08 ஜூலை, 2011


பாளையக்காரர்கள் பாளையத்தின் தலைமை பொறுப்பினை ( மாவட்ட நிர்வாகம் மற்றும் இராணுவ நிர்வாகம்) வகித்தனர். அரியநாத முதலியார் மதுரை நாயக்கரின் முதன்மை பாளையக்காரர் ஆவார். காகத்திய மன்னர் பிராதபருத்ரன் தன் நாட்டினை 77 பாளையாமாக பிரித்தான். அது தான் பாளையத்தின் முதல் தொடக்கம் ஆகும்.


2.பின்புலம்
2.பின்புலம்
  +
விஜயநகர் பேரரசு கி.பி 1336 ஆரம்பம் ஆனவுடன் மிக பெரியதாக தன் எல்லையினை விரித்து தென்னிந்தியா முழுவதும் பரந்து விரிந்தது. கி.பி 1378-ல் குமாரகம்பணா என்ற விஜயநகர அரசன் மதுரையை கைப்பற்றினான். பின் தென்னிந்தியா முழுவதும் அவரின் ஆட்சிக்கு உட்பட்டது. இராணுவ தளபதிகள் நிர்வாகத்தினை பார்க்கவும் நியமிக்கப் பட்டனர். அமரநாயக்கர்கள் என அழைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் நாட்டினை சிறு சிறு மாவட்டங்களாய் பிரித்து அதன் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். அமர நாயக்க தானம் என்று அழைக்கப்பட்டன. பின் இது பாளைய்ங்கள் என் ஆனது. மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கரின் அமைச்சரும் இராணுவ தளபதியுமான தளவாய் அரியநாத முதலியார் மதுரையினை 72 பாளையங்களாய் பிரித்தார். அவை பாளையக்காரர்கள் பொறுப்பில் விடப்பட்டது. இது மதுரை நாயக்கர்களுக்கு பெரிய எதிர்ப்பாக மாறியது. பாளையங்கள் சில தனி நாடாக மாறியது.
  +
  +
விஜய நகர் பேரரசின் பாளையக்காரர்கள் சில உரிமைகளை பெற்றனர். வரி வசூல் செய்வது, இராணுவத்தினை பாதுக்காப்பது மற்றும் தவறுகளுக்கு தண்டனை வழங்குவது போன்ற வேலைகளை பாளையக்காரர்கள் செய்தனர். 200 பாளையக்காரர்கள் அந்த சமயத்தில் இருந்தனர். கி.பி 1565 தலைக்கோட்டை போரில் விஜயநகர் மன்னருக்கு தக்க சம்யத்தில் உதவ பாளையக்காரர்கள் மறுத்ததினால் விஜய நகர பேரரசு வீழத்தொடங்கியது. விஜயநகர் பேரரசு வீழத்தொடங்கியதும் தென்னிந்தியாவில் இருந்த விஜயநகர பேரரசின் கவர்னர்கள் விடுதலை அடைந்ததாய் தனி நாடாக தங்களை அறிவித்துக் கொண்டனர். மதுரை, திருச்சி, வேலூர்,செஞ்சி நாயக்கர்கள் அவர்களில் முக்கியமானமவர்கள் ஆவர்.
  +
  +
3. தொடக்கம்
  +
முதல் மதுரை நாயக்கர் விஸ்வநாத நாயக்கர் ஆவார்.(1559_1563). இவரின் தளபதி தளவாய் அரியநாத முதலியார் முதல் குடிமகன்(பிரதானி) என்று அறியப்பட்டார். இவர் தான் பாளையக்காரகளை நியமித்தார். கோயமத்தூர், சேலம், கொள்ளிடம், கன்னியாகுமரி என மதுரை நாடு விரிந்து இருந்தது. மேலும் சிறப்பாக ஆட்சி புரியும் பொருட்டு விஸ்வநாத நாயக்கர் தளவாய் அரியநாத முதலியாரின் துணையுடன் நாட்டை 72 பாளையங்களாய் பிரித்து 72 பாளையக்காரர்களை நியமித்தார். பாளையக்காரர்கள் பலர் உள்நாட்டினை சேர்ந்தவர்களாகவும், சிலர் தெலுங்கு இனத்தினை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
  +
  +
4. பாளையக்காரர்களின் பணி:
  +
  +
பாளையத்தின் நிர்வாகத்தினை பாளையத்தின் மத்தியில் இருக்கும் கோட்டையில் இருந்து நிர்வகிப்பதே பாளையக்காரர்களின் பணி ஆகும். வரி வசூல் செய்வது. நீதி நிர்வாகம், படையினை பராமரிப்பது, சட்டம் ஒழுங்கினை பராமரிப்பது தான் பாளையக்காரர்களின் பணிகளாகும்.
  +
  +
வசூலிக்கும் வரியில் 1/4 தங்கள் வசம் வைத்துக் கொண்டு மீதியினை மன்னர்களிடம் ஒப்படைத்தனர். கோயில்கள், கோட்டைகள், குளங்கள், அணைகள் கட்டினர். மக்களை கொள்ளைய்ர்களிடம் இருந்து காப்பதும் பாளையக்காரர்களின் வேலையாகும்.

கருத்துகள் இல்லை: