இந்த படம் ஆர்ரேட்டிங் படம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்....
சமீபத்தில் நீங்கள் எந்த படத்தின் சாயலும் இல்லாமல் எந்த படத்தையும் எடுக்க முடியாது என்று பாலுமகேந்திரா சொல்லி இருக்கின்றார்...
என்
அப்பாவின் அம்மாவின், சித்தப்பாவின், பழகிய ,கேட்ட, ரசித்த,படித்த
விஷயங்களின் சாயல் இல்லாமல் யாரும் படமே எடுக்க முடியாது
என்றார்....உங்களால் விமர்சனத்தை பொருட்படுத்தாமல் படம் எடுங்கள் என்று
சொல்லி இருக்கின்றார்..அவரது சீடர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் தன்னை
பாதித்த படங்களின்... பாதிப்பால் இந்த படம் என்று படம் முடிந்து ஒரு
டைட்டில் போட்டு கிரேடிட் கொடுத்து நல்ல தொடக்கத்தை தொடங்கி
வைத்தார்.......
கதாநாயகி காலில் ஆணி குத்திக்கொண்டதும்.. அதிலும் ரத்தம் வழிந்த காட்சியை பார்த்ததும்... ஓகே..தமிழ் மைனா ஹாங்காங்கில் இருந்து பறந்து வந்து இருப்பதை கண்டுகொண்டேன்....
=================================
DOG BITE DOG-(2006)உலகசினிமா/ ஹாங்காங் படத்தின் கதை என்ன??
கம்போடியரிவில்
பணத்துக்காக எதையும் செய்யும் இளைஞன்... எதையும் என்றால் கொலை
கூட...காரணம் பசிதான் பிரதானம்... எதிராளியை அடித்தால்தான் நல்ல சோறு
தின்ன முடியம்..எது தேவையோ அதுவே தர்மம் என்பதை கொள்கையாக வைத்து
இருப்பவன்..வாடிவாசலில் கொம்பு சீவி போட்டிக்கு தயாராக இருக்கும் மாடுகள்
போல மனிதர்களை தயார் செய்து ஒரு பெரிய போட்டி
இடத்தல் இருவரில் அடித்து யார் வெற்றி பெருகின்றார்களோ அவர்களுக்கு பணம்
அப்படி ஒரு பின்புலத்தில் இருக்கம் அவனை ஹாங்காங்கில் ஒரு கொலை செய்ய
அழைப்பு வருகின்றது...
ஹங்காங்கில் ஒரு
ஓட்டலில் சாப்பிட வந்த பெண்மணியை கொலையும் செய்கின்றான்...ஹாங்காங் போலிஸ்
அவனை கைது செய்கின்றார்கள்.. அதில் இருந்து அவனை ஒரு வெய் என்ற
இன்ஸ்பெக்டர் துரத்துகின்றான்... போலிஸ் பக்கம் பயங்கர இழப்பு காரணம்
பயபுள்ளை கொலை பண்ண தயங்கவே மாட்டான்... அப்படி இருக்கும் அவனுக்கு ஒரு
பெண்ணின் சினேகம் கிடைக்கின்றது... அந்த பெண்ணை அவள் அப்பாவே புணருவதை
பார்த்த பிறகுதான் அந்த பெண்ணுக்கு உதவி செய்கின்றான். அது காதலாக
மாறுகின்றது... போலிஸ் துரத்துகின்றது.. அவனும் அந்த பெண்ணும் என்னவானர்கள்.. திரையில் பாருங்கள்...
==========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
இந்த படம் தமிழில் வந்த மைனா படத்தை இந்த படத்தை பார்த்து கொஞ்சம் கொஞ்சம் நம்ம நேட்டிவிட்டிக்கு மாற்றி எடுத்து இருக்கின்றார்கள்...
இந்த படத்தின் டோன் முழுவதும் டார்க்க ஆக மற்றும் மஞ்சளாக இருக்கும்.. இந்த படம் ஒரு neo-noir வகை படம்....
neo-noir வகை படம் என்றால் சமுகத்தின்
கருப்பு பக்கங்களை சொல்லும் படம் என்று அர்த்தம்.. தமிழில் அதுக்கு
உதாரணம்... புதுப்பேட்டை மற்றும் இப்போது ரிலிசான ஆரண்யகாண்டம்..
காலில்
ஆணி குத்தி அந்த பெண்ணை மருத்தவமனை தேடி முதலில் பல் டக்டரிடம் போய்
அப்புறம் என்று பல டுவிஸ்ட்டுகள் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்..
இந்த படத்தின் கிளைமாக்ஸ் இதயத்தை கொஞ்சம் கணக்க வைக்கும்...
படத்தில் , ரத்தம், வெட்டு, எல்லாம் அதிகம் அதிகம்...
அந்த
பெண்ணுடன் எற்படும் சினேகம் ஏற்படும் பல காட்சிகள் நல்ல ரசனை.. அதே போல
போலிஸ் பக்கம் சேதம் அதிகம் என்பதால் கிடைத்த விட்னஸ் எல்லாரையும் போட்டு
சாத்து சாத்துவதை பார்க்கும் போது போலிஸ் ஆல்வேஸ் போலிஸ்தான்.. போல.... அதுக்கு நாடுகள் எல்லைகள் ஒரு பொருட்டு அல்ல ...
போலிஸ் பாத்திரத்தில் குற்றவாளியை வெறிக்கொண்டு தேடும் போலிஸ் வெய் காதாபாத்திரம் அசத்தல் அந்த வெறி...உண்மை..
இயக்குனர் Cheang Pou-Soi வெறிகொண்ட மட்டும் ஒரு படத்தை எடுத்து இருக்கின்றார் தலைப்புக்கு பொருத்தமானது போல......
========
படம் திரையிடபட்ட விழாக்கள்....
The
Film played later that year at the Tokyo International Film Festival.
In 2007, the film played at the Deauville Asian Film Festival, the
Amsterdam Fantastic Film Festival, the New York Asian Film Festival,
the Fantasy Film Fest (Germany) and the Fantasia Festival in Montreal.
========
படக்குழுவினர் விபரம்..
Directed by Cheang Pou-Soi
Produced by Sam Leong
Shin Yoneyama
Written by Szeto Kam-Yuen
Matt Chow
Melvin Li
Starring Edison Chen
Sam Lee
Cheung Siu-Fai
Lam Suet
Music by Ben Cheung
Cinematography Fung Yuen-Man
Editing by Angie Lam
Distributed by Art Port
United States:
Dragon Dynasty (DVD)
Release date(s) August 17, 2006
Country Hong Kong
Language Cantonese
Khmer
===================
படத்தின் டிரைலர்..
======================
பைனல்கிக்..
இந்த படம் வன்முறை அதிகம் கொண்ட படம்...இந்த படம் தமிழில் மைனாவாக சில பல மாற்றங்களுடன்... வந்து இருக்கின்றது...ஏற்கனவே பார்த்த முடிச்சிகள் என்பதால் இது பார்க்கவேண்டியபடம்..இது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக