ஏழாம் கிளியோபாட்ரா அல்லது கிளியோபாட்ரா VII பண்டைய எகிப்தின் ஹெலனிய அரசியாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான பன்னிரண்டாம் தொலமியுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார், பின்னர் அவரது சகோதரர்களும் கணவர்களுமான பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகியோருடனும் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டார். இறுதியை எகிப்தின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றினார். எகிப்தின் பாரோவாக ரோமப் பேரரசன் ஜூலியஸ் சீசருடன் மண உறவு வைத்திருந்தார். அதனால் எகிப்தின் ஆட்சியில் அவரது பிடியை இறுக்கமாக வைத்திருக்க முடிந்தது. ஜூலியஸ் சீசர் கொலை செய்யப்பட்டது. மார்க் ஆண்டனியுடனும் அதேவிதமான உறவு இருந்தது. இததகைய மண உறவுகளால் கிளியோபாட்ராவுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் இருந்தனர். இதில் ஒரு ஆண் பிள்ளை ஜூலியஸ் சீசருக்குப் பிறந்தது. தொலமி சீசர் என்னும் இவன் சீசரியன் என அழைக்கப்பட்டான். மார்க் ஆன்டனி மூலம் கிளியோபாட்ராவுக்கு ஒரு இரட்டைக் குழந்தைகளும், பின்னர் ஒரு மகனும் பிறந்தனர். இவர்கள் முறையே இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ், தொலமி பிலடெல்பஸ் என்பவர்களாவர். கிளியோபாட்ரா தனது சகோதரர்களுடன் கொண்டிருந்த மண உறவால் பிள்ளைகள் பிறக்கவில்லை.
ஆட்சிக்காலம் | கிமு 51 –12 ஆகஸ்ட் கிமு 30 தொலமி XIII (51 BC–47 BC) தொலமி XIV (கிமு 47 – கிமு 44 ) சீசரியன் (கிமு 44 –கிமு 30 ) |
---|---|
பிறப்பு | ஜனவரி கிமு 69 |
பிறப்பிடம் | அலெக்சாந்திரியா |
இறப்பு | 12 ஆகஸ்ட்[மேற்கோள் தேவை] 30 BC |
இறந்த இடம் | அலெக்சாந்திரியா |
முன்னிருந்தவர் | தொலமி XII |
பின்வந்தவர் | இல்லை (ரோம மாகாணம்) |
துணைவர் | தொலமி XIII ஜூலியஸ் சீசர் மார்க் ஆண்டனி |
அரச வம்சம் | தொலமிய |
தந்தை | தொலமி XII |
தாய் | எகிப்தின் கிளியோபாட்ரா V |
பிள்ளைகள் | சீசரியன், அலெக்சாண்டர் ஹெலியோஸ், கிளியோபாட்ரா செலேன் II, தொலமி பிலடெல்பஸ் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக