வீட்டில் நடக்கும் சின்ன சின்ன மூவ்களை கவனிப்பது அற்புதம்...




நிறைமாத கர்பினியோடு ஹாரா தன் கணவன் ஹுன்னோடு உறவு கொள்வதும் அவளால் முடியாமல்,கணவன் தன்னை வெறுத்து விட்டு யாரோடாவது உறவு கொள்வானோ? என்ற அந்த பயத்தில், கணவனுக்கு வாய்புணர்ச்சி  செய்வதும் பெண்களின் அடிப்படை பயத்தையும், ஆண் சார்ந்த இந்த சமுக வாழ்க்கையை துறக்க  இயலாத பயத்தையும் காட்டுகின்றது.




வென்னீர் குளியல் முடித்து அவள் அறையில் சும்மா இருக்கும் Eun-yiயை செல்வந்தர் ஹுன் அவளை தொடுவதும்... மறுப்பு சொல்வதா வேண்டாமா என்று குழம்புவதும்,உள்ளே காமம் புரண்டாலும் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் மரியாதை நிமித்தமாக விழிப்பது என அந்த நொடியில் அந்த பெண்ணின் தவிப்பை  காட்சிபடுத்தி இருப்பது செமை.....


தன்னோடு வேலைக்கரியாக பணியுரியும் பெண்ணின் பழக்க மாறுதல்களை கவனிக்க ஆரம்பித்த உடன் அவளை பாலோ  செய்வதும் ஒரு இரவில் இரண்டு  பேரும் உறவு கொள்ளும் போது கிழவி முகத்தில் கொடுக்கும் எக்ஸ்பிரஷனும்.. அறையில் பேசும் பேச்சுகளை கேட்டு விழிப்பதும்... 

உதாரணமாக  உறவின் உச்சத்தில் விந்தை பீச்சுவேன் என்று ஹுன் சொல்ல அதுக்கு Eun-yi வேண்டாம் என்று பயத்தோடு சொல்ல...சட்டென கிழவிக்கு மிட் ஷாட்டில் சரி உன் வாயை காட்டு என்பதாக டயலாக்  கிழவி கேட்கபதும் பார்வையாளன் கேட்பதுமாக காட்சி படுத்தி இருந்தாலும் வேற ஒரு டுவிஸ்ட் வைத்து இருப்பது எதிர்பார்க்காத ஒன்று..



லஸ்தர் விளக்கை துடைத்து கொண்டு இருப்பவளை வேண்டும் என்றே தள்ளி விடுவது , குழந்தையை களைக்க  சொல்வது என்று  அவளை படுத்தி எடுப்பதும்,  ஹாரா அவள் என் வயறிற்றில் இருக்கும் குழந்தையை அப்படி  பார்த்து கொள்கின்றாள்.. அதனால் அவள் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க சம்மதிக்கமாட்டாள் என்று சொல்வது சிறப்பு..



Eun-yi கேட்பது எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என் குழந்தையோடு என்னை வாழ விடுங்கள் என்பது தான் ஆனால் அவள் எடுக்கும் முடிவு தமிழகத்தில் சில பெண்கள் எடுக்கும் முடிவுதான்..



இந்த படம் 2010ல் நடந்த, கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கு பெற்று ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது....

 =============

படக்குழுவினர் விபரம்.


இயக்குனர் Im Sang-soo தனது குழுவினருடன்..
 ======

Directed by     Im Sang-soo

Produced by    Jason Chae

Screenplay by Im Sang-soo

Starring           Jeon Do-yeon

Lee Jung-jae

Music by         Kim Hong-jip

Cinematography          Lee Hyung-deok

Editing by       Lee Eun-soo

Studio             Mirovision

Distributed by             Sidus FNH

Release date(s)            May 13, 2010

Running time 107 minutes

Country           South Korea

Language        Korean

Admissions     2,289,270 (South Korea)

Gross revenue             17 billion won (South Korea)

 =========
 படத்தின் டிரைலர்




===========
பைனல்கிக்.

இந்த படம்  பார்த்தே தீர வேண்டிய படம்... வசதி இல்லை என்றகாரணத்தால் ஆசாபாசங்கள் இல்லை என்று சொல்லி விட முடியாது..காதல், காமம், பொருளாசை போன்றவை எல்லோருக்கும் பொதவானது என்பதை வலியூறுத்தும் படம்..