05 ஜூன், 2011

கோலதமோர்&தார்ஃபூர் இனப்படுகொலை

கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்: Голодомор) அல்லது பட்டினியால் படுகொலை என்பது 1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படுகொலை ஆகும். இந்த நிகழ்வு உக்ரேனிய பட்டினி இனப்படுகொலை, தீவிரவாத உக்ரேனிய இனப்படுகொலை என்றும் அறியப்படுகிறது. இந்த நிகழ்வில் 1.5 இலிருந்து 12 மில்லியன் உக்ரேனிய மக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோலதமோர் நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் அக் கால சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ராலினின் கொள்கை ஆகும். உக்ரேனினில் நிகழ்ந்த உக்ரேனிய தேசியவாதத்தை தகர்க்க உக்ரேனிலில் இருந்து எல்லா உணவு மூலங்களும் வெளியேற்றப்பட்டன. உக்ரேனில் இருந்து எவரும் வெளியேறத் தடைசெய்யப்பட்டது. ஸ்ராலினின் கட்டளையில் நடந்த இந்த செயற்பாடுகள் பட்டினி படுகொலைக்கு மூல காரணம் ஆகும்.

தார்ஃபூர் இனப்படுகொலை

சூடானின், தார்ஃபூர் நிலப்பரப்பில் இரண்டு பிரிவுகள் வசிக்கின்றன. ஒரு பகுதி பெரும்பான்மை உழவர்களைக் கொண்ட ஆபிரிக்கர்கள். இரண்டாவது பிரிவு நாடோடி இடையர்களைக் கொண்ட அரேபியர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர். இருபிரிவுகளின் பெரும்பான்மையினரும் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள்.
ஆபிரிக்க உழவர்கள் திட்டமிட்ட முறையில் அரச ஆதரவு பெற்ற அரபு கூலிப்படையான Janjaweed கொல்லப்படுகிறார்கள். இதுவரை 400 000 மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 2.5 மில்லியம் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். [1]

கருத்துகள் இல்லை: