24 செப்டம்பர், 2011

In Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ்-மகன் வயதில் ஒரு கொலைக்காரன்..



மங்காத்தா படத்துல அஜீத் கேரக்டர் எப்படி??



படத்துல அஜீத் கெட்டவன்சார்..




ஏன் கெட்டவன் ஆனார்..??



சார் படத்துல அஜீத் கெட்டவன்..அவ்வளவுதான்...



குட் எந்த பிளாஷ் பேக்கும் இல்லையா ?.



இல்லை சார்...



ஒரு கெட்டவன் கெட்டவன் தான் அதுக்கு எந்த பிளாஷ் பேக்கும் தேவையில்லை.. இன்னும் எத்தனை நாளைக்குதான் தமிழ்சினிமா கெட்டவன் என்றால் கெட்டவன் என்று தைரியமாக சொன்னது இல்லை.. அவன் நல்லவன்தான்... ஆனா சில பிரச்சனை அவன் வாழ்க்கையில் நடந்து விட்டதால் அவன் கெட்டவன் ஆயிட்டான் என்பதாகவே பலகதைகளில் கதாபாத்திரங்கள் சித்தரிக்கபடுகின்றன....இந்த பிரெஞ் படத்துல ஒரு கேரக்டர் சித்தரிக்கபடுது... அவன் கெட்டவன்..  அவன் ரொம்ப கெட்டவன் அவ்வளவுதான்.

============



In Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ் படத்தின் கதை என்ன?-



சாரா ஒரு நர்ஸ் அவளுடைய டீன் ஏஜ் பையன் வீட்ல நடக்கும் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போறான்..ஒரு நாள் நைட் ஆஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வரும்  போது ஆர்தர்ன்னு ஒருத்தன் சாராகார்ல வந்து விழறான்..

காரணம் அவனை யாரோ துரத்துராங்க... அவனை காப்பாற்றுகின்றாள்.. அவன் அவளது இறந்த மகனின் வயதை ஒத்து இருக்கின்றான்..ஆனால் அவன் கொடுர கொலைகாரன்.. முடிவு என்ன? திரையில் பாருங்கள்..



====================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...



மகன் இறந்து போனதால் தூக்கம் இல்லாமல் தவிக்கும் சாராவின் பாத்திரத்தில் நடித்து இருக்கும் பெண்மணி கச்சிதமாக  நடித்து இருக்கின்றார்..



ஆர்தர் ஒரு கொடுர கொலைக்காரன்..இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப்ப கொலை செய்பவன்.........



நான் லீனியர் டைப் திரைக்கதையில் இரண்டு விதமாக கதை சொல்லுகின்றார்கள்..



படத்தில் சில டுவிஸ்ட்டுகள் சுவாரஸ்யபடுத்துகின்றன..



ஆர்தரை மகன் போல நினைத்தே பல விஷயங்களை பொறுத்துக்கொண்டாலும் அவன்  சாராவை கிஸ் செய்ய வரும் போது விளக்குவது கவிதை...



கடைசியில் சோகமாய் ஒரு முடிவு.....



===============

படக்குழுவினர் விபரம்




Directors:
Caroline du Potet, Éric du Potet
Writers:
Caroline du Potet, Éric du Potet
Stars:
Anne Parillaud, Arthur Dupont and Thierry Frémont

=========

படத்தின் டிரைலர்




=========

பைனல்கிக்...

இந்த டைம் பாஸ் படம்தான் ... ஆனால் சின்ன சின்ன டுவிஸ்ட்டுக்காக பார்க்க வேண்டிய படம் .

கருத்துகள் இல்லை: