துப்பறியும்
சாம்பு கேள்வி பட்டு இருக்கோம் அது என்ன?- துப்பறியும் அம்மா? மேல படிங்க
அப்புறம் கேள்வி எல்லாம் வக்கனையா கேட்கலாம்.....
தான் பெற்ற பிள்ளை எப்படி இருந்தாலும் அதனை வளர்ப்பதும் பாசம் காட்டுவதும்தான் இந்த உலகின் இயல்பு....
அப்படித்தான்
அந்த அம்மாவும் இருக்கின்றார்...பையன் பெரிய பையன்தான் ஆனால் மனநலம்
குன்றியவன் என்று சொல்ல முடியாது.. பர்பெக்ட்டான ஆள் என்றும்
சொல்லமுடியாது.. ரெண்டு கெட்டான் லிஸ்ட்டில் யோசிக்காமல் தாராளமாக சேர்க்கலாம்...
சார் இப்படி சொன்ன எப்படி சார்.. ஒன்னு அவனை பைத்தியம்னு சொல்லுங்க.. இல்லைன்னா நார்மலான பையன் சொல்லுங்க.. இரண்டும் கெட்டான்னா எப்படி???
நீங்க ஒன்னாவது படிக்கும் போது எத்தனை முறை பெண்சில் சீவும் போது கையை கிழுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள். என்று சொல்ல முடியுமா?
அவன் சொல்லுவான்....
ரோஸ்லீன் டீச்சரிடம் நீங்கள் எத்தனை முறை பிரம்பால் உதை வாங்கி இருக்கின்றீர்கள்... அந்த பிரம்படி எதுக்காக வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா?
அனால்
அவன் சொல்லுவான்.. எதுக்கு ரோஸ்லீன் டீச்சர் அடித்தார்கள் என்று---????
எந்த தவறுக்கு தெரியாமல் அடித்து விட்டு தலை கோதி நெற்றியில் முத்தம்
இட்டார்கள் என்று அவன் சொல்லுவான்...
ஆனா...அம்மாக்கூடத்தான்
போய் படுத்துக்குவான்..எருமை வயசானாலும் அம்மா மார்பை பிடித்து பிசைந்து
விட்டு மிக நெருக்கமாய படுத்துக்கொள்வான்...
அம்மாவிடம்
தான் ஒரு பெண்ணிடம் நான் படுத்தேன் என்று சொல்ல... இவன் எங்க படுத்து
இருப்பான்? என்று அவன் அம்மா யோசித்து அவன் ஒன்னுக்கு இருக்கும் போது
அவனது ஆண்குறியை பார்த்தாலும் அவனுக்கு கூச்சமே இருக்காது...ஒன்னுக்கு
அடித்துக்கொண்டே....அம்மா கொடுக்கும் சூப்பை குடிக்கும் ரகம்...
இப்ப சொல்லுங்க அவன் ரெண்டும் கெட்டான இல்லையா??
அதனாலதான்
சொன்னேன் அவன் ரெண்டும் கெட்டான் என்று..அப்படி ஒரு ரெண்டும் கெட்டன் மீது
ஒரு இளம்பெண்ணை கொலை செய்த பழி வந்து விழுகின்றது... அவனின் அம்மா தன்
பிள்ளை கொலை செய்யும் அளவுக்கு கெட்டவன் இல்லை.. அவனே ஒரு
ரெண்டும்கெட்டான் என்பதால் கொலைப்பழி விழுந்த தன் மகனை மீட்க போராடும் ஒரு
தாயின் கதை மதர் என்ற கொரிய திரைப்படம்.
===================
Mother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா படத்தின் கதை என்ன??
ஹேய்
ஜா.. ஒரு விதவை பெண்மணி சிறிய அளவில் மனம்நலம் பிழறிய தன் மகனோடு வசித்து
வருகின்றார்.. அவளுக்கு உலகமே தன் மகன்தான்..மகன் தோஜுன் ஒரு இரண்டும்
கெட்டடான்..ஆனால்தான் ஒரு மனநலம் குன்றியவன் என்று பிறர் சொல்லுவதை
ஏற்றுக்கொள்ளும் ரகம் இல்லை..அவன் மீது ஒரு இளம் பெண்ணை கொலை செய்த பழி
அவன் மீது விழுகின்றது...லாஜிக் எல்லாம் சரியாக இருப்பதால் அவனை கைது
செய்து சிறையில் அடைக்கின்றது போலிஸ்.. தன் மகள் குற்றமற்றவன் என்று
நிருபிக்க தோஜுவின் அம்மா தன் மகன் கொலை செய்ததாக சொல்லப்படும் இளம்
பெண்ணின் கொலைக்கான பின்னனியை ஆராய்கின்றாள்... முடிவு திடுக்.. அப்படி
என்னங்க திடுக்..? போய் திரையில் பாருங்கள்...
===========
படத்தின்சுவாரஸ்யங்களில் சில...
நாலே நாலு மெயின் கேரக்டர்கள்... இவர்களை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் அதகளம் பண்ணி இருக்கின்றார்கள்.
திரைக்கதையின் ஆதார சுருதிகளுக்கு எந்த குறையும் வைக்காமல் சினிமா பண்ணி இருக்கின்றார்கள்..
செமையான
சஸ்பென்ஸ் திரைக்கதை... அந்த செஸ்பென்சை ஒரு வயதான பெண்மணியிடம் கொடுத்து
ஓப்பன் பண்ணிக்கொண்டு மிக முக்கியமாக லாஜிக் மீறாமல் பண்ணி இருப்பது பெரிய
விஷயம்.
கேரக்டர்கள் ஓப்பன் செய்வதில்
கேரக்டர்களை விவரிப்பது போன்றவற்றை கணக்கச்சிதமாக செய்து
இருக்கின்றார்கள்.. முக்கியமாக பெண்ஸ் கண்ணாடி உடைப்பைது தான் என்று சொல்வது... எதையும் இரண்டு முறை திருப்பி செய்வது போனற்வற்றை குறிப்பிட்டு சொல்லலாம்..
இந்த
படத்தின் முதல் காட்சி நம் ஊர் தியேட்டரில் ஓடி இருந்தால்.. மச்சி ஒரு கிழ
புடாங்கு பஸ்ட்டு ஷாட்டுலேயே வந்து லூசுப் பு.......... போல ஆடிக்கிட்டு
இருக்குன்னு சொல்லி இருப்பாங்க.....இன்பேக்ட் படம் அப்படித்தான்
ஆரம்பிக்குது.. பட் ஆடிக்கொண்டு இருக்கும் அந்த பெண்மணி சேகாம் தாங்காமல்
அழுதுக்கொண்டு ஆடும் போது இன்னும் அந்த பெண்மணியோடு நெருங்குகின்றோம்...
தன் மகளை கைது செய்து செல்லும் போது ரோடில் ஒடும் ஓட்டம் சான்சே இல்லை...அந்த விபத்து காட்சியும் அருமை...
விபத்து
நடநது முடிந்தவுடன் தன் மகனிடம் அடி ஏதாவது பட்டு இருக்கின்றதா? என்று
உறுதிபடுத்திக்கொள்ள சொல்ல.. பையன் இரண்டு கையும் கைவிலங்கு போட பட்டு
இருப்பதை பார்த்து கலங்குவது சிறப்பு...
நாலுவருடம் உலக கோப்பை புட்பாலை வைத்து வரும் அந்த டயலாக்குகள் அற்புதம்...
ஒரு
பள்ளியில் படிக்கும் பெண் நான் பதில் சொல்கின்றேன்.. பாருங்க எனக்கு
பீரியட்...எனக்காக சானிடரி நாப்கின் வாங்கி வரமுடியுமா? என்றதும் அந்த
அம்மா கேரக்டர்... ஓடீ வாங்கி பில் போடும் இடத்தில் அந்த வயதை வைத்து மெனோபாசை கடந்த லேடிக்கு இந்த சமாச்சாரம் எதுக்கு என்பதாய் பில் போடும் பெண்மணியின் சின்ன ஆச்சர்ய பார்வைகளில் எல்லாம் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள்.
மகன் சிறையில் இருக்கும் தவிப்பை தன் நடிப்பு மூலம் வெளிபடுத்தி அந்த அம்மா கேரக்டர் பெண்மணி நம் மனதில் நின்று இருகின்றார்...
கிளைமாக்ஸ் செமை அற்புதம்...அந்த தொடையில் அக்கு பஞ்சர் ஊசி மூலம் பலதை சொல்லி விடுகின்றார்கள்...
கடைசி
கிளைமாக்ஸ் என்ன என்று புரிந்தவர்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள்
புரியாதவர்கள் மெயில் அல்லது தொலைப்பேசியில் என்னுடன் பேசுங்கள்..
சொல்லுகின்றேன்.
இந்த படத்தில் ஒளிப்பதிவில் லாங் ஷாட்ஸ் எல்லாம் அற்புதம் முக்கியமாக அம்மா
பையனுக்கு ஒன்னுக்கு இருந்துக்கொண்டே இருக்கும் போது சூப் கொடுக்கும் அந்த
பெரிய சுவர்..டூவைலைட்டில் கோல்ப் கிரவுண்ட்...அற்புதமான காட்சிகள்...
கிளைமாக்ஸ் உணர்த்தும் சேதி..எது தேவையோ அதுவே தர்மம்.. என்ற அடிப்படை தத்துவத்தில்தான் முழுபடமும்..
இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் ஆனால் ஒரு உடலுறவு சீன் வருவதால் ஜாக்கிரதை...
இந்த
படத்தைபார்த்து முடிக்கும் போது இப்படி ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை நான்
பார்க்கவில்லை என்று நிச்சயம் சொல்லு வீர்கள்.. காரணம் இயக்குனர்... Bong Joon-ho
இவரின் முந்தையபடமான மேமரிஸ் ஆப் மார்டர் படத்தின் டைரக்டர் தான் இந்த
படத்தின் டைரக்டர்.... அப்ப எப்படி படம் இருக்கும்னு நீங்களே முடிவு
செஞ்சிக்கோங்க...
தனது படங்களில் கிளைமாக்சில் ஹைக்கூவாக காட்சி படுத்துதலில் இவருக்கு நிகர் இவரே...
=========
படம் வாங்கிய விருதுகள்....
the
film was selected as South Korea's official submission for the Academy
Award for Best Foreign Language Film at the 82nd Academy Awards..
Kim-Hye-ja won Best Performance by an actress for the film at the 2009 Asia Pacific Screen Awards.
It won the awards for best film, best screenwriter, and best actress at the 4th Asian Film Awards.
It won the award for Best Foreign Language Film at the Kansas City Film Critics Circle Awards 2010.
===========
படத்தின் டிரைலர்..
===============
படக்குழுவினர் விபரம்
Directed by Bong Joon-ho
Produced by Choi Jae-won
Seo Woo-sik
Written by Bong Joon-ho
Park Eun-kyo
Starring Kim Hye-ja
Won Bin
Jin Goo
Yoon Je-moon
Music by Lee Byung-woo
Cinematography Hong Kyeong-pyo
Editing by Moon Sae-kyoung
Studio CJ Entertainment
Barunson
Distributed by CJ Entertainment (South Korea)
Optimum Releasing (UK)
Magnolia Pictures (USA)
Release date(s) 16 May 2009 (Cannes Film Festival)
28 May 2009 (South Korea)
Running time 128 minutes
Country South Korea
Language Korean
Gross revenue $17,108,773
==============
பைனல்கிக்..
மேமரிஸ் ஆப் மர்டர் படத்தை எப்படி பதை பதைத்து பார்த்தீர்களோ அதே போலத்தான் இந்த படத்தையும் நீங்கள் பார்ப்பீர்கள்... அற்புதமான சஸ்பெண்ஸ் திரில்லர்.. நெவர் மிஸ் இட்.......இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம்..
இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..9003184500
=======
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக