கட்டமைப்புவாதம் (Constructivism), 1914 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்யாவில் தோன்றிய ஒரு கலை மற்றும் கட்டடக்கலை சார்ந்த இயக்கமாகும். சிறப்பாக இது ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் பெரிதும் புகழ் பெற்றிருந்தது. தற்காலத்தில் இந்தச் சொல் நவீன கலை தொடர்பில் பெரிதும் பேசப்படுகின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது. இந்த இயக்கம் "தூய" கலை என்ற கருத்துருவைப் புறந்தள்ளி, கலையானது, சமூகவுடைமை முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவது போன்ற, சமூக நோக்கங்களுக்குப் பயன்படும் ஒரு கருவி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. கட்டமைப்புக் கலை (Construction Art) என்ற தொடர், அலெக்சாண்டர் ரொட்செங்கோ (Alexander Rodchenko) என்பவருடைய ஆக்கமொன்றை விளக்குவதற்காக 1917 இல் கஸிமிர் மலேவிச் (Kazimir Malevich) என்பவரால் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. Constructivism (கட்டமைப்புவாதம்) என்ற சொல்லின் முதற் பயன்பாடு நவும் கபோ (Naum Gabo) என்பவரின் 1920 இன் Realistic Manifesto இல் முதலில் இடம்பெற்றது.
இந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்துறை வடிவமைப்பினால் கவரப்பட்டதுடன், அது சார்ந்த பொருட்களான உலோகத் தகடுகள், கண்ணாடி போன்றவற்றையும் தங்கள் ஆக்கங்களிலே பயன்படுத்தினர்.
இந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்துறை வடிவமைப்பினால் கவரப்பட்டதுடன், அது சார்ந்த பொருட்களான உலோகத் தகடுகள், கண்ணாடி போன்றவற்றையும் தங்கள் ஆக்கங்களிலே பயன்படுத்தினர்.
கட்டமைப்புவாதம் சார்ந்த கலைஞர்கள்
- எல்லா பேர்க்மன்-மிச்சேல் (Ella Bergmann-Michel) - (1896-1971)
- நவும் கபோ (Naum Gabo) - (1890-1977)
- குஸ்டாவ் குளுட்சிஸ் (Gustav Klutsis) - (1895-1938)
- எல் லிசிட்ஸ்கி (El Lissitzky) - (1890-1941)
- கொன்ஸ்டன்டின் மெல்னிகோவ் (Konstantin Melnikov) - (1890-1974)
- லாஸ்லோ மொஹோலி-நாகி (László Moholy-Nagy) - (1895-1946)
- விக்டர் பாஸ்மோரே (Victor Pasmore) - (1908-1998)
- அந்தொய்னே பெவ்ஸ்னர் (Antoine Pevsner) - (1886-1962)
- லையுபோவ் பொபோவா (Lyubov Popova) - (1889-1924)
- மனுவேல் ரெண்டன் செமினாரியோ (Manuel Rendón Seminario) - (1894-1982)
- அலெக்சாண்டர் ரொட்செங்கோ (Aleksandr Rodchenko) - (1891-1956)
- ஒஸ்கார் ஸ்கெலெம்மெர் (Oskar Schlemmer) - (1888-1943)
- வர்வாரா ஸ்தெபனோவா (Varvara Stepanova) - (1894-1958)
- விளாடிமிர் தாட்லின் (Vladimir Tatlin) - (1885-1953)
- ஜோவாக்கின் தோரெஸ் கர்சியா (Joaquin Torres Garcia) - (1874-1949)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக