இந்தபடம் மற்றும் இந்தபதிவு பொது இடத்தில் படிக்க உகந்தது அல்ல..கண்டிப்பாக வயதுக்கு வந்தோருக்கானது..ஆர் ரேட்டிங் படம்......
=========
தெளிய வைத்து அடித்தல் என்றால் என்ன??
ஒருவன் தவறு செய்து விட்டான்...ஒருவனை அடித்துக்கொண்டு இருக்கின்றோம்.. அவன்
அடி வாங்கி,அடி வாங்கி மயக்க நிலைக்கு போய் விட்டான் என்று
வைத்துக்கொள்வோம்...அப்போது அவனை அடித்தால் அவனுக்கு வலி தெரியுமா?,
தெரியாது... அடிக்கும் பர்பஸ் வேஸ்ட் அல்லவா?? சரி...
மயக்க நிலையில் இருக்கும் அவனை
அடித்து என்ன பயன்...?? மயக்கத்தில் இருக்கும் அவன் மீது தண்ணீர்
தெளித்து, மயக்கம் தெளிந்த உடன் அடித்தால், நாம் அடிப்பதில் அர்த்தம்
இருக்கும் அல்லவா-?? இதற்கு பெயர்தான் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தல்...
இன்னும்
புரியலை என்றால் அவ்வை சண்முகி படத்தில் முதலியார் மணிவண்ணன் அவ்வை
சண்முகியை பின் தொடரும் டெல்லிகணேஷை பாஜாரில் சட்டையை பிடித்து போட்டு
சாத்து சாத்து என்று சாத்துவதை பார்த்து விட்டு வரவும்...
பாதாங்கொட்டை
பொறுக்க போன பையனை தலையில் சுட்டு சாவடிப்பவர்களும் இருக்கின்றர்கள்....
பல கொலை செய்த சைக்கோவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் என்று சொல்லூபவர்களும் உண்டு...
கர்பினியான காதலியை ரேப் செய்து, துண்டு துண்டாக வெட்டி வீசும் சைக்கோ கொலையாளியை, கண்டு பிடித்து தப்பிக்க விடுவீர்களா?
அது எப்படி தலைவரே முடியும்...ங்கோத்தா என் கைல அந்த நாரக்........மவன் கிடைச்சா கைமா பண்ணிடுவேன்..புள்ளத்தாச்சி பொண்ணை ரேப் செஞ்சவனை சும்மா விட சொல்லறியா??
கூல் மேன்.. கூல் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் இல்லையா-.??? அது என்னன்னு பார்க்கலாம்..
=========================
I Saw the Devil-2010/உலகசினிமா/கொரியா/படத்தின் கதை என்ன??
ஜோ ஒரு கர்பிணி பெண்(Oh San-ha)...
காரில் தன் வீட்டுக்கு வரும் போது இரவு பனி மழையில் கார் நககராமல்
வண்டித்தனம் செய்ய, உதவி செய்ய வருவது போல் வரும் குயூங் என்பவன்.. ஜோவை
ரேப் செய்து கொலை செய்கின்றான் அந்த சைக்கோ....
ஜோவின் அப்பா ஒரு டிடேக்டிவ், அந்த பெண்ணின் காதலன் பெயர் சூ (Lee Byung-hun)
அவன் ஒரு சிக்ரேட் ஏஜென்ட்...அந்த பெண்ணை மட்டும் அல்ல அதன் பின்னும் தன்
கைவரிசையை பெண்களிடம் காட்டும் சைக்கோ குயூங்கை வெறித்தனமான,
கொலைவெறியோடு, தேடிப்பிடித்து (Choi Min-sik) கொள்ளாமல் சின்ன சின்ன காயங்கள் உருவாக்கி அவனை தப்பிக்க விடுகின்றான்....ஏன்...?
சைக்கோ குயிங் ரொம்ப புத்திசாலி என்பதும் உயிரோடு விட்டது ரொம் தப்பு என்று சூவுக்கு உரைக்கும் போது எல்லாம் எல்லை மீறி போய் விடுகின்றது.. அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்நதுக்கொள்ளுங்கள்..
==========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
ரொம்ப ரொம்ப காண்ட்ராவர்சியலான இந்த படம் கொரிய மொழி படம் கொரியாவுலே பல இடங்களில் கத்திரிக்கு இரையாகி ஆர் ரேட்டிங் முத்திரையோடு வெளி வந்த படம் இந்த படம்..
இந்த
படத்தின் இயக்குனர் குட் பேட் தி விசார்ட் படத்தை இயக்கியவர்.. குட் பேட்
அக்லி என்ற கிளசிக் படத்தின் கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மிக
அழகாக இயக்கிய அந்த படத்தை யாரும் தவற விடாதீர்கள்.. அந்த படத்தை
பார்க்கும் போது இயக்குனர் Kim Ji-woon ஆசியாவின் தவிற்க்க முடியாத இயக்குனர் என்பது உங்களுக்கு புரிய வரும்...
ஒரு
பெண் கொலையாகின்றாள்.. அவள் உடல் பாகங்கள் கண்டு எடுக்கப்படுகின்றன....
மொத்தம் 20 நிமிடங்கள் இடம் பெறும் இந்த காட்சிகள், நம்மை அந்த இடத்துக்கு
அழைத்து செல்லும் காட்சி....
உதாரணத்துக்கு
கர்பினி பெண் ஜோ கெடுக்கப்பட்டு அரைமயக்கத்தில் இருக்கும் போது அவளை வெட்ட
அந்த சைக்கோ குயூங் ஆயதங்களை எடுப்பதை பார்த்து விட்டு.. அரைமயக்கத்தில்
இருக்கும் ஜோ, அந்த சைக்கோவிடம்.. என்னை கொல்லாதே.. நான் கர்பமாக
இருக்கின்றேன் என்று சொல்லி முடிக்கும் போது ஓங்கி கத்தியால் அவள் கையை
வெட்டுவது போலான காட்சியை இயக்குனர் வைத்தால் என்ன செய்வார்கள்.. நிறைய
இடத்தில் கத்தரியை போடத்தான் செய்வார்கள்..
ஆனால்
மேலே சொன்ன உதாரண காட்சியில் கெடுப்பதை காட்ட மாட்டார்கள்..துண்டு துண்டாக
வெட்டுவதை காட்டமாட்டார்கள்.. எல்லாமே லீட் ஷாட்தான்...இதைதான்
கொலைக்காரன் செய்து இருப்பான் என்று உணர்த்தும் காட்சிகளை அப்படி
இலைமறைக்காய்மறைவாக எடுத்தாலும், நமக்கு பீ பி ஏறுவது நிஜம்..
4
பேர் தன் காதலியைகொன்று இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகபடுபவர்களை
தேடிப்பிடித்து அவர்களை அழிப்பதும் அதில்ஒரு ரேப் செய்யும் குற்றவாளியை
கட்டி போட்டு அடித்து கர்பினி ஜோவின் போட்டோவை காட்டி இவளை உனக்கு
தெரியுமா? என்று கேட்க? எனக்கு தெரியாது என்று சொல்ல சரி போக போகின்றான்
என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பைப் ரேஞ் எடுத்துக்கொண்டு வந்து அந்த ரேப் குற்றவாளியின் குஞ்சை அடித்தே நசுக்கும் காட்சி.. யப்பா...அந்த காட்சியை பார்த்தா இனி எவனும் ரேப்பே செய்யமாட்டான்...
சைக்கோவாக
நடித்து இருப்பவர் ஓல்ட் பாய் கொரிய படத்தில் மெயின் ரேக்டரில் நடித்து
இருப்பவர்... சைக்கோ கேரக்டரை மிக கணக்கச்சிதமாக செய்து இருக்கின்றார்...
வல்லவனுக்கு வல்லவனாக அந்த சைக்கோ கேரக்டர் இருப்பதே இந்த படத்தை வித்யாசப்படத்தி காட்டுகின்றது.
படத்தின்
சின்ன டுவிஸ்ட்டாக மனித கறி தின்னும் இன்னோரு சைக்கோ நாளைக்கு
சாப்பாட்டுக்கு இன்னைக்கே ரெடி செய்யறேன். என்று சொல்லி விட்டு முத்திய
பிராய்லர் கோழியை பார்ப்பது போல ஒரு இளம் பெண்ணை வெட்டி துண்டு போட அழைத்து வரும் காட்சி செம டுவிஸ்ட்...
இன்னும் படத்தின் சுவாரஸ்யங்களை சொன்னால் படம் பார்க்கும் போது இண்ட்ரஸ்வராது என்பதால் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்..
சரி
இருந்தாலும் சைக்கோவை தப்பிக்க விட்டு விட்டு ஒரு நர்சை ரேப் பண்ண
முயற்சிக்கும் போது ஹீரோ பூந்து குட்டையை குழப்பும் காட்சி செமை....
படம் முடிந்ததும் யாரோ ஒருவர் நச்சு நச்சுன்னு நடு மண்டையில அடிச்சி தும்வம் செய்வது போல இருப்பது இயக்குனரின் வெற்றி....
============================
இந்த படம் கலந்து கொண்ட விழாக்கள் மற்றும் விருதுகள்..
Awards and nominations
2011 47th Paeksang Arts Awards[11]
Grand Prize Award for Film - Lee Byung-hun
2011 17th FANT-Bilbao Fantasy Film Festival[12]
Official Selection Best Film
2011 29th Brussels International Fantastic Film Festival[13]
Golden Raven
2011 5th Asian Film Awards[14]
Best Editing – Nam Na-young
2011 31st Fantasporto Film Festival[15]
Fantasy section Best Director - Kim Ji-woon
Orient Express sidebar Best Film
2010 31st Blue Dragon Film Awards
Best Cinematography – Lee Mo-gae
Best Music – Mowg
Best Lighting – Oh Seung-chul
Nomination – Best Leading Actor – Lee Byung-hun
Nomination – Best Art Direction – Jo Hwa-sung
Nomination – Technical Award – Jung Do-ahn, Lee Hee-kyung
2010 13th Director's Cut Awards
Best Actor – Choi Min-sik
2010 47th Grand Bell Awards
Best Lighting – Oh Seung-chul
Nomination – Best Actor – Lee Byung-hun
Nomination – Best Actor – Choi Min-sik
Nomination – Best Film
2011 47th Paeksang Arts Awards[11]
Grand Prize Award for Film - Lee Byung-hun
2011 17th FANT-Bilbao Fantasy Film Festival[12]
Official Selection Best Film
2011 29th Brussels International Fantastic Film Festival[13]
Golden Raven
2011 5th Asian Film Awards[14]
Best Editing – Nam Na-young
2011 31st Fantasporto Film Festival[15]
Fantasy section Best Director - Kim Ji-woon
Orient Express sidebar Best Film
2010 31st Blue Dragon Film Awards
Best Cinematography – Lee Mo-gae
Best Music – Mowg
Best Lighting – Oh Seung-chul
Nomination – Best Leading Actor – Lee Byung-hun
Nomination – Best Art Direction – Jo Hwa-sung
Nomination – Technical Award – Jung Do-ahn, Lee Hee-kyung
2010 13th Director's Cut Awards
Best Actor – Choi Min-sik
2010 47th Grand Bell Awards
Best Lighting – Oh Seung-chul
Nomination – Best Actor – Lee Byung-hun
Nomination – Best Actor – Choi Min-sik
Nomination – Best Film
=====================================
படக்குழுவினர் விபரம்...
Directed by Kim Ji-woon
Produced by Kim Hyung-woo
Jo Sung-won
Kim Jae-young
Kim Jung-hwa
Written by Park Hoon-jung
Starring
Lee Byung-hun
Choi Min-sik
Music by Mowg
Cinematography Lee Mo-gae
Editing by Nam Na-young
Studio Showbox/Mediaplex
Distributed by Showbox/Mediaplex
(South Korea)
Magnet Releasing
(US)
Release date(s) August 12, 2010 (South Korea)
March 4, 2011 (United States)
Running time 144 minutes
Country South Korea
Language Korean
Gross revenue $12,132,588
============================================
படத்தின் டிரைலர்..
==================================
பைனல்கிக்...
இந்த
படத்தின் திரைக்கதை தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை என்றாலும்
நாயகினின் சிவபூஜையில் கரடி லாஜிக் நிச்சயம் ரசிக்க வைக்கின்றது...ஆனால்
அதையும் அசால்ட்டாக மீறும் சைக்கோ படத்தின் இரண்டாம் பகுதி சேசிங்
சுவாரஸ்யம்...
கண்டிப்பாக இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக