மறுமலர்ச்சி (ரெனைசான்ஸ் - Renaissance) என்பது, நவீன
ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில்,
அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு
பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இது
மத்தியகாலத்தின் முடிவுக்கும்,
நவீன காலத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான மாறுநிலைக் காலத்தைக் குறித்து நிற்கின்றது. மறுமலர்ச்சிக் காலம் பொதுவாக,
இத்தாலியில் 14 ஆம் நூற்றாண்டிலும்,
வட ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.
வரலாற்று வரைவியல்
ரெனைசான்ஸ் (Renaissance) என்ற சொல்
பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது. இதனை பிரெஞ்சு வரலாற்றாளரான
ஜூல்ஸ் மிச்செலெட் (Jules Michelet) என்பவர் முதலின் பயன்படுத்தினார். இது 19 ஆம் நூற்றாண்டில்
சுவிஸ் வரலாற்றாளரான
ஜக்கோப் புர்க்கார்ட் (Jacob Burckhardt) என்பவரால் விரிவாக்கம் பெற்றது. இதன் நேரடிப் பொருள்
மறுபிறப்பு என்பதாகும்.
மறுபிறப்பு என்பது இரண்டு வகையில் விளக்கம் பெறுகின்றது. ஒன்று பழைய classical நூல்களினதும், படிப்பினைகளினதும், மீள் கண்டுபிடிப்பும், கலை அறிவியல் முதலிய துறைகளில் அவற்றின் பயன்பாடும் என்ற பொருளைத் தருகிறது. மற்றது இத்தகைய அறிவுசார் நடவடிக்கைகளின் விளைவுகள், ஐரோப்பியப் பண்பாடு தொடர்பில் ஒரு பொதுவான புத்தூக்கத்தை ஏற்படுத்தியது எனப் பொருள் படுகின்றது. எனவே
மறுமலர்ச்சி என்பதை இரண்டு வித்தியாசமான ஆனால் பொருள் பொதிந்த வழிகளில் பேசமுடியும்: பண்டைய நூல்களின் மீள் கண்டுபிடிப்பினூடாக செந்நெறிக்காலப் (classic) படிப்பினைகளினதும், அறிவினதும் மறுபிறவி என்பதும், ஐரோப்பியப் பண்பாட்டின் பொதுவான மறுபிறவி என்பதுமாகும்.
[தொகு] பல் மறுமலர்ச்சிகள்
20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பல அறிஞர்கள், மறுமலர்ச்சி என்பது, பல அவ்வகையான இயக்கங்களில் ஒரு வகை மட்டுமே என்ற நோக்கைக் கொண்டிருந்தனர். இது பெருமளவுக்கு, "12 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி" என்பது தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை முன்வைத்த
சார்ள்ஸ் ஹெச் ஹஸ்கின்ஸ் (Charles H. Haskins) என்பவரின் ஆய்வுகளாலும், "
கரோலிங்கியன் மறுமலர்ச்சி" (Carolingian renaissance) தொடர்பான வாதங்களை முன்வைத்த வரலாற்றாளர்களினாலும் ஏற்பட்டது. இவ்விரு கருத்துக்களுமே தற்போதைய அறிஞர் சமூகத்தினால் பரவலாக ஏற்கப்பட்டிருப்பதன் காரணமாக, மறுமலர்ச்சி எனப்படுவதை குறிப்பான சொற்களின் மூலம், உதாரணமாக
இத்தாலிய மறுமலர்ச்சி,
ஆங்கில மறுமலர்ச்சி முதலியன மூலம், குறிப்பிடுவது தற்கால வரலாற்றாளரிடையே ஒரு போக்காக இருந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக