ஞானம் - வானை விட விரிந்தது
ஏனெனில் - அருகருகே பக்கத்தில் வைத்தால்
ஒன்று மற்றது அகப்படுத்திவிடும்
எளிதாக - உன்னையும் சேர்த்து
ஞானம் கடலைவிட ஆழமானது -
ஏனெனில் - அவற்றைப் பிடித்தால் நீலத்திலிருந்து நீலம்
ஒன்று மற்றது உறிஞ்சிக் கொள்ளும் -
கடல் பஞ்சு போல - வாளிகள் - செய்வதென -
ஞானம் கடவுளின் எடைதான் -
ஏனெனில் - அவற்றை எடைபோட்டால் - எடைக்கு எடை -
அவை மாறலாம் - அவை அவ்வாறு செய்தால் -
சொல் ஒலியிலிருந்து மாறுவதென -
தமிழில் என். எம். பதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக