உயிரை கொடுத்து வேலை செஞ்சேன் மச்சான்.... இப்படி ஒரு டயலாக்கை நம்மில் நிறைய இடத்தில் கேட்டு இருப்போம்.... அப்படி உயிரை கொடுத்து வேலை செஞ்சு இருந்தா...? பேச அவன் இருக்கமாட்டான்..... ஆனா அந்த வேலை எவ்வளவு சிரமம்?... அது எந்த அளவுக்கு பெண்டை கழட்டிச்சின்னு சொல்லத்தான் அந்த வாக்கிய பிரயோகம்......
பட் உயரைக்கொடுத்து வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்... அணுஉலைகளில், இராணுவத்தில், பாம்ஸ்குவார்டில் என்று கரணம் தப்பினால் எந்த நேரத்திலும் உயிர் போய்விடும் என்று தெரிந்து வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்...
மாபியா,உளவுத்துறை போன்றவற்றில் பல ரகசியங்கள் கட்டிக்காக்க பல உயிர்கள் பலி ஆகி இருக்கின்றன..உதாரணத்துக்கு உங்க கிட்ட ஒரு வேலை கொடுக்கின்றேன்.. அதாவது ஒரு சாதாரண சூட் கேசை காட்டி,இந்த சூட் கேஸ் உன் உயரே போனாலும் திருடு கொடுக்க கூடாதுன்னு சொல்லறேன்.. அதுக்கு நீங்க என்ன சொல்விங்க....? அதுக்கு உள்ள என்ன இருக்குன்னு கேட்பிங்களா? மாட்டிங்களா?? காரணம் உயிரே போனாலும்னு ஒரு வார்த்தையை வேற நான் உபயோகபடுத்தி இருக்கேன்... கண்டிப்பா கேட்பிங்க? அதுதான் மனிதமனம்....
நான் சூட்கேசில் என்ன இருக்கின்றது என்று சொல்லவில்லை என்றால் நான் சொன்ன வேலையை நீங்க செய்வீர்களா??? சான்சே இல்லை....
மச்சி அந்த பருப்பு ஒரு சூட்கேஸ் கொடுக்குமாம்? அதுல என்ன இருக்குன்னுகூட சொல்லாதாம்....ஆனா உயிரே போனாலும் அதை எதிரிங்க கிட்ட இருந்து பாதுகாக்கனுமாம்.... என்னய்யா நியாயம் இதுன்னு என்கிட்ட எதிரில் முனகாமல் பின் பக்கம் போய் முனகலாம்...
பட் இந்த சூட் கேஸ் எதிரிங்க கிட்ட சிக்காம கொண்டு போய் சேர்த்துடுன்னா? தலையால செஞ்சுமுடிக்க இந்த உலகத்தில் ஆட்கள் இருக்கின்றார்கள்..... அப்படி ஒரு சூட்கேஸ்ல ரொம்ப முக்கியமான ரகசியம் இருக்கு...ஆனா என்ன இருக்குதுன்னு தெரியாம ஒரு கேங் அதை காப்பாற்றுகின்றது...ஒரு கேங் அதை கொள்ளை அடிக்குது.....
====================================================
RONIN-1998 ரோ படத்தின் கதை என்ன???
முதலில் ரோனின் அப்படின்னா என்னன்னு நாம தெரிஞ்சிக்கனும் இல்லையா??எந்த கலைக்கும் ஒரு குரு அவசியம்... அதே போல ஜப்பானின் சமுராய் கலைக்கு குரு மிகவும் முக்கியம்.. பட் குரு இல்லாமல் சமுராய் கலையில் தேர்ந்தவருக்கு ரோனின் என்று பெயர்...
சாம் (ராபர்ட் டி நீரோ) வின்சென்ட் (ஜேன் ரீனோ) டெயர்டிரி (நடாஷா) என ஐந்து புரோபஷனல் பய புள்ளைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து ஒரு சூட்கேசை ஆட்டைய போடனும்.... அந்த சூட்கேசை ஆட்டையை போடனும்னா? என்ன என்னவெல்லாம் செய்யனும்னு சாம் தலைமையில் திட்டம் போட்டு அந்த சூட்கேசை கொள்ளை அடிக்கறாங்க... ஆனால் அதில் நம்பிக்கை துரோகம், கொலைகள், கார் துரத்தல்கள், என போய் கடைசியாக அந்த சூட்கேசை அபிட் விட்டார்களா? என்பதே மீதிக்கதை...
===============================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
ராபர்ட் டி நீரோ,ஜேன் ரேனோ இரண்டு பேருமே நடிப்பில் அசத்துபவர்கள்.. இந்த படத்தில் பின்னி இருப்பார்கள்.. முக்கியமாக குண்டுகாயம் பட்டு நீரோ படுக்கையில் கிடக்கையில் அதன் பிறகு இருவருக்கும் ஏற்படும் காதலான நட்பு அசத்தல்...
பெட்டியை அடிக்க போடும் திட்டங்கள் ரொம்ப அருமை முக்கியமாக பெட்டிக்கான பாதுகாப்பு என்ன? எத்தனை பேர்? போன்ற விபரங்களை கேமராவில் புதுமணதம்பதிகள் போல பதிவு செய்வது அருமை..
எதிரி வீட்டை நோட்டம் விடுகையில் ஒரு கார் கடக்கும் போது நீரோ, நடாஷாவுக்கு ஒரு லிப் லாக் பண்ண....அந்த தனிமை அந்த இருள் என்று அந்த சின்ன ஷாட்டில் நடாஷா வெளிபடுத்தும் சின்ன சின்ன உணர்வுகள் அற்புதம்... முதலில் நடாஷா உதடு துடைத்து விட்டு நீரோவை பார்க்க பின்பு நிரோவும் உதடு துடைத்து விட்டு ரோட்டை பார்க்க... நிரோ எதிர்பாராத நேரத்தில் அவர் மேல் பாய்ந்து வந்து உடகார்ந்து கிஸ் பண்ணும் காட்சி நல்ல காதல் காட்சி....
1998 ல் வந்த இந்த படத்தை ஆங்கிலம் எனக்கு அதிகம் புரியாத அன்றைய நாட்களில் நான் ரசித்து பார்த்த படம் (இன்னைக்கு மட்டுமம் என்னவாம் என்று எனது மனசாட்சி கேட்பதை புறம் தள்ள முடியவில்லை..)
அந்நாளில் ஆங்கிலம் தெரியாவிட்டாலும் நான் ரசித்து பார்க்க மிக முக்கியமான காரணம் இந்த படத்தில் இருக்கும் கார்சேசிங்தான்..
20 நிமிடங்களுக்கு வரும் இரண்டு கார்சேசிங் காட்சிகள் மயிரை நட்டுக்க வைக்கும்.. (எத்தனை நாளைக்குதான் மயிர்கூச்செரியும்னு எழுதறது....)
இன்னைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை விட அன்னைக்கு அந்த காட்சிகள் எடுக்க மேனெக்கெட்டு இருப்பதை பார்த்து மூக்கில் விரல் வைப்பீர்கள்...ஒரு ஷேக் இருக்காது....
இந்த படத்தில் எடிட்டிங்கில் வைப் மற்றும் டிசால்வ் கட் எந்த இடத்திலும் யூஸ் செய்யவில்லை.....
கார் சேசிங்கின் போது அந்த காரின் சவுண்டைய அதாவது ரியல் சவுண்டைய பயண்படுத்தினார்கள்... அதாவது சேசிங்கல் பின்னனி இசை சுத்தமாக கிடையாது.. அதனால் நீங்கள் காரில் பயணிப்பது போலவே இருக்கும்.
நைஸ் மற்றறும் பாரிஸ்சில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்...
இந்த படத்தின் இயக்குனர் ஜான்பிரரன்க்மீர் முன்னால் கார் ரேஸ் டிரைவர் என்பதால் கார் சேசிங் காட்சிகள் கூடுதல் பலம்..
300 ஸ்டன்ட் கார் டிரைவர்கள் வைத்து கார்சேசிங் காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்...
மொத்தம் 2220 ஷாட்டுகள் இந்த படம் திரைப்படமாக உதவிஇருக்கின்றது...
பாரிசின் பல சுரங்க பாதைகளில் கார்சேசிங் காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்... அதில் ஒன்று இளவரசி டயனா விபத்தில் சிக்கிய சுரங்கபாதையும் ஒன்று.....
இயக்குனர் ஜான் பிராங்மீர் 1957ல் இருந்து திரைபடங்கள் இயக்க ஆரம்பித்து 2002ல் தனது 72 வயதில் பேத் டூ வார் என்ற திரைப்படத்தை இயக்கி கொண்டு இருக்கும் போது ஸ்பைனல்கார்டில் செய்த ஆபரேஷன் காரணமாக ஸ்டோக்கில் இறந்து போனார்....
கடைசி வரை இயக்குனர் அஸ்கார் அவர்ர்டு வாங்கவில்லை...ஆனால் அவர் வாங்கிய விருதுகள்...கீழே... ஆஸ்கார் விருது வாங்கிளால் என்ன? வாங்கா விட்டால் என்ன??? சென்னையில் ஒருவன் கடல் கடந்து இயக்குனர் ஜானை பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றேனே.. அந்த புகழ் ஒன்று போதும்....
படக்குழுவினர் விபரம்..
directed by John Frankenheimer
Produced by Frank Mancuso Jr.
Screenplay by David Mamet
Story by J.D. Zeik
Starring Robert De Niro
Jean Reno
Natascha McElhone
Stellan Skarsgård
Sean Bean
Jonathan Pryce
Music by Elia Cmiral
Cinematography Robert Fraisse
Editing by Tony Gibbs
Studio FGM Entertainment
United Artists
Distributed by Metro-Goldwyn-Mayer
Release date(s) September 12, 1998 (Venice Film Festival)
September 25, 1998 (United States)
Running time 121 minutes
Country United States
Language English
Budget $55 million
Gross revenue $290 million
================
படத்தின் டிரைலர்....
பைனல்கிக்.....
இந்த படம் மூன்று பாட்ங்களை நமக்கு கற்றுக்கொடுக்கின்றது....
பாடம்...1
நம்பிக்கை என்பது வேறு.. சந்தேகம் என்று வந்து விட்டால் தீர்த்து கட்டிவிட வேண்டும்...
பாடம்..2
தேவையில்லாத கேள்விகள், தேவையில்லாத பதில்கள் மறந்து விட வேண்டும்...
பாடம்..3
நம்பிக்கையை முன் வைத்து சில விஷயங்களில் நாம் பயணபட்டுத்தான் ஆக வேண்டும்.. இந்த மூன்று லசன்களும் படத்திட்ன காட்சிகள் ஊடே இயக்குனர் சொல்லி இருப்பார்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக