சார் ரொம்ப நாள் ஆயிடுச்சி...
என்ன சொல்லற???
ஒரு ஆக்ஷன் படம் பார்த்து...
அப்படியா நான் சொல்லற ஒரு ஹாங்காங் படம் பாரு... ரொம்ப நல்லா இருந்திச்சி.. படம் பேரு பிளாஷ் பாயிண்ட்...
===========================
பிளாஷ் பாயின்ட் படத்தின் கதை என்ன???
கதை 1997 க்கு முன் அதாவது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் ஹாங்காங்கில் இருந்த போது கதை நடக்கின்றது...டிடேக்ட்டிவ் சார்ஜன்ட் மா... (Donnie Yen)... ஒரு நேர்மையான டிடேக்ட்டிவ்...
போதை மருந்து கடத்தல் கும்பலை போட்டு சக்கையாக பிழிந்து எடுக்கும்
நபர்...உதை என்றால் சாதாரணமாக உதைக்கமாட்டார்.. நல்லி எலும்பை கையில்
எடுத்து கொடுத்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்....அதனாலே அவரை அராஜகாரர்
என்று அவரை அவரது துறையில் விசாரனை கமிஷன் வைப்பார்கள்..
சார் போதை மருந்து கடத்தியவனை பிடிச்சி மட்டும் கொடுங்க.,.. சட்டம் தன்
கடமையை செய்யும் என்றால் கேட்காதவர்... பிடித்து உதைத்து அடித்தே சிலரை
படுத்த படுக்கையாக ஆக்கி இருக்கின்றார்...அதுக்கு அவர் சொல்லும் காரணம்...
நான் நல்லவங்களை அது போல அடிக்கறது இல்லையே.. கெட்டவங்களைதானே நான்
அடிக்கின்றேன்... காரணம் நான் போலிஸ் பொரிக்கிங்களைத்தானே அடிக்கின்றேன் சொல்லுவார்....
அவருடைய வாழ்க்கையில் அண்ணன் தம்பி என
மூன்று போதைமருந்து கோட்டான்கள் அவர் கேஸ் வாழ்க்கையில் குறுக்கிட யார்
ஜெயித்தார்கள் என்பது கதை... முக்கியமான விஷயம்...அவர்கள் மூன்று பேரும்
கொடூரத்தின் உச்சம்...மிச்சத்தை திரையில் பாருங்கள்...
====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
வேட்டையாடு
விளையாடு படத்தை போல இதில் வில்லன் கை ஓங்கி இருக்கும் படம்... போலிஸ்
பக்கம் அதிக இழப்புகளை சந்தித்து வில்லன்களை வெற்றிகொள்ள செய்யும் படம்
இது....
டோனி
யென்னின் முரட்டுதனத்தை இந்த படத்தில் ரசிக்கலாம்... அவர் போதை மருந்து
கும்பலை போட்டு உதைக்கும் எல்லா காட்சிகளிலும் கைதட்டலாம்..
வில்லன் கும்பலின் கொடுரதனத்தை காட்ட பார்க்கிங்கில் கையை வெளியே காட்டுபவனின் கையை வெட்டுவது என சில விஷயங்களில் கொடூரம்...
ரொம்பநாளைக்கு அப்புறம் துப்பாக்கிகளை அதிகம் நம்பாமல் தற்காப்புகலைகளை பயண்படுத்தி போடும் சண்டைகாட்சிகள் ரொம்ப அற்புதம்...
இற்த
படம்2007 ஆம் ஆண்டு வெளியானது... அடங்கொய்யல. இப்படி சொன்னா என்ன
அர்த்தம்..?? நான் இப்பதான் இந்த படத்தை பார்த்தேன் என்று அர்த்தம்....
கடைசி பத்து நிமிடம் நடக்கும் அந்த கைகலப்பு சண்டைகாட்சிக்கா இந்த படத்தை தவறாமல் பாருங்கள்.,.. மிக அற்புதமான சண்டைக்காட்சி
=======================
படக்குழுவினர் விபரம்...
Directed by Wilson Yip
Produced by Nansun Shi
Donnie Yen
Written by Szeto Kam-Yuen
Nicholl Tang
Starring Donnie Yen
Louis Koo
Collin Chou
Lui Leung-Wai
Fan Bingbing
Music by Chan Kwong-Wing
Cinematography Cheung Man-Po
Editing by Cheung Ka-Fai
Distributed by Hong Kong:
Mandarin Films Distribution Co. Ltd.
China:
Polybona Films
Singapore:
Golden Village Pictures
United States:
The Weinstein Company
Dragon Dynasty (DVD)
Release date(s) Hong Kong:
9 August 2007
China:
3 August 2007
Taiwan:
18 August 2007
Singapore:
2 August 2007
United States:
14 March 2008 (limited)
Running time 88 min.
Country Hong Kong Hong Kong
Language Cantonese
Budget HK$10,000,000
==========================
படத்தின் டிரைலர்....
===========================
பைனல்கிக்..
இந்த படம்ஆக்ஷன் பிரியர்கள் அவசிய்ம பார்க்க வேண்டிய படம் அந்த கடைசி பத்து நிமிடம் சண்டைகாட்சிக்கா பார்க்க வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக