05 ஜூன், 2011

இனப்படுகொலை

இனக்ப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.
இது குறித்து 1948 ல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 ன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்..[1].
இக்கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 ல் கொண்டுவரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண்டணை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட நீதிமன்ற ஆணையத்தால் சர்வதேச உறுப்பினர்களை அழைத்தும் இன்னும் ஒருவரும் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை

இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) என்பது இனப்படுகொலையை வரையறை செய்து, தடை செய்யும் உடன்படிக்கை ஆகும். இப்போது 137 நாடுகளில இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் பங்கு பற்றும் சகல நாடுகளும் இன ஒழிப்பை தவிர்க்கவும், யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் இவற்றை தண்டிக்க வேண்டுமென இந்த ஒப்பந்தம 1951 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஆர்மீனிய இனப்படுகொலை

ஆர்மீனிய இனப்படுகொலை (Armenian Genocide) அல்லது ஆர்மேனிய பெரும் இனவழிப்பு என்பது ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்கள் வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தது[1]. பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்[2].
இவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர்[3]. அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.
ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது[4]. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன[5].

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை

 

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.[1] மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.[2] கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவேயாம்.

பின்புலம்

1948 ஆம் ஆண்டில் இலங்
கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரித்தானியா அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது. அந்த நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை மீறி திட்டமிட்ட இனவழிப்பை நடத்திவருகிறது. சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்கு சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்று முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கைச் பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாக தமிழர்கள் தொகை தொகையாக கொல்லப்பட்டனர்.

படுகொலைகள்

1958, 1977, 1983 இனக்கலவரங்கள் இவற்றில் சிறப்பாக குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளில் இருந்தும் கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், எறிகணை வீச்சு, நேரடித் தாக்குதல் மூலம் இதுவரை 100 000 கொல்லப்பட்டுள்ளார்கள்.[தொகு] தமிழரை வெளியேற்றல்
இலங்கை சிங்களவர்களுக்கு உரியது, ஆகவே தமிழர் வெளியேற வேண்டும் என்பது ஒரு நெடுங்கால திட்டமாக சிங்கள தீவரவாத செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையானோர் 1950 களில் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். இலங்கைத் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடே எனவே அங்கு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இலங்கை அரசு மேற்கொண்ட போர் உட்பட பல நடவிடிக்கைகள் 1.3 மில்லியன் தமிழர்களை வெளியேற்றி விட்டது. தமிழ் முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் இடையேயும், கிழக்கிலங்கைத் தமிழர் வடக்கிலங்கைத் தமிழருக்கு இடையேயும் விரிசல்களை ஏற்படுத்தி விட்டுள்ளது. [3]

அடிமையாக்குதல்

எதிர்ப்புப் போராட்டங்கள்

தமிழர் படுகொலைகளை நியாப்படுத்தல்

குறிப்பிட்ட தமிழர்களின் புலிகளுக்கான ஆதரவு பயங்கரவாதத்தை விளைவிக்கின்றது என்றும், போரில் புலிகளை அழிக்கையில் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்றும் இலங்கை அரசத் தரப்பால் கூறப்படுகிறது. மேலும், புலிகள் பொது மக்களை கட்டாயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும், அதனாலேயே பெருமளவு மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அரசை விட விடுதலைப் புலிகள் பெரும் தொகையான தமிழர்களையும் சிங்களவர்களையும் கொன்று குவித்துள்ளார்கள் அதனால் அவர்களை எந்த முறையினாலும் அழிப்பது தவிர்க்கமுடியாது எனப்படுகிறது.

தந்திரோபாய வழிகளின் தமிழினவழிப்புச் செய்தல்

போர் நடைப்பெற்று வரும் வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப் பட்டுள்ளது. [4] [5] போரினால் அவலப்பட்டு வவுனியா வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், சிங்களம் மொழி தெரியாதத் தமிழர்களிடம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்புக்கு செய்யப்படுகின்றது.

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலகம் எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனத்துவேசம்
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
உலகளாவிய எதிர்ப்புப் போராட்டங்கள்
ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்

பா    தொ
[மறை]
மனித உரிமை
























கருத்துகள் இல்லை: