24 செப்டம்பர், 2011

RYNA –(2005) உலகசினிமா/ரோமானியா


உங்கள் பெண் பிள்ளைக்கு தலையில் முடி அதிகம் வளர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..??
 
இது என்ன சார் கேள்வி.. பொம்பளபுள்ளைக்கு முடிதான்சார் அழகு...

சரி.. அந்த பெண் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்று  சொன்னால் எதிர்ப்பீர்களா??

எங்க சார் இப்ப இருக்கும் பயபுள்ளைங்க கேட்குது?? பியூட்டி பார்லர்னு போயி சரிசமமா முடியை கட் செஞ்சி விட ஆயிரம் ரூபாய் தென்டம் அழுதுட்டு வருதுங்க... எந்த கேள்வியையும் என்னால்  கேட்க முடியறதில்லை.. அப்படியே எதாவது கேட்டா?? டாடி இது எல்லாம் உங்க காலம்னு கிடையாது என்று பதில் வருகின்றது..


சரிங்க வேறு என்னவெல்லாம் உங்க வயதுக்கு வந்த பெண் செய்துகிட்ட எதிர்ப்பிங்க...??,

லிப்ஸ்ட்டிக் போட்டா எனக்கு பிடிக்காது???

ஏன் சார் உங்க பொண்ணு உதடு அழகா இருக்கும் அல்லவா??

ஜாக்கி நீங்க என்ன கேட்டங்க?? பிடிக்குமா?பிடிக்காதா??ன்னு கேட்டிங்க..அழகு அழகில்ல என்பது  வேற விஷயம் எனக்கு பிடிக்காது அவ்வளவுதான்..

உங்க பெண்ணுக்கு என்னதான் கஷ்டம் என்றாலும் உங்க வயதுக்கு வந்த பெண்ணுக்கு மிலிட்டரி  கட்டிங் மெஷின் போட்டு முடி வெட்டி விடுவிங்களா?

ஜாக்கி,வயசு பொண்ணை மிலிட்டரி  கட்டிங் போல முடி வெட்டி விட்ட பாக்க சகிக்காதே?? அது பாவமாச்சே??

ஒகே... ரோமரினியாவில் இருக்கும் ஒரு அப்பா ரெய்னான்ற தன் பொண்ணை ஆம்பளை பிள்ளை போல வளர்க்கனும்னு இப்படி எல்லாம் செய்யறார்.....

======================= 
RYNA –(2005) உலகசினிமா/ரோமானியா  படத்தின் கதை என்ன??

ரோமாணியாவில் ஆற்றின் கழிமுகத்துவரத்துக்கு அருகில் இருக்கும் சின்ன ஒரு நிலப்பரப்பில் சின்ன பெட்ரோல் பங்க் வைத்து நடத்தும் தம்பதிகளின் ஒரே பெண்  குழந்தை ரெய்னா..அந்த குடும்பத்தில் மொத்தம் நாலு பேர்தான்.. ரெய்னா அப்பா அம்மா, அப்பாவை பெற்ற தாத்தா ரெய்னா அவ்வளவுதான்...ரெய்னா அப்பா பெட்ரோல் பங்க் மற்றும்  கார் மெக்கானிக்.. அதனால் தன் பெண்ணை ஆன் போல உடை உடுக்க வைத்து  பள்ளிக்கு அனுப்பாமல் காரை ரிப்பேர் செய்ய அவளை உதவிக்கு வைத்துக்கொள்கின்றார்...

 ஒரு வகையில் அது சுயநலம்தான்... அந்த பெண் காதில் கம்மல் போட்டால் கூட எதிர்ப்புதான்...  கொஞ்சம் முடி வளர்ந்தாலும் மிஷின் வைத்து ஒட்ட கட் பண்ணி விடுவார்.. ரோட்டில் எதாவது வண்டி ரிப்பேர்  ஆகி விட்டால் ரெய்னாவிடம் ஒரு டூல் கிட் கொடுத்து ஒரு சைக்கிளையும் கொடுத்து காரை ரெடி பண்ணி கொடுத்து விட்டு வரச்சொல்லுவார்...அப்படித்தான் அவளுக்கு ஒரு டாக்டரும் போஸ்ட்மேனும் பழக்கம் ஆகின்றார்கள்.. வீட்டில் வருமை பெட்ரோல் ஸ்டேஷன் மெயின் ரோட்டில் இருக்காமல் உள்ளே தள்ளி இருப்பதால் மெயின் ரோட்டுக்கு பெட்ரோல் பங்க் மாற்ற வேண்டும் என்றால் அந்த நகரின் மேயரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும்.... அந்த மேயருக்கோ.. ரெய்னா மீது கண்....ஒரு நான் ரெய்னாவின் அப்பாஹவம் மேயரும் குடித்து விட்டு வரும் போது நல்ல போதையில் ரெய்னா அப்பா இருக்கும் போது ரெய்னாவை மேயர் கெடுத்து விடுகின்றான்... ஆனால் ரெய்னா மறுநாள் காலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தாலும் மேயரை மாட்டி விடவில்லை.. காரணம்  என்ன என்பதை திரையில் பாருங்கள்...........

==========================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

ரொம்ப நாள் கழித்து உலக படம் பார்த்த ஒரு நிறைவை இந்த படம் எனக்கு கொடுத்தது...

படம் முழுக்க பச்சை பசேல் என்று காட்டாமல ஒரு வித எல்லோ டோனில் படம் முழுவதும்.....

என்னதான் மகள்மீது பாசம் இருந்தாலும் தன் கையாலாகத தனத்தை மகள் மீது திணிக்கும் ஒரு அப்பாவின்  கதையும் அதை எதிர்க்க துணிவில்லாமல் அடங்கி போகும் மகளுக்கான கதை இது..

முடி வெட்டும் போது மேல்  சட்டை கழட்டி விட்டு அரை நிர்வாணமாக உட்கார்ந்து முடி வெட்டிக்கொண்டு இருக்கும் ரெய்னாவும், அதனை பைனாகூலரில் பார்க்கும் விடலைகளை பார்த்த உடன் தன் வெற்று மார்பை ரெய்னாமுடிக்கொள்வதும் அந்த பெண்மைக்கு  உரிய காட்சியை விளக்கும் காட்சிகள் என்றாலும் வயதுக்கு வந்த பெண் அப்பா எதிரில் மெல் சட்டை இல்லாமல் அப்பாவுடன்  உட்காந்து முடிவெட்டிக்கொள்வதா? என்று இங்கு பெரிய எதிர்பே எழும்..

ரெய்னா ஒரு பனியன்... உள்ளாடை கூட உள்ளே போட மாட்டாள்.. ஒரு பேண்ட் அதுவும் மெக்கானிக் போட்டுக்கொள்ளும் பேண்ட் இதுதான் அவள் காஸ்ட்யூம்...

மொத்தம் எட்டு கேரக்டர்தான்... இதுதான் படம்...

ரெய்னாவுக்கு புகைபடம் எடுக்க பிடித்தாலும் அதை அனுமதிக்காத தந்தை...


எனக்கு இந்த படத்தில் எனக்கு பிடித்த கேரக்டர்.. ரேய்னா தாத்தா கேரக்டர்தான். .. இரவில் முதல் தளத்தில் இருந்து இரவில் ஒன்னுக்கு அடிப்பது... கற்பழிக்கபட்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து மருத்துவ உதவி செய்யாமல் அவளை உறுப்புகளை சுத்தம் செய்ய அவளை குளிக்க அழைத்து சென்று உடைகள் களைய முற்படுகையில் ரெய்னா தாத்தா வந்து தன் மகனை கெட் அவுட் என்று கத்திவிட்டு பேத்தியை மருத்துமணையில் சேர்த்து  சிகிச்சை கொடுப்பது அருமை...

அப்பாவின் மீது இருக்கும் கோபத்தை காட்ட என்ன செய்வது என்று  தெரியாமல் காருக்கு அடியில் படுத்துக்கொண்டு கதறுவது அருமை..


அம்மா போன ஊருக்கு மகள் போகின்றாள்...

ரெய்னா காதலித்த டாகடரும் அதே ஊர்...

போஸ்ட்மேன் மேயர் காரின் பிரேக்கின் கழட்டி விட்டு விடுகின்றான்.. என்று பல காட்சிகள் கதை ஓட்டத்தில் படத்தின் முடிவை சொல்லி விட்டு செல்லுகின்றார்கள்...

ரெய்னா கிளம்பும் போது அவள் அப்பா அவளை கட்டி பிடிப்பார்.. அப்போது என்னதான் பாசமாக அப்பாவாக இருந்தாலும் பாசமான புருசனாக இருந்தாலும் கையாலாகாத ஆண்மகனை எந்த பெண்ணும் மதிப்பது இல்லை....

இந்த படம் பல உலகபடங்களில் கலந்து கொண்டு பல விருதுகைளை பெற்றது...
 ========
படக்குழுவினர் விபரம்
 Director: Ruxandra Zenide
Writers: Marek Epstein, Ruxandra Zenide, and 1 more credit »
Stars: Doroteea Petre, Valentin Popescu and Matthieu Rozé
Country: Switzerland | Romania
Language: French | Romanian
Release Date: 24 November 2006 (Romania) See more »
Filming Locations: Danube Delta, Romania 

படத்தின் டிரைலர் ..


பைனல்கிக்...

இந்த படம் பார்த்தேதீரவேண்டியபடம்..மிக நாட்களுக்கு பிறகு உலக சினிமா தியேட்டரில் பார்த்த ஒரு எபெக்ட்... காரணம் மிக மெலிதாய் நகரும் காட்சி அமைப்புகள்..

கருத்துகள் இல்லை: