24 செப்டம்பர், 2011

Memories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வாழ்வில் மறக்கமுடியாத கொலைகள்...)



மறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா?? எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்...அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..



நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்... சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும்.

உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா??


பிடிக்காது...

ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல...

சரி கொலை செய்தால்... ??


நிச்சயம் பிடிக்காது...யாருக்குதான் பிடிக்கும்...

அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி... கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து  கொலை செய்தால்???


அவனை நிக்க வச்சி தூக்குல போடனும்....அவன் ....ன்னியை நசுக்கிடனும்... சரி கோபம் வருகின்றது... இது பொதுமக்களின் கோபம் சாதாரணமனிதனின் கோபம்....இதுவே சட்டம் ஒழுங்கை  காப்பாற்றும் காவல் துறையில்  இருந்தால்  எந்த ...........பையன்டா அவன் என்று அவனை கண்டுபிடிக்க அலைவீர்கள்.. அல்லவா???


அவன் பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்தால் கூட பரவாயில்லை கொலைக்கு முன் அந்த பெண்ணை படுத்தும் சித்தரவதைகளை பார்க்கும் போது   ரொம்ப கொடுமையானது... மார்பகத்தை அறுப்பது.. பெண்உறுப்பில் துர்பூசனி துண்டுகளை நுழைத்து வைப்பது..


ஒரு சின்ன படிக்கும் பெண்ணை கடத்தி கற்பழித்து  கொலை செய்து..அந்த பெண் டிபன் பாக்சில்  சாப்பிட வைத்து இருக்கும் முள் கரண்டி ,ஸ்பூன் போன்றவற்றை கொலையான  படிக்கும் பெண்ணின் பெண்உறுப்பில் பிரேதபரிசோதனையின் போது பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்??  அந்த பெண்ணை நேற்றுதான் உயிரோடு சந்தித்து இருந்தால்  உங்கள் கோபம் பன்மடங்காக மாறும் அல்லவா??

  இந்த படம் கதையல்ல இந்த படம் ஒரு உண்மை சம்பவம்.....


murders of memories-2003 உலகசினிமா/சவுத்கொரியா படத்தின் கதை என்ன..??

1986ல் இருந்து 1991வரை அதாவது இடைப்பட்ட இந்த 5 வருடங்களில் பத்து அப்பாவி  பெண்கள்... பெண்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக கொடுரமாக கடத்தி கற்பழித்து கொலை செய்யபடுகின்றார்கள்...

போலிஸ் 3000 பேருக்கு மேல் இன்வஸ்ட்டிக்கேஷன் செய்யறாங்க  ... ஒரு பப்பும் வேகலை..நம்ம ஊர் போலிஸ் போல தப்பு  செய்யதவனை எல்லாம் புடிச்சி நீ தானே செஞ்ச.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோன்னு கும்மறாங்க....அதுக்கு நடுவுல உண்மையான குற்றவாளியை தேடுறாங்க...

ஆனா ரெண்டு போலிஸ்காரங்க அந்த கொலையாளியை தேடுறாங்க...அவுங்க இல்லாம...


108 மில்லயின் போலிஸ்காரவுங்க எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு கருமமே கண்ணாக அந்த சைக்கோ டாகை தேடிகிட்டு இருக்காங்க.... ஆனா இன்னைக்கு வரைக்கும் அந்த சைக்கோவை பிடிக்க முடியலை.... இதுதான் கதை.. ஆனா இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஒரு கவிதையான நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்... அது என்னன்னு திரையில பாருங்க...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

ஒரு உண்மை சம்பவத்தை வச்சிகிட்டு அதை அப்படியே  கவிதையா காட்சி படுத்தி இருக்கும் இயக்குனரின் உத்தி அற்புதம்...


ஒரு சைக்கோ படம்தான்... அந்த சேசிங்தான் படத்தின் அடிநாதமே... இந்த படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் எல்லா  பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் திரைப்படத்தில் இந்த கிளைமாக்ஸ்  சான்சே இல்லை..


கொலையாளி யாருன்னு நல்லவ தெரியும் இருந்தாலும் அவனை கைது செய்ய முடியாது காரணம்.. சரியான எவிடென்ஸ் இல்லாததுதான்...


கொலைநடந்த இடத்தில் இருக்கும் தடையங்களை அங்கு இருக்கும் பொது ஜனங்கள் அவர்களைஅறியாமலேயே அழித்து விடுவது...


 கொலை நடக்கும் இடத்தில் ஒருவன் இரவு நேரத்தில் ஜட்டி பிராவை எடுத்து வந்து அதை தரையில் பரப்பி அதை பார்த்துக்கொண்டு கைமைதுனம் செசய்யும் போது கொலைக்காரன் மாட்டிவிட்டான் என்று நினைக்கும் போது அதன்பின் தொடரும் அந்த சேசிங்... செமை..


கொலைகாரன் தெரிந்து விட்டான்.. இருந்தாலும அவனை கைது செய்யமுடியாமல் தவிப்பதும்... அவனை கண்டுபிடித்த பிறகும்,ஒரு கொலை நடக்க போகின்றத என்று தெரிந்தும் எப்படி தடுப்பது என்று அலைவதும் அன்று இரவு  பள்ளி விட்டு வீடு செல்லும் பெண்ணை கொலை செய்வதையும் மறுநாள் கொலை நடந்த இடத்துக்கு போய் இயலாமையில் தவிப்பதும் அந்த இன்ஸ்பெக்டர் செமையான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்...

படம் பார்க்கும் போதே அந்த கொலைகாரனை புடிச்சி சாவடிக்கனும் என்று ஒரு வெறி உங்களுக்கு தோனும் பாருங்க.. அதுதான் இந்த படத்தின் சிறப்பு...




நினைச்சி இருந்தா நிறைய வல்கர் ஷாட் வச்சி இருக்கலாம்.. ஆனா எல்லாம் இலைமறைகாய்மறைவாக டைரக்டர் ஷாட்டுகளை வைத்து இருப்பார்....
அந்த ஷாட்டுகளை பார்க்கும் போதே பரிதாபம் மேலிடும்...

இந்த படம் பல்வேறு விருதுகளை  அள்ளிகுவித்தது.

இந்தபடம்தான் மிஷ்கினின் இப்போது சேரனை வைத்துஎடுதுதக்கொண்டு இருக்கும் யுத்தம் செய் படம் என்று சிலர் சொல்கின்றார்கள்..





படத்தின் டிரைலர்..





படக்குழுவினர் விபரம்..


Directed by     Bong Joon-ho
Produced by     Cha Seoung-Jae
Written by     Bong Joon-ho
Kim Kwang-rim
Shim Sung-bo
Starring     Song Kang-ho
Kim Sang-kyung
Kim Roe-ha
Park Hae-il
Byeon Hee-bong
Music by     Tarō Iwashiro
Distributed by     CJ Entertainment
Release date(s)     2003
Running time     127 min.
Country     South Korea
Language     Korean
Budget     $2,800,000 US





கருத்துகள் இல்லை: