19 ஜூலை, 2011

மனக்குகை ஓவியன் ; இங்மர் பெர்க்மன்

இங்மர் பெர்க்மன்

http://www.ajayanbala.in


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 20


மனித மனத்தின் ஆழங்களை யார் அளக்கமுடியும்,ஆனால் தூய இலக்கியம் அதைத்தான் செய்கிறது என்றார் ருஷ்ய இலக்கியவாதியும் சாகாவரம் படைத்த 19ம் நூற்றாண்டு எழுத்தாளனுமான தஸ்தாயேவெஸ்கி. அவரைபோலவே திரைப்படம் எனும் அரிய கலையில் இப்பாதையில் பயணித்த மிகப்பெரும்கலைஞன் இங்மர் பெர்க்மன் . மனிதனை அழுத்தும் துன்பங்களையும் அவற்றிற்கும் கடவுளுக்குமான இடைவெளிகளும் தான் இவரது அனைத்துதிரைப்படங்களின் மையப்புள்ளி என்றாலும் அவ்ற்றை உயர்ந்த கலைபடைப்பாக மாற்றிய மேதமைதான் இவரை சினிமாவரலாற்றில் த்டம் பதிக்கவைத்துள்ளது. எவ்வள்வுக்கெவள்வு தனது தேடலைல் அவர் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ அதே தீவிரத்தையும் உழைப்பையும் தன் கலைத்த்ன்மைக்கும் செலவிட்டு தன்னை உறுதியான இடத்தில் தக்கவைத்துக்கொண்டது இவரது தனிச்சிறப்பு

1918ல் ஸ்வீடனில் ஒரு தீவிர கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த பெர்க்மன் தன் சிறுவயதில் ஒரு அழகான சிறைக்குள் வளர்ந்தார். அந்தசிறை அவரது கத்தோலிக்க மதம் .. அவரது தந்தை எரிக் ஒரு மத போதகராக இருந்த காரணத்தால் தேவாலாயங்கள்,பிரம்மாண்டமான மதில்சுவர்கள், அமைதியான உருக்கள், தாழ்ந்த விதானங்கள்,மெழுகுவர்த்திகள், மணியோசைகள் தேவ கீர்த்த்னைகள் ,தேவதைகள் ,மற்றும் சாத்தான்கள் என மதம் அவரை வேறு கவனங்களுக்கு திசை திருப்பவிடாமல் ஜன்னல்களை இறுக்க அடைத்திருந்தது. மட்டுமல்லாமல் தந்தையின் கண்டிப்பான குரல் பால்யத்தில் அவருடைய மனதில் வடுக்களாக ஆழபதிந்துபோனது. இன்று தன் திரைப்படங்களில் காண்ப்படும் சோகத்திற்கும் அழுத்தங்களுக்கும் மூலபடிமம் இங்கிருந்துதான் எடுத்தாளப்ப்ட்டது என பெர்க்மெனே பின்னாளில் தன் திரைப்பட்ங்கள் குறித்து கூறுமளவிற்கு அவரது பாதிரி தந்தையான் எரிக் மூர்க்கமான மதவெறியராகவும் கண்டிப்பான கணவனாகவும் தகப்பனாகவும் இருந்தார்.

இதன் காரணமாகவே எட்டுவயதிலேயே அவருக்கு மதத்தின் மீது வெறுப்பு தோன்ற துவங்கியது. இந்தவெறுப்பே அவருக்கு கலைகளின் மீதான
நாட்டத்தை திசை திருப்பியது. அப்போது அவருக்கு வடிகாலாக இருந்தவை பொம்மைகள்தான். விதவிதமான பொம்மைகளை செய்து அவ்ற்றை கதாபாத்திரங்களாக மாற்றி தனக்குதானே ஒரு பொம்மலாட்டம் நடத்தி பார்ப்பது அவருக்கு பிடித்த்மான பொழுது போக்கு. இந்த ஆர்வம்அவரை கொஞ்சம் கொஞ்சமாக உந்திதள்ளி நாடகக்கொட்டைகளின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தியது. ஸ்டாக்ஹோம் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முழுவதுமாக முடிக்கும் முன்பே எண்ணற்ற நாடகங்களுக்கு கதைவசனம் எழுதி, உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருந்தார்.

கஸ்பரின் மரணம் Caspar's Death. இதுதான் 1942ல் இவர் இயக்கத்தில் தயாரான முதல் நாடகம்.அடுத்த இரண்டு வருடங்களில் மேலும் சில நாடகங்களை உருவாக்கிய பெர்கமனுக்கு திரையுலகம் சுலபமாக சுவீகரித்துக்கொண்டது. ஆல்ப் சோஜ் பர்க் Alf Sjöberg. எனும் இயக்குனரின் ஹெட்ஸ் எனும் படத்தில் உதவியாளராக தன் வாழ்க்கையைதுவக்கிய பெர்க்மன் படத்தின் திரைக்கதைக்கும் பொறுப்புவகித்தார். ஒரு கண்டிப்பான ஆசிரியரைப்பற்றின கதை இது இத்னாலேயே வெளிப்புற காட்சிகளின்போது பெரும்பாலும் பெர்க்மெனே இயக்கவும் நேரிட்டது.இப்படத்தின் உலகாளாவிய வெற்றி காரணமாக அடுத்தவருடமே பெர்க்மன் தன் முதல் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார்.அடுத்த பத்துவருடங்களில் அசௌரவேகத்தில்ம்கிடத்ட்ட பன்னிரண்டு திரைப்படங்களை பெர்க்மென் இயக்கியிருந்தார். அனைத்துமே தனிமை அந்நியமாதல் என இருப்பின் தீராத வலியை பற்றிபேசும் திரைப்படங்களாக அமைந்திருந்தன. இவையனைத்துமே அவரது முழுமை எனும் உயரத்திற்கு அழைத்துசெல்லும் படிக்கட்டுகளாகவே அமைந்திருந்தன.


1955ல் இவர் இயக்கத்தில் வெளியான ஸ்மைல்ஸ் ஆப் சம்மர் நைட் Smiles of a Summer Night எனும் திரைப்படம்தான் பெர்க்மனின் முழு ஆளுமையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது. இந்தவெற்றியும் அங்கீகாரமும் அவரை அடுத்தடுத்த மகத்தான இரு வெற்றிகளை அடுத்தடுத்த வருஇடங்களில் உருவாக்க வைத்தது. தி செவன் த் சீல் The Seventh Seal மற்றும் Wild Strawberries வைல்டு ஸ்ட்ராபெர்ரீஸ் ஆகையவைதான் அந்த மகத்தான் இரு காவியங்கள்.

மொத்தம் முப்பத்தைந்தே நாட்களில் தயாரான செவன் த் சீல் உலகின் தலைசிற்ந்த பரிசான கேனஸ் விருதை பெர்க்மனுக்கு வாங்கி தந்தது.

வைல்ட் ஸ்ட்ராபரீஸ் ஐம்பதுகளில் வெளியான் உலகைன் தலைசிறந்தபடங்களில் ஒன்றாக கணிக்கப்பட்டது. உறவுகளின் சிறுசிறுகண்ணிகளினூடே மின்மினின்பூச்சிகளய் நம் மனதில் உண்டாகும் மாயங்களின் தொகுப்பாக இப்படத்தை சொல்லலாம்.

பெர்க்மனின் படத்தை பார்ப்பதற்கு நமக்கு மொழி அவசியமில்லை அவர்கள் என்ன பேசுகிறார்கள் கதை எங்கேநகருகிறது என்ற கேள்விகளூம் நமக்குபயன்படாது . அவரது காட்சிகளை உள்வாங்குவதற்கு இரண்டு கண்களும் அவரது உலகத்திற்குள் நம்மை விரல்பிடித்து அழைத்துசெல்லும் அந்த இசையை கேட்பதற்கு இரண்டு காதுகளும் மட்டும் நமக்கு போதுமானது. நம்மை அறியாமல் நாம் வேறு உலகத்திற்குள் மனித மனங்களின் இருண்மைக்குள் அலைவதை உணரமுடியும். வைல்ட் ஸ்ட்ராபெர்ரீஸ் அத்தகையதொருபடமாக அமைந்தது .இறப்புக்காக காத்திருக்கும் வயோதிகனின் மனதுக்குள் செல்லும் காமிரா நம்மை தனிமையின் ஆழத்துக்குள் அழைத்துசென்றுவிடுகிறது. பெர்க்மன் வாழ்க்கையில் ஒருமைல்கல்லாக நின்றது.

இதனைத்தொடர்ந்து த்ரூ த கிளஸ் டார்க்கி, தி சைலன்ஸ் , பெர்சோனா, வெர்ஜின் ஸ்பிரிங் க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், போன்ற மகத்தான் காவியங்கள் பெர்க்மனின் கைவண்ணத்தில் உலகசினிமாவுக்கு மாபெரும் நன்கொடையாக கிடைத்தன.

பெர்க்மனின் திரைப்படங்களின் வெற்றிக்கு சரிவிகிதாமான பங்களிப்பை தந்திருப்பவர் 1953க்குபிறகான அவரது எல்லாபடங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ஓளிப்பதிவாளர் சாம் நிக்விஸ்ட். நிக்ச்விஸ்டின் ஒளிப்பதிவுக்குள் பலசூத்திரங்கள் கட்டுண்டு ஒளிந்துகிடப்பதை ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளன் கண்டுணரமுடியும்.

பெர்க்மன் த்னது திரைப்படங்களுக்கு உலகமெங்கும் வரவேற்பை கண்டபோதிலும் தன் சொந்த நாடான ஸ்வீடனில் அவர் தொடர்ந்து அவமானப்படுத்துப்பட்டு வந்தார். ஸ்வீடனின் சக இயக்குனர் கள் அவர்மேல் கடும் விமரசனங்களை வைத்தனர். அவர்களுள் Bo Widerberg எனும் இயக்குனர் ஒருபடி மேலேபோய் 1962ல் ”பெர்க்மன் உன்னுடைய படங்கள் பழைய பனைமட்டையாக இருக்கின்றன,பார்க்க சகிக்கவில்லை தயவு செய்து உன் வாழ்க்கையில் ஒரு நல்ல படமாக எடுத்துவிடு ”எனும் வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரத்தை ஸ்வீடனில் விநியோகித்தார்.



இதுமட்டுமல்லாமல் 1976ல் அவரது வீட்டினுள் திடுமென புகுந்த போலிசார் அவரை கைது செய்தனர். கேட்டதற்கு அவர் வருமானவரி கட்டவில்லை என காரணத்தை சொன்னார்கள். இத்னால் பெரும் மனௌளைச்சலுக்கு ஆளான பெர்க்மன தீவிர நரம்புதளர்ச்சி நோய்க்கு ஆளானார்.பின் தனக்கிருந்த ஸ்டுடியோக்களை மூடிவிட்டு ஸ்வீடனை விட்டேவெளியேறி ம்யூனிச்சிற்கு சென்று த்னக்கன வீட்டை தேடிக்கொண்டார்.

இந்தப்ரசனைகளுக்கு பிறகு 1983ல் வர த்னது பாலயவாழ்க்கையை அடியொற்றி எடுத்த பேனி அண்ட் அலெக்ஸாண்டர் எனும் திரைப்படம் உலகாளவில் பிரம்மாண்டமான வெற்றியைபெற்றதோடு அவரது வாழ்நாளின் மிகச்சிறந்தபடமாகவும் உருக்கொண்டது. சிறுவயதில்தன் தந்தையிடம் அவர் வாங்கிய பிரம்படிகள் மிரட்சிகள் இவை உண்டாக்கிய மனவலிகளை தேர்ந்தெடுத்து பார்வையாளனுக்குள் மறக்கமுடியாத வடுக்களை நிகழ்த்தினார். நமக்குள் சிறுவயதிலிருந்து அழுத்தப்ட்ட பல்வேறு உணர்வுகளை கிளர்ந்தெழசெய்வதுதான் பெர்கமனின் வெற்றி .ஆனால் அதற்காக அவர் எப்போதும் மெனக்கெடுவதேயில்லை படத்தில் எங்கிருந்தூ அந்த உணர்வு நமக்குள் தோன்றுகிறது என்பதை நாமறியாவண்ணம் நம்மை நம் மேல் விழுந்த அடிகளை உணரசச்செய்வதுதான் பெர்க்மென் எனும் மகத்தான கலைஞனின் வெற்றியாக உலகசினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பிற்பாடு மீண்டும் ஸ்வீடனுக்குள் பெர்க்மென் திரும்பிய போது அரசாங்கம் பெரும் குற்ற வுணர்ச்சியுடன் அவரை வரவேற்று அவர்பெயரில் ஒரு திரைப்பட பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கியது.

1988ல் த்னது வாழ்க்கை வரலாற்றை மேஜிக் லாண்டர்ன் எனும்பெயரில் எழுதிய பெர்க்மன் 1993ல் பெஸ்ட் இண்டென்ஷன்ஸ் எனும் பெயரில் நாவல் ஒன்றையும் எழுதினார். பிற்பாடு சினிமாவுக்கனதிரைக்கதையாகவும் இதை வடித்தார். அவரது தாய்க்கும் தாமஸ் எனும் பாதிரியாருக்குமிடையில் நடந்த ஒரு உறவை அடிப்படையாக வைத்து அவர் இந்த கதையை எழுதியிருந்தார்.

பெர்க்மனின் திரைப்படங்கள் ஆஸ்கார்,கேன்ஸ், கோல்டன் குளோப்,பாப்டா, பெர்லின் தங்க கரடி உள்ளிட்ட உலகின் பலமூலைகளில் பலவிருதுகளை அள்ளிகுவித்துள்ளன.


1995ல் தன் 77ம் வயதில் Ingrid von Rosen என்ற வித்வைபெண்ணை அவர் திருமண்ம் செய்தபோது அவருக்கு அது முறைப்படி ஐந்தாவது திருமணம். இதற்கு முன்பான நான்கு மனைவிகளையும் சேர்த்து அவரது குழந்தைகள் எண்ணிக்கைபலவாக இருந்தாலும் மொத்தம் 12 குழந்தைகளைமட்டுமே அவர் த்ன் வாரிசுகளாக் அங்கீகரித்துள்ளார்

அவரது அனேக படங்களில் நடித்த உலகபுகழ் நடிகையான் லிவ் உல்மன் தானக் விரும்பி தாய்மை அடைந்து ஒரு குழந்தைக்கு தாயானார்.


உலகசினிமாவில் ஆச்சர்யமூட்டும் ஒற்றுமையாக விமர்சகர்கள் இவரையும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டனியோவையும் கருதுகின்றனர். காரணம் இருவரது வாழ்க்கையும் ஒரே தன்மையுடையன . பலவிடயங்களில் இருவருக்குமிடையே காணப்பட்ட ஆச்சர்யமான ஒற்றுமை இவர்களது மரணத்திலும் தொடர்ந்தது..

ஜூலை 30, 2007, ஒரே நாளில் இருவரது மரணச்செய்தியும் அடுத்தடுத்து வந்து உலகசினிமா ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாகியது.

அமரத்துவம் வாய்ந்த பெர்க்மனின் படங்களை நாம் இன்றும் பார்க்கும் போது அவர் நம் முதுகின் பின்னால் இருப்பதை அவரது படங்களின் மூலமாக உணரமுடியும் .
(தொடரும் )

கருத்துகள் இல்லை: